logo
ADVERTISEMENT
home / அழகு
குளிர் காலத்தில் உதட்டின் அழகை பராமரிப்பது எப்படி : சில இயற்கை வழிமுறைகள்!

குளிர் காலத்தில் உதட்டின் அழகை பராமரிப்பது எப்படி : சில இயற்கை வழிமுறைகள்!

குளிர் காலத்தில் உடலில்  உள்ள நீர் சத்துக்கள் குறைந்து விடுவதால் சருமம் வறண்டு காணப்படும். குறிப்பாக உதடுகள் (lips) வறண்டு போக ஆரம்பிக்கும். இதனை இயற்கை முறையில் எப்படி சரி செய்வது என இங்கே காணலாம். 

pixabay

  • இரவில் படுக்க போகும் முன் உதட்டில் உள்ள லிப்ஸ்டிக்கை எடுத்து விட்டு வெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் போட்டு சிறிது நேரம் மசாஜ்  செய்த பின்னர் படுக்க செல்லவும்.

மழைக்கால சரும பராமரிப்பு : சில அடிப்படை டிப்ஸ்கள் மற்றும் ஃபேஸ் பேக்குகள்!

ADVERTISEMENT
  • குளிர் காலத்தில் உதடுகள் வறண்டு வெடிக்கும். அடிக்கடி எச்சிலால ஈரப்படுத்திட்டே இருப்போம். அது உதடுகளை இன்னும் வறண்டு போக செய்து கருப்பாக்கும். இதனை தவிர்க்க பெட்ரோலியம் ஜெல்லி, தரமான லிப் பாம் பயன்படுத்தலாம். 
  • பீட்ரூட் சாறு, 1 டீஸ்பூன் தேன், 10 துளி லெமன் ஆயில், 5 துளி ரோஸ் ஆயில் கலந்து பஞ்சில் தொட்டு தொட்டு உதடுகளில் தடவி வந்தால் வறட்சியால் ஏற்படும் கருமை நீங்கும்.
  • ரோஜா பூ இதழ்களை ஒரு நாள் இரவு முழுவதும் தேனில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதை உதட்டின் மேல் தடவிக் கொண்டு மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் செய்தல் உதடு மென்மையாக இருக்கும். 

pixabay

  • உதடுகளில் (lips) எண்ணெய் சுரப்பிகள் இல்லாததால் உதடுகள் வறட்சியடையும். அதிகமாக வறட்சியானால் வெடிப்பு ஏற்படும். எனவே உதட்டில் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் தடவ வேண்டும். 
  • தேங்காய் எண்ணெய்யை ஒரு ஸ்பூன் எடுத்துக்கொண்டு அதில் ஐந்து சொட்டு அளவுக்கு ஆலிவ் எண்ணெய்யை ஊற்ற வேண்டும். பின்னர் அதை லேசாக சூடுபடுத்தி காட்டன் துணியில் நனைத்து அதை உதட்டில் தேய்க்க வேண்டும். இதை வாரத்துக்கு இரு முறை செய்தால் உதடுகள் வெடிக்காமல் இருக்கும்.
  • எப்பொழுதும் ஈரப்பதத்துடன் இருக்க நீர்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளுங்கள். ‘பி2’ சத்துள்ள காய்கறிகள், உணவுகளை போதுமான அளவு சாப்பிட வேண்டும்.

மருத்துவ குணங்கள் நிறைந்த வெந்தயத்தின் நன்மைகள், தீமைகள் மற்றும் பயன்படுத்தும் விதம்!

  • கிரீன் டீ பேக்கை எடுத்து சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மெதுவாக அந்த டீ பேக்கால் உதட்டை தேய்த்து உலர்ந்த காட்டன் துணியால் உதடுகளைத் துடைக்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இப்படி செய்வதால் இயல்பான பிங்க் கலரில் உதடுகள் மாறிவிடும்.

ADVERTISEMENT

pixabay

  • சருமத்தின் ஈரப் பதத்தை பராமரிப்பதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். 
  • சுத்தமான பன்னீரை பஞ்சில் நனைத்து, உதட்டின் மீது அரை மணி நேரம் வைக்கவும். இதனை தொடர்ந்து செய்து வர வெடிப்புகள் குணமாகும். கருப்பு நிறம் மறைந்து இயற்கையான நிறம் மீட்கப்படும்.
  • ஓட்ஸை தண்ணீரில் ஊற வைத்து பின்னர் கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும். கொதித்தவுடன் இந்த தண்ணீரில் சிறிதளவு தேனை சேர்த்துக் கொள்ளவும். இந்த கலவையை உதட்டில் பேக்காக பயன்படுத்தினால் இறந்த செல்கள் நீங்கி உதடுகள் பொழிவு பெறும்.

இந்த மழைக்காலத்தில் உங்கள் வழக்கமான மேக்கப் கரையாமல் இருக்க சில ரகசிய டிப்ஸ் !

  • பாதாம் எண்ணெய்யை இரண்டு சொட்டுகள் எடுத்து தினமம் இரவு தூங்குவதற்கு முன்னர் உதடுகளில் (lips) அப்ளை செய்து கொள்ள வேண்டும். காலையில் இதனை கழுவு வந்தால் உதடுகள் மென்மையாகும். 

pixabay

ADVERTISEMENT
  • வைட்டமின் இ கேப்ஸுல்களை வாங்கி தினமும் இரவு தூங்குவதற்கு முன்னர் உதடுகளில் தடவி காய்ந்த பின்னர் கழுவி விடலாம். 
  • ஓட்ஸை தண்ணீரில் ஊற வைத்து பின்னர் கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும். கொதித்தவுடன் இந்த தண்ணீரில் சிறிதளவு தேனை சேர்த்துக் கொள்ளவும். இந்த கலவையை உதட்டில் பேக்காக பயன்படுத்தினால் இறந்த செல்கள் நீங்கி உதடுகள் பொழிவு பெறும். 
  • தினமும் வெண்ணெயை உதட்டில் தடவலாம். இதனால் உதடு வெடிப்பு குணமாவதோடு கூடுதல் மென்மை கிடைக்கும்.
  • கற்றாழை சாற்றுடன் காய்ச்சாத பால் இரண்டு டீஸ்பூன் சேர்த்து தினமும் உதட்டில் அப்ளை செய்ய வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால் உதடுகள் ப்ரெஷாக இருக்கும்.

pixabay

  • உதடுகளை அடிக்கடி எச்சிலால் ஈரப்படுத்தக் கூடாது. அவ்வாறு செய்தால் எச்சிலில் இருக்கும் பாக்டீரியாக்களால் உதட்டில் புண்கள் ஏற்படலாம். மேலும், உதட்டில் உள்ள ஈரப்பதமும் போய்விடும். 
  • உதடுகள் வறண்டதாக தோன்றினால் வாசலின் பயன்படுத்தலாம். இது உதடுகளுக்கு இயற்கையான ஈரப்பதத்தை கொடுத்து மேலும் வறண்டு போகாமல் தடுக்கிறது. 
  • வாய்ப் பகுதியை சுற்றி உதடுகளின் ஓரத்தில் உள்ள புண்கள் மற்றும் கொப்புளங்கள் மறைய வைட்டமின் இ சத்துகள் நிறைந்த சன்ஸ்கிரீன் லோஷனை தடவி வரலாம்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

ADVERTISEMENT
26 Jul 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT