KhayalRakhna By Philips
  Power Women List
  Entertainment

  கர்மா இஸ் எ பூமராங்.. சாக்ஷியை கதற வைத்த கவின்.. கவினால் அவமானப்பட்டு கலங்கிய சாண்டி..

  Deepa LakshmiDeepa Lakshmi  |  Sep 12, 2019
  கர்மா இஸ் எ பூமராங்.. சாக்ஷியை கதற வைத்த கவின்.. கவினால் அவமானப்பட்டு கலங்கிய சாண்டி..

  பிக் பாஸ் மூன்றாவது சீசனில் நேர்மையான போட்டியாளர்கள் அதிகமாக இருப்பதால் இந்த நிமிடம் அந்த நிகழ்ச்சி நன்றாகவே போய்க்கொண்டிருக்கிறது.

  பிக் பாஸ் என்பது பிஸிக்கல் கேம் என்று போட்டியாளர்களில் பலர் நினைத்துக் கொண்டிருக்க இது உளவியல் ரீதியான போட்டியும் கூட என்பதை நன்றாக உணர்ந்து தன்னுடைய பங்கை ஆரம்பம் முதல் இப்போது வரை சிறப்பாக கொடுத்து வருபவர் சேரன் மட்டுமே. அதற்கு அடுத்த இடத்தில் தர்ஷன் இருக்கிறார்.

  கவின் பற்றி பல இடங்களில் பல ஊடகங்களில் தொடர்ந்து பேசிக்கொண்டே தான் இருக்கிறார்கள். அது எதுவும் கவின் காதுகளுக்கு இன்னும் எட்டவில்லை. அதே சமயம் நேற்று ஒரே ஒரு நபர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த உடன் அவரது கோபத்தைப் பார்த்து நடுங்கிப் போனார் கவின்.

  Hotstar

  எப்படியும் முதலில் பெண்ணை மனம் மாற வைத்து சம்மதிக்க வைத்து விட்டால் அதன் பின்னர் அவர்கள் அப்பா அம்மாவை டீல் செய்வது சுலபம் என்பது அவரது கணக்காக இருந்தது. அதன்படிதான் சாக்ஷி அப்பா அம்மாவிடம் நான் சாக்ஷியை பத்திரமாக பார்த்துக் கொள்கிறேன் என்று கேமரா முன்னிலையில் கூறினார்.

  அதைப் போலவே லாஸ்லியா கிட்டத்தட்ட 75 சதவிகிதம் கவினின் கணக்குக்கு ஒத்து வந்து விட மாதிரி அப்பா சேரனின் வார்த்தைகளை டிவிஸ்ட் செய்தே லாஸ்லியாவை தனது பக்கம் திருப்பி வந்தார் கவின். ஆனால் நேற்று நிஜ அப்பா நேரில் வரப்போவதை கவின் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை

  லாஸ்லியா அம்மா மகளை பார்த்து அழுதபடியே இருந்ததிலேயே கவினுக்குத் தனது (போலி) காதல் ஜெயிக்கும் என்கிற நம்பிக்கை போயிருந்தது. என்ன சொல்லி நீ இங்கே வந்தாய் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய் நீ உன் விளையாட்டை மட்டும் விளையாடி விட்டு வா என்று லாஸ்லியா அம்மா லாஸ்லியாவிடம் பேசியதை கேட்டதுமே கவின் தன்னுடைய காதல் கணக்குகள் தவறான விடையைத் தந்திருப்பதை உணர்ந்து கொண்டார்.

   

   

  Hotstar

  அதே நேரம் லாஸ்லியா அப்பாவின் மாஸ் எண்ட்ரியால் கவின் மொத்தமாகவே ஆடிப் போய் விட்டார். கவினின் யாரா இருந்தா எனக்கென்ன என்கிற ஆட்டிட்யூட் எல்லாம் மாறிப் போய் இருந்தது. உடைந்து தேம்பி தேம்பி இனி தனது காதல் கைகூடாது என்று அழ ஆரம்பித்தார்.

  அழும்போதும் கூட இவங்கப்பா இப்படினு அவ முன்னாடியே சொல்லி இருந்தா இவ்வளவு நாள் நான் பீலிங்ஸ் வைக்காம இருந்துருப்பனே என்றுதான் அழுகிறார் கவின். ஆக தான் லாஸ்லியாவை காதலிப்பது உண்மையாக இருந்திருந்தால் என் காதல் முறிந்தது என்றுதான் அழுதிருக்க வேண்டும். அல்லது என்னால் லாஸ்லியாவுக்கு இவ்வளவு வேதனை என்று அழுத்திருக்கலாம். அதை விட்டு விட்டு என்னுடைய பீலிங்ஸ் நான் வைக்காம இருந்திருப்பனே என்றுதான் அழுகிறார்.

  அதைப் பார்க்கும்போது ஒன்றுதான் தோன்றுகிறது.. கர்மா இஸ் எ பூமராங் (karma is a boomerang) கவின் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ஆள் மாத்தி ஆள் கவின் தனது காதலை மாற்றிக் கொண்டே போவார் என்பதை அறியாத சாக்ஷியும் கவினின் தேன் இனிய வார்த்தைகளால் தன்னுடைய மனதை கொடுத்தவர்தான்.

   

  Hotstar

  சாக்ஷி தன்னை நேசிப்பதும் தான் சாக்ஷி மீது பொஸசிவ் ஆவதும் இரண்டையும் தெரிந்தே செய்த கவின் ஒரு நாள் சாக்ஷியை விட லாஸ்லியா பெட்டர் என முடிவெடுத்து சாக்ஷி கண்ணெதிரிலேயே லாஸ்லியா உடன் கை கோர்த்து நடந்தார். சாக்ஷியின் காதலை நடிப்பு என்றும் போலித்தனமானது என்றும் வீண் பழி போட்டார் கவின்.

  அப்போது இதே போல சாக்ஷி உடைந்து போனார். அழுது கொண்டே இருந்தார். கவின் தன்னுடைய ஆள் மாற்றி ஆள் காதலிக்கும் விஷயத்தைப் பற்றி முன்பே சாக்ஷியிடம் சொல்லியிருந்தால் சாக்ஷியும் அன்று அழுதிருக்க வேண்டி வந்திருக்காது.

  சாக்ஷியை அழ வைத்த 50 நாட்களுக்குள்ளாகவே கவினுக்கு அதே போன்றதொரு கண்ணீரைக் கொடுத்திருக்கிறது பிக் பாஸ் வீடு. எந்த சாக்ஷியின் காதலை ரகசியமாக ஏற்றுக் கொண்டு பகிரங்கமாக மறுத்து சாக்ஷி காதலை அவமரியாதை செய்தாரோ அதே காதலால் லாஸ்லியா அப்பாவின் கோபத்துக்கு காரணமாகி இப்படி நடக்கும்னு முன்னாடியே தெரிஞ்சுருந்தா நான் பீலிங்ஸ் வச்சுருக்கவே மாட்டேனே என்று தற்போது அழுது கொண்டிருக்கிறார்.

  கர்மா என்பது சும்மா கிடையாது அதன் வீர்யத்தை பொறுத்து உடனுக்குடன் கூட திரும்பி வந்து தாக்கும் எனக் கவின் விஷயத்தைப் பார்க்கும்போது தோன்றுகிறது. ஏற்கனவே சாக்ஷியை தவறாக பேச பேச அவ பொய்யா இருக்கறதால தான் வெளிய போனா நான் உண்மையா இருக்கறதாலதான் உள்ள இருக்கேன் என்று லாஸ்லியாவிடம் தனியாக ஒரு தத்துவத்தை கூறி அந்த இளம் பெண்ணை நம்ப வைத்துக் கொண்டிருந்தார்.

  இதைப் பார்க்கும்போது நிச்சயம் சாக்ஷி மனம் உடைந்துதான் போயிருக்கும். உன்னையா நான் நேசித்தேன் என வேதனைப்பட்டிருப்பார். திரும்ப திரும்ப ஒரு பெண்ணின் கண்ணீருக்கு காரணமான கவின் தன்னுடைய குடும்பத்தை சிறைக்கு தள்ளும் அளவிற்கு அந்த கண்ணீரின் வலிமை இருந்திருக்கும் என்பதை இப்போது உணர மாட்டார். வெளியில் வந்த பின்னரே அதன் வலி அவருக்கு புரியத் தொடங்கும்.

   

  Hotstar

  அதனைப் போலவே பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரையும் சகட்டுமேனிக்கு வாய்க்கு வந்தபடியெல்லாம் பாடி மனம் நோகடித்துக் கொண்டிருந்த நண்பர்கள் சாண்டி மற்றும் கவின். மற்றவர் உருவ ரீதியாக குள்ளம், காக்கா என இட்டுக் கட்டி பாடிய முதல் ஆள் கவின். உடன் சேர்ந்து ஜாலி செய்தவர் சாண்டி.

  இதனை சேரன் மதுமிதா போன்றோர் பல விதமாக சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. சாண்டி மீது இருந்த பிரியத்தால் பிக் பாஸ் அந்தப் பாடல்களை இன்னும் ஊக்குவிக்க கள் குடித்த குரங்கான கவின் குழு சந்தோஷமாக மற்றவரை கேலி செய்து மனம் நோக பாடிக்கொண்டிருந்தது.

  ஆனால் எப்போது லாஸ்லியா உடன் கவின் இணைந்து பயணிக்க ஆரம்பித்தாரோ அப்போதே சாண்டி கலாய்க்கும் போது கலாய்க்காதீங்க என்றார். இதனை ஷாக்காக எடுத்துக் கொள்ளாமல் வழக்கம் போல ஜோக்காக எடுத்துக் கொண்ட சாண்டி அன்று அதனை விட்டு விட்டார்.

   

  Hotstar

  மற்றொரு முறை லாஸ்லியா வீட்டை சுத்தம் செய்து கொண்டிருக்கும்போது சாண்டி வழக்கம் போல கிண்டல் அடிக்க உடனே அவ ஒழுங்காதான் வேலை செய்யறா என்று முணங்கினார் கவின். நேற்று முன்தினம் வீட்டின் கேப்டனாக மாறிய லாஸ்லியாவை இதுக்கு முன்னாடி நீ இப்படி காஃபி குடிச்ச உடனே வேலைக்கு கிளம்பி போனதில்லையே எங்களை மட்டும் ஏன் அப்படி சொல்ற என்று சாண்டி விளையாட்டாக கேட்க கவினுக்கு கோபம் வந்து அவ சரியாதான் இருக்கா நீ நோண்டாத என்று கூறுகிறார். சாண்டிக்கு மனம் கஷ்டப்பட்டாலும் காட்டிக் கொள்ளவில்லை.

  நேற்று லாஸ்லியா அப்பா வந்த உடன் உடைந்து கிடந்த கவின் மனநிலையை மாற்ற சாண்டி ஏதோ சொல்லியிருக்கிறார் போல.. அதனை புரிந்து கொள்ளாமல் கவின் இது ஏன் இப்படி புரிஞ்சுக்காம பேசுது என்று சாண்டி இடமே அவரை நேரடியாக அது இது என்று கூறுகிறார்.

   

  Hotstar

  இதனால் மனம் உடைந்த சாண்டி பாத்ரூமிற்குள் சென்று அழுது விட்டு கவினை கண்டு கொள்ளாமல் வெளியே செல்கிறார். கண்ணீரை கஷ்டப்பட்டு அடக்கியபடி மனதை நிலைப்படுத்தி விட்டு கவின் தனியாக இருப்பதை உணர்ந்து இப்போது எதையும் காட்டிக் கொள்ளாமல் உள்ள வா கவின் என்று உள்ளே அழைத்து போகிறார்.

  கவின் நண்பனான சாண்டிக்கே இந்த நிலைமையா என்று யோசிக்கும்போது மற்றவர்களை பற்றி நினைக்கவே முடியவில்லை. தன்னுடைய ரியாலிட்டியை வெளியில் காட்டிக் கொள்ளாமல் ரியல் லைஃப்பிலும் நடிக்கும் பலருக்கு இதுதான் நிஜ முகம் வெளியாகும் தருணமாக இருக்கும்.

  கவின் நிச்சயமாக ரொம்ப நாளைக்கு உங்கள் பொய்களை மூடி மறைக்க முடியாது . ஒரு நாள் அவை வெளியே வந்தே தீரும். அதற்கான பலனை எந்த இதயத்தை எப்படி நீங்கள் நோக செய்தீர்களோ அதே போலவே உங்கள் இதயமும் நொறுங்கி போகும் வண்ணம் நீங்கள் அனுபவிக்க வேண்டி வரும்.

  இதற்கு கர்மா என்று பெயர்.

  Hotstar

  POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

  அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.