logo
ADVERTISEMENT
home / Dating
மழை விழும் போதெல்லாம் என்னை வந்து சேர்வாயா… மழைக்கால ரொமான்ஸ் குறிப்புகள்!

மழை விழும் போதெல்லாம் என்னை வந்து சேர்வாயா… மழைக்கால ரொமான்ஸ் குறிப்புகள்!

ஆகாயம் பூமியோடான தனது காதல் உறவை தொடர விரும்பிய போது மழையாக மாறி மண்ணை தொடுகிறது. இப்படி மழை என்பதே பூமியின் மீதான காதலின் பொருட்டு ஆகாயம் தந்த அற்புத பாதை எனும்போது மழைக்காலங்களில் ரொமான்ஸ் இல்லாமல் இருந்தால் அது தெய்வ குற்றம் ஆகிவிடாதா! 

மழை என்றாலே குளிரும். குளிர்ந்த போதெல்லாம் கதகதப்பான வெம்மைக்கு மனமும் உடலும் அலைபாயும். காதலின் கதகதப்பை விடவா கம்பளி போர்வைகளின் அடர்த்தி நம்மை சூடாக்கி விடும்? மழை என்பதே மண் மீதான காமம் பூமி எனும் காதலியை ஸ்பரிசிக்கும் ஆகாயக் காதலன் என்கிறதான உருவகம் இருக்கிறது.                           

நம் அறிவிற்கும் அப்பாற்பட்ட பேரறிவான இயற்கையே காதல் வயப்படும்போது சாதாரண மனிதர்களாகிய நாம் காதலில் இருப்பதும் காதலை அறிவதும் தவறே இல்லை. ஆகாயத்தின் காதல் ஸ்பரிசம் மழை வடிவில் பூமியை தீண்டுகிறது.அதே நேரத்தில் பூமியில் உள்ள உயிர்கள் எல்லாம் கதகதப்பிற்கு சக உயிரை நாடுகிறது..        

தனக்குள் காதல் சுமந்து வருவதாலோ என்னவோ மழை என்பது மற்ற எல்லா இயற்கை மொழிகளை விடவும் முதன்மையாக நேசிக்கப்படுகிறது. பருவமழை தொடங்க சில காலங்களே இருக்கும் நிலையில் உங்கள் வாழ்க்கை துணையுடன் நீங்கள் உங்கள் வருடத்தின் ஸ்பெஷல் ரொமான்ஸ் காலத்தை எப்படி கழிக்கப்போகிறீர்கள் என்று திட்டமிட்டு விட்டீர்களா!                                                                     

ADVERTISEMENT

வருடத்தில் சில மாதங்களே பெய்ய போகும் மழைக்காலங்களை (monsoon) நீங்கள் வீணடிக்கலாமா ! வாய்ப்பை தவற விடாமல் உங்கள் வாழ்க்கை துணையோடு வரப்போகிற பருவ மழைக்காலத்தை நீங்கள் எப்படி ரொமான்ஸாக வரவேற்கலாம் என்பதற்கான சில முக்கியமான குறிப்புகள் உங்கள் ரொமான்ஸ் நேரங்களில் உங்களுக்கு உதவி செய்யும்.

கூடலுக்கு பின்னர் ஆண்கள் செய்யக் கூடாதது என்னென்ன ? தெரிந்து கொள்ளுங்கள் ! 

twitter

ADVERTISEMENT

உங்கள் காதலுக்குரியவருடன் உடன் மழைகாலத்தை கொண்டாட சில வழிமுறைகள்

மழை என்னும் மாபெரும் காதலை உங்கள் காதல் துணையோடு நீங்கள் கொண்டாடி மகிழ சில ரொமான்டிக் முறைகளை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்.

மழையிலே கரையுதே ரெண்டு மனங்களின் தூரம்..

மழை திரைப்படம் தமிழ் சினிமாவில் மழைக் காதலர்களை தனித்து கௌரவித்த படம். அதன் பாடல்வரிகளில் ஒன்றுதான் மேலே குறிப்பிட்ட வரிகள். மழை தனது தூறல்களை தூவும் காலத்தில் உங்கள் துணையோடு நனைவதைகாட்டிலும் மழையை வேறு எந்த வகையிலும் நீங்கள் சிறப்பித்து விட முடியாது. உங்கள் துணையின் கரம் கோர்த்து நனையும் மழைக்காலங்கள் உங்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் தூரங்களை குறைக்கிறது ஆண்களிடம் ஒரு ரகசியம் சொல்கிறேன்.. மழைத்துளிகள் மண்ணை முத்தமிடும் அதே வேளையில் உங்கள் துணையை நீங்கள் முத்தமிட்டால் அவர்கள் உங்களை அதிகம் நேசிப்பார்கள்.                                                                                                   

இந்த கோயிலுக்கு சென்று வந்தால் இந்த வருடமே திருமணம் நிச்சயம்!

ADVERTISEMENT

காதலை கதகதப்பாக்குங்கள்

மழைக்காலம் என்பதே காதலர்களுக்கானதுதான் என்பது போல உங்கள் காதல் துணையுடன் அதிக நெருக்கமாக இருங்கள். உங்கள் சோபாவை மழை நேரத்தின் அடைக்கல இடமாக மாற்றுங்கள். இருவரும் இணைந்து ஒரு மென்மையான காதல் திரைப்படத்தை பாருங்கள். மழை நேரத்தில் இப்படி இருப்பது உங்கள் துணையை மற்றும் உங்களை மிகுந்த சந்தோஷத்திற்குரியதாக மாற்றும்.                                                                                                                             

திருமண வாழ்வை அற்புதமான அதிசயங்கள் நிறைந்த பயணமாக மாற்ற உங்களுக்கான சில உதவிகள் !

காதல் நெஞ்சே நெஞ்சே

உங்கள் காதல் துணையுடன் மழையின் துளிகள் கடலோடு சங்கமம் ஆவதை ரசியுங்கள். கடல் எப்போதும் காதலர்களுக்கான தேவதை. அதனை நிரூபிக்கத்தானோ என்னவோ கடற்கரையெங்கும் காதலர்களே அதிகம் இருக்கின்றனர். வெயில் காலத்திலும் கடல் நம்மை காதலிக்க தூண்டுகிறது என்றால் மழைக்காலத்தில் இது இன்னமும் இரட்டிப்பாகும் அல்லவா ! மழை நேரங்களில் காதல் துணையோடு கடற்கரை செல்லுங்கள். காதலை இரட்டிப்பாக்குங்கள் !                                                                                   

ADVERTISEMENT

முதல் மழை நம்மை நனைத்ததே.

லாங் ட்ரைவ் என்பதே காதலர்களுக்கான அணுக்கம் எனும்போது மழை நேர லாங் ட்ரைவ்களை பற்றி நீங்கள் யோசித்திருக்கிறீர்களா! பாடல்கள் அடங்கிய ஒரு லாங் ட்ரைவ் உங்கள் ரொமான்ஸை அதிகரிக்கும். உங்களுக்கென தனி பிளே லிஸ்டை உருவாக்கி கொள்ளுங்கள். உங்கள் தனிப்பட்ட பாடல்கள்.. ஒரு லாங் ட்ரைவ்.. மழை.. உங்கள் இருவருக்கிடையேயான காதல்.. இதனை விடவும் வேறென்ன வேண்டும் உங்களுக்கு

.கேண்டில் லைட் டின்னர்

மழைக்காலத்தின் மங்கிய இரவுகளை உங்கள் காதல் துணையோடான ஒரு கேண்டில் லைட் டின்னரோடு கொண்டாடி மகிழுங்கள். உங்கள் வெதுவெதுப்பான இரவுகள் சில மெல்லிய உணவகங்கள் மூலம் தொடங்கட்டும். அல்லது வீட்டையே ரொமான்ஸ் வனமாக மாற்றுங்கள்/ அவருக்கு பிடித்த உணவை சமைத்து அதனை மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அவருக்கு ஊட்டி விடுங்கள். விரல்களும் இதழ்களும் மோதிக் கொள்ளும் வேளையின் மின்சார கணங்களை நீங்கள் அறிந்தவர்தானே!

உங்கள் மழைக்கணங்களை உறைய வையுங்கள்

மழை நேரத்தில் உங்கள் காதல் துணையோடு மகிழும் அதே நேரத்தில் அந்த நிமிடங்களை உங்களால் உறைய வைத்து கொள்ள முடியும். இது உங்கள் மழை நிமிடங்களை நிரந்தரம் ஆக்குகிறது. புகைப்படமோ விடியோவோ உங்கள் மழைக்கால காதல் கணங்களை தொழில்நுட்பங்களால் பத்திரப்படுத்தி கொள்ளுங்கள்.

ADVERTISEMENT

ஒரு குடை.. இரு உடல்..

மழை நேரத்தின் குடைப் பொழுதுகள் பற்றி அறியாதவர்கள் காதலர்களா என்ன. நிச்சயம் அதனை பற்றி நீங்கள் அறிந்து வைத்திருப்பீர்கள்தான். இந்த மழைக்கால பொழுதுகளை ஒரு குடை மூலம் மேலும் அழகாக்குங்கள். ஒரு குடையில் இரு உடல்கள் அண்டிக்கொள்ளும் சமயம் காதல் எனும் தீ கொழுந்து விட்டு எரியும். வெளியே மழையும் உள்ளே அனலுமாக வித்யாசமான வானிலையில் இருவரும் இருக்கலாம்.

குழந்தையாகிப் போங்கள்

பிறந்த குழந்தைகளிடம் இருக்கும் புன்னகை வளர்ந்த நம்மிடம் ஏன் இல்லை என்பதை யோசித்தால் அவர்கள் எதற்கும் தயங்கியதே இல்லை என்பதுதான் விடை. யாரேனும் தவறாக நினைப்பார்களோ என்கிற எண்ணம் அவர்களுக்கு இல்லை. அறிவென்பது சில சமயம் நம் மகிழ்வையே கூலியாக கேட்கிறது. இதையெல்லாம் மறந்து விடுங்கள். மழை வந்தால் மட்டுமாவது குழந்தையாகி உங்கள் சந்தோஷக் கூச்சல்களை மீட்டெடுங்கள். நீரில் குதித்து விளையாடுங்கள். உங்கள் காதல் துணையையும் இதில் இணைத்து கொள்ளுங்கள். இருவருக்கும் இடையே நட்பென்பது இதனால் அதிகமாகும்.

மழை நேரத்து பால்கனி பொழுதுகள்

மழை என்றாலே மனசுக்குள் மத்தளம் ஆரம்பித்து விடும். முன்பெல்லாம் மழை நேரத்து ஜன்னல் பொழுதுகள் பிரபலமானவை. இப்போது பால்கனி பொழுதுகள் ஜன்னலை விடவும் மழையை நம்மோடு நெருங்க வைக்கிறது. ஒரு அற்புதமான மழை நேரத்தின் மாலைப் பொழுதுகளை உங்கள் துணையோடு சாய்ந்து கொண்டு நல்ல இசையோடு கொண்டாடுங்கள். ஒரு ஹெட்போனில் உங்கள் இருவர் காதுகள் கேட்கும் பாடல்கள் எப்போதும் இதமானவை!

மழைக்கால நடனங்கள்

மற்றவர் பார்க்கா வண்ணம் உங்கள் மாடி அமையப்பெற்றிருந்தால் உங்கள் துணையுடன் ஒரு மழை நேர டான்ஸ் செய்யுங்கள். முழுமையாக மழைத்துளிகளை உங்கள் உடல்கள் அனுபவிக்கட்டும். உடல்களை மழைத்துளிகள் ஸ்பரிசிக்க உங்கள் துணையோடு நெருக்கமான மெலிதான நடனங்களை செய்யுங்கள். விருப்பம் இருந்தால் நல்ல அழுத்தமான நடன அசைவுகளை மேற்கொள்ளுங்கள். நடனம் நம் மனதை இறகு போல லேசாக்கும்.

ADVERTISEMENT

குளிர்பொழுதுகள் சூடாகட்டும்

மழை நேரத்து குளிர் பொழுதுகளை நம் வழக்கமான வகையில் சூடான உணவுகளை பரிமாறி எதிர்கொள்ளுங்கள். மழை தரும் குளிரை உங்கள் வாழ்க்கை துணை உடல் சமாளிக்கவும் மழை பொழுதுகளை மேலும் அதிக ஸ்பெஷல் ஆக்கவும் அவருக்கு பிடித்த சூடான பக்கோடாக்களை தயாரித்து இதமான காஃபியோடு மழை பொழுதை மறக்க முடியாப் பொழுதாக்குங்கள்.

ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்

மழை நேரங்களை சில சமயம் வெளியில் சென்றும் அனுபவிக்கலாம். சில சமயம் அந்த நேரங்களை போர்வைக்குள் ஒன்றாக கிடந்தும் கொண்டாடலாம். உங்கள் துணையை அணைத்தபடி மிகுந்த அணுக்கத்தோடு ஒன்றாக உறங்குங்கள். உடல்களின் தேவை தாண்டி மனங்களின் தேவைகளையும் புரிந்து கொள்ளுங்கள்.

காமத்தை அனுபவியுங்கள் – இயற்கையே அதனை அனுமதிக்கிறது

கடைசியாக இயற்கையின் விருப்பமே காமத்தில் இரு உயிர்கள் திளைத்து அடுத்த தலைமுறைகளை உருவாக்கி விட வேண்டும் என்பதுதான்.. காமம் என்பது இயற்கையின் ஒரு பாகம். இயற்கையின் எல்லா படைப்பிலும் காமம் இருக்கிறது. மரங்களின் மீதான காமம் வேர்களில் தொடங்குகிறது. மகரந்தம் இல்லை என்றால் உலகமே அழியும் என்பது பற்றிய அறிவியல் உண்மையை தேடி அறிந்து கொள்ளுங்கள். ரொமான்டிக்கான மழைக்காலத்தை வாழ்க்கை துணையோடு காமத்தில் தொடங்குங்கள். அல்லது முடியுங்கள். காமம் என்பது தவறில்லை. அது ஒரு ஒழுங்கோடு நடைபெற வேண்டும் என்பதுதான் விதி. ரொமான்ஸ் நேரங்களில் உங்கள் க்ரியேட்டிவிடி அதிகரிக்கட்டும்.

ADVERTISEMENT

மழைக்கால ரொமான்டிக் இடங்கள்

சென்னையில் மழைக்காலத்தில் செல்வதற்கென ரொமான்டிக் இடங்கள் உள்ளன. மழைக்காலம் மட்டுமல்ல எல்லா காலங்களிலும் ரொமான்ஸ் செய்ய இந்த இடங்கள் உங்களுக்கு உதவி செய்யும்.

தியோசபிக்கல் சொசைட்டி

சென்னை அடையாறில் இருக்கும் தியோசாபிகல் சொஸைட்டி ஒரு குட்டி வனம். யாரும் இயற்கையை நேசிப்பவர்களுக்கான அடையாளம் இந்த இடம். நகரத்தின் சந்தடிகளை விலக்கி நமக்கான நிமிடங்களை நமக்கு தருகிறது. மழைப் பொழுதை உங்கள் காதல் துணையுடன் இந்த அடர்வனத்தில் கொண்டாடுவதை விடவும் சுவையான ரொமான்ஸ் வேறு இல்லை.

ADVERTISEMENT

முட்டுக்காடு

சென்னை இளம் காதலர்களின் அடைக்கலமாக ஈசிஆர் பாதையில் இந்த இடம் இருக்கிறது. மழை பெய்து கொண்டிருக்கும் பொழுதுகளில் உங்கள் துணையுடன் போட்டிங் செல்வது உங்களை இந்த உலகின் மகிழ்வு நிறைந்தவராக மாற்றும். உங்களுக்கு சாகசங்களில் விருப்பம் இருந்தால் நீங்கள் ஒரு நீர் ஸ்கூட்டர் மூலம் இந்த முட்டுக்காடு ஏரியை சுற்றி வரலாம்.

தக்ஷிணசித்ரா

இந்த இடமும் ஈசிஆர் பகுதியில் தான் இருக்கிறது. தமிழ் கலாச்சாரத்தை அடையாளப்படுத்தும் பெரும்பாலான விஷயங்களை தன்னுள்ளே வைத்திருக்கிறது. இங்கே சென்றால் உங்களுக்கு விருப்பமான கலை மற்றும் இயற்கை இரண்டின் அழகையும் அனுபவித்து மகிழலாம். தனியாக ரசித்து கொள்வதை காதல் துணையுடன் இப்படிப்பட்ட இடங்களை ரசிப்பது உங்கள் காதலை அதிகரிக்கும்.

ADVERTISEMENT

அமிதிஸ்ட் கஃபெ

உங்கள் வாழ்க்கை துணையோடு ஒரு அழகான மழை மாலையை செலவழிக்க மிக சரியான இடம் அமிதிஸ்ட் தான். இயற்கையோடு இணைந்த உணவகம். நகரத்துக்கு நடுவே பூந்தோட்டத்துக்கு இடையே உங்கள் காதல் துணையோடு ஒரு மழைப்பொழுதை பற்றி யோசித்து பார்த்திருக்கிறீர்களா. நினைக்கவே செல்கள் புல்லரிக்கும் இப்படி ஒரு இடத்திற்கு சென்றுதான் பாருங்கள்.

MGM ரிசார்ட்

மழை பொழுதுகள் ரிசார்ட்களில் கழிந்தால் அது எப்படி இருக்கும். ஈசிஆர் ரோடில் இருக்கும் MGM டிஸீ வோர்ல்டு ஒட்டியே இந்த ரிசார்ட் இருப்பது ஒரு நல்ல வசதி. கடற்கரையோர ரிசார்ட் என்பதால் அழகான டைனிங் ஏரியா இருக்கிறது. ஒரு திறந்த வெளி டைனிங்.. கடல்.. மழைத்துளிகள்.. உங்கள் காதலை கொண்டாடுங்கள். மழையோடு.

ADVERTISEMENT

Azzuri bay

சென்னையின் பிரபல ரூப் டாப் ரெஸ்ட்டாரங்களில் முதன்மையானது அசூரி பே. உணவை சுவைத்தபடியே இயற்கையை அதன் போக்கிலேயே நம்மை ரசிக்க வைக்கும் இடம். இதன் மெனுக்கள் பெரும்பாலும் மெடிட்டரேனியன் இத்தாலிய வகைகளை சேர்ந்தவை என்றாலும் சமீபத்தில் செட்டிநாடு உணவையும் இதன் பட்டியலில் சேர்த்திருக்கிறார்கள். மழைத்தூறல்களோடு மனம் விட்டு பேச அழகான இடம்.

Dewberry’s

காதல் கிளிகள் மழை நேரத்தில் கூதலுக்கு ஒதுங்க இந்த இடம் பொருத்தமாக இருக்கும். நகரத்தின் மையத்தில் மைலாப்பூரில் இந்த இடம் இருக்கிறது என்பதால் உங்கள் போக்குவரத்து சுலபமாக இருக்கும். உள் அலங்காரங்கள் உங்கள் கண்களை கட்டி போடும். சுவையும் அற்புதமானது. உங்கள் துணையோடு நீங்கள் ஒரு மாலையை கழிக்க விரும்பினால் இந்த இடம் அற்புதமானது .

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

18 Jun 2019
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT