முடிக்கு அழகே கருப்பு நிறம் தான். அத்தகைய கருமையான முடி தற்போது பலருக்கு கிடையாது. ஏனெனில் நமது வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள் ஆரோக்கியமற்றதாக இருப்பதால் போதிய சத்துக்கள் கிடைப்பதில்லை.
அதுமட்டுமின்றி அதிக நேரம் வெயிலில் சுற்றுவதால், முடியின் நிறம் மாறாமல் இருப்பதற்கு தடவிய எண்ணெய் சூரியனால் உறிஞ்சப்பட்டு, கருமை நிறமானது மங்கிவிடுகிறது. சிலருக்கு இளமையிலேயே நரை முடியானது வர ஆரம்பிக்கிறது.
அதற்கு பரம்பரை அல்லது ஊட்டச்சத்தின்மை தான் காரணமாக இருக்கும். எனவே கூந்தலின் நிறம் மாறாமல் கருமையாக இருப்பதற்கு, நல்ல ஆரோக்கியமான உணவுகளையும், கூந்தலுக்கு அவ்வப்போது போதிய பராமரிப்புக்களையும் கொடுக்க வேண்டும். நரைமுடியை நீக்க இயற்கை முறையில் ஹர் டை (hair dye) தயாரிப்பது குறித்துஇங்கு விரிவாக காண்போம்.
இயற்கை டை 1:
தேவையான பொருட்கள் :
தேயிலைப் பொடி – 3 டீஸ்பூன்,
கொட்டைப் பாக்குப் பொடி – 3 டீஸ்பூன்,
கறுப்பு வால்நட் பொடி – 3 டீஸ்பூன்.
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் தேவையான மூன்று பொருட்களையும் கொட்டி, வெந்நீர் சேர்த்துப் பசைபோலத் தயாரிக்கவும். இதை முடியில் தடவி 30 நிமிடங்கள் ஊறவைத்து அலசவும். பிறகு முடியை நன்றாக உலர்த்தி இரவில் சிறிது ஆமணக்கு எண்ணெயைப் பூசிவரவும். விரைவிலேயே நரை முடியிலிருந்து விடுபட்டு கருமையான முடிகளைப் பெறலாம்.
இயற்கை டை 2:
தேவையான பொருட்கள்
மருதாணி பவுடர் – 1 கப்,
அவுரி இலை பவுடர் – 1 கப்
செய்முறை
மருதாணி பவுடரை தண்ணீரில் கரைத்து பேஸ்டாக கலக்கி இரவில் வைக்கவும். மறுநாள் எண்ணெய் இல்லாத முடியில் மருதாணி பேஸ்டை பூசி கொள்ளவும். ஒரு மணி நேரம் கழித்து வெறும் தண்ணீரில் அலசி விடுங்கள்.
முடியை நன்கு உலர்த்திய பிறகு அவுரி இலை பொடியை தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல செய்து அதை உடனே தலை முடியில் பூசி விடுங்கள். மீண்டும் ஒரு மணி நேரம் ஊறவிட்டு பின்னர், முடியை வெறும் தண்ணீரில் அலசி விடுங்கள். இதனை தொடர்ந்த்து செய்து வந்தால் நரை முடி (hair dye) மறைந்து விடும்.
இயற்கை டை 3:
தேவையான பொருட்கள் :
மருதாணி இலை – கைப்பிடி அளவு,
நெல்லிக்காய் – 2,
காபிக் கொட்டை – சிறிதளவு,
கொட்டைப் பாக்குப் பொடி – 3 டீஸ்பூன்.
செய்முறை :
மேலே கொடுத்துள்ள அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து இரவு முழுக்க ஒரு பாத்திரத்தில் ஊறவிடவும். காலையில் இந்த கலவையை முடியில் தடவி 30 நிமிடங்களுக்கு ஊறவைத்து கூந்தலை அலசவும். விரைவில் நல்ல முடிவு கிடைக்கும்.
இயற்கை டை 4:
தேவையான பொருட்கள் :
வால்நட் பொடி – 3 டீஸ்பூன்,
அவுரி இலை – சிறிதளவு,
சாமந்திப் பூ – சிறிதளவு,
ரோஸ் மேரி இலைகள் (உலர்ந்தது) – சிறிதளவு
செய்முறை:
கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் நன்றாக உலர்த்திப் பொடி செய்து தேநீர் போன்று காய்ச்சி வடிகட்டவும். இந்த நீரை முடியில் தடவி வெயிலில் நன்றாக உலர்த்தவும். பிறகு முடியை அலசிவிடவும். கருமை நிறம் அப்படியே நீடித்திருக்க 15 நாட்களுக்கு ஒரு முறை இந்த நீரைத் தலைக்கு (hair dye) பயன்படுத்தலாம்.
இயற்கை டை 5:
தேவையான பொருட்கள்,
உலர்ந்த நெல்லி – 100 கி.
செய்முறை
உலர்ந்த நெல்லியில் கொட்டைகள் இருந்தால் நீக்கி கொள்ளவும். சிறிது சிறிதாக வெட்டி அதை இரும்பு வாணலியில் போட்டு வறுக்கவும். நெல்லிக்காய் கருப்பான பின்னர் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு 10 நிமிடங்கள் மிதமான தீயில் வேக விடவும். நெல்லி வெந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும். இதை எண்ணெய்யில் போட்டு தினமும் அந்த எண்ணெய்யை தலைக்கு தேய்த்து வந்தால் நரைமுடி மறைந்து விடும்.
இயற்கை டை 6:
தேவையான பொருட்கள்:
நெல்லிக்காய் – 1 கப்,
கரிசலாங்கண்ணி இலை – 1 கப்,
தேங்காய் எண்ணெய் – 500 மி.லி.
செய்முறை:
நெல்லிக்காய் சதை பகுதியையும், கரிசலாங்கண்ணி இலை விழுதையும் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்றாகக் காய்ச்சவும். இந்த விழுது கரகரப்பாக மாறும் பதத்தில் இறக்கி வடிகட்டி, ஆறவைக்கவும். தினமும் இந்த எண்ணெயை முடி பராமரிப்புக்குப் பயன்படுத்தினால் நாளடைவில் இள நரை குறைந்து, கூந்தல் கருமையாக வளரும்.
இயற்கை டை 7:
தேவையான பொருட்கள்:
செம்பருத்தி இலை – 1கப்,
கரிசலாங்கண்ணி இலை – 1 கப்,
மருதாணி இலை – 1கப்,
அவுரி இலை – கைப்பிடி அளவு,
வெந்தயம் – 3 டீஸ்பூன்.
செய்முறை:
அனைத்தையும் சேர்த்து, நன்றாக அரைத்து, சிறிய வில்லைகளாகத் தட்டி வெயிலில் உலர்த்தவும். உலர்ந்த பிறகு இவற்றைத் தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, அந்த எண்ணெயைக் கேசத்தில் பூசிவர கூந்தல் கருமையாகவும் அடர்த்தியாகவும் வளரும்.
இயற்கை டை 8:
தேவையான பொருட்கள்
மருதாணி பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்,
அவுரி இலை பவுடர் – 3 டேபிள் ஸ்பூன்,
நெல்லி பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்,
டீ தூள் – 1 டேபிள் ஸ்பூன்,
தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி டீ தூள் போட்டு நன்றாக கொதிக்க விடவும். பின் வடிகட்டி டிகாஷனை வைத்திருக்கவும். ஒரு பவுலில் மேற்சொன்ன 3 பவுடர்களையும் போட்டு நன்றாகக் கலக்கவும். இதில் தயிரை ஊற்றி கலக்கவும். பின் சிறிது சிறிதாக டீ டிகாஷனையும் கலந்து கலக்கவும்.
பேஸ்டாக வரும் வரை கலக்கவும். பின்னர் ஒரு வெள்ளை துணி போட்டு மூடி ஒரு மணி நேரம் ஊற வைத்து விடுங்கள். நேச்சுரல் ஹேர் டை தயார். எண்ணெய் இல்லாத முடியில் பூசி, 1 மணி நேரம் கழித்து மிதமான ஷாம்புவால் அலசிவிடுங்கள். ஒரு மாதம் வரை இந்த நிறம் நீடிக்கும்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!