KhayalRakhna By Philips
  Power Women List
  Celebrity Life

  சிங்கப்பூர் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் நடிகை காஜல் அகர்வாலுக்கு மெழுகுச் சிலை!

  Swathi SubramanianSwathi Subramanian  |  Dec 17, 2019
  சிங்கப்பூர் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் நடிகை காஜல் அகர்வாலுக்கு மெழுகுச் சிலை!

  சிங்கப்பூரில் அமைந்துள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் நடிகை காஜல் அகர்வாலுக்கு மெழுகுச்சிலை திறக்கப்பட உள்ளது. நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களில் முன்னனி நடிகையாக வலம் வருகிறார். 

  தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார். ஹாலிவுட் முதல் பாலிவுட் வரையில் பல முன்னணி நட்சத்திரங்கள், பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் மெழுகுச்சிலைகள் அமைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளனர். 

  பாலிவுட் நடிகைகளில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி, அனுஷ்கா சர்மா, பிரியங்கா சோப்ரா, முன்னனி நடிகர்களான ஷாருக்கான், நடிகர் மகேஷ் பாபு ஆகியோரின் சிலைகளும் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. 

  twitter

  இந்நிலையில் தற்போது முதன்முறையாக தென்னிந்திய சினிமா நடிகைகளில் நடிகை காஜல் அகர்வாலின் மெழுகு சிலை சிங்கப்பூரில் வைக்கப்பட இருக்கிறது. இதற்கான அளவீடுகள் அளக்கும் பணியில் கலந்து கொண்ட காஜல் அதுகுறித்து மகிழ்ச்சியுடன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

  மேலும் படிக்க – புஷ்பவனம் குப்புசாமி மகளை காணவில்லை என புகார்..யாரும் கடத்தவில்லை என பேஸ்புக்கில் பதிவு!

  அதில் சிறு வயதில் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்திற்கு சென்றது தற்போது ஞாபக வருகிறது. அங்கு பல சிலைகளை பார்த்து வியந்திருக்கிறேன். தற்போது அதில் நானும் ஒருவராக இருக்க போவதை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது.

  ஒரு புதிய சகாப்தத்தை நல்ல நிகழ்வுடன் ஆரம்பிக்க இருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து பேட்டியளித்த காஜல், கடந்த மார்ச் மாதமே  சிங்கப்பூர் அருங்காட்சியத்தில் சிலை வைக்க இருப்பதாக தகவல் எனக்குக் கிடைத்தது. 

  ஆனாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக நான் அமைதி காத்தேன். அதன் பின் ஒரு மாதம் கழித்து என் உடலை அளவெடுக்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கினேன். அடுத்த வருடம்  எனது மெழுகு சிலை திறக்கப்பட உள்ளது என கூறியுள்ளார்.

  மேலும்  ஹைதராபாத்தில் நடைபெற்ற படப்பிடிப்பின் போதுதான் இது பற்றிய தகவலை நான் அறிந்தேன். என் பெற்றோரும் எனது சகோதரியும் இதற்கான தகவலை தொலைப்பேசியில் கூறினார்கள். 

  twitter

   

  நான் சிறு குழந்தையாக இருக்கும்போது லண்டனில் உள்ள மேடம் துசாட்ஸ் மெழுகு சிலை அருங்காட்சியத்திற்கு சென்றிருக்கிறேன். இப்போது அடுத்த வருடம் என் சிலைக்காக சிங்கப்பூருக்கு செல்ல இருக்கிறேன் என மகிழ்ச்சியாக தெரிவித்தார். 

  மேலும் படிக்க – பனிமழை பொழியும் மார்கழி மாதத்தின் சிறப்பம்சங்களை அறிவோம் வாருங்கள்!

  இந்தச் சிலை அமைக்கப்பட்ட இருப்பதாக அறிவிப்பு வெளியானபோது ஆச்சரியமாக இருந்தது. பல துறை ஆளுமைகள் இருக்கும் அந்த மெழுகு சிலை அரங்கை நானும் அவர்களுடன் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியான ஒரு உணர்வு என்று குறிப்பிட்டுள்ளார்.

  என்ன மாதிரியான சிலை அது? என்ற கேள்விக்கு இப்போதைக்கு வெளிப்படையாக சொல்ல முடியாது. சிலைக்கான வடிவத்தை நானே தேர்தெடுத்தேன். 

   

  twitter

  என்னை அளவெடுத்த ஒருநாள் முழுவதும் எனக்குப் பிடிக்கும்படி இருந்தது என கூறியுள்ளார். நடிகை காஜல் அகர்வாலின் மெழுகுச்சிலை வருகிற 2020ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி திறப்பு விழா காண உள்ளது. 

  இதற்காக நடைபெறும் விழாவில் காஜல் கலந்து கொண்டு இச்சிலையை நடிகை காஜல் அகர்வாலே திறந்து வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள்  நடிகை காஜல் அகர்வாலுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

  மேலும் படிக்க – டியூசன் எடுத்து குடும்பத்தை காப்பாற்றும் அரசு பள்ளி மாணவி நாசாவுக்கு செல்ல தேர்வு!

  #POPxoLucky2020 – ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!