logo
ADVERTISEMENT
home / Astrology
என்ன செய்தாலும் கஷ்டம் தீராதவர்கள் இந்த வாரத்தில் இதை செய்து விடுங்கள் ! பித்ரு தர்ப்பணம்

என்ன செய்தாலும் கஷ்டம் தீராதவர்கள் இந்த வாரத்தில் இதை செய்து விடுங்கள் ! பித்ரு தர்ப்பணம்

எத்தனை கோயில்களுக்கு சென்றாலும் எத்தனை பரிகாரங்கள் செய்தாலும் தொடர்ந்து துன்பங்கள் , மனவேதனைகள் , உடல் காயங்கள் , கடன் தொல்லை, பண நெருக்கடி போன்ற விஷயங்கள் உங்கள் வாழ்வில் நடந்து கொண்டே இருக்கிறதா?

அப்போது நிச்சயமாக நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். முன்னோர்களை மனசாந்தி பெற செய்து அவர்கள் பசியை நீக்கி நல்ல விதமாக அவர்கள் ஆன்ம பயணம் தொடர நீங்கள் உதவி செய்யவேண்டும்.

மஹாளய பட்ச அமாவாசை என்பதுதான் முன்னோர்களுக்கு (ancestors) திதி கொடுக்க வேண்டிய முக்கியமான அமாவாசை நாளாக இருக்கிறது. ஆவணி மாதம் பௌர்ணமி முடிந்து தேய்பிறை ஆரம்பிக்கும். அதன் பின்பான 15 நாட்களே முன்னோர்களுக்கு நீங்கள் செய்ய வேண்டிய திதிக்கான சரியான நேரம்.                       

 

ADVERTISEMENT

Youtube

இந்த நாட்களில் நாம் எந்த மரபில் வந்தோமோ அந்த முன்னோர்களின் ஆன்மாக்கள் (ancestors soul) பூமிக்கு வருகின்றன. அவர்கள் எந்த ஒரு உயிரின் வழியாகவும் உள்ளே புகுந்து நம்முடைய தர்ப்பணத்தை ஏற்றுக் கொள்ளும் சக்தி வாய்ந்தவர்கள்.

காகம். பசுக்கள், மீன்கள் போன்ற எந்த உயிர் ரூபம் மூலமாகவும் அவர்கள் ஆன்மா நமது தர்ப்பணத்தை ஏற்கிறது. தவிர நீங்கள் இயலாதவர்களுக்கு அன்னதானம் செய்தால் அதன் மூலமாகவும் அவர்கள் ஆன்மா அந்த தர்ப்பணத்தை ஏற்கிறது.

ADVERTISEMENT

அவர்கள் பசி தாகத்துடன் அலைந்து கொண்டிருக்கும்போது மனம் நொந்தால் நிச்சயம் அதற்கான பலன் நமது வாழ்வில் நடந்தபடியேதான் இருக்கும். உங்களை விட்டு பிரிந்த உடனே அவர்கள் வெறும் ஆன்மா ஆகி விடுவதால் மகன் தானே திதி கொடுக்காவிட்டால் பரவாயில்லை என்று அவர்களால் கருணை காட்ட முடியாது.

 

Youtube

ADVERTISEMENT

அதனால்தான் முன்னோர் தர்ப்பணம் (ancestors) பற்றி ஒவ்வொரு ஆன்மிக குருமார்களும் மற்ற ஆன்மீக வழிகாட்டிகளும் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். மாதா மாதம் திதி கொடுக்க முடியாதவர்கள் இந்த மகாளயபட்ச அமாவாசை அன்று திதி கொடுத்தால் அவர்களுக்கு வருடம் முழுதும் திதி கொடுத்த பலன்கள் கிடைக்கும்.

இந்த நாளில் புனித நீராட முடிந்தவர்கள் நீராடி விட்டு கோயில்களில் பிரார்த்தனை செய்து கொண்டு தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து எள்ளும் தண்ணீரும் தர வேண்டும். முடிந்தால் இயலாதவர்களுக்கு பசியாற உணவு கொடுங்கள்.

 

 

ADVERTISEMENT

Youtube

இப்படி செய்வதன் மூலம் உங்கள் தீராதா துன்பங்கள் உடனடியாக தீரத் தொடங்கும். உங்கள் தர்ப்பணத்தால் தங்களுடைய பசி தாகம் தீர்ந்த உங்கள் முன்னோர்களின் ஆன்மாக்கள் உங்கள் வாழ்க்கை மேம்பட மனதார ஆசீர்வதிப்பார்.

உங்கள் கஷ்டங்கள், கடன் தொல்லை, உறவு சிக்கல்கள் போன்றவை படிப்படியாக நீங்கி உங்கள் வாழ்க்கை அடுத்த வருடத்திற்குள்ளாகவே நல்லதொரு மாற்றத்தை அடையும். ஆகவே மறக்காமல் இந்த ஒரு வாரத்திற்குள் அந்த தர்ப்பணத்தை செய்து விடுங்கள்.

ADVERTISEMENT

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!                                                                  

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

ADVERTISEMENT
24 Sep 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT