logo
ADVERTISEMENT
home / அழகு
பளீச்சிடும் புன்னகைக்கு உங்கள் பற்களை பாதுகாப்பது எப்படி?

பளீச்சிடும் புன்னகைக்கு உங்கள் பற்களை பாதுகாப்பது எப்படி?

நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோமா அல்லது சோகமாக இருக்கின்றோமா என்பதை அதிக அளவில் வெளிப்படுத்த உதவுவது நமது பற்கள் தான். நாம் சந்தோசமாக இருக்கிறோம் என்றால் கட்டாயம் வாய் விட்டு சிரிக்க மறக்க மாட்டோம். அப்படி சிரிக்கும் போது பற்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தால் நமக்கு பல வித அசோகரியங்கள் ஏற்படும். நமது பளீச்சிடும் புன்னகைக்கு கட்டாயம் பற்களை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டும்.


பளீச்சிடும் புன்னகையை காட்ட பலர் முன்னிலையில் நமது சந்தோஷத்தை வெளிப்படுத்த தயக்கம் காட்டுவோம். நமது பற்களை(Teeth) பார்க்கும் மற்றவர்கள் என்ன சொல்லுவார்களோ என்கிற அச்சம் நம்மை சூழ்ந்துக்கொள்ளும். இந்த பிரச்சணையிலிருந்து எப்படி வெளிவருவது என குலம்போயுள்ளீர்களா? கவலை வேண்டாம். இதற்கு நாங்கள் ஒரு நல்ல தீர்வை தர காத்திருக்கிறோம். மஞ்சள் அல்லது வெள்ளை திட்டுக்கள் நிறைந்த பற்களை(Teeth) எப்படி சரி செய்வது என்பது போன்று சில குறிப்புகளை நாங்கள் இங்கே பதிவிட்டுள்ளோம். இதை ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

இந்த எண்ணெய் போதுங்க..!
பொதுவாக எண்ணெய்யை கொண்டு வாய் கொப்பளித்தால் அது பலவித பயன்களை நமக்கு தரும். குறிப்பாக தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் மிக சிறந்த மருந்தாக வேலை செய்யும். தினமும் 10 நிமிடம் 2 ஸ்பூன் இந்த எண்ணெய்யை பயன்படுத்தி வாய் கொப்பளித்தால் பற்களில்(Teeth) உள்ள வெள்ளை திட்டுகளை எளிதாக அகற்றி விடலாம்.

எலுமிச்சை வைத்தியம்
மிக விரைவிலே இந்த வெள்ளை திட்டுகளை நீக்க இந்த குறிப்பு நன்கு உதவும். 1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் சிறிது உப்பு கலந்து பற்களில் தேய்த்தால் வெள்ளை திட்டுகள் மறையும். இதற்கு காரணம் இதிலுள்ள சிட்ரிக் அமிலம் தான். அத்துடன் வாய் துர்நாற்றத்தையும் இது குணப்படுத்த கூடும்.

முட்டை வைத்தியம் தெரியுமா..?
உங்கள் பற்களை அழகாக மாற்ற இந்த குறிப்பு உதவும். இதற்கு தேவையானவை… முட்டை ஓடு 12 பேக்கிங் சோடா 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் 3 ஸ்பூன்
செய்முறை
முதலில் முட்டையின் ஓடை நீரில் கொதிக்க வைத்து, பிறகு காய வைத்து அரைத்து கொள்ளவும். இந்த கலவையுடன் பேக்கிங் சோடா மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இதனை பயன்படுத்தி தினமும் பல் துலக்கினால் வெள்ளை திட்டுகள் நீங்கி விடும்.

கால்சியம் கொண்ட உணவுகள் பற்களில் இது போன்று வெள்ளை திட்டுகள் வருவதற்கு தாதுக்கள் குறைபாடும் ஒரு முக்கிய காரணம். குறிப்பாக கால்சியம் குறைபாடு தான். எனவே பால், யோகவர்ட் போன்றவற்றையும், மெக்னீசியம் நிறைந்த மீன், நட்ஸ்கள், பச்சை கீரைகள் போன்றவற்றையும் உணவில் அதிக அளவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

மஞ்சள் செய்யும் மாயம்..!
1/2 ஸ்பூன் மஞ்சளை எடுத்து கொண்டு அவற்றுடன் 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு, சிறிது உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை பயன்படுத்தி பல் துலக்கினால் விரைவிலே வெள்ளை திட்டுகள் மறைந்து, அழகான பற்கள் உங்களுக்கு கிடைக்கும்.

இரண்டு விசயத்தை கட்டாயம் மறவாதீர்கள்..! நமது பற்கள் அதிக ஆரோக்கியாயத்துடன் இருக்க வேண்டுமென்றால் நிச்சயமாக நீங்கள் தினமும் இரண்டு வேளை பல் துலக்க வேண்டும். இல்லையென்றால் உங்களின் பற்கள் பலவித பாதிப்புகளை சந்திக்க நேரிடும். மேலும், சொத்தை, வெள்ளை திட்டுகள், மஞ்சள் பற்கள் போன்றவையும் ஏற்பட கூடும். இதனால் வாய் துருநாற்றம் கூட எடுக்கும். எனவே வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு இந்த பழக்கத்தை கற்றுக்கொடுங்கள்

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

 

03 Jan 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT