குளிர்காலம் வந்தாலே சளி, காய்ச்சல், இருமல், தும்மல், மூக்கில் தொடர்ந்து நீர் வடிதல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். உங்கள் உடம்பு எவ்வளவு ஆரோக்கியமாக, நோய் எதிர்ப்பு சக்தியோடு இருக்கிறதோ அந்தளவிற்கு இந்த தொந்தரவுகளில் இருந்து விலகி இருக்கலாம். வெய்யில் காலங்களில் நோய் கிருமிகள் வெட்பத்தினால் இறந்து விடும். அதுவே, குளிர்காலங்களில் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவும். இப்படிப்பட்ட தொந்தரவுகளில் இருந்து உங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது? அதற்கான எளிய வழிகளை பார்க்கலாம்.
சளி மற்றும் இருமல் (For cough and cold)
Pixabay
1. ஆளிவிதை
ஆளிவிதைகளை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்கவிடுங்கள். பின்னர் அதில் சிறிது எலுமிச்சை சாரையும், தேனையும் சேர்த்து பருகி வந்தால், சளி இருமல் (cough cold) காணாமல் போய்விடும்.
2. எலுமிச்சை, பட்டை, தேன்
அரைத் தேக்கரண்டி தேனில், கொஞ்சம் எலுமிச்சை சாறு, சிறிது பட்டைத்தூள் சேர்த்து கலந்து தினமும் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால், சளி, இருமல் தாங்காது.
3. ப்ரோமெலைன்(Bromelain)
அன்னாச்சிப்பழத்தில் இருக்கும் ஒரு என்சைம் தான் ப்ரோமெலைன்(Bromelain). இதில் ஆன்டி-இன்ஃபிளாமேடரி(anti-inflammatory) தன்மை இருப்பதால், சளியை முறித்து உடலில் இருந்து வெளியேற்றும். தினமும் அன்னாசிப்பழ சாறை அருந்தி இருமலில் இருந்து விடுபடலாம்.
இருமல் மற்றும் காய்ச்சல் (For cough and fever)
Pixabay
1. இஞ்சி & துளசி
இஞ்சிச் சாரோடு, நசுக்கிய துளசி இலைகளை சேர்த்து கொஞ்சம் தேன்விட்டு பருகினால் இருமல் காய்ச்சல்(fever) நின்றுவிடும்.
2. மார்ஷ்மெலோ வேர்
மார்ஷ்மெலோ வேர் பண்டைய காலந்தொட்டே, இருமலுக்கும், தொண்டை எரிச்சலுக்கும் நல்ல தீர்வாகும். கொதிக்கும் நீரில் போட்டுவைத்து, இந்த வேரின் சாறு இறங்கியதும் பருகினால், காய்ச்சல், இருமல், இருமலால் ஏற்பட்ட தொண்டைஎரிச்சல் இவை அனைத்தையும் இந்த வேரில் உள்ள பிசின் தன்மை குறைக்கும். இது சிரப்(syrup) மற்றும் காய்ந்த பொடியாகவும் இங்கு கிடைக்கும்.
இருமல் (For cough)
Pixabay
1. சிற்றரத்தை
தினமும் ஒரு துண்டு சிற்றரத்தையை வாயில் போட்டு வந்தால், இருமல் போய் விடும்.
2. திப்பிலி
திப்பிலியுடன், மிளகு, திராட்சை, பொன்னவரி ஆகியவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, தேனுடன் சாப்பிட்டு வந்தால், நாள்பட்ட இருமல் சரியாகும்.
3. வெற்றிலை
மூன்று கப் தண்ணீரில், இரண்டு புதிய வெற்றிலை, மற்றும் நான்கு பொடித்த மிளகு சேர்த்து பாதியாகும்வரை கொதிக்க விடவும். வடிகட்டி காலையிலும், இரவும் ஒரு தேக்கரண்டி தேனுடன் சேர்த்து பருகி வந்தால், இருமல் காணாமலே போய்விடும்.
சளி (For cold)
Pixabay
1. கேரட் ஜூஸ்
சளி இருக்கும்போது ஜூஸா? ஆமாம், கேரட் ஜூஸ் பொதுவாக வரும் சளித்தொல்லையில் இருந்தும், இருமலில் இருந்தும் நல்ல நிவாரணம் கொடுக்கும்.
2. ஏலக்காய், நெய்
ஏலக்காய் பொடியை நெய்யோடு கலந்து தினமும், காலையிலும் மாலையிலும் சாப்பிட்டு வந்தால் சளித் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
அல்லது சின்ன வெங்காயம், துளசி இலை, கற்பூரவள்ளி இலை, மிளகு, முட்டைகோஸ், தூதுவளை இலை இவற்றில் எது வேண்டுமானாலும் பச்சையாக சாப்பிட்டுவர சளி நீங்கும்.
உடலில் மற்ற தொந்தரவுகளுக்கு (For other sickness)
Pixabay
1. நெஞ்சில் கபம் – நாட்டுச்சக்கரை கசாயம்
சீரகம், மிளகு, நாட்டுச்சக்கரை ஆகியவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து, மிதமான சூட்டில் பருகினால் நெஞ்சில் உள்ள அடைப்பு நீங்கி விடும்.
2. தொண்டை புண் – உப்பு, மஞ்சள்தூள்
தொண்டைவலி என்று எப்போது டாக்டரிடம் சென்றாலும், சூடான தண்ணீரில் கல் உப்பு சேர்த்து கலந்து, தொண்டையில் படுமாறு கொப்பளித்து துப்பச் சொல்வார். அதோடு சிறிது மஞ்சள்தூளையும் சேர்த்து கலந்து கொப்பளித்தால், விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
3. மூக்கில் நீர் வடிதல் – நெல்லிக்காய்
தினமும் ஒரு பெரிய நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால், இரத்தம் அபிவிருத்தியாகும். மேலும், நல்ல நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். சளி, மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல் போன்ற எந்த தொந்தரவும் அண்டாது. நெல்லிக்காய் கிடைக்கும் காலங்களில் வாங்கி, நறுக்கி உலர்த்தி வைத்துக் கொண்டால், எப்போதுமே உங்களிடம் இருக்கும் பொருள் ஆகிவிடும்.
4. மூச்சுத் திணறல் – அஸ்வகந்தா பொடி
ஆஸ்துமா போன்ற மூச்சுத் திணறல் இருக்குமானால், அஸ்வகந்தா பொடியை தேனில் கலந்தோ அல்லது பாலில் கலந்தோ உண்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.
5. ஃப்ளூ(flu) – ஏலக்காய், கிராம்பு
ஏலக்காய், கிராம்பு இரண்டையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இந்தப் பொடியை ஒரு சல்லடை போன்ற துணியில் போட்டு, லேசாக தட்டுங்கள். பின் இந்த கலவைத் துணியை அடிக்கடி நுகர்ந்து வந்தால் ஃப்ளூ அண்டாது.
6. தும்மல் – குளியல்
வெது வெதுப்பான தண்ணீரில் குளித்து வந்தால், மூக்கடைப்பு, தும்மல் குறையும்.
தும்மல் என்பது நுரையீரலில் உள்ள தூசுகளை வெளியேற்றும் ஒரு நிகழ்வு. சளியும் அப்படித்தான். உங்கள் உடலில் உள்ள கிருமிகளை அகற்ற இயற்கை ஏற்படுத்திய ஒரு முறை. காய்ச்சல் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மிதமாக இருந்தால், உங்கள் உடலில் உள்ள நோய்களை எதிர்த்துப் போராடுகிறது என்று அர்த்தம். இவை எல்லாம் மிகையாகி உங்களால் தாங்க முடியவில்லை என்றால், மேலே சொன்ன இயற்கை முறை வைத்தியங்களை செய்யுங்கள். நிச்சயம் தீர்வு காணலாம்!
மேலும் படிக்க – தண்ணீர் குடிப்பதனால் கிடைக்கும் அற்புத பலன்கள்
பட ஆதாரம் – Shutterstock
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!