logo
ADVERTISEMENT
home / அழகு
உடலும் முகமும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது எப்படி?

உடலும் முகமும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது எப்படி?

ஒரு சில இயற்கை முறை வைத்தியங்கள் தான் நமது ஆரோக்கியத்தை அதிகமாக்க பயன்படுகிறது. அந்த வகையில் 30 வயதை நெருங்கும் ஒவ்வொரு வரும் இந்த பழக்க வழக்கத்தை அன்றாடம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். பல்வேறு வேலைகள் மத்தியில் நமது உடல் நலத்தின் மேல் மற்றும் அழகின் மேல் இருக்கும் அக்கறையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகின்றோம்.

ஆனால் உடலும் முகமும்(skin) மிக முக்கியமான ஒன்றாகும். அலுவலக காரியம் மற்றும் பிற வேலைகளுக்கு வெளியில் செல்லும் போது நமது உடலும் முகமும் மிக முக்கியம்.


அனைவரும் நம்மை முதலில் பார்த்து இனம் கண்டு கெள்வது மற்றும் விசாரிப்பது உடலும் முகமும்(skin) எப்படி இருக்கின்றது என்று தான். அத்தகைய உடலும் முகமும்(skin) சரி வர கவனித்துக்கொள்ளுவது நமது முக்கியமான கடமையாகும். பார்ப்பதற்கு அழகாக இருந்தால் மட்டும் போதாது ஆரோக்கியத்திலும் அக்கறை செலுத்த வேண்டும்.

உடலும் முகமும்..!(skin)
உடல் ஆரோக்கியம் எப்படி முக்கியமோ, அதே போன்று தான் இந்த முகத்தின் ஆரோக்கியமும் மிக முக்கியமானதாகும். நாம் உடலுக்கு எடுத்து கொள்ளும் உணவை பொருத்தும், செய்ய கூடிய அன்றாட செயலை பொருத்தும் தான் இது வேறுபடும். இதற்கு சில இயற்கை குறிப்புகளே போதுமானது.

ADVERTISEMENT

ரொம்ப பிசியா..?
உங்களது அலுவலக வேலைகள் அதிகம் இருந்தாலும் அதை முடிந்த அளவுக்கு வெகு சீக்கிரமாக செய்து முடித்து விடுங்கள். எப்போதும் பிசியாக இருப்பது போன்று வைத்து கொள்ளாதீர்கள். இது உங்களின் உடல் அமைப்பை பாதித்து சீரற்ற செயல்திறனை தரும்.

தவிர்த்தே ஆகணும்..!
30 வயதை நீங்கள் நெருங்கும் முன்னரே ஒரு சில உணவுகளை தவிர்த்து ஆக வேண்டும். ஏனெனில், அவை உங்களின் உடலில் அதிக அழுக்குகளை சேர்ப்பதோடு, முகத்தின் அழகையும் கெடுத்து விட கூடும். குறிப்பாக எண்ணெய் சேர்த்த உணவுகளை 30 வயதை நெருங்கும் போதே தவிர்த்து விடுங்கள் நண்பர்கள்.

வயதாவை தடுக்க…
பலருக்கு வயதாவது கூட தெரிவதில்லை. இது போன்ற நிலை உங்களுக்கு ஏற்பட்டால் அதை இந்த டிப்ஸை வைத்து எளிதில் தீர்வு பெற்று விடலாம். தேவையானவை…

வெள்ளை கரு 1
எலுமிச்சை சாறு 1
ஸ்பூன் யோகர்ட் 1 ஸ்பூன்

செய்முறை :- முதலில் முட்டையின் வெள்ளை கருவை தனியாக எடுத்து கொண்டு, நன்றாக அடித்து கொள்ளவும். பின் அதனுடன் யோகர்ட் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொண்டு முகத்தில் தடவவும். 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவலாம். இந்த குறிப்பை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் சருமம் வயதாவதை தடுக்கும்.

சர்க்கரை கம்மி பண்ணுங்க
30 வயதை நெருங்கும் போதே சர்க்கரையை குறைத்து கொண்டால் பலவித நன்மைகள் கிடைக்கும். இவை உஙக்ளின் சருமத்தையும் உடலையும் பாதிக்காது. மேலும், நீண்ட நாட்கள் இளமையாக வைத்து கொள்ள இது உதவும்.

ADVERTISEMENT

எந்த குளியல் சரி..?
பொதுவாகவே சூடு நீரில் குளிப்பதால் சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய் சுரப்பிகள் பாதிக்கப்படுகிறது. இதே நிலைதான் 30 வயதை கிடைக்கும் உங்களுக்கும். எனவே, வெது வெதுப்பான நீரில் குளிப்பது சிறந்தது.

சுருக்கங்களை போக்க
முகத்தில் ஏற்பட கூடிய சுருக்கங்கள் தான் நாம் வயதானதை குறிக்கிறது. சுருக்கங்களை குறைக்க மிக சிறந்த குறிப்பு இதுதான்.
தேவையானவை…
கேரட் பாதி உருளைக்கிழங்கு 1
மஞ்சள் தூள் 1 சிட்டிகை
பேக்கிங் சோடா 1 சிட்டிகை

செய்முறை :- முதலில் கேரட் மற்றும் உருளை கிழங்கை வேக வைத்து கொள்ளவும். பிறகு இவற்றை மசித்து கொண்டு, மஞ்சள், பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்க்கவும். இந்த கலவையை முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவலாம். இந்த குறிப்பு சுருக்கங்களை விரைவிலே போக்கி விடும்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

ADVERTISEMENT
10 Jan 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT