இன்று நடுத்தர வயது பெண்கள் தங்கள் முகம் நல்ல அழகான தோற்றம் பெற வேண்டும் என்று அதிகம் விரும்புகின்றனர். இதற்காக அவர்கள் பல முயற்சிகளை எடுகின்றனர். பொதுவாக 3௦ வயதிற்கு மேல் பெண்களின் சருமத்தில் மெல்லிய கோடு மற்றும் சுருக்கங்கள் ஏற்படும். இவை வயதாகும் அறிகுறிகளை காட்டுகின்றது. ஆனால், சரியானா முயற்சிகள் எடுத்தால், நீங்கள் இத்தகைய பிரச்சனைகளை போக்கி, உங்கள் சருமம் எப்போதும் நல்ல பொலிவோடும், இளமையான தோற்றத்தோடும், அழகாகவும் இருக்க செய்யலாம்.
உங்களுக்கு உதவ, இங்கே சில எளிய, ஆனால் அதிக பலன் தரக் கூடிய பேஸ் பாக்.தொடர்ந்து படியுங்கள்.
1. கடலை மாவு பேஸ் பாக்
இந்த பேஸ் பாக்கை வீட்டில் செய்வது மிகவும் எளிது. இது உங்கள் முகத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்கி, சருமம் மிருத்வாக உதவும்,. மேலும் உங்கள் சருமதிற்குத் தேவையான போஷாக்கையும் இது கொடுக்கும். இந்த பேஸ் பாக் எப்படி செய்வது என்று இங்கே பார்க்கலாம்;
தேவையான பொருட்கள்
- கடலை மாவு இரண்டு தேக்கரண்டி
- இரண்டு தேக்கரண்டி கெட்டித் தயிர்
- ஒரு தேக்கரண்டி தேன்
- சிறிது எலுமிச்சை பழ சாறு
செய்முறை
- முகத்தை முதலில் நன்றாக பன்னிர் கொண்டு சுத்தம் செய்து விட வேண்டும்
- அதன் பின், கடலை மாவுடன் தயிர், தேன் மற்றும் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்
- இந்த கலவையை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் மிதமாக மசாஜ் செய்ய வேண்டும்
- அப்படியே சிறிது நேரம் விட்டு விட்டு, பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விட வேண்டும்
- இப்படி வாரம் இரண்டு முறையாவது செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். சருமம் இளமையான தோற்றம் பெறுவதோடு, மிருதுவாகவும் ஆகும்.
Pixabay
2. முட்டை பேஸ் பாக்
இந்த பேஸ் பாக் குறிப்பாக சருமத்தில் ஏற்படும் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களை போக்க உதவும். இதனை வாரம் இரண்டு முறையாவது செய்து வந்தால், நிச்சயம் நல்ல பலனை நீங்கள் காணலாம். இந்த பேஸ் பாக் எப்படி செய்வது என்று இங்கே பார்க்கலாம்;
தேவையான பொருட்கள்
- ஒரு முட்டையின் வெள்ளைக் கரு
- ஒரு தேக்கரண்டி தேன்
- சிறிதளவு கடலை மாவு / பச்சைப்பயிர் மாவு
செய்முறை
- முதலில் ஒரு பஞ்சில் பன்னீரை நனைத்து முகத்தை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்
- அதன் பின் முட்டையின் வெள்ளைக் கரு, தேன் மற்றும் கடலை மாவு, ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்
- இந்த கலவையை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் மிதமாக மசாஜ் செய்ய வேண்டும்
- பின் அப்படியே சிறிது நேரம் விட்டு விட வேண்டும்
- மிதமான சூடு இருக்கும் தண்ணீரில் முகத்தை கழுவி விட வேண்டும்
- இது முகத்திற்கு உடனடி பொலிவையும், அழகையும் தரும்
3. பப்பாளி பேஸ் பாக்
இந்த பப்பாளி பேஸ் பாக் (face pack) அதிக பலனைத் தரக்கூடியதாக இருக்கும். இதனை வாரம் ஒரு முறையாவது செய்து வந்தால், நல்ல பலனைத் தரும் என்பதில் சந்தேகம் வேண்டாம். இதை எப்படி செய்வது என்று இங்கே பார்க்கலாம்;
தேவையான பொருட்கள்
- சிறு பப்பாளி துண்டு, மசித்தது
- சிறிது பால்
- சிறிதளவு தேன்
செய்முறை
- நன்கு மசித்த பப்பாளியுடன் பால் மற்றும் தேனை கலந்து கொள்ள வேண்டும்
- இந்த கலவையை முகத்தை சுத்தம் செய்து விட்டு பின் முகத்தில் தடவ வேண்டும்
- அப்படியே மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும்
- சிறிது நேரம் அப்படியே விட்டு விட வேண்டும்
- பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விட வேண்டும்
Pixabay
4. வாழைப்பழம் பேஸ் பாக்
இது மக்ற்றுமொரு நல்ல பலனைத் தரக் கூடிய பேஸ் பாக்(பேக்). இதனை நீங்கள் எளிய முறையில் செய்து விடலாம். இந்த பேஸ் பாக்கை வாரம் இரண்டு முறை செய்து வந்தால் நல்ல பலனைப் பெறலாம். இதை எப்படி செய்வது என்று இங்கே பார்க்கலாம்;
தேவையான பொருட்கள்
- ஒரு சிறிய வாழைப்பழம், மசித்தது
- சிறிது பச்சை பால்
- சிறிது தேன்
செய்முறை
- மசித்த வாழைப்பழத்தோடு பால் மற்றும் தேனை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்
- இந்த கலவையை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்
- பின் அப்படியே சிறிது நேரம் விட்டு விட வேண்டும்
- பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விட வேண்டும்
- இந்த பேசியல் நல்ல பலனைத் தருவதோடு உங்கள் சருமத்தையும் இளமையாக வைத்துக் கொள்ள உதவும்
முகத்தை நிமிடங்களில் முழு நிலவு போல பிரகாசிக்க வைக்க சிம்பிள் குறிப்புகள் !
பட ஆதாரம் – Pexels
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.