பால் உணர்வும் திருமண வயதும்
இயல்பாகவே பெண், ஆணைவிட உடல் வளர்ச்சியில் சற்றுக் குறைவாகவே இருப்பாள். ஆனால், பருவ மலர்ச்சி அதாவது வயதுக்கு வருவது என்பது ஆணைவிடப் பெண்ணுக்கே முதலில் நிகழும். தமிழ்நாட்டுப் பெண்கள் சுமார் 12-15 வயதில் பூப்பு எய்துவர். இந்நிலையில் இவர்கள் உடல் வளர்ச்சி இதே வயதுடைய ஆண்களைவிட மிகுதியாக இருக்கும். ஆண்பிள்ளைகள் சுமார் 18-20 வயதில் பருவம் எய்துவார்கள். பின்னர் ஒரு ஆண், பெண்ணை விட வளர்ச்சியுறுவான். பால்(menstrual) உணர்விலும் இந்த மாறுபாடுகள் உண்டு.
பெண்கள் பால்(menstrual) உணர்வு 12-15 வயதில் மெதுவாகத் தொடங்கி 20-35 வயதில் நிறைந்த உணர்வோடு இயங்கி பின் 45 வயதுக்குப் பின் சற்றே குறையும். பிறகு மாதவிடாய் நிற்கும்வரை மெதுவாகக் குறைந்து அது நின்றதும் மிக வேமாகக் குறைந்துவிடும். பால்(menstrual) உணர்வு ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் அவர்கள் இனவளர்ச்சி சூழ்நிலை, தட்பவெப்பநிலை, நாகரிகம் இவற்றிற்கேற்ப மாறுபடும். 18 வயதிற்கு முன் பெண்ணின் பால்(menstrual) உறுப்புகள் வளர்ச்சியுற்றிருந்தாலும் அவள் அடிப்படைக் கல்வி பயில வேண்டிய காலம் அது. பொறுப்புணர்ச்சியும் பெற்றிருக்கமாட்டாள். எனவே 21 வயதிற்குப்பின் ஒரு பக்குவத்தை, ஒரு பொறுப்பை, ஒரு நிறைவை அவள் எய்துகிறாள். எனவே 21 வயதுக்கு மேல்தான் அவள்.
‘தற்காத்து தற்கொண்டான் பேணி தகை சான்ற
சொற்காத்துச் சோரவிலான் பெண்’ – ஆகிறாள்.
குறிப்பாக ஒரு பெண் தங்கள் கருத்து மனப்போக்கு முதலியவற்றில் ஒரு பிடிவாத குணத்தை விட்டு நாணல் போல் வளைந்து கொடுத்து புதிய உறவோடு பழகும் வாய்ப்புகள் அதிகம். கல்விக் கூடங்கள், காரியாலங்கள், சிற்றுண்டி, கடற்கரை, ஆற்றுப்படுக்கை, சுற்றுப் பயணங்கள் இவற்றில் இவர்கள் பால்(menstrual) உணர்வு தூண்டப்பெறும் சூழ்நிலைகள் பலப்பல. இக்கால கட்டத்தில் பெற்றோர் விதித்த கட்டுப்பாடுகளும் சமூகக் கட்டுப்பாடுகளும், பின் தங்கும் பால்(menstrual) உணர்வு வேகம் மிகும். பகுத்தறிவு ஒதுங்கும். விளைவு எப்பொழுதும் சுபம் அல்ல. கோழை மனமோ அல்லது கொடிய மனமோ உடைய ஆண்களால் கன்னி தாயாகலாம். குழந்தை அநாதையாகி அரசுத் தொட்டில்களை நிரப்பலாம். இல்லை மனம் ஒன்றி இருமனங்களும் மரணததை அணைக்கலாம். திருந்தாத சமுதாயத்தில் வாழ்கிற சூழ்நிலையைக் காதலர்கள் இருவரும் பூரணமாக உணரவேண்டும்.
விடியலில் விலாசங்களை
படிக்கல்லாய் மாற்றி
இருட்டிலே மறைக்காமல்
பாதை வகுக்க வேண்டும்.
மனம் விட்டுப் பழகினாலும் மாசுபடாது கட்டுப்பாட்டோடும், பொறுப்புணர்ச்சியோடும் செயல்படவேண்டும்.
ஹார்மோன் என்றால் என்ன?
ஹார்மோன் என்றால் இரத்தத்தில் கலந்து உடலுறுப்புகளை ஊக்குவிக்கின்ற (செயல்படுத்துகின்ற) உட்சுரப்பி
விடலைப் பருவத்திற்கு முன்பு பெண்கள் சற்று பெருத்து காணப்படுகின்றனரே ஏன்?
பெண்கள் பூப்பெய்ய தொடங்குதலுக்கு முன் நிறைய பெண்களின் உடல் சுற்று பெருத்து காணப்படுகிறது. இதற்கு அதாவது இளம் கொழுப்பு என்று பெயர். இந்த இளம் கொழுப்பு பெண்களுக்கு அவசியமான ஒன்று. ஏனெனில் இதுவே மூளைக்கு தெரிவிக்கும் ஒரு அறிகுறி ஒரு பெண் விடலைப்பருவத்திற்கு தயாராகிவிட்டாள் என்ற அறிகுறி.
ஒல்லியான பெண்களுக்கு இந்த அறிகுறி தெரியாததினாலும், அவர்கள் வயது வரும் காலம் தாமதமாகிறது. துரித வளர்ச்சியடையும் பெண்களுக்கு இளம் கொழுப்பு மறையத் தொடங்குகிறது. அதே நேரத்தில் 15 முதல் 16 வயதிலிருந்து இந்த இளம் கொழுப்பு குறைந்து, வழக்கமான குண்டாகும் தன்மை ஏற்படுகிறது.
முதல் மாற்றம் விடலைப்பருதினருக்கு எப்போது நாம் காணமுடிகிறது?
ஒரு பெண் வளரத் தொடங்கும்போது, அவள் மெலிந்த உடலுடனும், நீண்ட கால்களுடனும் காணப்படுகிறாள். எவ்வளவுதான் உண்டாலும், உண்ணவில்லையெனிலும் வளர்ச்சி தடைபடுதில்லை. இந்த வளர்ச்சி ஹார்மோன்களால் மட்டுப்படுத்தப்படுகிறது. ஆண் ஹார்மோனின் பெயர் ஆன்ட்ரோஜன். இதில் என்ன ஒரு விந்தையான விஷயமெனில் எவ்வளவு சீக்கிரம் ஹார்மோன்களின் வளர்ச்சி துரிதமாக நடைபெறுகிறதோ அதேபோல் ஒரு குறிப்பிட்ட நிலையில் ஹார்மோன்களின் வளர்ச்சி மட்டுப் படுத்தப்படுகிறது. அதாவது ஒரு சில பெண்கள் வேமாக வளர்ந்தாலும் ஒரு குறிப்பிட்ட வயதில் வளர்ச்சி நின்றுவிடுகிறது. அதேபோல், மெதுவான வளர்ச்சியுடைய(menstrual) பெண்களும் ஒரு குறிப்பிட்ட வயதில் உயரமான வளர்ச்சி அடைகின்றனர். எனவே வளர்ச்சி என்பது ஹார்மோன்களின் வளர்ச்சியை குறிக்கிறது.
நம்மாள் காண முடியாத மாற்றம் உண்டா?
ஆம் நம்மால் காண முடியாத மாற்றங்கள் நம் உடலின் உட்பகுதியில் நடைபெறுகின்றன. கருப்பை சிசுத்திரை கருமுட்டைகள் வளரத் தொடங்குகின்றன.
கருப்பை என்றால் என்ன?
பேரிக்காயின் வடிவிலான பை பெண்ணின் அடிவயிற்றின் உட்பகுதியில், அமைந்திருக்கும், மென்மையான தசையிலான ஒரு பையே கருப்பையாகும். குழந்தை பிறப்பதறகு முன் இப்பையிலேயே வளர்கிறது. குழந்தை பிறக்கப்போகிறது என்றால் இந்த மென்மையான தசைகள் சுருங்கி, கருப்பையின் வாய் வழியே குழந்தையை வெளியேத் தள்ளுகிறது. அதாவது கருப்பையின் அடிப்பகுதியில் அமைந்துள்ள சிசுத்திரையின் உள்பகுதிக்கு தள்ளுகிறது. இதில் நம்முடைய தூய்மையான ஒரு விரலை சிசுத்தாரையினுள் விடும்போது. (கூம்பு வடிவிலான கடினமாகவும் தசைப்பற்றுள்ள ஒரு பகுதியையும் உணரமுடியும்.
சிசுத்தாரை என்றால் என்ன?
பெண் குறியில் அமைந்துள்ள திறப்பே சிசுத்தாரை எனப்படும். கருப்பையின் அடிப்பகுதியிலிருந்து பெண்குறி மேடுவரை இந்த குழாய் நீண்டுள்ளது. பிரவத்தின் போது குழந்தை இவ்வழியாகவே வெளி வருகிறது. இவ்வழியில் தான் மாதவிடாய் இரத்தமும் வெளிவருகிறது. உடலுறவின் போது ஆண் குறி நுழைவதும் இவ்வழியேதான்.