logo
ADVERTISEMENT
home / Life
தனக்காக மட்டுமே வாழ்ந்த அம்மா.. மறுமணம் செய்து வைத்த மகன்.. வைரலாகிறது பேரன்பின் பெருங்கதை

தனக்காக மட்டுமே வாழ்ந்த அம்மா.. மறுமணம் செய்து வைத்த மகன்.. வைரலாகிறது பேரன்பின் பெருங்கதை

தனது அம்மாவிற்கு தானே தேடி அம்மாவின் பழைய நண்பரையே மறுமணம் செய்து வைத்திருக்கிறார் ஒரு மகன். அவரது முகநூல் பதிவு இந்திய அளவில் வைரலாகி இருக்கிறது.

கேரளாவின் கல்லூரி மாணவர் கோகுல் ஸ்ரீதர்தான் அந்த பெருமைக்குரிய மகன் (son) . கேரளாவின் கொல்லம் பகுதியில் கோட்டயம் இடத்தை சேர்ந்த கோகுல் ஸ்ரீதர் பட்டயப்படிப்பு படிக்கிறார். இந்திய மாணவர் அமைப்பின் செயலாளர் பொறுப்பில் இருக்கிறார்.

எனது தாயின் மறுமணம் எனும் தலைப்பில் அவர் பதிவிட்ட பதிவானது இணையத்தில் வைரல் ஆனது. தனது தாய் மற்றும் புதிய தந்தை ஆகிய இருவரின் புகைப்படங்களை வெளியிட்டு அம்மாவின் மறுமணம் தனக்கு சந்தோஷம் தருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

திருமண வாழ்வை அற்புதமான அதிசயங்கள் நிறைந்த பயணமாக மாற்ற உங்களுக்கான சில உதவிகள் ! 

ADVERTISEMENT

 

அந்த பதிவில் ஸ்ரீதர் நெகிழ்ந்து போய் தங்கள் உண்மைக்கதையை கூறி இருக்கிறார். தனக்காக தனது அம்மா நிறைய கஷ்டப்பட்டார் எனும் ஸ்ரீதர் அம்மாவின் அன்பை நெகிழ்வோடு பகிர்கிறார்.

சிறுவயதில் பல துயரங்களை அவரது கணவரால் அந்த அம்மா அனுபவித்திருக்கிறார். இதனை நேரில் பார்த்த சாட்சியாக மகன் இருக்கிறார். ஒருமுறை ஸ்ரீதரின் தந்தை அவரது அம்மாவை தாக்கியதில் தலையில் ரத்தம் கோதியபடி அவர் இருந்திருக்கிறார்.

அப்போது தனது தாயிடம் கேட்ட கேள்வியும் அதற்கு தனது தாய் அளித்த பதிலும் இன்னமும் தனது நினைவில் இருப்பதாக ஸ்ரீதர் குறிப்பிடுகிறார்.

ADVERTISEMENT

ஏன் இன்னும் இந்த மோசமான உறவை தொடர்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்கிற கேள்வியை மகன் கேட்க உனக்காக மட்டுமே இந்த உறவோடு நான் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று அம்மா பதில் அளித்திருக்கிறார்.

இந்த கோயிலுக்கு சென்று வந்தால் இந்த வருடமே திருமணம் நிச்சயம்!

pixabay,youtube,pexels

ADVERTISEMENT

அதனை கேட்ட அடுத்த நொடியே ஸ்ரீதர் தனது அம்மாவுடன் அந்த வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். அப்போதில் இருந்தே அம்மா மறுமணம் பற்றிய நல்ல செய்திக்காக தான் காத்திருந்ததாகவும் கூறியிருக்கிறார்.

அப்போது ஸ்ரீதர் 10ம் வகுப்பு படித்திருக்கிறார். அவரது அம்மா நல்ல படிப்பாளி . ஆசிரியை வேலை செய்தவர். மகனுக்காக அந்த வேலையையும் அவர் விட்டிருக்கிறார். அதன் பின்னர் கணவரை விட்டு வெளியேறி உறவினர் வீட்டில் வாழ்ந்திருக்கின்றனர்.

உறவினர்கள் தங்களைநன்றாக பார்த்து கொண்டதாக கூறியிருக்கிறார் கோகுல் ஸ்ரீதர். அம்மாவிடம் அடிக்கடி இரண்டாவது திருமணம் செய்ய சொல்லி கோகுல் கேட்க அம்மா மறுத்திருக்கிறார். ஆனால் அம்மாவின் பழைய பள்ளி நண்பர் ஒருவர் அவரை மணக்க விரும்பியது குறித்து அறிந்த கோகுல் அதற்கான முன்னேற்பாடுகளை செய்திருக்கிறார்.

 

ADVERTISEMENT

 

pixabay,youtube,pexels

அவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்பதால் அம்மாவை நன்றாக பார்த்து கொள்வார் என்று நினைத்த கோகுல் அம்மாவையும் பள்ளி நண்பரையும் சந்திக்க வைத்தார். திருமணத்திற்கு சம்மதிக்க வைத்திருக்கிறார்.

ADVERTISEMENT

இதை பற்றி உறவினர்களிடம் பேசி புரிய வைத்த மகன் கோகுல் ஸ்ரீதர் அவர்களின் துணையோடு அம்மாவின் இரண்டாவது திருமணத்தை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறார்.

தனது பதிவை பார்த்து அம்மா ஏன் இப்படி இதையெல்லாம் பொதுவெளியில் சொல்லி இருக்கே என்று கேட்க அதில் தவறு இல்லை என்பதை மகன் குறிப்பிட அம்மா புன்னகைத்திருக்கிறார். அந்த புன்னகைக்காக பல வருடம் தவம் இருந்த மகன் அந்த கணம் முழுமையான மகனாக மாறியிருக்கிறார்.

தற்போது அவருடைய அம்மா இடுக்கியில் வாழ்வதாகவும் தான் என்ஜினீயரிங் முடித்துள்ளதாகவும் கோகுல் ஸ்ரீதர் வேறொரு பத்திரிகைக்காக பெட்டியில் தெரிவித்திருக்கிறார்.

ஈன்ற பொழுதை விட பெரிதுவக்கும் தாய் இந்த நிமிடம் கோகுல் ஸ்ரீதரின் தாய்தான் என்பதை உறுதியாக கூறலாம் !

ADVERTISEMENT

pixabay,youtube,pexels

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

ADVERTISEMENT

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

14 Jun 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT
good points logo

good points text