கேரளாவில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் ஓணம் (onam) பண்டிகை தொடங்கியுள்ளது. அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கும் இந்த பண்டிகையானது திருவோணம் நட்சத்திரம் வரை கொண்டாடப்படுகிறது. கேரளாவில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் ஓணம், தென் தமிழகம் மற்றும் கேரள மக்கள் வாழும் பகுதியிலும் கொண்டாடப்படுகிறது.
ஓணம் பண்டிகை வரலாறு
புராண காலத்தில் மலையாள தேசத்தை ஆண்டு வந்த மகாபலி சக்ரவர்த்தி தன் நாட்டு மக்களிடம் பேரன்பு காட்டினான். இதனால் மகாபலி சக்ரவர்த்தியை மக்கள் போற்றி புகழ்ந்தனர். அப்போது மூவுலகையும் ஆளும் எண்ணம் மகாபலி சக்ரவர்த்தியின் மனதில் பேராசையாக எழுந்தது. இந்த கோரிக்கையை வேண்டி சிவ பெருமானிடம் யாகம் வளர்த்து வேண்டினார்.
இந்நிலையில் மகாபலியின் யாகம் குறித்து கவலையடைந்த தேவர்கள், இந்திரனிடம் முறையிட்டனர். இதை கேட்டதும் மகாபலிக்கு இந்திர பதவி கிடைத்தால் மூவுலகும் பாதிக்கும் என்று இந்திரன் கலக்கமடைந்தான். உடனே பிரம்மாவிடம் சென்று ஆலோசனை கேட்டான். இதற்கு மகாவிஷ்ணு மட்டுமே தீர்வு காண முடியும் என்று பிரம்மா கூறி, இந்திரனையும், தேவர்களையும் மகாவிஷ்ணுவிடம் அழைத்து சென்றார்.
பேரழகு மின்னும் பளிங்கு முகம் வேண்டுமா? மங்கு ,கரும்புள்ளிகளை நீக்கும் குங்குமாதி தைலம் !
இதனை கேட்ட மகாவிஷ்ணு, ‘நான் பூலோகத்தில் வாமன அவதாரம் எடுத்து, மகாபலியின் யாகத்தை தடுத்து நிறுத்துகிறேன்’ என்றார். அதன்படியே மகாவிஷ்ணு மூன்று அடி உயரமுள்ள வாமன அவதாரம் எடுத்து, பூலோகத்தில் மகாபலி சக்ரவர்த்தி யாகம் செய்யும் இடத்துக்கு சென்றார். வாமனரைப் பார்த்ததும் மகாபலி எழுந்து வந் து உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டான்.
வாமனரும் எனது காலால் அளக்கும் வகையில் மூன்று அடி நிலம் தானமாக அளிக்க வேண்டும் என்று கூறினார். இதை கேட்ட மகாபலி தானம் அளிக்க முன்வந்தான். உடனே வாமனர் விஸ்வரூபம் எடுத்து ஒரு அடியால் பூலோகத்தையும், மற்றொரு அடியால் விண்ணுலகையும் அளந்தார். மூன்றாவது அடி வைக்க நிலம் எங்கே என்று மகாபலியிடம் கேட்டார். இதை பார்த்து பரவசப்பட்ட மகாபலி, மகாவிஷ்ணுவை வழிபட்டு மூன்றாவது அடியை என் தலைமீது வையுங்கள் என்று கூறினான்.
வாமனரும் அவ்வாறே வைத்து மகாபலி சக்ரவர்த்தியை பாதாள உலகுக்கு அனுப்பினார். பாதாள உலகத்துக்கு தள்ளிய மகாவிஷ்ணுவிடம் நான் என் நாட்டு மக்களின் மீதும் மிகுந்த அன்பு வைத்திருக்கிறேன். எனவே வருடத்துக்கு ஒருமுறை என் நாட்டு மக்களை காணும் வாய்ப்பை எனக்கு வரமாக தந்தருள வேண்டும் என்று மகாபலி வேண்டுகோள் விடுத்தான். மகாவிஷ்ணுவும் அவ்வாறே வரம் தந்தருளினார். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் தன் நாட்டு மக்களை மகாபலி சக்ரவர்த்தி காண வரும் நாளையே கேரள மக்கள் ஓணம் பண்டிகையாக கொண்டாடி மகிழ்கின்றனர்.
ஓணம் பண்டிகை கொண்டாட தயாராகுங்கள் : ஆடைகள் புது வரவு குறித்த விவரங்கள்!
ஓணம் பண்டிகை கொண்டாடப்படும் விதம் :
ஓணம் பண்டிகை (onam) கேரளாவில் மலையாள மக்களால் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது. இந்த பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் என தொடர்ச்சியாக வரும் 10 நட்சத்திர தினங்களில் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது.
ஓணம் பண்டிகை (onam) காலத்தில் மக்கள் அதிகாலையில் எழுந்து குளித்து கசவு எனும் வெள்ளை நிற புடவையை உடுத்துவது வழக்கம். அஸ்தம், சித்திரை, சுவாதி ஆகிய மூன்று நட்சத்திர தினத்தில் மக்கள் ஒருவருக்கொருவர் பரிசுகளை பரிமாறிக்கொள்வர். 4வது நட்சத்திரமான விசாகத்தில் ஒன்பது சுவை உணவுகளை தயார் செய்து உற்றார், உறவினர் என அனைவரும் கூடி உண்டு மகிழ்கின்றனர்.
குறைந்த பட்சம் 64 வகையான உணவு வகைகள் இந்த பட்டியலில் இடம்பெறுவது வழக்கம். இந்த உணவை சாத்யா என அழைக்கின்றனர். அனுஷன் எனும் 5ம் நாள் அனிளம் என அழைக்கின்றனர். இந்த நாளில் பாரம்பரிய படகுப் போட்டி நடத்தப்படுகின்றது. இந்த படகுப் போட்டியில் பங்குபெறுவோர் வஞ்சிப்பாட்டு எனும் பாடலைப் பாடிக்கொண்டே உற்சாகத்துடன் படகை விரைவாக செலுத்துவது வழக்கம்.
ஆறாவது நாளில் திருக்கேட்டை, ஏழாம் நாள் மூலம், 8வது நாள் பூராடம், அடுத்து உத்திராடம் என அழைக்கப்படுவதோடு, 10ம் நாள் திருவோணம் என மிகச் சிறப்பாக ஓணம் பண்டிகை கொண்டாட்டத்துடன் முடிவடைகிறது. 10வது நாளில் மக்கள் ஆலயங்களுக்குச் சென்று சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம்.
முகுந்தா முகுந்தா கிருஷ்ணா : உங்கள் மனதை கொள்ளை கொள்ளும் கிருஷ்ணர் பாடல்கள் !
அத்திப்பூ கோலம் :
ஓணம் பண்டிகையில் அத்திப்பூ கோலம் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. இந்த 10 நாட்களிலும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக மக்கள் அத்திப்பூ கோலமிட்டு வீட்டைப் பொழிவாக வைப்பது வழக்கம். தினமும் வெவ்வேறு பூக்களுடன் கோலத்தை அழகுபடுத்துவார்கள்.
முதல் நாள் ஒரே வகையான பூக்கள், இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்று எனத் தொடர்ந்து பத்தாம் நாள் பத்து வகையான பூக்களால் இந்த அத்தப்பூக் கோலம் அழகுபடுத்தப்படும். பூக்கோலத்திற்கு நடுவில் குத்து விளக்கு அல்லது தென்னம்பூக்களை வைத்து வழிபடுவர். கோலம் போடும்போது பெண்கள் பாடல்களைப் பாடியும், கோலத்தைச் சுற்றி ஆடியும், தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.
புலிக்களி ஆட்டம்
மலையாளத்தில் ‘களி’ என்பது நடனத்தை குறிக்கும். ‘புலிக்களி’ அல்லது ‘கடுவக்களி’ என்று அழைக்கப்படும் நடனம் ஓணம் பண்டிகையின் 4ம் நாள் விழாவில் நடைபெறும். இந்த நாளில் சிவப்பு, கறுப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தினால் புலி வேடமிட்டு நடனம் ஆடி ஊர்வலமாக வருவார்கள். புலிக்களி நடனம் 200 ஆண்டுகளுக்கு முன்பு கொச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னன் ராமவர்ம சக்தன் தம்புரான் என்பவரால் ஓணம் விழாவில் தொடங்கி வைக்கப்பட்டது.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.