எப்போதும் ஒரே மாதிரியாக பரிமாறும் உணவகங்கள் உங்களுக்கு போர் முடித்திருக்கலாம். ஹோம் டெலிவரிகளால் நீங்கள் சில சமயம் சலிப்படைந்திருக்கலாம்… இந்த நேரத்தில் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். நன்றாக டிரஸ் செய்து கொள்ளுங்கள். கிளம்புங்கள் உங்களுக்கு பிடித்த தீம் ரெஸ்டாரண்டிற்கு ! உணவோடு சந்தோஷமும் உங்கள் மனதை நிரப்பட்டும் ! (Theme restaurants)
அமேசான் தீம் ரெஸ்ட்டாரெண்ட்
அமேசான் காடுகளை பற்றி ஆசைப்படாதவர்கள் இல்லை. இயற்கையின் மூலமாக இன்னமும் அதே பரிசுத்தத்துடன் இருக்கிறது. அமேசானுக்கு போக முடியாதவர்கள் இந்த அமேசான் ரெஸ்ட்டாரெண்ட்டிற்கு செல்லலாம். இயற்கையின் மடியில் உண்மையான காடுகளுக்கு நடுவில் குகை மனிதனை போல கொஞ்ச நேரம் வாழ்ந்து வரலாம்.
பெருங்குடி திருமலை நகரில் இந்த ரெஸ்ட்டாரெண்ட் இருக்கிறது.
ஹாண்ட்டட் ரெஸ்ட்டாரெண்ட்
கொஞ்சம் சாகசங்களில் ஈடுபாடு அதிகம் கொண்டவர்கள் மற்றும் சாப்பிடும்போது ஒரு த்ரில்லிங்கை விரும்புபவர்கள் இங்கே செல்லலாம். சாப்பிடும் சமயம் வெகு அருகே பிணங்கள் கிடக்கலாம்! ஒரு அமானுஷ்ய மாய கண்ணாடி நடுவே அமர்ந்து சாப்பிடலாம்.. இப்படி நிறைய பயம் காட்டும் விஷயங்களோடு சாப்பிட்டு வரலாம்.
Also Read About உடலுக்கு ஏன் உப்பு தேவை
கிழக்கு அண்ணா நகரில் இந்த ரெஸ்ட்டாரெண்ட் செயல்படுகிறது.
கைதி கிட்சன் ரெஸ்ட்டாரெண்ட்
இது கொஞ்சம் வித்யாசமான ஆசை கொண்டவர்களுக்கானது. சிறை கம்பிகளுக்கு நடுவே சந்தோஷமாக சாப்பிட்டு வர நினைப்பவர்களுக்கானது. வார்டன்கள் போலீஸ் உயர் அதிகாரிகள் என சுவாரஸ்யமான மனிதர்கள் நடுவே வந்து வந்து போவார்கள். கைதிகள் நமக்கு பரிமாறுவார்கள். ஆர்வம் இருப்பவர்கள் இதனை முயற்சிக்கலாம்.
மயிலாப்பூர் சிஐடி காலனியில் இந்த ரெஸ்ட்டாரெண்ட் செயல்படுகிறது
அனிமல் கிங்டம் ரெஸ்ட்டாரெண்ட்
அற்புதமான கலர்புல்லான இன்டீரியர் உடன் நம்மை அழகாக வரவேற்கிறது அனிமல் கிங்டம் ரெஸ்ட்டாரெண்ட், பழங்கால குடில் வடிவங்கள் டைனசோர்கள் யானைகள் போன்ற பெரிய மிருகங்கள் மிகப்பெரிய மரங்கள் அற்புதமான வேலைப்பாடுகள் கொண்ட தூண்கள் என இங்கே சென்றால் சாப்பிடுவதை விட ரசிப்பதற்கு அதிக விஷயங்கள் இருக்கின்றன.
அடையாறில் இந்த ரெஸ்ட்டாரெண்ட் செயல்படுகிறது.
டயலாக் இன் தி டார்க் ரெஸ்ட்டாரெண்ட்
இதன் பெயரே கவிநயமாக இருப்பதை கவனித்தீர்கள் என்றால் நீங்கள் ரசனை அதிகம் நிரம்பியவர்தான் !இந்த ரெஸ்ட்டாரெண்ட் ரொம்பவே வித்தியாசமானது. நமது புலன்களை முழு வீச்சில் நாம் என்றைக்காவது உபயோகித்திருக்கிறோமா என்றால் நிச்சயமாக இல்லை என்கிற பதில்தான் அதிகம் வரும். வெளிச்சமே இல்லாத இருளுக்குள் நமது புலன்கள் அற்புதமாக வேலை செய்கின்றன என்பதால் இங்கே உள்ளே நுழைந்த உடன் கும்மிருட்டாகவே இருக்கும். ஒரு விளக்கொளி கூட இருக்காது. அவர்களே நம்மை அமர வைப்பார்கள். அதன் பின் நமது உணவை தடவி எடுத்து ரசித்து மென்று உண்கையில் நாமும் உணவும் மட்டுமே ஒன்றாக இருக்கும் தியானம் நிகழும்! அவசியம் செல்லுங்கள்.முகம் பார்க்க முடியாத இருட்டில் நாம் பேசும் வார்த்தைகள் அற்புதமானவை.
இந்த ரெஸ்ட்டாரெண்ட் ராயப்பேட்டையில் இருக்கிறது.
ரெயின் பாரஸ்ட் ரெஸ்ட்டாரெண்ட்
மிக பாரம்பரியமான ரெஸ்ட்டாரெண்ட். காடுகளுக்குள் நுழையும் உணர்வும் இருட்டில் ஒளிரும் மிருகங்களின் கண்களும் ஆங்காங்கே கொத்து கொத்தாக பூத்திருக்கும் பூக்களும் எங்கிருந்தோ வரும் நீரோடையின் சலசலப்பும் நம்மை எங்கிருக்கிறோம் என்பதையே மறந்து விட செய்யும். அவ்வப்போது மிருகங்களின் உறுமல் பறவைகளின் ஒலி மழை இடி மின்னல் என சப்தங்கள் மாறி மாறி கேட்க இறுதியில் நாம் வெளியே வர விருப்பமே இல்லாமல் வெளியேற வேண்டி வரும்.
இந்த ரெஸ்ட்டாரெண்ட் அடையாறில் இருக்கிறது.
உங்கள் லேட் நைட் பசியை போக்க சென்னையில் 6 சிறந்த உணவகங்கள்
அவதார் ரெஸ்ட்டாரெண்ட்
அவதார் படத்தின் தீமை அப்படியே பயன்படுத்தி இருப்பார்கள். மெல்லிய இருளில் அவதாரின் முகங்கள், பூக்கள், நிறங்கள், பறவைகள் என அப்படியே அவதாரை நம் கண் முன் நிறுத்தி இருப்பார்கள். அவதூறை போலவே புளோரசண்ட் நிறங்களில் நமது டேபிள்கள் மின்னும். அற்புதமான அனுபவம் வேண்டும் என்பவர்கள் இங்கே சென்று வரலாம்.
போரூர் காரம்பாக்கத்தில் இந்த ரெஸ்ட்டாரெண்ட் இருக்கிறது
வாட்டர் ஃபால் ரெஸ்ட்டாரெண்ட்
சுற்றிலும் சூழ்ந்துள்ள பாறைகளுக்கு நடுவே வழிந்தோடும் அருவியை ரசித்தபடி நீங்கள் சாப்பிட விரும்புகிறீர்கள் என்றால் இந்த ரெஸ்ட்டாரெண்ட் செல்லலாம். குறைவான வெளிச்சம் நீரின் ஓசை பார்வை படும் இடத்தில எல்லாம் பாறைகள் செடி கொடிகள் என மெல்லிய மயக்கத்தை இது தரும். ரொமான்ஸ் மாலைக்கு இந்த இடம் சரியான தேர்வு.
இந்த ரெஸ்ட்டாரெண்ட் சாலிகிராமத்தில் இருக்கிறது
தி நகர் ஷாப்பிங் ஏன் ரொம்ப ஸ்பெஷல் தெரியுமா !
படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் youtube.
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo