logo
ADVERTISEMENT
home / Celebrity gossip
செம்பருத்தி சீரியலில் ஆதியின் சம்பளம் இவ்வளவா !

செம்பருத்தி சீரியலில் ஆதியின் சம்பளம் இவ்வளவா !

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் பார்வையாளர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்திருக்கிறது. அழுத்தமான பணக்காரத்தன்மை கொண்ட அகிலாண்டேஸ்வரி (பிரியா ராமன்) மகனுக்கும் (கார்த்திக் ராஜ்) அவர்கள் வீட்டில் சமைக்கும் பார்வதிக்கும் (ஷபானா) இடையே மலரும் காதல் அதனை தொடரும் வன்மங்கள் என்கிற ஒன் லைனில் இந்த சீரியல் நகர்கிறது.

ஆதியின் சுவாரஸ்யமான நடிப்பு மென்மையான காதல் காட்சிகள் எந்த வித ஈர்ப்பும் இல்லாத ஆதி பார்வதி மீது காதல் கொள்ள வைக்க ஏற்படும் சூழ்நிலைகள் போன்ற காட்சிகளால் பார்வையாளர்களின் ஏகோபித்த பாராட்டுகளை பெற்று இந்த செம்பருத்தி சீரியல் (sembaruthi serial) வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

சும்மா கிழி கிழின்னு கிழிச்சிட்டாரு தலைவர் ரஜினிகாந்த்… தர்பார் திரை விமர்சனம்!

 

ADVERTISEMENT

Youtube

இதில் முன்னணி நாயகனாக நடித்திருப்பவர் கார்த்திக் ராஜ். இவர் விஜய் டிவியில் கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் அறிமுகம் ஆகி பிரபலம் ஆனவர். அதன் பின்னர் அதே சேனலில் ஆபிஸ் சீரியலிலும் மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை உருவாக்கி கொள்ள முடிந்தது.

ஆபிஸ் சீரியலில் பல்வேறு அவார்டுகளை பெற்ற கார்த்திக் ராஜ் தன்னுடைய இடைவிடாத உழைப்பின் அடுத்த கட்டமாக வெள்ளித்திரைக்குள் நுழைந்தார். 465 என்கிற திரைப்படத்தில் நடித்தார். அதை அடுத்து நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ADVERTISEMENT

மதுமிதாவின் மகள்கள்.. கெளதமியின் கணவர்..கவுண்டமணி மனைவி.. யாரும் பார்த்திராத புகைப்படங்கள் !

 

Youtube

ADVERTISEMENT

நடிகர் கார்த்திக் ராஜ் தன்னுடைய திறமையின் காரணமாக மீண்டும் சின்னத்திரைக்கே வந்தார். செம்பருத்தி சீரியலில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இப்போது இவரது நடிப்பால் செம்பருத்தி சீரியல் மிகவும் வெற்றியடைந்து நன்றாக போய்க்கொண்டிருக்கிறது.

இதனை தவிர நடிகர் கார்த்திக் ராஜிற்கு மற்றவர்களுக்கு சத்தமில்லாமல் உதவி செய்வது பிடிக்குமாம். பல குழந்தைகளின் படிப்பிற்கு இவர் உதவிக் கொண்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி இயல்பிலேயே நல்ல மனம் கொண்டவர் கார்த்திக் ராஜ்.

அப்படியே தாத்தா ரஜினி போலிருக்கும் யாத்ரா.. லைலா பசங்க இவ்ளோ க்யூட்டா.. பங்கமான லாஸ்லியா !

 

ADVERTISEMENT

Youtube

தற்போது செம்பருத்தி சீரியல் மூலம் மக்களை ஆதி என்கிற கதாபாத்திரம் மூலம் மகிழ்வித்து வருகிறார். இவருக்கு அந்த சீரியலில் சம்பளமாக மாதம் ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்தப் பணத்தையும் பெரும்பாலும் அடுத்தவர்களுக்கு உதவி செய்யவே இவர் பயன்படுத்துவதாக தெரிய வருகிறது.

சமீபத்தில் செம்பருத்தி சீரியல் சார்பாக நடந்த ஒரு விழாவில் நடிகர் ஆதி (கார்த்திக் ராஜ்) மீது அளவிலாத ப்ரியம் கொண்ட பெண் ரசிகை ஒருவரை மேடையில் வைத்து சந்தித்தார் ஆதி. அப்பெண் பேச ஆரம்பித்ததும் கண்கலங்கி நெகிழ்ந்தும் போயிருக்கிறார்.

ADVERTISEMENT

காரணம் அந்தப் பெண் இன்னும் சில மாதங்களில் உயிர் இழக்க போகிற நோயாளி. அதற்கான சிகிச்சைகளை எடுத்து கொண்டும் இருக்கிறார். ஆனாலும் அவரது வாழ்நாள் குறுகிய காலமே என்று அவருக்கு சொல்லப்பட்டு விட்டது.

 

Youtube

ADVERTISEMENT

இந்நிலையில்தான் வாழும்போது ஒரு முறையாவது ஆதியை சந்தித்து விட வேண்டும் என அந்த பெண் விரும்பியிருக்கிறார். அவருக்கு திருமணமாகி கணவர் மற்றுமொரு மகள் இருவருடனும் மேடைக்கு வந்திருந்தார். அப்பெண்ணின் கணவரோ என்னையும் உங்களை போலவே தாடி வைக்க சொல்லி அழகு பார்ப்பாள் என் மனைவி. அந்த அளவிற்கு அவள் உங்கள் ரசிகை என்று கூறி இருக்கிறார்.

இதனால் அந்த சமயம் வாய் பேச முடியாமல் தடுமாறிய ஆதி (கார்த்திக் ராஜ் ) உங்கள் அன்பிற்கு என் நன்றி என்று மட்டும் பேசிவிட்டு கலங்கிய மனதுடன் நின்று கொண்டிருந்தார். இயல்பாகவே உதவி செய்யும் ஆதிக்கு இப்படி ஒருவரை நேரில் பார்த்ததும் என்ன செய்வது என புரியாமல் நெகிழ்ந்து போனதில் ஆச்சர்யம் இல்லைதான் இல்லையா.

Youtube

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

09 Jan 2020

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT