logo
ADVERTISEMENT
home / Celebrity gossip
குழந்தைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்..ஆனால்..குழந்தை இல்லாமை பற்றி நெகிழும் விஜயசாந்தி!

குழந்தைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்..ஆனால்..குழந்தை இல்லாமை பற்றி நெகிழும் விஜயசாந்தி!

நடிகை விஜயசாந்தி என்றாலே 90ஸ் கிட்ஸ் களுக்கு மனதில் ஜிவ்வென பட்டாம்பூச்சி பறக்கும். 90ஸ் கிட்ஸ்களின் நயன்தாரா யார் என்றால் அது நிச்சயம் நடிகை விஜயசாந்தி தான். உண்மையிலேயே அந்த காலத்தில் ஹீரோக்களுக்கு இணையாக சண்டை காட்சிகள் போன்றவற்றில் தூள் கிளப்பியவர் நடிகை விஜயசாந்தி.

ஒரு சில ஹீரோக்களை விடவும் இவரது சண்டைக்காட்சிகள் பெட்டராகவே இருக்கும். அதை போலவே தன்னை வலிமையான மனம் கொண்ட பெண் கதாபாத்திரமாகவே திரைப்படங்களில் காண்பித்துக் கொண்டவர் நடிகை விஜயசாந்தி (vijayashanthi). இதனாலேயே அப்போதே இவருக்கு லேடி சூப்பர்ஸ்டார் என்கிற பெயர் அமைந்தது.

 

ADVERTISEMENT

youtube

நடிகை நயன்தாரா இரண்டாவதாகதான் இந்த பெயரை திட்டமிட்டு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் விஜய்சாந்திக்கோ இந்த லேடி சூப்பர் ஸ்டார் (lady super star) பட்டம் இயல்பாகவே பொருந்தியது.

ஆந்திராவை சேர்ந்த நடிகை விஜயசாந்தி நடிகர் மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணா உடன் ஜோடியாக அறிமுகம் ஆன திரைப்படம் ஹிலாடி கிருஷ்ணுடு. அதனை தொடர்ந்து இதுவரை 180 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.

தமிழில் மன்னன் மற்றும் நெற்றி கண் போன்ற வெற்றி திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். மன்னன் திரைப்படத்தில் திமிர் கொண்ட பெண்ணாக வரும் இவரை அவ்வளவு எளிதில் மறக்க முடியாத கதாபாத்திரமாக வந்திருப்பார். தெலுங்கு மலையாளம் தமிழ் இந்தி என நான்கு மொழிகளிலும் இவர் நாயகியாக நடித்திருக்கிறார்.

ADVERTISEMENT

youtube

சென்னையில் பிறந்தாலும் ஆந்திராவில் வளர்ந்த நடிகை விஜயசாந்திக்கு மற்ற மொழிகளை விட தெலுங்கில் கவனம் அதிகமாக இருந்தது. ஹிந்தி திரைப்படம் இவருக்காக சிவப்பு கம்பளம் விரித்து காத்திருந்தது. ஆனால் நடிகை விஜயசாந்திக்கு ஹிந்தி ஷூட்டிங்குகளில் ஏற்படும் கால தாமதங்கள் பிடிக்கவில்லை. ஆகவே வந்த அணைத்து ஹிந்தி வாய்ப்புகளையும் துணிச்சலாக உதறினார். சில திரைப்படங்களில் மட்டுமே நடித்தார்.

இவர் நடிப்பில் வெளியான தெலுங்கு திரைப்படம் வைஜயந்தி ஐபிஎஸ் தமிழில் டப் செய்யப்பட்டு 50 நாட்களுக்கும் மேல் ஓடியது. இந்த திரைப்படத்திற்கு பிறகு இந்த ரெக்கார்டை முறியடித்தது பாகுபலி மட்டுமே.

ADVERTISEMENT

 

youtube

நேர நிர்வாகம், துணிச்சல் , நேர்மை என பல அதிரடிகளுக்கு பெயர் போன நடிகை விஜயசாந்தி நடிப்பில் இருந்து விலகி அரசியலில் இணைந்தார். பாஜகவில் சேர்ந்து தன்னை முழு நேர அரசியல்வாதி ஆனார். அரசியலில் தன்னுடைய வழிகாட்டியாக நடிகை விஜயசாந்தி பார்த்தது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை தான். ஜெயலலிதாவுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவிக்க அவர் ஒருபோதும் மறுத்ததே இல்லை. அதன் பின்னர் 2014ல் அவர் காங்கிரஸில் இனைந்து விட்டார்.

ADVERTISEMENT

தற்போது 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமா பக்கம் வந்திருக்கும் மகேஷ்பாபுவின் சரிலேரு நீக்கெவரு என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், ராஜேந்திரபிரசாத், ரோகிணி உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் பற்றிய சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் முதன் முறையாக தன்னுடைய பர்சனல் பக்கங்கள் குறித்து மனம் திறந்திருக்கிறார் நடிகை விஜயசாந்தி.

 

youtube

ADVERTISEMENT

நடிகர் மகேஷ் பாபுவுடன் ரி என்ட்ரி குறித்து பேசிய விஜயசாந்தி மகேஷ் பாபுவின் அப்பாவுடன் தான் நடித்திருப்பதாகவும் அதன் பின்னர் இப்போது மகேஷ் பாபுவுடன் நடித்திருப்பது பெருமையாக இருப்பதாகவும். நாளை மகேஷ் பாபுவின் மகனுடன் நடிக்க தான் விருப்பமாக காத்திருப்பதாகவும் கூறினார் விஜயசாந்தி.

மீண்டும் நடிக்க வந்தது குறித்து கேட்ட போது என்னை நடிக்க சொல்லி பலமுறை தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்கள். நல்ல கதை எதுவும் அமையாததால் நான் அமைதியாக இருந்தேன். தற்போது மகேஷ் பாபுவின் இந்த படத்தில் முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரமாக இருந்ததால் நடிக்க ஒப்பு கொண்டேன். இப்படியான நல்ல கதைகள் கிடைத்தால் வருடத்திற்கு இரண்டு திரைப்படங்கள் வரை நடிக்கலாம் என்றிருக்கிறேன் என்று கூறினார்.

 

ADVERTISEMENT

youtube

குழந்தைகள் பற்றிய கேள்விகள் வந்த போது குழந்தைகள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்.. ஆனால் குழந்தைகள் இருந்தால் சுயநலம் வந்து விடும். அரசியலுக்கு வந்து விட்டால் சுயநலம் இருக்க கூடாது. அதனால்தான் குழந்தைகள் வேண்டாம் என்று இருக்கிறேன். இதை என் கணவரிடம் சொன்னேன். அவரும் சம்மதம் சொன்னார். ஜெயலலிதா குழந்தை ,குடும்பம் இல்லாமல் சுயநலமின்றி மக்களுக்கு தொண்டு செய்தார்’ அதைப்போலவே நானும் செய்ய பிரியப்படுகிறேன் என்றார்.

பெண்மையின் உயர்வே தாய்மையில்தான் இருக்கிறது என்று தெரிந்தும் அரசியலில் சுயநலம் கூடாது என்பதற்காக அந்த தாய்மையை புறக்கணித்த விஜயசாந்தி பெண்கள் மத்தியில் நிச்சயம் தனித்துவம் வாய்ந்தவர்தான்.

ADVERTISEMENT

youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

10 Jan 2020

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT