தமிழ் சினிமாவில் நடிக்க வந்த சில வருடங்களிலேயே உச்சத்திற்கு சென்ற ஹீரோ சிவகார்த்திகேயன். இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் இரும்புத்திரை இயக்குநர் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ’ஹீரோ’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.
இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஒவ்வொரு மாணவனும் தான் வாழ்க்கையில் டாக்டர் ஆகவேண்டும், வக்கீல் ஆகவேண்டும் என்று இருக்க சிவகார்த்திகேயன் மட்டும் சக்திமான் போல் சூப்பர் ஹீரோவாக வேண்டும் என்று நினைக்கின்றார்.
இதனாலேயே மற்றவர்கள் போல இல்லாமல் சற்று வித்யாசமான செயல்களை செய்ய முயற்சிக்க அதனால் வரும் பிரச்சனைகளால் தவிக்கிறார். இந்த நிலை தொடர்ந்ததால் சொந்த அப்பாவே நீ என் கண்முன் நிற்காதே என்று ஒரு கட்டத்தில் சொல்லும் நிலைக்கு வருகின்றார்.
அதன் பின்னர் நமக்கு தேவை பணம் மட்டும் தான் என்று முடிவெடுத்து போலி சான்றிதழ் அடித்து லட்சம் லட்சமாக சம்பாதிக்கின்றார். மறுபுறம் ஊரில் யாருக்கும் தெரியாத இடத்தில் அர்ஜுன் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களை திரட்டி அவர்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வருகிறார்.
மேலும் படிக்க – ஸ்டைலாக ஸ்போர்ட்ஸ் பைக் ஓட்டும் நடிகை பிரியா பவானி ஷங்கர்… வைரல் வீடியோ!
அதில் ஒரு மாணவி இவானாவிற்கு ஏரோநாட்டிகல் படிக்கவேண்டும் என்று விருப்பம். அதை சிவகார்த்திகேயன் அர்ஜுனுக்கு தெரியாமல் நிறைவேற்றுகிறார். இவானா கண்டுப்பிடிப்பு வெளி உலகிற்கு தெரிகின்றது. ஆனால், அந்த கண்டுப்பிடிப்பு வெளிவருவதன் மூலம் கார்ப்ரேட் கம்பெனிகள் பிஸினஸ் பாதிக்கும் என்பதால் வில்லன் அபி தியோல், இவானாவை குற்றம் செய்தவர் என நிரூபிக்கிறார். இதனால் இவானாவும் தற்கொலை செய்துக்கொள்கின்றார்.
அதன் பிறகு இவர்கள் யார், எதற்காக அர்ஜுன் இப்படி மறைந்து வாழ்கின்றார் என பல மர்மங்கள் விலக ஒரு வழியாக சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோவாக மறுக்கிறார். இதன் பின்னர் என்ன செய்கிறார் என்பதே மீதிக்கதை. முதல் பாதியில் அர்ஜுன் ஹீரோவாக காட்டப்பட்டுள்ளார். இரண்டாம் பாதியில் சிவகார்த்திகேயன் மிரட்டியுள்ளார். வேலைக்காரன் போல் ஒரு சமூதாய கருத்துக்கொண்ட கமர்ஷியல் படத்தை ரசிகர்களுக்கு நிறைவாக கொடுத்துள்ளார்.
மேலும் படிக்க – சரவணபவன் அண்ணாச்சியை எதிர்த்து நீதி கேட்ட ஜீவஜோதி – இனி தீவிர அரசியல்வாதியும் கூட !
அதேபோல் யுவன் பின்னணியில் மிரட்டியுள்ளார். அனைவரும் பணம் பணம் என்று ஓடாமல் மற்றவர்களுக்கு பிரச்னை என்றால் உதவ வேண்டும் , இந்திய பெற்றோர்களிடம் மட்டும் தான் அவர்களது குழந்தைகள் தங்களது கனவுகள் குறித்து பேச பயம் கொள்கிறார்கள் போன்ற ஹார்ட் டச்சிங் வசனங்கள் கைதட்டலை பெறுகிறது.
பெற்றோர்களும் குழந்தைகளின் கனவுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்ற உறுதியான மெசேஜ் இந்த படத்தின் வாயிலாக ரசிகர்களை சென்றடைந்துள்ளது. ஹீரோயினி கல்யாணி ப்ரியதர்ஷனுக்கு பெரிய அளவில் கதாபாத்திரம் இல்லை என்றாலும் நல்ல அறிமுக படமாக இது இருக்கும் என நம்பலாம்.
எடுத்துக்கொண்ட கதைக்களத்தை ரசிகர்களிடையே கொண்டு சேர்த்த விதம் அருமை. மொத்தத்தில் ஹீரோ திரைப்படம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பார்க்க வேண்டிய கருத்து படம் என்பதில் சந்தேகமில்லை.
சென்னையில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் ‘ஹீரோ’ படத்தின் காலைக் காட்சியை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாடி வருகின்றனர்.’ஹீரோ’ படம் குறித்து ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்துள்ளனர். அவற்றில் சில,
After 3 idiots, #Hero film speaks strongly on the important education subject. @Siva_Kartikeyan #HeroReview #HeroFromToday#HeroFDFS
— Immanuel (@m_immanuel) December 19, 2019
3 இடியட்ஸ் படத்திற்கு பிறகு கல்வியின் முக்கியத்துவம் பற்றி வலுவாக பேசியுள்ள படம் கதாநாயகன். முதல் பாதி அருமை. சிவகார்த்திகேயன் நடிப்பு செம. தீர ஆய்வு செய்து படத்தை எடுத்துள்ளார் பி.எஸ். மித்ரன். யுவன் ஷங்கர் ராஜாவின் இசை வேற லெவல். ராஜா ராஜா தான்.
After 3 idiots, #Hero film speaks strongly on the important education subject. @Siva_Kartikeyan #HeroReview #HeroFromToday#HeroFDFS
— Immanuel (@m_immanuel) December 19, 2019
கதாநாயகன் 2 படத்தை எதிர்பார்க்கிறோம். அர்ஜுனும், சிவகார்த்திகேயனும் போட்டி போட்டு நடித்துள்ளனர். கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். அதுவும் குழந்தைகளுடன் சென்று பார்க்க வேண்டும். துபாயில் கதாநாயகன் படம் பார்த்து முடித்த உடன் திரையரங்கத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கை தட்டினார்கள். இது சிவகார்த்திகேயன் கெரியரில் முக்கியமான படம்.
#hero interval – @Siva_Kartikeyan @akarjunofficial @Psmithran @kalyanipriyan @kjr_studios
U guys are lit 🔥 🔥
It’s a masterpiece..@Siva_Kartikeyan Brother this movie will surely take you to an another level..— Somesh_krishnan (@somesh_krishnan) December 20, 2019
தமிழ் திரைப்படத்தில் எடுக்கப்பட்ட சூப்பர் கதாநாயகன் படங்களில் கதாநாயகன் தான் சிறந்தது என்று கூறலாம். நாட்டுக்கு தேவையான மெசேஜுடன் அழகாக சொல்லியுள்ளனர்.
The #Hero himself @Siva_Kartikeyan celebrated the rise of a superhero at #FansfortRohini today for #HeroFDFS #FansFortRohini the place where movies are celebrated and STARS are made. @kjr_studios @Psmithran @kalyanipriyan @george_dop pic.twitter.com/4wJTAZ43Fa
— Rohini SilverScreens (@RohiniSilverScr) December 20, 2019
What a smile man..🔥
Good job sir@Siva_Kartikeyan#HeroFDFS pic.twitter.com/CPz37PjETK— Boopathi Raja R (@boopathee97) December 20, 2019
மேலும் ரோகிணி தியேட்டரில் ரசிகர்களுடன் படம் பார்க்க வந்த ஹீரோ சிவகார்த்திகேயனுக்கு மாலை போட்டு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
மேலும் படிக்க – பஞ்சாயத்தில் சிக்கியிருக்கும் பகல்நிலவு அஸீம் – சின்னத்திரையில் தொடரும் முறையற்ற உறவுகள் !
#POPxoLucky2020 – ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!