logo
ADVERTISEMENT
home / Bigg Boss
ஓபன் நாமினேஷனால் கதிகலங்கிய பிக் பாஸ் இல்லம் : கவின் – வனிதா இடையே பயங்கர மோதல்!

ஓபன் நாமினேஷனால் கதிகலங்கிய பிக் பாஸ் இல்லம் : கவின் – வனிதா இடையே பயங்கர மோதல்!

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 70 நாட்களை தாண்டு நடைபெற்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் நாமினேஷன் இருக்காது என கமலஹாசன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இது போட்டியாளர்களுக்கு தெரியாத நிலையில் யார் வெளியேறப்போவது என காத்திருந்தனர். ஆனால் இந்த வாரம் நாமினேஷன் இல்லை என கமலஹாசன் தெரிவித்ததை தொடர்ந்து போட்டியாளர்கள் நிம்மதி அடைந்தனர். எலிமினேஷன் இல்லாததால் வீக் என்ட் எபிசோட்டில் விறுவிறுப்பை கூட்டுவதற்காக பார்வையாளர்களை வைத்து போட்டியாளர்களிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. 

twitter

போட்டியாளர்களும் தங்கள் மனதில் பட்டதை வெளிப்படையாக கேட்டனர். அப்போது லாஸ்லியாவிடம் பார்வையாளர்கள், சேரன், கவின் குறித்து அதிகம் கேட்டனர். அதற்கு வழக்கம் போல லாஸ்லியாவும், நான் குழப்பத்துல இருக்கேன், எனக்கு எது நிஜம் எது பொய்னு புரியலை என பதிலளித்தார். சனிக்கிழமைகளில் சிக்கன் சாப்பாடு வரும் போது தனக்காக காத்திருக்காமல் சேரன் முன்கூட்டியே சாப்பிட்டு விட்டதாக பெரிய குற்றச்சாட்டை லாஸ்லியா கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சேரன், தனது மகளாக நினைத்த லாஸ்லியா இப்படி தன்னைபற்றிப் பேசியதால் கவலை அடைந்தார். 

ADVERTISEMENT

இதுகுறித்து தெளிவுபடுத்திய கமல், லாஸ்லியாவை பார்த்து ரைட்டா, தப்பா விளையாட இது பாண்டி இல்ல என்று தெரிவித்துள்ளார். சேரன் அப்பா என்ன சொல்வார், தர்ஷன் அண்ணன் என்ன சொல்வார், கவின் தம்பி என்ன சொல்வார், நான் என் தம்பியை சொன்னேன் என்று கமல், லாஸ்லியாவை கலாய்த்தார். சஞ்சலமாக உள்ளது யார் கையையாவது பிடிக்க வேண்டும் என்றால் என் போன்று செய்யுங்கள் என்று தன் ஒரு கை மீது மற்றொரு கையை வைத்தார் கமல். இதனை தொடர்ந்து நேற்றைய நிகழ்ச்சியில் லாஸ்லியாவும், சேரனும் பேசிக் கொண்டிருந்தனர்.

என்னமோ இவர் பெத்து வளர்த்த மாதிரி..ஆத்திரத்தில் கவின்.. அதிர்ச்சியில் சேரன்..

twitter

ADVERTISEMENT

அப்போது எனக்கு அவன் மேல ஃபீலிங்ஸ் இருக்கு, அதான் உங்கக் கிட்ட பேசல சாரி என லாஸ்லியா. அதற்கு இந்த இடத்துல உங்க அப்பா இருந்தாருன்னா, அவர அவாய்ட் பண்ணிட்டு உன்னால கவின் கிட்ட பேச முடியுமா? என லாஜிக்கான கேள்வியை கேட்டார் சேரன். சேரன் சொன்ன அட்வைஸைக் கேட்ட லாஸ்லியா, தான் ஏதோ தவறு செய்து கொண்டிருப்பதை உணர்ந்தார். பின்னர் இப்போது நீ கேமை விளையாடு மற்ற விஷயங்களை வெளியில் போய் பார்த்துக் கொள்ளலாம் என்றார் சேரன். அதற்கு உங்களை கஷ்டப்படுத்தினால் மன்னித்து விடுங்கள் என லாஸ்லியா, சேரனிடம் கூறினார். 

இதனை தொடர்ந்து இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைப்பெற்றது. ஓபன் நாமினேஷன் முறையில் அனைவரும் நேரிடையாக நோமின்டே செய்ய வேண்டும் என பிக் பாஸ் உத்தரவிட்டார். இதில் போட்டியாளர்கள் அனைவரும் லாஸ்லியா,  கவினை மாறி மாறி நாமினேட் செய்தனர். கவினின் முறை வந்த போது, “நான் சேரனையும், ஷெரினையும் நாமினேட் பண்றேன். அவங்க நிறைய வெற்றிகளை பாத்துட்டாங்க. அதனால மத்தவங்களுக்கு வழி விடணும்ன்னு நினைக்கிறேன் என்கிறார். அப்போது குறுக்கிட்ட வனிதா, இதையெல்லாம் நீங்க காரணமா சொல்ல முடியாது.

பிக் பாஸில் தனது முன்னாள் காதல் குறித்து உருக்கமாக பேசிய கவின் : மவுனத்தில் லாஸ்லியா!

ADVERTISEMENT

twitter

உண்மையான காரணத்தை சொல்லுங்க என்றார். அதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. இங்க என்ன எமோஷனல் ட்ராமா பண்றீங்களா? அடுத்தவங்கள ஜெயிக்க வைக்க நீங்க இங்க வரல. உங்களுக்கு ஜெயிக்க இஷ்டம் இல்லன்னா, வெளில போங்க, அதுக்காங்க மத்தவங்களுக்கு விட்டுக் கொடுக்குறேன்னு சொல்லாதீங்க” என வனிதா கூறினார். இங்க விட்டுக் கொடுக்க தான் வந்தியா கவின்? அப்படினா மத்தவங்களுக்கு ஜெயிக்க திறன் இல்ல அதனால நீ விட்டுக் கொடுக்குறியா?. கவின், லாஸ்லியா இந்த நிகழ்ச்சியோட போக்கையே மாத்திட்டீங்க. 

அவங்க அவங்களுக்காக போராடனும். மத்தவங்க விட்டுக் கொடுத்தா, அதுக்கு பேர் வெற்றியா? எல்லாரும் போட்டி போடுவோம் என வனிதா (vanitha) ஆவேசமாக தெரிவித்தார். உங்களால் தான் சாக்ஷி வெளியே சென்றார் என வனிதா (vanitha) கூற, கோவமான கவின் இப்போதே கதவை திறக்க சொல்லுங்கள் நான் வெளியே செல்கின்றேன் என கூறினார். மேலும் நாமினேஷன் செய்து மக்களால் வெளியேற்றப்பட்ட நீங்கள் மீண்டும் ஏன் இங்கு வந்தீர்கள் என கவின், வனிதாவை பார்த்து கேட்டார்.

முதல்முறையாக நாமினேஷனில் இடம்பெற்றுள்ள ஷெரின் : லாஸ்லியாவை வம்புக்கு இழுத்த வனிதா!

ADVERTISEMENT

twitter

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியாக இந்த வார நாமினேஷனில் லாஸ்லியா, கவின், முகென், ஷெரின் மற்றும் சேரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.  இதனிடையே கவின் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்து வரும் நிலையிலும் அவருக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் இருந்து வருகின்றனர். “#opendoorforkavin ” என்று கவின் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 

 

ADVERTISEMENT

இந்நிலையில் இன்று காலை வெளியாகியுள்ள முதல் புரோமோவில் வனிதா (vanitha) கோவமாக மைக்கை கழற்றிவிட்டு நான் இந்த பணியை செய்யமாட்டேன், பிக் பாஸ் விதிமுறைகள் குறித்து விளக்கம் தேவை என கூறுகிறார். சேரன் மற்றும் ஷேரினை, கவின் நாமினேட் செய்த விவகாரம் குறித்து வனிதா பேசுகிறார். மனிதாபிமானம் இல்லாமல் கவின் நாமினேட் செய்துள்ளதாக வனிதா கூற, மறுபுறம் கவின், தர்ஷனை குறிப்பிட்டு அவனது பிரச்சனையும், மற்றவர்கள் பிரச்னையும் ஒன்னா என கேட்கிறார். அதற்கு சாண்டி வனிதா லூசு மாறி பேசுறாங்க, மற்றவர்களின் எமோஷன் அவருக்கு தெரியவில்லை என கூறுகிறார். நாமினேஷன் பிரச்சனைகள் இன்றும் தொடர்வது போல புரோமோவில் தெரிகிறது.

இரண்டாவது புரோமோவில் அபிராமி, சாக்ஷி மற்றும் மோகன் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வருவது காட்டப்பட்டுள்ளது. கிராமத்து பெண் போல தாவணி பாவடையில் சாக்‌ஷி வந்துள்ளார். அவரது ஷெரின் கட்டியணைத்து வரவழைத்தார். அதேபோல அபிராமியை லாஸ்லியாவும், மோகனை சாண்டி குழுவினரும் வரவேற்கின்றனர். அப்போது உள்ளே நுழையும் கவின் அவர்களை அதிர்ச்சியாக பார்க்கிறார். பின்னர் ஷெரினிடம், சாக்ஷி இந்த போட்டியில் நீ ஜெயிக்க வேண்டும் என கூறுகிறார். அதற்கு எப்படி என ஷெரின் கேட்க, பேசலாம் என சாக்ஷி பதிலளிப்பதோடு புரோமோ முடிகிறது. இனி என்ன நடக்கப்போகிறது என்பது இன்று இரவு தெரியும்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

ADVERTISEMENT
02 Sep 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT