சமீப காலமாகவே முறையற்ற உறவு காரணமாக பல திடுக்கிடும் செய்திகளை நாம் கடந்தபடியே இருக்கிறோம். தவறான உறவினால் தறிகெட்டு போகும் ஆணும் பெண்ணும் அதற்காக கொலைகளை அரங்கேற்றவும் தயங்குவதில்லை. பெற்ற குழந்தைகளைக் கொள்ளும் கருணையற்ற இதயங்களில்காதல் எப்படி மலர்ந்திருக்கும் என்பதே முரண்தான்.
இதில் சின்னத்திரை நடிகர்களும் தப்பவில்லை. ஜெயஸ்ரீ ஈஸ்வர் பஞ்சாயத்து இன்னமும் முடிவுக்கு கூட வரவில்லை. பாதிக்கப்பட்ட ஜெயஸ்ரீயின் கண்ணீர்துளிகளை விடவும் வலிமை வாய்ந்ததாக இருக்கிறது ஈஸ்வர் மஹாலக்ஷ்மியின் இரக்கமற்ற வீண் பழிகள்.
பெற்ற பெண் குழந்தையை அருகில் வைத்துக் கொண்டு ஜெயஸ்ரீ கண்ணீருடன் பேட்டி அளித்திருக்கிறார். ஈஸ்வரோ 70 லட்சம் பணம் கேட்டு தர முடியாததால் இப்படி ஒரு நிலையில் கொண்டு வந்து விட்டு விட்டதாக பழியை ஜெயஸ்ரீ மீதே திருப்பி இருக்கிறார். மஹாலக்ஷ்மியோ எங்கேயோ இருந்து கொண்டு எனக்கு ஏதாவது நடந்தால் அதற்கு ஜெயஸ்ரீதான் காரணம் என பழகிப்போன வசனத்தை சொல்லி இருக்கிறார்.
இந்தப் பஞ்சாயத்து பற்றி பேச நமக்கு இன்னும் ஒரு கட்டுரை தேவை. அதைப் பற்றிய பேச்சே இன்னும் முடியாத நிலையில் பகல் நிலவு அஸீம் (azeem) இப்படியான ஒரு உறவில் இருப்பதாக வதந்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
முறையற்ற உறவு காரணமாக முற்றிய சண்டையால் அஸீம் விஷயம் எப்போது வேண்டுமானாலும் பொதுவெளிக்கு வரலாம் என்கிற நிலையில் சில பத்திரிகைகள் இதனைப் பற்றி எழுதி வருகின்றன. பெயர் குறிப்பிட விரும்பாத சில சின்னத்திரைவாசிகள் அஸீம் பற்றிய பல உண்மைகளை பகிர்ந்திருக்கின்றனர்.
தெய்வம் தந்த வீடு , பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் என தன்னுடைய நடிப்பு கிராஃபை உயர்த்திக்கொண்டு போனவர்தான் அஸீம். சரியான கலவையில் தன்னுடைய நடிப்பை திரைக்கு தந்து கொண்டிருந்தவர் தற்போது முறையற்ற உறவு ஒன்றினால் மாட்டிக் கொண்டு இருக்கிறார்.
பெரியவர்கள் ஏற்பாடு செய்த ஸோயா (zoya) என்பவரை அஸீம் சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்தார். ஸோயா தொலைக்காட்சி நடிகை இல்லை. இவர்களின் மணவாழ்க்கை குறையில்லாமல் சென்று கொண்டிருந்தது.
யார் கண் பட்டதோ எங்கிருந்து வில்லன் வந்தாரோ அது யாரோ எவரோ தெரியவில்லை சில நாட்களாகவே பகல் நிலவு அஸீம் வீட்டில் தொடர்ந்து பிரச்னைகள் வந்த வண்ணம் இருந்தது. இருவருமே இப்போது விவாகரத்துக்கு தயாராக இருக்கிறார்கள் என்று அஸீமுக்கு நெருங்கிய சகநடிகர் ஒருவர் கூறியிருக்கிறார்.
அஸீமின் மனைவி ஸோயா மீது எந்த தவறுமில்லை. அவர் ஒரு அப்பாவியான பெண். எங்கள் பார்வையில் அஸீம் மீது தவறிருப்பதாகவே உணர்கிறோம். அவருடைய குணம் அந்த மாதிரி. முதலில் வேறொரு சேனல்ல நல்லா போயிட்டிருந்த ஒரு தொடர்ல நடிச்சிட்டு இருந்தார். ஆனால் இவரோட செயல்பாடுகள் பிடிக்கமாத்தான் அந்த தொடர்ல இருந்து அவரை நீக்கினார்கள்.
மீண்டும் ப்ரைம் டைம் சீரியல் ஒன்றில் நடிக்க ஆரம்பித்த அஸீமுக்கும் அதில் அவருக்கு ஜோடியாக நடித்த பெண்ணுக்கும் நடுவே நெருக்கம் அதிகரித்திருக்கிறது. சீரியல் ஆரம்பிக்கும்போது பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பெண்தான் அந்த நடிகையாம். வழக்கம்போல சிறந்த புதுமுக ஜோடிக்கான பரிசை சேனல் இந்த ஜோடிக்கு தந்திருக்கிறது.
அதில் இருந்தே அஸீம் வீட்டில் பிரச்னை ஆரம்பித்திருக்கிறது. ஒரு சில சமயங்களில் பிரச்னை ஷூட்டிங் ஸ்பாட் வரை வந்ததால் அனைவருக்குமே தெரிந்து விட்டதாக கூறுகின்றனர். இப்போது அஸீம் அவருடைய மனைவி ஸோயாவை பலவிதங்களில் டார்ச்சர் செய்வதாக சொல்லப்படுகிறது.
சக நடிகர்கள் யூனிட் ஆட்கள் சொல்லும் அந்த நடிகையும் அஸீமும் சேர்ந்து நடித்த சீரியல் முடிவுக்கு வந்திருக்கிறது. அடுத்த சீரியலிலும் நாங்கள் ஒன்றாகத்தான் நடிப்போம் என்று பிடிவாதம் பிடித்து அதில் ஜெயித்தும் இருக்கிறார்களாம் இந்த ஜோடி.
மீண்டும் அஸீம் பழையபடி மாறி விட்டாரா என ஸோயா தரப்பு உறவினர்கள் ஆக்ரோஷமாக மாறவே நடிக்க ஆரம்பித்த சில மாதங்களில் அந்த சீரியலில் இருந்து மாற்றப்பட்டாராம் அந்த நடிகை. அஸீமுக்கு நெருக்கமானவர்கள் அந்த நடிகையுடன் இப்பவும் தொடர்பு இருக்கானு தெரியலை. ஆனால் அஸீம் வீட்டில் பிரச்னை விவாகரத்து வரை சென்று விட்டது என்று தெரிவித்திருக்கின்றனர்.
இதைப்பற்றி தொலைபேசியில் அஸீமை தொடர்பு கொண்ட பத்திரிகையாளர் ஒருவருக்கு “அது வெறும் வதந்தி மட்டுமே. உண்மையில்லை ” என்று சுருக்கமாக பேச்சை முடித்துக் கொண்டாராம் அஸீம்.
அஸீமின் மனைவி ஸோயாவோ “எங்களுக்கிடையில் பிரச்னை சென்று கொண்டிருப்பது உண்மைதான். இப்போது நாங்கள் இருவரும் சேர்ந்து வசிக்கவில்லை என்பதும் நிஜம்தான். உடன் நடித்த நடிகையுடன் அவருக்கு முறையற்ற உறவு இருந்ததும் நிஜம்தான். மேற்கொண்டு நான் எதுவும் பேச விரும்பவில்லை. விவகாரம் வெளியில் வரும்போது வரட்டும்” என்று அதிரடியாகப் பேசி இருக்கிறார்.
திரும்ப திரும்ப நாம் அன்றாடம் பார்த்து படித்து சலித்து போகும் விஷயமாக இந்த முறையற்ற உறவு (illegal affair) செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கிறது. அதில் சின்னத்திரை நடிகர்களும் விதிவிலக்கல்ல என்பது போலவே நடந்து கொள்கின்றனர்.
தினமும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து அதை பார்ப்பதால் தன்னையுமறியாமல் உள்ளுக்குள் சில கதாபாத்திரங்களாகவே மாறி வாழ்க்கையை நகர்த்தி போகும் பொதுமக்களுக்கு தங்களின் ஆதர்ஷ நாயகன்களும் நாயகிகளும் முறையற்ற உறவுகளில் சிக்குவது அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.
அல்லது அவர்களும் இதையெல்லாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவோ அதனைத் தங்கள் வாழ்க்கையிலும் நுழைத்துக் கொள்ளவோ முயற்சிப்பார்கள். ஊழல் கூட ஒழிந்து விடும்.. சாதி சிக்கல்கள் கூட தீர்ந்து விடும்.. ஆனால் இந்த முறையற்ற உறவு பற்றிய சர்ச்சைகளும் குற்றங்களும் என்று தீருமோ என்று தெரியவில்லை.
ஒரு தலைமுறையே இப்போது சிதைந்து போய்க்கொண்டிருக்கிறது. இதைப்பற்றி ஏன் நமது பாரதி எதையும் பாடவில்லை என்கிற கேள்வி வேறு எழுகிறது. அவர் காலத்தில் நடந்த விஷயங்களை அவர் வார்தைகளாக்கி வைத்திருந்தார். அவருக்கென்ன தெரியும் தெரிந்திருந்தால் மாதர் தம்மை தாமே இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் என்று எழுதி இருப்பார்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!