ஒயின் எனும் வார்த்தையே கவர்ச்சியான ஒன்றுதான். ரெட் ஒயின் உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. புளிக்க வைத்து பாதுகாக்கப்பட்ட திராட்சை ரசம்தான் ஒயின் என்பதால் பெண்களும் இதனை அளவாக அருந்தலாம்.
பார்லர்களின் ஸ்பெஷலான ரெட் ஒயின் பேஷியல் என்பது மிகுந்த விலையுயர்ந்த பேஷியல்களில் ஒன்றானது. அவ்வளவு செலவுகள் இல்லாமல் இந்த பேஷியலை வீட்டில் இருந்தபடியே நாம் செய்து கொள்ள முடியும்.
சிவப்பு ஒயின் (red wine) என்பது சருமத்தின் நரம்புகளை தளர்த்தி உங்களை ரிலாக்ஸ் ஆக உணர வைக்கிறது. ரெட் ஒயினில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் உங்கள் சருமத்தில் உள்ள டாக்சின் எனப்படும் நச்சு பொருள்களை நீக்கி விடுகிறது.
ரெட் ஒயின் பேஷியல் உங்கள் முக சுருக்கங்களை நீக்கி இளமை பொலிவை அதிகரிக்க செய்யும் என்பதாலேயே பார்லர்களில் இந்த பேஷியல் அதிகம் செய்யப்படுகிறது. இப்போது இந்த ரெட் ஒயின் பேஷியலை வீட்டில் இருந்தே எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
என்றும் இளமை வேண்டுமா ! ஆரோக்கியமான அழகான வாழ்க்கைக்கு இந்துப்புவை இப்படி பயன்படுத்துங்கள
YOUTUBE
க்ளென்சிங் முறை
வெதுவெதுப்பான நீரில் ஒரு பஞ்சை நனைத்து முகத்தை நன்றாக துடைத்து அழுக்குகளை நீக்கி விடுங்கள். மூன்று ஸ்பூன் ரெட் ஒயினுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேருங்கள். இதனை பஞ்சில் தொட்டு முகத்தில் கிளென்ஸ் செய்யும் முறைப்படி தடவி கொஞ்சம் மசாஜ் செய்து கொள்ளுங்கள். அதன் பின்னர் நீரில் கழுவி விடவும்.
ஸ்க்ரப் முறை
ரெட் ஒயினை நீங்கள் ஸ்க்ரப் செய்ய காஃபி பொடி , அரிசி பொடி அல்லது சர்க்கரை என எதனை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். தேவையான அளவு ரெட் ஒயினை மேற்கண்ட ஏதோ ஒரு பொருளுடன் கலந்து முகத்தில் தடவுங்கள். மென்மையாக ஸ்க்ரப் செய்யுங்கள். சிறிது நேரம் உலர விட்டு அதன்பின்னர் கழுவி கொள்ளுங்கள். இது உங்கள் இறந்த செல்களை நீக்கி விடும்.
மழை விழும் போதெல்லாம் என்னை வந்து சேர்வாயா.. .. மழைக்கால ரொமான்ஸ் குறிப்புகள் !
க்ரீம் மசாஜ்
கற்றாழை ஜெல் உடன் சில சொட்டுக்கள் ரோஸ் வாட்டர் சேருங்கள். உலர்ந்த சருமம் உள்ளவர்கள் சில சொட்டுக்கள் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்க்கலாம். இதனுடன் மூன்று ஸ்பூன் ரெட் ஒயினை நன்கு கலந்து பேஸ்ட் போல செய்து அதனை உங்கள் முகத்தில் தடவி விரல்களால் நன்கு மசாஜ் செய்து விடுங்கள். 20 நிமிடம் கழித்து கழுவி விடுங்கள். உடனே உங்கள் முகம் பளபளப்பாக ஜொலிப்பதை காணலாம்.
பேக் போடும் முறை
ரெட் ஒயின் 3 ஸ்பூன், கற்றாழை ஜெல் 1/2 ஸ்பூன், தேன் 1 ஸ்பூன் இவைகளுடன் லாவெண்டர் எண்ணையை சில துளிகள் சேர்த்து கலவையை நன்கு கலந்து முகத்தில் பூசி உலர விடவும். பின்னர் கழுவிக் கொள்ளுங்கள்.
3 ஸ்பூன் ரெட் ஒயின், தயிர் இரண்டு ஸ்பூன், லாவண்டர் எண்ணெய் சில துளிகள் இவற்றை சேர்த்து முகத்தில் தடவி உலரவிட்டு பின்னர் கழுவி விட முகம் பிரகாசமாக கூடுதல் பொலிவோடு மின்னும்.
Also Read About ஹிமாலியன் இளஞ்சிவப்பு உப்பு
பொதுவாக இந்த பேஷியல் எண்ணெய் பசை, பருக்கள் உள்ளவர்களுக்கு பொருத்தமானது. வறண்ட சருமம் உள்ளவர்கள் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணையை உபயோகப்படுத்தி இந்த பேஷியலை செய்து பாருங்கள்.
சினிமா நட்சத்திரங்களை போல உங்கள் முகமும் பேரழகாக மின்னும்.
என்றும் இளமையான தோற்றம் வேண்டுமா ! இந்த ஒரு மூலிகை உங்களுக்கு ஆயிரம் பலன் தரும் !
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன