logo
ADVERTISEMENT
home / Bigg Boss
சேரன் ரீ என்ட்ரி… லாஸ்லியாவை வெளுத்து வாங்கிய தந்தை… அதிர்ச்சியில் கவின்!

சேரன் ரீ என்ட்ரி… லாஸ்லியாவை வெளுத்து வாங்கிய தந்தை… அதிர்ச்சியில் கவின்!

பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. கடந்த வாரம் எலிமினேஷன் செய்யப்பட்ட சேரன் தற்போது சீக்ரெட் ரூமில் இருந்து பிக் பாஸ் வீட்டிற்குள் நடப்பதை பார்த்து கொண்டிருக்கிறார். நேற்றைய நிகழ்ச்சியில் வழக்கம் போல பாடலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து லாஸ்லியாவை, சாண்டி கலாத்துக்கொண்டிருந்தார். இதனால் லாஸ்லியா கோபமடைய, அவரை சாண்டி சமாதானப்படுத்தினார். 

தொடங்கியது ஃப்ரீஸ் டாஸ்க்

பின்னர் முகென் மற்றும் சாண்டி பாடல் பாடி நிகழ்ச்சியை கலகலப்பாகினர். இந்த வாரம் சுவாரஸ்யமான பல திருப்பு முனைகள் உள்ளன என பிக் பாஸ் அறிவிக்கிறார் இன்று முதல் வீட்டில் இருக்கும் அனைத்து போட்டியாளர்களின் கண்ட்ரோல் பிக் பாஸிடம் உள்ளது. இன்னும் சில தினங்கள் பிக் பாஸ் ரிமோட் கண்ட்ரோல் கட்டளையின் படி சில தினங்கள் நீங்கள் செயல்பட வேண்டும்.

twitter

ADVERTISEMENT

ரிமோட்டில் இருக்கும் கட்ரோல்கள் ஃப்ரீஸ், பார்வேர்ட், ரீவைண்ட், ஸ்லோமோஷன் மற்றும் ரிலீஸ் எனறு கூறப்பட்டது. அப்போது பிக் பாஸிடம் இருந்து ஃப்ரீஸ் என்ற அறிவிப்பு வெளியாக அனைவரும் இருந்த இடத்தில் ஃப்ரீஸாகி நின்றனர். பின்னர் சாண்டிக்கு மட்டும் ரிலீஸ் அறிவிக்கப்பட்டது. உடனே அவர் ஃப்ரீஸ் ஆகி நின்ற மற்ற போட்டியாளர்களிடம் சென்று அவர்களை கலாய்த்தார். 

பின்னர் சாண்டி ஃப்ரீஸ் என்றும், மற்ற போட்டியாளர்கள் அனைவருக்கும் ரிலீஸ் என்று கூற அனைவரும் ஒன்று சேர்ந்து சாண்டியை ஒரு வழியாக்கிவிட்டனர். அப்போது “ஆடிய ஆட்டம் என்ன” என்ற பாடலை பாடியும், அவரது ஷூவை கழற்றியும் நிகழ்ச்சியை வேடிக்கையாக கொண்டு சென்றனர். பின்னர் சாண்டிக்கு பிக் பாஸ் ரிலீஸ் அறிவித்தார்.

twitter

ADVERTISEMENT

முகென் தாயார், சகோதரி வருகை

அதன் பின்னர் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி பணிகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது மீண்டும் அனைவரும் ஃப்ரீஸ்  என்று பிக் பாஸ் அறிவித்தார். “ஆராரிராரோ” என்ற பாடலுடன் முகென் (mugen) தயார் பிக் பாஸ் இல்லத்திற்குள் நுழைந்தார். இதை சற்றும் எதிர்ப்பார்க்காத முகென், தனது அம்மாவை கட்டி அனைத்து அழுதுவிட, இதை பார்த்து மற்ற போட்டியாளர்களும் கண் கலங்கிவிட்டார்கள். 

பிறகு முகென் சகோதரி ஜனனி பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார். அவரை பார்த்த முகென் மகிழ்ச்சியில் ஜனனியை தூக்கிக் கொண்டு வீட்டில் வலம் வந்தார். பின்னர் அவருடன் முகென் பேசிகொண்டருந்தார். அப்போது அவர் சகோதரி, “நீ இங்க எதெல்லாம் நிஜம்னு நினைச்சிட்டு இருக்கியோ, அது உண்மையில்லை. ஏதெல்லாம் இங்க உண்மை இல்லையோ அது மட்டும் தான் வெளியே உண்மையாக இருக்கு” என முகேனுக்கு அட்வைஸ் கொடுத்தார்.

twitter

ADVERTISEMENT

இங்க எதற்காக வந்தாயோ அதை மட்டும் செய் என முகெனிடம் (mugen) கூறினார். பின்னர் இங்கே லாஸ்லியா செய்யும் சேட்டைகள் உன்னை போலவே இருக்கும் என தங்கையை பார்த்து கூறினார் முகென். “நானு.. லாஸ்லியா” என முகேன் சொன்னதை பார்த்து கேட்டார் அவரது சகோதரி. இறுதியில் வீட்டை விட்டு வெளியேறும் போது கொடி கட்டி பறக்க வேண்டும், எதைப் பற்றியும் கவலைப்படக்கூடாது என்று முகெனுக்கு (mugen) அறிவுரை வழங்கிவிட்டு அவரது தாயார் கண்ணீருடன் சென்றார். 

இதையடுத்து இந்த வாரத்திற்கான லக்ஸரி டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் வனிதா, சாண்டி, முகென் ஆகியோர் ஒரு அணியாகவும், ஷெரின், தர்ஷன், கவின் ஆகியோர் ஒரு அணியாகவும் பிரிந்து டாஸ்க்கை செய்தனர். போட்டியின் நடுவராக வனிதா இருந்தார். இதில் ஒரு கட்டத்தில் உள்ள பந்தை எடுத்து தங்களுக்குரிய பெட்டியில் போட வேண்டும் என்பது தான் டாஸ்க். இந்த டாஸ்க்கில் வனிதா அணியினர் வெற்றி பெற்றனர்.

போட்டியாளர்களுக்கு கேள்வி எழுப்பிய சேரன்

இதனிடையே ரகசிய அறையில் இருந்து கொண்டு வீட்டில் நடப்பதை வேடிக்கை பார்க்கும் சேரன் போட்டியாளர்களிடம்தான் கேள்வி கேட்க வேண்டும் என பிக் பாஸ் கூறினார். இதனையடுத்து சேரன் கடிதம் எழுதி போட்டியாளர்களுக்கு அனுப்பி வைத்தார். அதில் லாஸ்லியா, உனது ஞாபகங்கள் என்னுள் ஓடிக்கொண்டிருக்கிறது. நீ எப்படி இருக்கிறாய்? ஏதாவது ஒரு கணம்   நான் இல்லாத வெற்றிடத்தை உணர்ந்தாயா என்று லாஸ்லியாவிற்கு கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதில் அளித்த லாஸ்லியா, நீங்கள் இல்லாதவற்றை நான் உணர்ந்திருக்கிறேன். உங்களுக்கு பதிலாக நான்தான் சென்றிருக்க வேண்டும் என்று பதிலளித்தார். பின்னர் கவின், லாஸ்லியா இருவருமே தங்களது விருப்பங்களை வெளியில் வந்து பேசிக்கொள்ளலாம் என்று நான் கூறிவிட்டு வந்தேன். அப்படியிருந்தும் லாஸ்லியாவிடம் இங்கேயே முடிவை சொல்லும்படி கூறுவது நியாயமா? என கவினுக்கு கேள்வி கேட்டிருந்தார்.

ADVERTISEMENT

முதல் முறையாக பிக் பாஸ் வீட்டின் கேப்டனான லாஸ்லியா : காதலை சொல்லுமாறு வற்புறுத்திய கவின்!

twitter

அதற்கு பதில் அளித்த கவின், போட்டிக்காக மட்டுமே இதனை நிறுத்தினோமே தவிர, இருவரது உணர்ச்சிகளுக்கு உண்மையாகவே இருக்க வேண்டும் என்றுதான் யோசித்தோம் என்றார்.இதனை தொடர்ந்து முன்றாவது கேள்வி வனிதாவுக்கு கேட்கப்பட்டிருந்தது. அதிலும் வனிதா, நான் வந்த மறுநாள் அமைதியாக யார்கிட்டேயும் பேசாமல், தலைவர் போட்டியை கூட நிராகரித்து விட்டு வேலை செய்தாய். பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. 

ADVERTISEMENT

அந்த வனிதா நியாயமாக இருக்கிறாங்க. தனது கருத்தை சுருக்கமாக கூறும் வனிதாவாக இருப்பாயா? என சேரன் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளித்த வனிதா, இப்படித்தான் இந்த போட்டியை விளையாட வேண்டுமா என்று இத்தனை நாட்கள் எனக்கு தெரியாமல் போய்விட்டது. நாமினேஷனில் எப்படி பேச வேண்டும் என்று நான் இப்போது தெரிந்து கொண்டேன். யாரிடம் கூறினால் புரிந்துகொள்வார்களோ அவர்களிடம் கருத்துக்களை எடுத்து வைக்க வேண்டும் என்று நான் இப்போது தெரிந்து கொண்டேன் என்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ட்விஸ்ட் : முதன் முறையாக ரகசிய அறைக்கு அனுப்பப்பட்ட சேரன்!

twitter

ADVERTISEMENT

சேரன் சீக்ரெட் ரூமில் – கண்டுபிடித்த வனிதா!

இதன் பின்னர் சக போட்டியாளர்களுடன் பேசிக்கொண்டிருந்த வனிதா, சேரன் எழுதியிருந்த கடிதத்தை வைத்தே அவர் சீக்ரெட் ரூமில் தான் இருக்கிறார் என கண்டுபிடித்துவிட்டார். நேற்று நடந்த நாமினேஷன் பார்த்துவிட்டு கேள்வி கேட்பதாக சேரன் கேள்வியில் குறிப்பிட்டிருந்தார். அது இன்னும் டிவியில் வந்திருக்காதே, எப்படி பார்த்தார். அப்போ சீக்ரெட் ரூமில் தான் இருக்கிறார் என வனிதா கண்டுபிடித்துவிட்டார்.இதன் மூலம் அவர் சீக்ரெட் ரூமில் இருப்பதை மற்ற போட்டியாளர்களும் உறுதி செய்துவிட்டனர்.

 

மூன்றாவது புரோமோவில் லாஸ்லியாவை பார்த்து என்னிடம் என்ன சொல்லிவிட்டு இந்த நிகழ்ச்சிக்கு நீ வந்தாய்? உன்னை அப்படியா நான் வளர்த்தேன் என அவர் அப்பா கேட்கிறார். இது குறித்து நான் பேசக்கூடாது என்று நினைத்து தான் வந்தேன் என கோவமாக கூறுகிறார். அவரை சேரன் சமாதானப்படுத்த முயற்சி செய்தார். உள்ள வாங்க என்று சேரனிடம் கூறிவிட்டு, நான் அப்படி அவளை வளர்க்கவில்லை, எல்லோரது முன்னிலையில் தலை குணிய வேண்டிய நிலை வந்துவிட்டது என கூறினார். பின்னர் உன்னை என்ன சொல்லி இங்கே அனுப்பி வைத்தேன்.

எல்லோரும் காறி துப்புவது போல் நடந்துக்கொண்டாய், இதற்கு தான் இங்கு வந்தாயா?’ என்று கோவமாக திட்டுகின்றார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த பிறகு லாஸ்லியாவிற்கு மிகப்பெரிய ஆர்மி உருவாகியது. அவருக்கு நிறைய ரசிகர்கள் இருந்தனர். ஆனால் சில நாட்களிலேயே அவர் மீது இருந்த நல்ல பெயர் குறைய தொடங்கியது. இதற்கு முக்கிய காரணம் அவர் கவினுடன் காதலில் விழுந்தது தான். இதனை சேரன் மற்றும் கமல் கண்டித்தும் லாஸ்லியா தன்னை மாற்றிக்கொள்ளவில்லை. தொடந்து கவினுடன் பழகி வந்தார். இந்நிலையில் அவரது அப்பாவே நேராக வந்து இதுகுறித்து கோவமாக பேசியுள்ளார். இதனால் இன்றைய நிகழ்ச்சி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ADVERTISEMENT

இரண்டாவது புரோமோவில் ஆனந்த யாழை மீட்டுகிறாய் என்ற பாடல் ஒலிக்கப்பட லாஸ்லியா கதறி அழ தொடங்குகிறார். அப்போது பிக் பாஸ் வீட்டுக்குள் லாஸ்லியாவின் தந்தை வருகிறார். அவரை கண்ட லாஸ்லியா அவரை கட்டியணைத்து காலில் விழுந்து அழுகிறார். கடந்த 10 ஆண்டுகளாகத் தந்தையைப் பார்க்காமலிருந்த வந்த லாஸ்லியாவுக்கு ஃப்ரீஸ் டாஸ்க் மூலம் தனது தந்தையை பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை மற்ற போட்டியாளர்கள் கண் கலங்கியவாறு பார்த்து கொண்டிருக் கின்றனர்.

இன்று காலை வெளியாகியுள்ள முதல் புரோமோவில், வீட்டில் உள்ள அனைவரையும் ஃப்ரீஸ் என்று பிக்பாஸ் சொல்கிறார். இன்று வேறொரு பிரபலத்தின் குடும்ப உறுப்பினர்கள் யாராவது வருவார்கள் என்று பார்த்தால், சேரனை மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்புகிறார். சேரனை பார்த்த போட்டியாளர்கள் மகிழ்ச்சியில் அவரை கட்டித்தழுவி கொண்டாடுகின்றனர். 

வாடா சக்கரக்கட்டி என லாஸ்லியாவை, சேரன் பாசமாக அணைக்கிறார். பின்னர் சேரனிடம் பேசிய வனிதா எல்லாத்தையும் பாத்துட்டு,  எல்லாறும் பேசுறத ஒட்டுக்கேட்டுட்டு கேள்வி வேற பயங்கரமா கேட்கிறீங்களா என்று அவரிடம் கேலியாக பேசுகிறார். இதன் மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் சேரன் மீண்டும் போட்டியாளராக நுழைவார் என எதிர்பார்கப்படுகிறது.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

ADVERTISEMENT

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

 

10 Sep 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT