logo
ADVERTISEMENT
home / Family
‘ஐ லவ் யூ’ சொல்லாமலே..உங்க ‘தாம்பத்திய’ வாழ்க்கை இனிப்பா இருக்கணுமா?

‘ஐ லவ் யூ’ சொல்லாமலே..உங்க ‘தாம்பத்திய’ வாழ்க்கை இனிப்பா இருக்கணுமா?

கல்யாணம் ஆனவங்களுக்கு மத்தியிலான விவாகரத்து, பிரிஞ்சு வாழ்றது எல்லாமே இந்தியாவுல தொடர்ந்து அதிகரிச்சிகிட்டே போகுது.ஆம்பளைங்க
என்ன பண்ணாலும் நாங்க ஏன் விட்டுக்குடுத்து போகணும்னு? பொண்ணுங்க நெனைக்க ஆரம்பிச்சிட்டாங்க. அதே நேரம் நாம ஆம்பிள அவதான்
கீழறங்கி போகணும்னு நெனைக்கற மனோபாவம் ஆண்கள் மத்தியில மாறாம இன்னும் அப்படியே இருக்கு.தப்பு செஞ்சாலும் பொண்ணுங்க இறங்கி
வரணும், எல்லா பொறுப்புகளையும் அவளே எடுத்துக்கணும்.சமையல் தொடங்கி சகலமும் அவ பாக்கணும்னு நெனைக்கற பொதுப்புத்தி இங்க இன்னும் மாறல.

இதுதான் இங்க நெறைய பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணமா இருக்கு. இதுமட்டும் இல்லாம வெறும் தாம்பத்தியத்துக்கு மட்டும் பொண்டாட்டி
வேணும்னு நெனைக்கறவங்களும் இங்க இருக்கத்தான் செய்றாங்க.சமூக வலைதளங்கள், பொது இடங்கள், அலுவலகம் போன்ற இடங்கள்ல தன்ன
நடுநிலைவாதியா காட்டிக்கிற ஆண்கள் வீடுன்னு வரும்போது வேறொரு முகத்த காட்றாங்க. பொண்டாட்டிய சந்தேகப்படுறது, வேலைக்கு போக
விடாம தடுக்கிறது, மன-உடல் ரீதியா டார்ச்சர் பண்றது, குடிக்கு அடிமையாகிறதுன்னு நெறைய கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகிடறாங்க.

ஒரு கட்டத்துல இது முழுமையான பிரிவுக்கு வழிவகுத்துடுது. பெண்கள் குழந்தைங்கள வளர்த்து ஆளாக்குறது, வேலைக்கு போறதுன்னு தங்கள
பிஸியா வச்சுக்கற அதே வேளையில யாருமே இல்லாம வாழ்க்கை வெறுத்துப்போய் ரொம்ப விரக்திக்கு ஆளாகறாங்க. இந்த மாதிரி பிரிவில்லாம கணவன்-மனைவி தங்களோட தாம்பத்திய(Romantic) வாழ்க்கையை கடைசிவரை மகிழ்ச்சியாக வாழணும்னா சில சின்னச்சின்ன விஷயங்கள செஞ்சா போதும். கடைசிவரைக்கும் உங்க வாழ்க்கை அடிக்கரும்பு மாதிரி இனிப்பா இருக்கும். அதுக்கு நீங்க செய்ய வேண்டியது என்னனு? இங்கே பார்க்கலாம்.

ADVERTISEMENT

பாசிட்டிவ்-நெகட்டிவ்

எல்லா மனிதர்களிடமும் பாசிட்டிவ்-நெகட்டிவ் என இரு வகையான குணங்களும் உண்டு. இதில் நெகட்டிவ் அதிகமாக இருந்தாலோ அல்லது பாசிட்டிவ் பக்கமே இல்லாது போனாலோ அப்படிப்பட்ட ஒரு நபருடன் குடும்பம் நடத்துவது என்பது கயிற்றின் மீது நடப்பது போலாகும். ஏனெனில் எப்பொழுது வேண்டுமானாலும் அந்த கயிறு அறுந்து நீங்கள் விழ நேரிடலாம். எனவே கல்யாணத்திற்கு முன் உங்களுக்கும், உங்களவருக்கும் குறைந்தது ஒரு ஆறேழு விஷயங்களிலாவது ஒத்து போகிறதா? என பேசிப்பார்த்து திருமணம் செய்யுங்கள்.

நோ ஒன் இஸ் பர்பெக்ட்

ADVERTISEMENT

இந்த உலகத்தில் குறை இல்லாத மனிதர்களே கிடையாது. ஒவ்வொரிடமும் சில குறைகள் இருக்கத்தான் செய்யும். சிலர் சோம்பேறியாக இருப்பார்கள்.
சிலருக்கு அதிகக்கோபம் வரும். சிலருக்கு பொறாமை குணம் இருக்கலாம். இதனால் உங்களைவரின் குறைகளை பூதக்கண்ணாடி கொண்டு ஆராயாமல்
அவரின் நிறைகளை எண்ணி வாழ்க்கையை மகிழ்வுடன் வாழப்பாருங்கள்.

நிறைய பேசுங்கள்

ADVERTISEMENT

எல்லோருக்குமே மற்றவரிடம் பேச மிகவும் பிடிக்கிறது. அப்படி பேச்சு பிடிக்காமல் போய் இருந்தால் இந்தியாவில் இத்தனை செல்போன் நிறுவனங்கள் லாபத்தில் இயங்குமா என்ன? அதனால் உங்கள் துணையிடம் அமர்ந்து பேசுங்கள். நீங்கள் சொல்வதை காது கொடுத்துக்கேட்க ஒருவர் இருக்கிறார் என்னும் உணர்வே உங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கும். அதேபோல அவர் சொல்வதையும் நீங்கள் முழுதாகக் கேட்டு அதுகுறித்து உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள். இது உங்கள் தாம்பத்திய(Romantic) வாழ்க்கையை கடைசிவரை காப்பாற்றும்.

நல்ல நண்பனாக

காதல்(Love), காமம்(Sex)இரண்டையும்விட உங்கள் துணையிடம் நட்பாக இருங்கள்.ஹோட்டல் சர்வர் மாதிரி வாழ்க்கை துணைக்கு என்ன வேண்டுமோ அதை மட்டும் பரிமாறுங்கள். உங்களது வாழ்க்கையில் மூன்றாவது மனிதர்களை ஒருபோதும் தலையிட விடாதீர்கள். இந்த உலகத்தில் எப்போதும் அடுத்தவர்கள் கதை அல்வா மாதிரிதான். மற்றவர்களை உங்கள் பிரச்சினைகளின் நீதிபதிகளாக ஆக்கிவிடாதீர்கள். நீங்கள் நல்ல நண்பனாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கும் சாய்ந்து கொள்ள ஒரு தோள் கிடைக்கும் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.

ADVERTISEMENT

ஸாரி சொல்லுங்க

வெளியிடத்தில், பணியிடத்தில், ஹோட்டலில், மாலில் என யாரோ முகம் தெரியாதவர்களிடம் எல்லாம் ஸாரி(Sorry) கேட்கும் நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையிடம் ஸாரி கேட்க ஈகோ பார்ப்பது ஏன்? நீங்கள் தவறு செய்தால் உங்கள் மனைவி/கணவனிடம் ஸாரி(Sorry) கேட்டு பழகுங்கள். அவர்கள் மன்னிக்கிறார்களா? இல்லையா? என யோசிக்காமல் முதலில் ஸாரி கேளுங்கள்.தாம்பத்யத்தைக் காப்பாற்ற, ‘ஐ லவ் யூ'(Love) சொல்லவேண்டிய அவசியமே இல்லை. தவறு நேர்கிற இடங்களில் ‘ஸாரி'(Sorry) சொல்லிப் பழகினாலே தாம்பத்யம்(Romantic) இனிக்கும்.

 

ADVERTISEMENT

‘ஐ லவ் யூ'(Love) சொல்லாமலே..உங்க ‘தாம்பத்திய'(Romantic) வாழ்க்கை இனிப்பா இருக்கணுமா? மேலே சொன்ன விஷயங்கள டிரை பண்ணிப்பாருங்க.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப்
ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான
மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

08 Feb 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT