இனிய உங்கள் அன்பான உறவுகளுக்கு ரமலான் (ramzan) வாழ்த்து தெரிவித்து விட்டீர்களா? இல்லையெனில் உங்களுக்கு வாழ்த்து தெரிவிக்க நாங்கள் உதவுகின்றோம்.
ஈகை பெருநாளாம் ரம்ஜான் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் ஒவ்வெருவரும் புத்தாடைகள் உடுத்தி உணவுகள் சமைத்து அதை பகிர்ந்து சாப்பிட்டு மகிழ்வுடன் இருக்ககூடிய நாள் இந்த நாளில் நீங்கள் வாழ்த்துக்கள் கூற இங்கே கவிதை தொகுப்பை காணலாம்.
அணியும் ஆடைகளின் அழகில்,
குல்லாக்களின் அமைப்பில்
இருக்கலாம்
கணக்கில்லா வேறுபாடு,
கூடாது அது
காட்டும் அன்பில்
காணும் பண்பில், தியாகத்தில்
என்பது தான்
பெரு நாள் என்னும் தியாகத் திருநாள்…!
— செண்பக ஜெகதீசன்
பெருநாள் (ramzan)
நெடு நாள் (ramzan) தாண்டி
கூடு திரும்பிய முதல் பண்டிகை
குறை தரத்திலேனும்
தொழுகைக் கொரு புத்தாடை
பலகாரம் பண்ணு மளவு சுய வருவாய்
நெடு நாள் தாண்டி
கூடிக் கொண்டாடப் போகிறோம்
பட்டா சொலி மட்டுமே
கேட்கு மொரு பெருநாள்
— கிண்ணியா எஸ். பாயிஸா அலி
வெயிலால் பாதிக்கப்பட்ட சருமத்தை சரிசெய்வதற்கான சூப்பர் டிப்ஸ்!
நோன்புப் பெருநாள் (ramzan)
காலா காலமாக
மனிதன் அதிகம் தோற்றது
அவனது வயிற்றிடம்தான்
அந்த வயிறே தோற்றது
நோன்பிடம்தான்
மரு தோன்றி மணம் கமழ
ஊரெல்லாம் அம்மி இசை
விடிந்தால் பெருநாள்
பெண்ணவர்கள் உள்ளங்கையில்
மேற்கு வானம் விரியக்கண்டோம்
அதில் பிறையுடன் நட்சத்திரங்கள்
சிவந்து மின்னக் கண்டோம்
புத்தாடை புது மணத்தில்
கிறங்கி நின்றோம்
துதலுடன் மஸ்கட்டும்
வித விதமாய் பலகாரம்
முறுக்கும் சேர்த்து
அய லெலாம் பகிர்ந்த்துண்டோம்
எண்ணை தோய்ந்த
மரு தோன்றிப் பிஞ்சுக் கையில்
பெருநாள் பணம் புரள
குதூ கலிக்கும்
சிறப்பு கண்டோம்
நோன்புக் கஞ்சிபோல்
சுவையான மாதத்தின்
பேரீத்தம் பழத்தைப்போல்
இனிப்பான நாள் இன்று
— எஸ்.நளீம்
நோன்பு பெருநாள்
பிறை கண்டு தான்
நன்மையும் ஆரம்பமாக
அதே பிறை கண்டு தான்
தீமையும் துளிர்விட ஆரம்பமாகிறது
இறுதி – நன்மை – தீமை
காரணம் பிறை தான்
பிறை தான்
பிறை தான்
— முஹம்மத் மஜீஸ்
ஆண் நண்பரிடம் செக்ஸ் விருப்பத்தை வெளிபப்படுத்த உதவும் 10 அட்டகாசமான மீம்ஸ்கள்
நோன்புப் பெருநாள் (ramzan) வாழ்த்து
நோன்பென்னும் தேர்வெழுதி நோகாமல் காத்திருக்க
மாண்புடன் அல்லாஹ்வும் “மன்னிப்பை” பரிசாக
வாகையுடன் தரும்நாள் ; வாஞ்சையுடன் அருளும்நாள்;
ஈகைத் திருநாள் ; “ஈத்” பெருநாள்
நல்லாடை உடுத்தி நறுமணம் பூசி
அல்லாஹ்வைத் தொழுதிட அணிதிரள் வோரை
வானவர்கள் தரையிறங்கி வாழ்த்திட வருகின்றனர்;
ஆனதினால் தொழுகைக்கு ஆர்வமுடன் வருகவே
பயிற்சிகள் பெற்றோம்; பாடங்கள் கற்றோம்
முயற்சிகள் மறுமைக்கு முழுதாய் இருக்கட்டும்
மீண்டும் “ரமளான்” நம்மிடம் வரவேண்டும்
மீண்டிடுவோம் பாவங்கள் மீண்டும் வாராமலே
வணங்கிடுவோம் அல்லாஹ் ஒருவனை மட்டும்
இணங்கி வாழ்வோம்; இன்பமே கிட்டும்
இன்பத் திருநாள் இன்றைய தினத்திலே
அன்புடன் வாழ்த்தும் கவியன்பன் மனத்திலே. !!
— கவியன்பன்” கலாம். (ramzan)
இறை நிறுத்தி (ramzan)
மெய் வருத்தி
நோன்பு நோற்கும்
அணைத்து
நல் உள்ளங்களுக்கும்
ஆயுள் ஆரோக்கிய சௌக்கியத்தை
ஆண்டவன் அருள் புரியட்டும் …
உலக தமிழர்கள் அனைவருக்கும் …
அவர்தம் குடும்பத்தாருக்கும்
புனித ரமலான் வாழ்த்துக்கள் !
தமிழ் சினிவாவில் நீங்கா இடம் பிடித்த காதல்(Love) வசனங்கள்!
பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo