logo
ADVERTISEMENT
home / Celebrations
” வெற்றி நமக்கு அசால்ட்டு ” வேற லெவலில் விளையாடிய CSK ! பரிதாபத்தில் RCB ! IPL 2019

” வெற்றி நமக்கு அசால்ட்டு ” வேற லெவலில் விளையாடிய CSK ! பரிதாபத்தில் RCB ! IPL 2019

எல்லோரும் எதிர்பார்த்த ஐபிஎல் இன்று சென்னையில் CSK அணியின் மாஸ் வெற்றியில் இருந்து ஆரம்பித்தது!

டாசில் வென்ற CSK அணியின் தலைவர் தோனி நமது விறுவிறுப்பான சேசிங் ஸ்டைல் பார்வையாளருக்கு சுவாரசியம் கொடுக்கும் என்று நினைத்தாரோ என்னவோ முதலில் பந்து வீச்சை தேர்ந்தேடுத்தார்.

ஆரம்ப பேட்ஸ்மேன்களாக விராட் கோலியும் பார்திவும் களமிறங்கினார்கள். முதல் பவுண்டரியை பார்திவ் அடிக்க RCB ரசிகர்கள் உற்சாகமானார்கள். ஆனால் நான்காவது ஓவரில் ஹர்பஜனின் ஸ்பின் பந்து வீச்சில் கோலி அடித்த பால் ஜடேஜாவின் கைக்கு கிடைத்ததால் கோலியின் விக்கெட் விழுந்தது.

ADVERTISEMENT

கை மாறிய ஆட்டம்

அதன் பின்னர் இன்றைய ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் கையில் இருந்தது. சில நிமிட இடைவெளிகளில் அடுத்தடுத்து RCB வீரர்கள் அவுட் ஆகினர்.

ஹர்பஜனின் தமிழ் டிவீட்களைப் போலவே அவரது ஆட்டமும் துறுதுறுப்பாகவே இருந்தது. 2 ஓவர்களில் இரண்டு விக்கட் எடுத்தார். (விராட் மற்றும் மொயீன்) அதன் பின்னர் களமிறங்கிய டிவில்லியர்ஸ்சும் ஒன்பது ரன்களில் ஹர்பஜனின் விக்கெட் எண்ணிக்கையை மூன்றாக உயர்த்திக் கொடுத்தார்.

அடுத்த பேட்ஸ்மேன் ஹெட்மயர் ரன் அவுட்டாகி சொதப்பினார். தோனியின் ஸ்டம்பிங்கிற்காக காத்து கிடந்தவர்களுக்கு இது ஒரு முக்கியமான தருணமாக இருந்தது.

ADVERTISEMENT

ரிவியூ தருணங்கள்

ஆறாவது விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தினார். முதலில் அம்பயர் நாட் அவுட் சொல்லிவிட மிக கூலாக ரெவியூ கேட்டார் நம்ம கூல் கேப்டன் தோனி. கண்டிப்பாக அவுட் தான் என்கிற நம்பிக்கை அவருக்கு இருந்தது வீணாகவில்லை அவுட்டானார் சிவம் துபே (2 ரன்ஸ் )

இந்த விக்கெட்டுக்கு பின்னர் இம்ரான் தாஹிர் மேலும் இரண்டு விக்கெட் எடுத்து தனது எண்ணைக்கையை மூன்றாக மாற்றினார். (நவதீப் சைனி (2) யுவேந்திரா சாஹல் (2) )

ADVERTISEMENT

இறுதி விக்கெட்டை ஜடேஜா அசத்தலாக போல்ட் செய்து கைப்பற்றினார். உமேஷ் யாதவ் (1)

இப்படியாக 5 2 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்கிற நிலையில் CSK விற்கு விட்டுக் கொடுத்தது RCB.

பவுலிங்கில் சமாளித்த RCB

ADVERTISEMENT

70 ரங்களுக்கு ஆல் அவுட் ஆன கோலி அணி இரண்டாம் பாதியில் கொஞ்சம் பரவாயில்லை என்கிற அளவுக்கு பவுலிங் செய்தது.

ஸ்பின் பவுலில் தடுமாறிய வாட்சன் ரன்கள் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். அம்பதி ராயுடுவும் ரெய்னாவும் நின்று நிதானமாக ஆடினார்கள். அதுதான் எக்கச்சக்க பால்கள் மிச்சம் இருக்கின்றனவே !

சுரேஷ் ரெய்னா ஐபிஎல்லில் தனது 5000மாவது ரன்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் எடுத்திருக்கிறார் இன்று எடுத்து சாதனை செய்தார்.

அம்பதி ராயுடுவும் (28runs /42 balls) சுரேஷ் ரெய்னாவும் (19runs / 21 balls) அவுட்டானார்கள். தோனியின் என்ட்ரிக்காக காத்திருக்கையில் ஜடேஜா மற்றும் ஜாதவ் இருவரும் இந்த மேட்சை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

ADVERTISEMENT

கொஞ்சம் ஏமாற்றம் : நிறைய சந்தோஷம் !

இதில் தோனி ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் என்றாலும் தல’யின் தலைமைக்கு கீழ்தான் இந்த அசால்டான வெற்றி கிடைத்திருக்கிறது என்று கொண்டாடினர்.

ஸ்டேடியம் முழுக்க CSK ரசிகர்களின் மஞ்சள்தான் வியாபித்துக் கிடந்தது. இறுதியாக ஐ பி எல் லின் முதல் போட்டியில் சொந்த களத்தில் வெற்றி கண்டது சென்னை சூப்பர் கிங்ஸ் செல்லமாக CSK .

ADVERTISEMENT

 

மஞ்சள் அலையில் மிதந்த சென்னை ஸ்டேடியம் !

 

ADVERTISEMENT

 

படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் ட்விட்டர்

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

ADVERTISEMENT

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

 

 

23 Mar 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT