மழைக்காலம் (mansoon) அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. நாள் முழுவதும் மெல்லிய சாரலில் திளைத்திருக்க யாருக்கு தான் பிடிக்காது. ஆனால் மழைக்காலத்தில் சரும பாதிப்புகள் அதிகமாக ஏற்படும். குளிர் காலத்தில் வறண்டு விறுவிறுவென இழுக்கும் சருமம், வெள்ளை வெள்ளையாக செதில் படிந்த சருமம், வெடித்து ரத்தம் கசியும் உதடுகள் என பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
pixabay
- மழைக்காலத்தில் முகத்துக்கு பப்பாளி பழ ஃபேஷியல் மட்டும் செய்யுங்கள். மற்ற பழங்களின் ஃபேஷியல்கள் உடலை குளிரச் செய்துவிடும். கனிந்த பப்பாளி பழத்தை மிக்ஸியில் அரைத்து, முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊறவிட்டு, கழுவினால் போதும்.
- மழைக்காலத்தில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய்யில் இருக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் சருமத்தில் உண்டாகும் பாக்டீரியல் இன்பெக்க்ஷன்களை தடுத்து சருமத்தை மிருதுவாக்கும்.
- மழைக்காலத்தில் சருமத்தின் மென்மை மற்றும் நெகிழ்வுத்தன்மையை பராமரிக்க சோப்புக்கு பதிலாக கடலை மாவை பயன்படுத்தலாம். ஏனெனில் சோப்பில் உள்ள கேமிக்கல்ஸ் சருமத்தை மேலும் வறண்டு போக செய்யும்.
மருத்துவ குணங்கள் நிறைந்த வெந்தயத்தின் நன்மைகள், தீமைகள் மற்றும் பயன்படுத்தும் விதம்!
- மோரில் கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளதால், மோரில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
- ஆலிவ் ஆயிலில் முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து நன்றாக அடித்து கொள்ள வேண்டும். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின்னர் கடலைமாவுக் கலவை உபயோகித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும்.
pixabay
- கற்றாழை ஜெல் சரும வறட்சியைத் தடுப்பதோடு, சருமத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி உலர வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். தினமும் இதனை பின்பற்றி வர முகம் பொழிவாகும்.
- வேப்பிலை 20 கிராம், அதிமதுரம் 10 கிராம், கிச்சிலிக்கிழங்கு 20 கிராம், காயவைத்த ரோஜா இதழ் 20 கிராம், நெல்லிப்பொடி 20 கிராம், லோதீராப்பட்டை 10 கிராம் ஆகியவற்றைப் பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிதளவை தண்ணீரில் குழைத்து ஹெர்பல் பேஸ்ட்டாக தினமும் குளிக்கும் போது பயன்படுத்தலாம்.
- கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பு, ஆரஞ்சு பழத்தோல் மூன்றையும் சம அளவு எடுத்துக் காய வைத்து அரைத்து கொள்ளவும். குளிக்கும் போதும், முகம் கழுவும் போதும் சோப்புக்கு பதில் இந்தப் பொடியை மட்டுமே உபயோகித்து வர குளிர்காலத்தில் ஏற்படும் சரும பாதிப்பிற்கு நிவாரணம் கிடைக்கும்.
இந்த மழைக்காலத்தில் உங்கள் வழக்கமான மேக்கப் கரையாமல் இருக்க சில ரகசிய டிப்ஸ் !
- சருமத்தின் அழகை பாதுகாக்க தவறாமல் குளிர்காலங்களில் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று கிளின்சிங். ஒரு நாளைக்கு 2-3 முறை காட்டனை பாலில் நனைத்து அதனைக் கொண்டு துடைத்து எடுக்க வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் முற்றிலும் வெளிவருவதுடன், சருமத்தில் ஈரப்பசையானது தக்க வைக்கப்படும்.
pixabay
- வாரத்திற்கு மூன்று முறை வைட்டமின் இ எண்ணெய், நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகிய மூன்றையும் சமஅளவு எடுத்து வெதுப்பாக்கி முகத்தில் அப்ளை செய்து கழுவ வேண்டும்.
- குளிர்காலத்தில் (mansoon) சருமத்தில் தோன்றுகிற வெண்மையான படிவங்கள் மாற வைட்டமின் இ எண்ணெய், வீட்ஜெர்ம் எண்ணெய் இரண்டையும் சம அளவு எடுத்து கலந்து சருமத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊறியதும் கழுவ வேண்டும்.
- 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் 3 துளிகள் எலுமிச்சைச் சாறு கலந்து சருமத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின்னர் மேலே கூறிய குளியல் பொடியை பயன்படுத்தி தினமும் குளிக்க வேண்டும்.
- குளித்து முடித்த உடனேயே முகம், கை, கால்களுக்கு மாயிச்சரைசர் தடவ வேண்டும். இதனால் வறண்ட சருமம் சரியாகும்.
இந்தியாவில் மழைக்காலத்தில் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல ரம்மியமான இடங்கள்!
- உதடுகளில் தோல் உரிந்தால் பாலாடை, வெண்ணெய், தேங்காய் எண்ணெய் இவற்றில் ஏதாவது ஒன்றை இரவு படுப்பதற்கு முன்பு உதட்டில் தடவுங்கள். தினமும் இரு வேளைகள் தடவி, மென்மையாக மசாஜ் செய்து வந்தால் உதடுகள் வறண்டு, வெடிக்காமலிருக்கும்.
மழைக்கால ஃபேஸ் பேக்
- அவகேடோவில் ஈரப்பசையை தக்க வைக்கும் தன்மை அதிகம் உள்ளது. எனவே அதனை மசித்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
- வாழைப்பழத்திலும் சரும வறட்சியை தடுக்கும் தன்மை அதிகம் உள்ளது. எனவே அதனைப் பயன்படுத்தியும் ஃபேஸ் பேக் போடலாம். அதற்கு மசித்த வாழைப்பழத்தை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் தேன் பயன்படுத்தி மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து பின்னர் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
- மஞ்சள் ஃபேஸ் பேக் குளிர்காலத்திற்கு (mansoon) உகந்தது. மஞ்சள் தூளுடன் ரோஸ் வாட்டர், பால் மற்றும் தண்ணீர் கலந்து பயன்படுத்துவதற்கான சிறந்த பொருட்கள். இப்பொருட்களில் ஏதேனும் ஒன்றுடன் மஞ்சளைக் கலந்து பயன்படுத்தினால் முழு பலனையும் பெறலாம்.
pixabay
- 1 தோல் நீக்கிய கேரட் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் காய விடுங்கள். இந்த கேரட் ஃபேஸ் பேக்கை வாரம் ஒரு முறை பயன்படுத்தலாம்.
- ஆலிவ் ஆயில் மற்றும் கோக்கோ பட்டர் ஒரு நல்ல மாய்ஸ்சரைசர் மாதிரி செயல்படுகிறது. இதனுடன் இஞ்சி பேஸ்ட் சேர்த்து ஃபேஸ் பேக்காக பயன்படுத்தலாம். இந்த பேக் சருமத்தில் உள்ள அழுக்குகளை போக்குகிறது. ஒரு டேபிள் ஸ்பூன் கோக்கோ பட்டர் மற்றும் ஆலிவ் ஆயில், 1/2 டீ ஸ்பூன் இஞ்சி பேஸ்ட் சேர்த்து முகம் மற்றும் கழுத்தில் அப்ளே செய்யலாம்.
- பப்பாளி பழத்தில் நிறைய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. பாதி பழுத்த பப்பாளி பழத்தை எடுத்து நறுக்கி மசித்து கொள்ளவும். இதனுடன் பால் சேர்த்து சருமத்தில் அப்ளை செய்யலாம். இது உங்கள் சருமம் மென்மையாக இருக்க உதவும். பாலில் நிறைய விட்டமின் ஈ உள்ளது. இது வறண்ட சருமத்தை போக்குகிறது.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.