பள்ளிக்கு செல்லும் குழந்தை இருந்தாலே அது கொஞ்சம் பரபரப்பான வீடாகத்தான் இருக்கும். அவர்களைப் பள்ளிக்குத் தயார் செய்வதே பிரம்ம பிரயத்தனம் என்கிற நிலையில் அவர்களுக்கான மதிய உணவைத் தயாரித்து அனுப்பி அவர்களை சாப்பிட வைப்பது என்பது மிகவும் சவாலான வேலைதான்.
அதிலும் வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் இந்த சமயங்களை சமாளிப்பது என்பது மிகவும் கடினம். அவர்களுக்காகவே சில எளிய சத்தான மதிய உணவு சமையல் குறிப்புகள். (lunch receipes)
Youtube
ஃபிரென்ச் டோஸ்ட்.
செய்வதற்கு மிக எளிதான பிரென்ச் டோஸ்ட் குழந்தைகளின் பேவரைட் மட்டுமல்லாமல் அவர்களுக்கு ஆரோக்கியமானதும் கூட.
தேவையானவை
ப்ரவுன் பிரெட் – 5 துண்டுகள்
பால் – 1 கப்
முட்டை – 2
சர்க்கரை – 3 ஸ்பூன்
முதலில் பிரெட் துண்டுகளை முக்கோண வடிவத்தில் இரண்டாக கட் செய்யவும். முட்டைகளை உடைத்து ஒரு அகலமான கப்பில் ஊற்றி நன்கு அடிக்கவும். அதனுடன் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் அடித்துக் கலக்கவும். அதன் பின்னர் பிரெட் துண்டுகளை முட்டைக்கலவையில் முக்கி எடுத்து தோசைக்கல்லில் போடவும். சுற்றி நெய்/வெண்ணெய் விட்டு பிரட்டவும். வெந்த உடன் ஹாட்பேக்கில் சேமித்து மத்திய உணவாக அனுப்பவும். புரதசத்து அதிகம் நிறைந்த உணவு.
Youtube
பீட்ரூட் சாதம்
தேவையானவை
வெங்காயம் – 1 நறுக்கியது
பச்சைமிளகாய் – 2 நீளவாக்கில் கீறி விடவும்.
தேங்காய் துருவல் சிறிதளவு
பீட்ரூட் துருவல் – 1 கப்
சாதம் – 2 கப்
சாதத்தை வேக வைத்து தனியாக எடுத்து வைக்கவும். பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். கடுகு உளுந்தைப்பருப்பு போட்டுத் தாளித்து அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். சற்று வாங்கியவுடன் பச்சைமிளகாய் சேர்க்கவும். சிறிது நேரம் கிளறவும். இறுதியாக பீட்ரூட் துருவலை அதில் சேர்க்கவும். தேங்காய் துருவலையும் சேர்த்து கிளறவும். லேசாக தண்ணீர் தெளிக்க வேண்டும்.
பீட்ரூட் வெந்த உடன் வெந்த சாதத்தை அதில் கலந்து கொள்ளவும். பின்னர் சாதம் உடையாமல் பிரட்டி எடுக்கவும். நல்ல சத்தான மதிய உணவு உங்கள் பிள்ளைகளுக்கு தயார்.
Youtube
சீஸ் பிரெட் பிஸ்ஸா
குழந்தைகளுக்கு விருப்பமான உணவு இதுதான். மதிய உணவிற்கு மட்டுமல்லாமல் மாலை சிற்றுண்டியாகவும் இதனைப் பயன்படுத்தலாம்.
தேவையானவை
வெங்காயம் – நறுக்கியது
கேப்ஸிகம் – நறுக்கியது
பன்னீர் – துருவியது சிறிதளவு
சீஸ் – 1 கப்
ப்ரவுன் பிரெட் – 2
முதலில் ஒரு சிறிய வாணலியில் ஆலிவ் எண்ணெய் சில துளிகள் விட்டு வெங்காயம் மற்றும் கேப்ஸிகமை பாதி வதக்கி அதற்கு அளவான உப்பை சேர்த்து அடுப்பை அணைக்கவும். பிரெட் துண்டுகளை அளவாக ரோஸ்ட் செய்து ப்ரெட்டின் மேல் றம் வணக்கிய வெங்காயக் கலவையை நிரப்பவும். அதன் மேல் பன்னீர் துருவல்களைத் தூவவும். துருவிய சீஸை அதற்கும் மேல் தூவி விடவும். பின்னர் தோசைக்கல்லை மூடிவிடவும். இரண்டு நிமிடங்களில் சீஸ் பிரெட் பிஸ்ஸா தயார். ஹாட் பேனில் போட்டு குழந்தைக்கு கொடுத்து விடுங்கள். நீங்கள்தான் ஸ்பெஷல் மம்மி.
Youtube
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.