logo
ADVERTISEMENT
home / அழகு
நீண்ட பயணத்திற்கு  பிறகு புத்துணர்ச்சியுடன் தோன்றுவது எப்படி?  

நீண்ட பயணத்திற்கு  பிறகு புத்துணர்ச்சியுடன் தோன்றுவது எப்படி?  

நீங்கள் நீண்ட நேரம் பயணம் செய்யும் நபரா? பயணத்திற்கு பிறகு உங்கள்   வறண்ட சருமத்தை எப்படி சரி செய்வது என்று யோசிக்கிறீர்களா? உங்கள் அலுவலக வேலைக்காகவோ அல்லது வகேஷன் சமயங்களில் நீண்ட நேரம் பயணம் செய்த  பிறகு, உங்கள் பயண இலக்கில் இறங்கும் முன், நொடிகளில் புத்துணர்ச்சி (look fresh) உடன் தோன்ற (ஆம்! அந்த ஒரு பேர்ஃபெக்ட் செலஃபீ பெற… ) நாங்கள் உங்களுக்கு சில குறிப்புகள் அளிக்க இருக்கிறோம்.  இது உங்கள் தோற்றத்தை நிச்சயம் மாற்றி புது பொலிவுடன் காட்ட உதவும்!

முதலில், எந்த ஒரு பயணமாக இருந்தாலும், நீண்ட  நேரம் என்றால் உங்கள் கூந்தல் வறண்டு போக அதிக வாய்ப்புகள் உள்ளது. அதனால், ஒரு ஹேர் மொய்ஸ்சுரைசர் அவசியம். பயணத்திற்கு முன்னே ஷாம்பு செய்து கொள்ளுங்கள். பயணத்தின்போது உங்கள் கூந்தலை ஒரு லூஸ் பன் ஆக கட்டி விடுங்கள்.

இறங்கும் முன் கீழ் கொடுக்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்றவும் –

ப்ளோட்டிங் பேப்பர்/வெட் வைப்ஸ் –

giphy %283%29

ADVERTISEMENT

முதலில் உங்கள் முகத்தை கிலேன்ஸ் செய்வது அவசியம். உங்கள் சருமம் எண்ணெய் தன்மை கொண்டதாக இருந்தால்,  ஒரு ப்ளோட்டிங் பேப்பரால் தடவி எடுங்கள். வறண்ட சருமத்திற்கு, வெட் வைப்ஸ்சால் (wet wipes)  (ரோஸ் / கற்றாழை / தென்) சுத்தம் செயுங்கள்.

ஃபெஸ் மாஸ்க் –  

உங்கள் முகத்தில் உடனடியாக ஒரு பொலிவு தர உதவுகிறது இந்த ஃபெஸ் மாஸ்க் சீட்ஸ்.இதில் உங்கள் சருமத்திற்கு ஏற்ற பல வகைகள் உள்ளது.இதை  ஒரு 10-15 நிமிடம் உங்கள் முகத்தில் அணிந்து இருக்க வேண்டும்.இது உங்களுக்கு ஒரு புத்துணர்ச்சி அளிக்க உதவும். மேலும் இது உங்களின் பயண களைப்பை நீக்கி ஓய்வெடுக்க உதவும். முகத்தை கழுவ வேண்டாம். ஒரு சிறிய டிஸ்ஸு பேப்பர் அல்லது பஞ்சில் மிதமாக தடவி எடுங்கள்.

பிபி/சிசி கிரீம் –

giphy %286%29-min

டின்டேட் மொய்ஸ்சுரைசர் எனும் பிபி கிரீம் / சிசி கிரீம் பயன்படுத்தி குறைத்த கவேரஜ் பெற பூசுங்கள். இதில் மொய்ஸ்சுரைசர் இருப்பதினால் மேலும் இனொன்று அவசியமில்லை. இது உங்கள் நிறம் மற்றும் பருக்களை மறைத்து விடும்.

ADVERTISEMENT

ஹை லைட்டர் –

உங்கள் நிறத்திற்கு ஏற்ற ஒரு ஹை லைட்டர் மிக அவசியம். இது உங்களை ஒரு திகைப்பூட்டும் தோற்றத்தில் காண்பிக்க உதவும். இதை நெற்றி , கண்கள் சுற்றி மற்றும் கணங்களில் தடவுங்கள்.

லிப் கிளாஸ் –

giphy %281%29

வறண்ட சருமத்திற்கு லிப்ஸ்டிக் தவறான சாய்ஸ் . ஒரு லிப் கிளாஸ் உங்கள் நோக்கத்தை பூர்த்தி செய்யும் . இதை பயன்படுத்தி உங்கள் தாடை வரிகளில் (ப்ளஷ் எபெக்ட்) தேவைப்பட்டால் ப்ளெண்ட செய்து கொள்ளலாம் .

ஹேர் மொய்ஸ்சுரைசர் –

உங்கள் பன் செய்த கூந்தலை கழட்டி விடுங்கள். இதில் மிதமான ஹேர் மொய்ஸ்சுரைசரை தடவுங்கள். இது உங்கள் கூந்தலை அலை போல் காட்ட உதவும்.

ADVERTISEMENT

பேர்ஃபியும்  –

giphy

 

 

 

ADVERTISEMENT

 

 

 

 

ADVERTISEMENT

 

 

எல்லாம் முடிந்த உடன், ஒரு அசத்தலான நறுமணம் அவசியம் இல்லையா? நீங்கள் ஏற்கனவே ஒரு நீண்ட நேரம் நீடிக்கும் வாசனை பொருளை தெளித்திருந்தால் விட்டு விடுங்கள். இல்லையென்றால், மொய்ஸ்ச்சர் அதிகம் இருக்கும் இடங்கள் அதாவது கழுத்தின் பின்புறம், முட்டியின் பின்,காதோரம், மணிக்கட்டில் தெளிக்க வேண்டும்.

எங்கள் டிப் – ஒரு ஹாண்ட் கிறீம் அவசியம். நீங்கள் ஏர் கண்டிஷன்ட் பயணத்தில் (travel) இருந்தால், நீண்ட நேரம் என்பதால், அது உங்கள் சருமத்தை பாதிக்கும். மேலும், தண்ணீர் மிக அவசியம். பயணத்தின் பொது  உங்களால் முடிந்த அளவிற்கு தண்ணீர் குடியுங்கள். இது உங்கள் சருமத்தை நீரேற்றமாக வைக்க உதவும். 

ADVERTISEMENT

இப்போது நீங்கள் சற்று முன் வீட்டில் பிரெஷாக ரெடியானது போன்ற தோற்றத்தை பெறலாம். இந்த ஈர்க்கவைக்கும் தோற்றத்தை நீங்களும் பெற தயாரா?

giphy %282%29-min %281%29
படங்களின் ஆதாரங்கள் – ஜிபி,பேக்செல்ஸ்

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி !

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

ADVERTISEMENT
04 Feb 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT