சின்னத்திரை சீரியல்களில் நடிக்கும் நட்சத்திரங்கள் பலர் காதலித்து திருமணம் செய்து கொள்வது சகஜமான விசயம்தான். அந்த வரிசையில் வம்சம் தொடரில் நடித்து பிரபலமான ஜெயஸ்ரீ (jeyashree) சின்னத்திரை நடிகர் ஈஸ்வரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ஆபிஸ் தொடர் மூலம் பிரபலமானவர் ஈஸ்வர், இதனை தொடர்ந்து அதேகண்கள், சிவரகசியம், நெஞ்சத்தை கிள்ளாதே, பாவமன்னிப்பு, சித்திரம் பேசுதடி என சுமார் 12க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார்.
இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இவர்கள் குடும்பத்துடன் சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தனர்.
youtube
இந்த நிலையில் நடிகை ஜெயஸ்ரீ அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் ஈஸ்வருக்கு வேறொரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும், அவரை திருமணம் செய்வதற்காக என்னிடம் விவாகரத்து கேட்டு அவரது தாயாருடன் சேர்ந்து கொடுமைப்படுத்துகிறார் என கூறியுள்ளார்.
மேலும் தேவதையை கண்டேன் சீரியலில் நடித்து வரும் ஈஸ்வர், அதே சீரியலில் வில்லியாக நடிக்கும் மஹாலக்ஷ்மி என்ற நடிகையுடன் மிகவும் நெருக்கமாக பழகி வருகிறார். நானும் என் மகளும் வீட்டில் இருக்கும்போது எங்க முன்னாடி மகாலக்ஷ்மிக்கு வீடியோ கால் போட்டு கொஞ்சி கொஞ்சிப் பேசுவார்.
அமெரிக்காவில் நண்பர்களுடன் அசைவ விருந்தில் நயன்தாரா… கேள்வி எழுப்பும் ரசிகர்கள்!
அவங்களுக்கும் ஏற்கெனவே கல்யாணமாகி ஒரு பையன் இருக்கான். அந்த பையன்கிட்ட தன்னை `அப்பா’ன்னு கூப்பிடச் சொல்லுவார்.என் பொண்ணு இதனாலேயே மனசளவுல ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கா. குடிச்சுட்டு வந்து என்னை அடிப்து, நடு வீட்டில் சிறுநீர் கழிப்பது சித்ரவதைகளை செய்து வருகிறார்.
youtube
மேலும் தனது நகைகள், 30 லட்சம் ரூபாய் வரையிலான பணத்தையும் ஈஸ்வர் அபகரித்து கொண்டு தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், குழந்தையுடன் தவித்து வருவதாகவும் அந்த புகாரில் தெரிவித்திருந்தார். இதை அடுத்து ஜெயஸ்ரீ புகார் மீது வழக்கு பதிவு செய்த அடையாறு மகளிர் போலீசார் ஈஸ்வரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது மனைவியை கொடுமைப்படுத்தியதை ஒப்புக்கொண்டதை அடுத்து மனைவியை அடித்துத் துன்புறுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
மனைவியை அடித்ததாக சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் ரகுநாதன் கைது செய்துப்பட்டுள்ள சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜெயஸ்ரீ (jeyashree) , எங்களுக்கு கல்யாணமாகி 4 வருடங்கள் ஆகிறது.
ஹைதராபாத்தில் பெண் மருத்துவரை எரித்து கொலை செய்த சம்பவம் : கீர்த்தி சுரேஷ் வேதனை!
அவர் மது பழக்கத்துக்கு அடிமையானவர் என்பது திருமணத்துக்கு முன்பே தெரியும். ஆனால் அவர் சூதாட்ட பிரியர் என்பதும், அதன் காரணமாக லட்சக்கணக்கில் அவருக்கு கடன் இருப்பதும் திருமணத்திற்கு பிறகுதான் தெரியும்.
youtube
அந்த கடன்களையும் நான் தான் அடைத்து வருகிறேன். தேவதையைக் கண்டேன் தொடரில் நடிக்கத் தொடங்கிய பிறகுதான் உடன் நடிக்கும் நடிகை மஹாலக்ஷ்மியுடன் நெருக்கம் ஏற்பட்டது.
அந்த நடிகைக்கும் திருமணமாகி குழந்தைகள் இருக்கிறார்கள். அதனால் நான் இதை கண்டித்தேன். ஆனால் அவர் விவாகரத்து கேட்டு குடித்து விட்டு வந்து அடித்து துன்புறுத்த ஆரம்பித்தார்.
ஒரு கட்டத்துக்கு மேல் அவரின் கொடுமையை என்னால் தாங்க முடியவில்லை என்பதால் தான் போலீசில் புகார் கொடுத்தேன் என (jeyashree) கூறியுள்ளார். தற்போது வரை மஹாலக்ஷ்மி அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சாக்ஷிக்கு ஏற்ற கணவராக நடக்கிறேன்.. ஆம்.. சரி.. இதுவே சாக்ஷிக்கு பிடித்த வார்த்தைகள்-தோனி
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!