ஒரு பெண் குழந்தை இந்தப் பூமியில் பிறந்து, வளர்ந்து, பூப்பெய்தி, கல்வி, வேலை என முன்னேறி திருமணத்தை நிறைவு செய்த பின்னர் ஒரு குழந்தைக்கு தாயாகும் போதே தனது பிறப்பின் முழு பரிபூரணத்தை பெறுகிறாள். பிரசவம் பெண்களுக்கு மறுஜென்மம் போன்றது.
பெரும்பாலான பெண்கள் முதல் குழந்தை பிறந்ததுமே, அந்த குழந்தையை கண்ணும் கருத்தாக கவனிப்பதில் முழு கவனத்தையும் செலுத்துகிறார்கள். தங்களது உடலை கவனிக்க மறந்து விடுகிறார்கள். அதுவரை ஸ்லிம் டயட், ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்தும் பெண்கள் கூட குழந்தைபேறுக்கு பின்னர் அவற்றை காற்றில் பறக்க விடுகின்றனர்.
இதனால் தான் பிரச்னை ஆரம்பமாகிறது. தனது உடல் நலத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டியது ஒரு தாயான பெண்ணின் கடமையாகும். பிரசவத்துக்கு பின் பெண்கள் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு விரிவாக காண்போம்.
pixabay
- முதல் பிரசவத்துக்குப் பின்னர் பெண்களின் உடல் பலம் இழக்கிறது. சுகப்பிரசவம் ஆன பெண்களை விட அறுவை சிகிச்சை செய்து பிரசவம் ஆன பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அறுவை சிகிச்சை முறையில் வயிற்றை கிழித்து குழந்தையை வெளியெடுத்து பின்னர் சுமார் ஒரு வார கால அளவிற்கு படுக்கையில் இருக்க வேண்டும். 6 மாதத்திற்கு கடினமான பணியை பார்க்க கூடாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
- சுக பிரசவ (birth) சமயத்தில் அதிகளவு சிரமப்பட்டு தாய் குழந்தையை வெளியேற்றுகிறார். இந்த நேரத்தில் இடுப்பெலும்பு தசையானது அதிகளவு தளர்ந்து பின்னர் குழந்தையை வெளியேற்றும். இதனால் கர்ப்பப்பை இறக்கம் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் கவனம் தேவை.
மேலும் படிக்க – ஆப்பிள் சீடர் வினிகரின் சரும பாதுகாப்பு நன்மைகள் மற்றும் தயாரிக்கும் முறைகள்!
- பிரசவத்திற்கு அணைத்து பெண்களும் சந்திக்கும் பொதுவான பிரச்னை உடல் எடை அதிகரிப்பு. கர்ப்ப காலத்தில் தாய்க்கு சராசரியாக 10 முதல் 12 கிலோ வரை எடை அதிகரிக்கிறது. கர்ப்பத்துக்கு முன் அந்தப் பெண்ணின் எடை எவ்வளவு இருந்தது என்பதை பொருத்து இந்த எடை அதிகரிப்பின் அளவு ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடும்.
- பிரசவத்திற்கு பின்னர் 2,000 – 2,300 கிலோ கலோரி உணவுகளை உட்கொண்டு, வாரத்தில் 3 அல்லது 4 நாட்கள் மிதமான உடற்பயிற்சிகள் செய்து வந்தால் தாய்ப்பால் சுரப்பதில் தடை இல்லாமல் உடல் எடையும் குறைய வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
pixabay
- பிரசவத்துக்குப் பின் வரும் நாட்களில் மிதமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். அதாவது நடைப்பயிற்சி, வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் உள்ள தசைகளை இறுகச்செய்யும் பயிற்சிகள் ஆகியவற்றை செய்யலாம்.
- பிரசவத்துக்குப் பின்னர் உடலில் உள்ள சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை சோதிப்பது அவசியம். பாதிப்பு ஏதேனும் இருந்தால் சரியாகும் வரை சிகிச்கை எடுக்க வேண்டும். தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் உரிய மருந்துகள் எடுத்து கட்டுக்குள் வைக்க வேண்டும்.
- நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், சிறுதானியங்கள், கொழுப்புச்சத்து குறைந்த மீன் மற்றும் கடல் உணவுகள், புரதச்சத்து நிறைந்த கோழிக்கறி, பருப்புகள், முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவை உணவுகளை சாப்பிட வேண்டும்.
pixabay
- குழந்தைக்கு பால் புகட்டிய பின்பு உங்கள் மார்பகங்களில் படிந்திருக்கும் உமிழ்நீரை கழுவ வேண்டும். இறுக்கமான உடைகளை தவிர்த்து கதர் உள்ளாடைகளை அணிவதால் காயவைப்பதற்கு எளிதாகவும் கிருமிகள் வராமலும் இருக்கும்.
- அறுவை சிகிச்சைக்கு (birth) பின் காய்ச்சல் அல்லது உடல் செயல்பாட்டில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் அதிக கவனம் செலுத்த வேண்டும். உடனே மருத்துவரை அணுக வேண்டும். இது அறுவை சிகிச்சைக்கு பின் மேற்கொள்ள வேண்டிய உடல் நல பராமரிப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
மேலும் படிக்க – மினுமினுப்பான தேகத்திற்கு மீன் எண்ணெய் மாத்திரை! ஆரோக்கியம் ப்ளஸ் அழகு கேரண்ட்டி !
- ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் பொதுவாக வயிற்றுப்பகுதி, மார்பகங்கள், தொடைகளில் ஏற்படும். கர்ப்பத்தின்போது சருமம் அதிகம் விரிவடையும்போது அதில் உள்ள கொலாஜன் ஃபைபர் உடைவதால் தோலின் சுருங்கும் தன்மை போய் ஸ்ரெட்ச் மார்க்ஸ் உருவாகிறது. இக்கோடுகள் பிரசவத்திற்கு பின் வெண்ணிறமாய் மாறி சுருங்குகின்றன. தற்போது இதற்கென கிடைக்கும் மருந்துகள் மற்றும் கிரீம்களை பயன்படுத்துங்கள்.
pixabay
- அறுவை சிகிச்சை முறையில் தையல்களால் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். உங்கள் தையல்களும், பிறப்புறுப்பும் சுத்தமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். உங்கள் தையல்களிலும், வடுக்களிலும் இன்பெக்ஷன் வராமல் பராமரிக்க வேண்டும். குறிப்பாக குளிக்க செல்லும் முன்னர் தையல் போட்ட இடங்களில் எண்ணெய் தடவி விட்டு குளித்தால் தண்ணீர் படாது.
- பிரசவத்திற்கு (birth) பின் தாய்மார்களுக்கு சிறுநீர் கோளாறுகள் ஏற்படுவது என்பது பொதுவான ஒன்றாகும். உங்கள் கருப்பையானது சிறுநீர்ப்பை மீது இறங்கிவிடும். இதனால் நீங்கள் இரும்பும்போதும் சிரிக்கும்போதும் சிறுநீர் கசிவு ஏற்படும். இது பல வாரங்களுக்கு பிறகும் இது நீடித்தால் மருத்துவர்களை அணுகவேண்டும்.
மேலும் படிக்க – பெண்களுக்கு இடுப்பு சதை அதிகரிப்பதற்கான காரணங்கள் & குறைப்பதற்கான எளிய வழிமுறைகள்!
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!