மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர்.. கனவு நிறைவேறியதாக மகிழ்ச்சி!
தனது நீண்ட நாள் கனவு நிறைவேறிவிட்டது நடிகை மஞ்சு வாரியர் (Manju Warrier) மகிழ்ச்சிப் பொங்கத் தெரிவித்துள்ளார். மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார், மஞ்சு வாரியர். நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்துகொண்ட பின்னர் சினிமா துறையை விட்டு விலகி இருந்தார்.
கடந்த சில வருடங்களுக்கு முன் திலீப்புடன் சில பிரச்சனைகள் காரணமாக இருவருக்கும் விவாகரத்து ஆனது. அதன் பின் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். 15 வருடத்துக்கு பிறகு நடிக்க வந்த அவரது படங்கள் வரவேற்பை பெற்றன.
அவரது கம்பேக் படமான ஹவ் ஓட் ஆர் யூ? தமிழில் 36 வயதினிலே என்ற பெயரில் ஜோதிகா நடிப்பில் ரீமேக் ஆனது. இதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷ் ஜோடியாக அசுரன் படத்தில் நடித்தார்.
இதில் பச்சையம்மாள் என்ற கேரக்டரில் வாழ்ந்திருந்தார் மஞ்சு வாரியர். ‘தொடர்ந்து தமிழில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன், கதைகள் வருகிறது. ஆனால் அசுரனில் கிடைத்ததை போல, சிறந்த கேரக்டர்கள் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன்’ என்று கூறியிருந்தார்.
இதற்கிடையே மலையாள படத்தில் மம்மூட்டி ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். மம்மூட்டியுடன் அவர் நடிப்பது இதுவே முதன்முறை. இது பல வருட கனவு என்றும் அவர் கூறியிருந்தார்.
ஆன்லைன் பணபரிவர்த்தனைகள் பாதுகாப்பானது தானா..?
அறிமுக இயக்குனர் ஜோபின் டி.சாக்கோ இயக்கும் அந்தப் படத்துக்கு த பிரீஸ்ட் என்று டைட்டில் வைத்துள்ளனர். கிரைம் திரில்லர் படமான இதை அன்டோ ஜோசப், உன்னிகிருஷ்ணன், வி.என்.பாபு தயாரிக்கின்றனர். இதன் ஷூட்டிங் கேரளாவில் நேற்று தொடங்கியது.
அப்போது நடிகர் மம்மூட்டி யுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட மஞ்சுவாரியர், அந்த படத்தை அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் என் கனவு நனவாகிறது. நன்றி மம்மூக்கா என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்க வந்துள்ள நவ்யா நாயர், மஞ்சுவாரியருடன் (Manju Warrier) எடுத்துள்ள செல்ஃபி புகைப்படம் சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கருச்சிதைவுற்ற பெண்கள்மீது குற்றவுணர்வை சுமத்தாதீர்கள் : நடிகை காஜல் ஆதங்கம்!
தமிழில், அழகிய தீயே, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை, சில நேரங்களில், ஆடும் கூத்து உட்பட பல படங்களில் நடித்தவர் நவ்யா நாயர். மேலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
கடந்த 2010ம் ஆண்டு சந்தோஷ்மேனன் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டில் ஆனார். குடும்ப வாழ்க்கைக்காக சினிமாவில் இருந்து விடைபெற்றார் நவ்யா.
இந்நிலையில் மீண்டும் மலையாள படத்தில் நடிக்க வந்துள்ளார் நவ்யா நாயர். அவர் நடிக்கும் படத்துக்கு ஒருத்தீ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி நவ்யா நாயர் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், அந்த வீடியோ வைரலானது. இந்நிலையில் நடிகை மஞ்சு வாரியருடன் (Manju Warrier) இணைந்து அவர் வெளியிட்டுள்ள செல்ஃபி புகைப்படம் வைரலாகி வருகிறது.
அதில், உங்களை யார் சந்தோஷப்படுத்தினார் களோ, அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார் நவ்யா. இரண்டு சூப்பர் ஹீரோயின்களும் ஒரே செல்ஃபியில் என்றும், இப்போதும் இருவரும் சூப்பராக இருக்கிறீர்கள் என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
நடிகை சினேகாவிற்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது….. உச்சகட்ட மகிழ்ச்சியில் பிரசன்னா!
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!