ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா (independance day) கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி என்பது ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும் மறக்க முடியாத தினமாக கருதப்படுகிறது. அந்நாள் நம்முடைய புதிய தேசத்தின் உதய நாள் என்றே கூறலாம். ஏனென்றால் இந்தியாவின் சுதந்திரம் என்பது நூற்றுக்கணக்கான ஆன்மாக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான புரட்சியாளர்கள் மற்றும் தலைவர்களின் வெற்றி என்று பெருமையுடன் தலைநிமிர்ந்து சொல்லலாம்.
ரக்ஷா பந்தனுக்கு சகோதரி மற்றும் சகோதரனுக்கு சிறந்த பரிசுகளை தேர்வு செய்ய சில குறிப்புகள்!
நமது தாய்நாடான இந்தியா சுதந்திரமடைந்து சுமார் அரை நூற்றாண்டுகளையும் கடந்து நாம் சுதந்திரமாக நமது தாய்மண்ணில் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். அதற்கு முதன்முதல் காரணம் நமது தேசிய தலைவர்களும், போராட்ட வீரர்களும். சுதந்திரம் என்ற ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு தமது இன்னுயிரையும் துறந்த மகான்களின் தியாக உள்ளங்களையும், அவர்கள் போராடி பெற்றுத் தந்த சுதந்திரத்தை அந்நாளில் நாம் களிப்புற கொண்டாடுகிறோம்.
‘தீப கற்பம்’ என்றழைக்கப்படும் நமது நாடானது மேற்கே பாகிஸ்தான், கிழக்கே வங்காளதேசம், எனப் பெருவாரியானப் பரப்பளவைக் கொண்டு ஒரே நாடாக இருந்தது. மன்னர்கள் ஆட்சியில் மிகவும் செழிப்பாகவும், பசுமையாகவும் இருந்த நமது நாடு, செல்வ செழிப்பில் உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் சிம்மசொப்பனமாக இருந்தது. தென்னிந்தியாவை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்து, அவர்களது புகழை மேன்மேலும் ஓங்கச் செய்தனர்.
இந்தியா சுதந்திரம் அடைதல்
சுதந்திரத்திற்காக (independance day) பல போராட்டங்களை சந்தித்த நமது தலைவர்கள் இந்தியாவில் மென்மேலும் அடக்குமுறையை ஏற்படுத்தினர். 1947ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி பிரித்தானிய இந்திய கவர்னர் விஸ்கவுண்ட் லூயி மவுண்ட்பேட்டன் அவர்கள் பிரித்தானிய இந்திய பேரரசை மதச்சார்பற்ற இந்தியா என்றும், முஸ்லீம் பாகிஸ்தான் என்றும் பிரித்தளிப்பதாக அறிவித்தார். அதன்படி 1947ம் ஆண்டு ஆகஸ்டு 14ம் தேதி பாகிஸ்தான் தனி தேசமாக பிரிந்து சென்றது.
அம்மனுக்கு உகந்த ஆடி மாத ஸ்பெஷல் ரெசிபிகள் ஈஸியாக செய்யலாம்!
மேலும் இந்தியா 1947ம் ஆண்டு ஆகஸ்டு 15ம் தேதி நள்ளிரவில் சுதந்திர தேசமானது. சுதந்திர இந்தியாவின் பிரதமராக ஜவஹர்லால் நேருவும், துணைப் பிரதமராக சர்தார் வல்லபாய் படேலும் பதவியேற்றனர். அவர்கள் இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட்பேட்டனை அதே பதவியில் தொடரும்படி அழைத்தனர். அவர்களது அழைப்பை ஏற்ற அவரும் சிறிது காலம் பதவியில் இருந்தார்.
பின்னர், 1948ம் ஆண்டு ஜூனில் சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரி அவருக்கு பதிலாக அமர்த்தப்பட்டார். சுதந்திர போராட்ட வீரர்கள் அடைந்த துயரங்களை நாமும், நமது தலைமுறையினரும் நினைவு கூறவும், நமக்கு சுதந்திரமான, நிம்மதியான வாழ்க்கையை கொடுத்தவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் நாம் ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவை (independance day) கொண்டாடி வருகிறோம்.
புற்றுநோய் செல்களை அழித்து உடல் நலத்தை காக்கும் அற்புத உணவுகள்!
காஷ்மீரில் முதன்முறையாக பறக்கவுள்ள மூவர்ணக் கொடி!
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து 72 ஆண்டுகள் கழித்து தான் உண்மையான சுதந்திரம் ஜம்மு காஷ்மீருக்கு கிடைத்துள்ளது. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த பின்னர் பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையே தொடர்ந்து பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் அதிரடி நடவடிக்கையாக மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. இதனால் ஜம்மு காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் லடாக் பகுதி சட்டபேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதனால் வரும் ஆக., 15ம் தேதி கொண்டாடப்படவுள்ள 73வது சுதந்திர தினம் மற்ற மாநிலங்களை போலவே காஷ்மீரிலும் விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கொடியேற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றுகிறார். 73வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒத்திகை நிகழ்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நாமும் சுதந்திர தின விழாவை கொண்டாட தயாராகலாம்!
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.