கும்பகோணம் கொஸ்து என்றாலே இதனை ருசித்தவர் நாவில் நீர் ஊறும். இட்லி தோசை சப்பாத்தி மற்றும் சாதம் எதனுடனும் அருமையாக கூட்டு சேரும் இந்த கும்பகோணம் கொஸ்துவை (kumbakonam kosthu) விரும்பாதவர் யாரும் இருக்க மாட்டார்கள்.
அற்புதமான ருசி கொண்ட இந்த கும்பகோணம் கொஸ்து தயாரிப்பது சமையலை நேசிப்பவருக்கு சுலபமாகவே இருக்கும். எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்.
Youtube
தேவையான பொருட்கள்
பாசிப் பருப்பு – 1 கப்
பச்சைப் பயறு – 2 கரண்டி
நிலக்கடலை – 2 கரண்டி
கொள்ளு – 2 கரண்டி
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 4
பச்சை கத்தரிக்காய் – 2
காய்ந்த மிளகாய் – 2
கடுகு – 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிதளவு
சீரகம் – 1/4 ஸ்பூன்
சாம்பார் பொடி,
உப்பு – தேவையான அளவு
Youtube
செய்முறை
கொடுக்கப்பட்ட பயறு வகைகள் அனைத்தையும் முதல் நாளே நீரில் ஊற வைத்து முளைக்க விட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.
இவைகளை குக்கரில் நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
தக்காளி கத்தரிக்காய் வெங்காயம் பச்சைமிளகாய் ஆகியவற்றை பொடிப்பொடியாக நறுக்கி வைக்கவும்.
குக்கரில் வெந்த பருப்புடன் மேலே வெட்டி வைத்த காய்களை சேர்த்து அதனுடன் சாம்பார் பொடி , மஞ்சள் தூள் மற்றும் உப்பை சேர்த்து மீண்டும் ஒரு விசில் வரும் வரை வேக விடுங்கள்.
குக்கரில் வெந்த உடன் அவற்றை மத்து கொண்டு நன்றாக மசித்துக் கொள்ளுங்கள்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் காய்ந்த மிளகாய் கருவேப்பிலை போட்டு தாளிதம் செய்து அதனை மசித்த பருப்பு கலவையில் கொட்டி விடுங்கள்.
நாவில் நீர் ஊரும் அற்புத ருசி கொண்ட கும்பகோணம் கொஸ்து தயார்.
Youtube
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!அறிமுகமாகிறது
#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!