logo
ADVERTISEMENT
home / அழகு
கூந்தல் பராமரிப்பு : உங்களுக்கு பிடித்த பிரபலங்களை  போல  அடர்த்தியான அழகிய கூந்தலை பெற 5 சிறந்த ஹேர் மாஸ்க்ஸ் (hair masks)

கூந்தல் பராமரிப்பு : உங்களுக்கு பிடித்த பிரபலங்களை போல அடர்த்தியான அழகிய கூந்தலை பெற 5 சிறந்த ஹேர் மாஸ்க்ஸ் (hair masks)

கூந்தல் என்பது உங்கள் அழகை நிச்சயம் குறிக்கும் .பிக் பாஸ் வீட்டில் ஜனனி ஐயரின் அழகான கூந்தலை நீங்கள் நிச்சயம் கவனிக்காமல் இருந்திருக்க மாடீர்கள்! அடர்த்தியான கருமையான கூந்தல் என்றாலே அனைவருக்கும் கொள்ளை பிரியம் ஆனால் இன்றைய வெப்ப நிலை, உணவு,பழக்கவழக்கம் காரணமாக நல்ல கூந்தல் என்பது ஒரு கனவாகிவிட்டது.அலுவலகம் போகும் பெண்கள், இல்லத்தரசிகள் வாரநாட்களில் உங்களது கூந்தலை சரியாக பராமரிக்க முடியாது. காலையில் எழுந்த உடன் ஆரம்பிக்கும் உங்க ஓட்டம் இரவு வரை நீடிக்கும். வாரத்தில், நயிற்றிக்கிழமை மட்டுமே உங்களால் நிம்மதியாக மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த முடியும். அப்டி ஒரு ஞாயிற்றுக்கிழமையில் நீங்கள் நிச்சயம் உங்கள் கூந்தலையும் கவனித்து கொள்ளலாமே!

இப்போதெல்லாம் எங்கு யாரை பார்த்தாலும் அவருடைய கூந்தல் எவ்வாறு இருக்கு என்று தான் நாம் யோசிப்போம். சிலருக்கு எவ்வளவுதான் அடர்த்தியான கூந்தல் இருந்தாலும் “எனக்கு முடி கொட்டுது…” என்று தான் சொல்லுவார்கள்!!  நாமோ யோசிப்போம்… ‘இருந்தும் அவ்வளவு அழகாக இருக்கிறதே … கூந்தலை பராமரிக்க என்னதான் செய்றாலோ என்று!’ இதற்கான தீர்வைதான் நாங்கள் அளிக்க இருக்கிறோம். மாதத்தில் இரண்டு முறை ஹேர் மாஸ்க் (hair mask) செய்து பாருங்கள். போதிய ஊட்டச்சத்துடன் கூந்தல் வெகு வேகமாக வளரும்! அதற்க்கு பின் மற்றவர்கள் உங்களை பார்த்து கேள்வி கேட்பார்கள்.

இதற்காக பார்லர், கிளினிக் என்று ஆயிர கணக்கில் செலவு செய்ய வேண்டாம்.வீட்டில் தலை முடிக்கு தேவையான போஷாக்கை எப்படி செலுத்தலாம் என்று பார்ப்போம்.

க்ரீன் டீ & முட்டை ஹேர் மாஸ்க் ( வறண்ட கூந்தலுக்கு) :

 be.t2 BtyiBLWFdyo

ADVERTISEMENT

க்ரீன் டீயில் ஆன்டி ஆக்ஸிடென்ட் (anti-oxidant)  அதிக அளவு உள்ளது.வைட்டமின் ஈ & சி இருப்பதினால் இது முடி உதிர்வதை கட்டுப்படுத்தி, மென்மையான பளபளக்கும் கூந்தலை பெற உதவும். 

செயல்முறை:

இரண்டு ஸ்பூன் க்ரீன் டீயில் ஒரு முட்டையின் மஞ்சள் கருவை சேர்க்க வேண்டும்.நம்முடைய கூந்தலுக்கு தேவையான ப்ரோடீன் இதில் இருந்து கிடைக்கும்.முடியின் வேர் பகுதியில் தடவி, 15 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் சீயக்காய் அல்லது  கெமிக்கல் இல்லாத மிதமான ஷாம்பூ அல்லது வீட்டில் தயாரித்த ஷாம்பூ போட்டு முடியை அலசலாம்.சைனஸ், ஆஸ்துமா போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள், முட்டையை தவிர்த்து கொள்வது நல்லது.இதனால் முடி அடர்த்தி ஆகும். 

மேலும் படிக்க – டஸ்கி ஸ்கின்னிற்கு ஏற்ற 10 வகையான அற்புதமான ஹேர் கலரிங்

ADVERTISEMENT

தயிர் ஹேர் மாஸ்க் (பொடுகு & கட்டுக்கடங்கா கூந்தலுக்கு ) :

 fitisbeauty official BtpuNG1oXRR

கெட்டியான தயிரை 24 மணி நேரம் வெளியே வைத்து புளிக்க வைக்க வேண்டும்.நன்கு புளித்து தயிரில் அதிகமான பாக்டீரியா உருவாகும். அவை தலையில் ஏற்படும் பொடுகுக்கு சிறந்த எதிரி.தயிர் உச்சந்தலையில் அரிப்பு மற்றும் எரிச்சல் வராமல் பாதுகாக்கும். 

செயல்முறை: புளித்த தயிரை முடிகளின் வேர்கள் மற்றும் கூந்தலின் அடி பாகம் வரை நன்கு தேய்த்து 20நிமிடங்கள் ஊற வைக்கவும்.குளிர்ச்சி சேராதவர்கள் நேரத்தை குறைத்து கொள்ளுங்கள்.தொடர்ந்து 3 நாட்கள் இவ்வாறு செய்து வந்தால் பொடுகு சுத்தமாக மறைந்து முடி உதிர்வை தவிர்க்கும். அதோடு முடிவளர்ச்சிக்கு தேவையான ப்ரோடீன் தயிரில் இருந்து கிடைப்பதால் முடி வேகமாக வளர உதவும்.

ஆலிவ் ஆயில் & இஞ்சி (எல்லா வித கூந்தலுக்கும் ):

olive-oil-salad-dressing-cooking-olive

ADVERTISEMENT

ஆலிவ் எண்ணெய் மிக சிறந்த ஈரப்பதத்தை தர வல்லது. இதில் அதிகப்படியான அளவு இருக்கும் வைட்டமின் A, வைட்டமின் E மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் கூந்தலின் உதிர்வை தடுத்து வலிமையான கூந்தல் வேரை உருவாக்குவதோடு, அடர்த்தியான வலிமையான கேசம் கிடைக்கும். இஞ்சி முடிக்கு ஈரப்பதம் தந்து முடி வழுக்கையை சரி செய்யும்.

செயல்முறை: இதில் இஞ்சியை நன்கு அரைத்து பேஸ்ட் ஆக்கிக்கொள்ளுங்கள். இதை ஒரு ஸ்பூன் எடுத்து ஒலிவ் எண்ணையில் கலந்து உங்கள் கூந்தலில் தடவுங்கள். ஒரு அரைமணி நேரம் களைத்து ஷாம்பூவில் அலசுங்கள். வரம் ஒரு முறை செய்தால் உங்கள் கூந்தல் மென்மையான பிரகாசத்துடன் மீண்டும் அடர்த்தியாக வளரும்.

வெந்தயம் ஹேர் மாஸ்க் (குளிர்ச்சி பெற ):

anishapo nutrition Br-fKGnF5IB

கூந்தல் வளர்ச்சிக்கு முக்கியமான காரணமாக இருப்பது உடல் சூடு.அதிகமான உடல் சூடு முடி உதிர்வை அதிகரிக்க செய்யும்.இதற்க்கான அறிய மருந்து வெந்தயம்.

ADVERTISEMENT

செயல்முறை: 4 ஸ்பூன் வெந்தயத்தை இரவில் ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.மறுநாள் காலையில் மிக்ஸியில் நன்கு கிரீம் போல அரைத்து தலையில் முடியின் வேர்களில் தடவி 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஷாம்பு போட்டு தலையை அலசினால் வறண்ட முடி பொலிவுடன் காணப்படும்.முடி முறிந்து விழுவது குறைந்து ஆரோக்கியமான வளர்ச்சி அடையும்.

தேன் & வாழைப்பழம் ஹேர் மாஸ்க் (மந்தமான கூந்தலுக்கு):

dreams do preet BZWGUdWBiHh

இந்த கலவை நிச்சயம் உங்களை சாப்பிட தூண்டும் ! ஆனால் இது இப்போது உங்கள் கூந்தலின் உணவு என்பதை மறக்காதீர்கள்.தலையில் பொடுகு அதன் காரணமாக ஏற்படும் அரிப்பினை போக்க மிகவும் நல்லது தேன் தான். அதே போல வாழைப்பழம் ஒரு அறிய பொக்கிஷம். காரணம், அதில் ஏராளமாக உள்ள பொட்டாசியம், வைட்டமின் A, B, C மற்றும் E.

செயல்முறை: நன்கு பழுத்த வாழைப்பழம் ஒன்றை மசித்து அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து நன்கு மசித்து முடியின் வேர்களில் தடவி, அதனை அரை மணி நேரம் நன்கு ஊற வைக்கவேண்டும்.பின்னர் வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும்.பின்னர், ஷாம்பூ போட்டு குளித்து கொள்ளலாம்.

ADVERTISEMENT

மேலும் படிக்க –  கூந்தலை பளபளப்பாகவும் அழகாகவும் மாற்றும் 10 இந்திய ஷாம்பூ வகைகள்

இது போன்ற வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து உங்கள் கூந்தலை ஆரோக்கியமாக பார்த்து கொள்ளுங்கள்( பராமரிப்பு) .இது மட்டுமில்லாமல் , உண்ணும் உணவிலும் போதுமான ஊட்டச்சத்தை சேர்ப்பது முக்கியம். மீன், கீரை, முட்டை, நட்ஸ் , பெர்ரி , ஆரஞ்சு பழங்கள் இவை அனைத்தும் உங்கள் கூந்தலை வேகமாக வளர உதவும். 

பட ஆதாரம்  – பிக்ஸாபெ, இன்ஸ்டாகிராம்  

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி,  தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !

ADVERTISEMENT

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

14 Feb 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT