logo
ADVERTISEMENT
home / Bridal Makeup
திருமண நாள் நெருங்கி விட்டதா? குறைபாடற்ற பிரைடல் மேக்கப்பிற்கான  8 படிகள் !

திருமண நாள் நெருங்கி விட்டதா? குறைபாடற்ற பிரைடல் மேக்கப்பிற்கான 8 படிகள் !

தனது திருமண நாளில் ஒரு ஒரு மணப்பெண்ணும் திகைப்பூட்டும் தோற்றத்தில் பிரகாசமாக தோன்ற கனவு காண்பாள்! இந்த வரிசையில் நீங்களும் இருக்கிறீர்களா? உங்களுக்கு திருமண நாள் நிச்சயிக்கப்பட்டுள்ளதா? மேலும் அந்த நாள் மிக விரைவில் வர இருக்கிறதா? இந்நேரத்தில் உங்களுக்கு சிறந்த ஒப்பனைக் கலைஞர்கள் அல்லது அவர்களிடமிருந்து ஒப்பனையை செய்து கொள்ள விருப்பம் இல்லை என்றால் இதை நீங்களே மிகத் தெளிவாகவும் எளிமையாகவும் வீட்டிலேயே செய்து கொள்ளலாம்.ஆம் !! அதற்கு தேவையான அனைத்து விஷயங்களையும் தேடி, நன்கு கண்டறிந்து, நாங்கள் இங்கு உங்களுக்கு அளிக்க உள்ளோம் . 

அற்புதமான மணப்பெண் ஒப்பனைக்கான 8 முக்கிய படிகள்

சில சிறந்த மணப்பெண் ஒப்பனை யோசனைகள்

கச்சிதமான மென்மையான மணப்பெண் தோற்றத்தை பெறுவதற்கான குறிப்புகள்

ADVERTISEMENT

அற்புதமான மணப்பெண் ஒப்பனைக்கான 8 முக்கிய படிகள்

கீழ் கூறியிருக்கும் படிகளை நீங்கள் பின்பற்றி ஒரு அற்புதமான மணப்பெண் தோற்றத்தை அடையலாம்.

1. கிலேசன்சிங் (Cleansing)

2

முதலில் முகத்தை சுத்தப்படுத்துவது மிக முக்கியம் ஆகும். இதில் கிளென்சிங், எக்ஸ்போலியெட், டோனிங் மற்றும் மாய்ஸ்சரைசிங் எனும் நான்கு  பகுதிகள் உள்ளது.

  1. முதலில் உங்கள் முகத்தில் இருக்கும் அழுக்கை நீக்க ஏதேனும் ஒரு பொருத்தமுள்ள ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி கழுவ வேண்டும். வறண்ட சருமத்திற்கு கிரீம் ஃபேஸ் வாஷ் மற்றும் எண்ணெய் கொண்ட சருமத்திற்கு ஜெல் ஃபேஸ் வாஷ் பொருத்தமாக இருக்கும்.
  2. அடுத்து, உங்கள் ஒப்பனை சருமத்தில் மென்மையாக அமைய, சருமத்தின் மேல் இருக்கும் டெட் செல்சை அகற்ற வேண்டும் ! இதற்கு ஒரு நல்ல எக்ஸ்போலியெட்டர் அவசியம். இலகுவான பொருட்களை கொண்ட , சமமான வட்ட துகள்கள் கொண்ட  , தினம்தோறும் பயன்படுத்தப்படும் ஒரு எக்ஸ்போலியெட்டர் தேவை.
  3. அதற்க்கு பிறகு, டோனர் எண்ணெய் சருமத்திற்கும், சீரம் வறண்ட சருமத்திற்கும் பயன்படுத்துங்கள். இது உங்கள் சருமத்தை லாக் செய்து , மேலும் எந்தவிதமான தூசியையும் அண்ட விடாமல் பாதுகாக்கும்! வைட்டமின் சி இருக்கும் எக்ஸ்போலியெட்டர் பயனுள்ளதாக இருக்கும்.
  4. அடுத்து, மாய்ஸ்சுரைசர் ஒன்றை நீங்கள் நிச்சயம் பயன்படுத்த வேண்டும். இது இல்லாவிட்டால் உங்கள் சருமம் நிச்சயமாக ஒப்பனையின் சமயத்தில் ஒத்துழைக்காது. அதேபோல், கண்களை சுற்றி உள்ள சருமம் மிகவும் மென்மையாக இருக்கும். அதையும் சமமாக்கி ஒப்பனைக்கு தயாராக்க , கண்களை சுற்றி மாய்ஸ்சுரைசரை நன்கு தடவ வேண்டும்.உங்கள் சருமத்திற்கு ஏற்ற மாய்ஸ்சுரைசரை தடவுவது மிக அவசியம்.

POPxo பரிந்துரைக்கிறது –நியூட்ரோஜென்னா டீப் கிலீன் பெஸ் கிளென்சர் (ரூ 110), பாடி ஷாப் டி ட்ரீ ஸ்கின் க்ளியரிங் பெஸ் வாஷ் (ரூ 654)

ADVERTISEMENT

2. ப்ரைமர் & பவுண்டேஷன் (Primer & Foundation)

இப்போது உங்கள் சருமம் ஒப்பனைக்கு தயாராகிவிட்டது.

அடுத்து ,உங்கள் சருமத்திற்கு ஏற்ற பிரைமர் ஒன்றை அவசியம் பூச வேண்டும். இதை பல பேர் அலட்சியமாக தவிர்த்து விடுவார்கள் .ஆனால் பிரைமர் உங்கள் மேக்கப்பை நீண்ட நேரம் நீடிக்க வைக்க அற்புதமாக உதவும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!  

ஆகையால் சிறிதளவு பிரைமரை எடுத்துக்கொண்டு உங்கள் முகத்திலும், கண்களை சுற்றியும் தடவி கொண்டு பிரஷ்ஷால் அல்லது விறல் நுனிகளால் தடவி அதை சமமாகுங்கள். இது உங்கள் முகத்தில் இருக்கும் பருக்கள், கரும்புள்ளிகள், முகப்பரு ஆகிய அனைத்தையும் மறைத்து, மேற்கொண்டு  ஒப்பனையை மென்மையாக பூச உதவும்.

அடுத்து உங்கள் சருமத்தின் நிறத்துக்கு ஏற்ற பவுண்டேஷன் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் பல வகைகள் உள்ளன. உங்கள் முகத்தில் எந்த விதமான கவரேஜ் தேவை என்று நீங்கள் முதலில் முடிவு செய்ய வேண்டும். சிலர் முழுமையான தோற்றத்தை விரும்புவார்கள் மற்றும் சிலர் இலகுவான தோற்றத்தை விரும்புவார்கள். இதில் உங்களுக்கு எது தேவை என்பதை முடிவு செய்து கொண்டு பவுண்டேஷன் பிரஷ்ஷால் அல்லது உங்கள் விரல் நுனிகளால் எடுத்து சமமாக கழுத்திலும் , தாடை பகுதிகளிலும், முகத்திலும் மற்றும் கண்களிலும் பூசிக் கொள்ளுங்கள்.

ADVERTISEMENT

இதை அளவுக்கு அதிகமாக எடுத்து முகத்தில் அதிகமாகவோ அல்லது அலங்கோலமாகவும் தெரிவிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதற்கு முன்னதாகவே ஒத்திகை பார்ப்பது நல்லது! 

POPxo பரிந்துரைக்கிறது – மேபிளீன் நியூ யார்க் பிட் மீ மெட் பாவுண்டேஷன் (ரூ 500), லாக்மி அப்ஸொளுட் ஸ்கின் நாச்சுரல் மூஸ் (ரூ 750)

மேலும் படிக்க – மேக்கப் பவுண்டேஷன் வகைகள் : உங்கள் சருமத்திற்கு ஏற்றது எது?

3. கண் ஒப்பனை (Eye makeup)

3

ADVERTISEMENT

திருமண அலங்காரம் என்றாலே உங்களது ஆடைகளில் இருக்கும் முக்கியமான நிறங்கள்  அதாவது தங்கம் ,வெள்ளி அல்லது வெண்கல நிறங்களில் உங்கள் கண் ஒப்பனை இருந்தாள் அற்புதமாக இருக்கும்.

  • அதற்கு முதலில் உங்கள் கண் தளத்தில் ஏதேனும் ஒரு இலகுவான நிறத்தை பூசுங்கள்.
  • உங்கள் கண்கள் இன்னும் பிரகாசமாக தெரிய வேண்டும் என்றால் முதலில் ஒரு வெள்ளை நிறத்தை அடித்தளமாக பூசிக்கொண்டு ஆரம்பிக்கவும்.
  • உங்கள் புருவத்திற்கு கீழ் இருக்கும் பகுதிகளில் அதாவது கண் மடிப்பில் சிறிது  அடர் நிறத்தைத் பூசி அப்பகுதியை கோண்டூர் (வடிவம் குடுப்பது ) செய்யுங்கள்.
  • கண்களின் நுனிகளில் ஆடைகளுக்கு பொருத்தமுள்ள ஒரு நிறத்தை பூசவும். 
  • கடைசியில் , ஷிம்மர் அல்லது மேட் நிற ஐ ஷாடோவ்வை பூசி முடித்து விடுங்கள்.
  • வாட்டர் லைனில்  கருப்பு கண் மையை பூசிக்கொண்டு கண்களின் தளத்தில் நிறங்களை அடித்து முடித்து விட்டு ஏதேனும் ஒரு நல்ல ஐ-லைனரை பூசுங்கள்.
  • இன்னும் ட்ரெண்டியாக இருக்க வேண்டும் என்று நினைத்தால்,கேட் ஐ (cat eye) எனும் வடிவத்தை முயற்சிக்கலாம்! 
  • அடுத்து கண் இமைகளை சுருள் கொண்டு செய்துவிட்டு மஸ்காராவை பூசுங்கள்.
  • புருவங்களுக்கு ஏதேனும் ஒரு கருப்பு அல்லது அடர் பழுப்பு நிறத்தில் அல்லது உங்கள் கூந்தலின் நிறத்திலேயே இருக்கும் பவுடர் அல்லது பென்சிஸில் அதற்க்கு வடிவம் கொடுங்கள் .

POPxo  பரிந்துரைக்கிறது  – மேபிளீன் வாட்டர்ப்ரூப்பி ப்ளாக் மஸ்காரா (ரூ 325), லாக்மி ஐகானிக் கர்லிங் மஸ்காரா (ரூ 375)

மேலும் விரிவாக தெரிந்துகொள்ளுங்கள் – ஐ ஷாடோவை எவ்வாறு தடவுவது? படிப்படியான விளக்கங்கள் உடன் சில உத்திகள்.

கண் ஒப்பனை உதாரணங்கள் 

4

5

6

4. கன்ஸீல் & கோண்டூர் – முகத்திற்கு வடிவம் கொடுங்கள் (Face Concealing and contouring) 

கொண்டூரில் உங்கள் முகத்தின் வடிவத்தை மாற்றி அமைக்க உதவுகிறது. இது ஸ்டிக் , கிரீம்,லிக்விட் ,பவுடர் போன்ற வடிவங்களில் வருகிறது.உங்கள் சருமத்தின் நிறத்திற்கும் மேல் ஒரு அடர் நிறத்தை தேர்ந்தெடுத்து உங்கள் நெற்றி ,மூக்கு, கண்ணங்கள், தாடை  பகுதிகளில் ஒரு சிறிய கோடு போல் வரைந்து, பவுடர் அல்லது ப்ளேன்ட் பிரஷால் சமமாகுங்கள். இது உங்கள் முகத்திற்கு ஒரு புதிய வடிவத்தை தரும்.

ADVERTISEMENT

7

கன்சீலர் அதே போல் உங்கள் முகத்தில் இருக்கும் குறைபாடுகளை மறைக்க மிகவும் உதவுகிறது. பவுண்டேஷனை பூசிவிட்டு கன்சீலரை பூசலாம்  அல்லது அதற்கு முன்பாகவே பூசிக்கொண்டு இரண்டையும் ஒரு ப்ளெண்டிங் பிரஷ்ஷால் ப்ளேன்ட் (கலப்பது) செய்வது அவசியம்.

பவுண்டேஷன், கண்சீலிங் ,கொண்டோரிங்  இவை மூன்றுமே உங்கள் ஒப்பனையில் முக்கிய பகுதியாகும். ஆகையால் இதற்கு பொறுமையாக நேரத்தை ஒதுக்கி கவனமாக செய்ய வேண்டிய விஷயங்கள் ஆகும்.

POPxo பரிந்துரைக்கிறது – மேபிளீன் நியூ யார்க் பெஸ் ச்டுடயோ மாஸ்டர் கோண்டூர் பாலெட் (ரூ 950)

ADVERTISEMENT

5. ப்ளஷ் & ஹயிலைட் (Blush & Highlighting )

பவுண்டேஷன் முடித்தவுடன் ஒரு இலகுவான நிறத்தில்  – பீச் அல்லது பிங்க் நிறத்தில் இருக்கும் ப்ளஷை தேர்ந்தெடுத்து, ஒரு ப்ளஷ் பிரஷால், கன்னங்களில் இருந்து காதோரம் வரை வெளியில் செல்லும்படி அடியுங்கள்.

இதற்குப் பிறகு ஹயிலைட்டரை  பயன்படுத்தி உங்கள் மூக்கின் மேல், நெற்றி பகுதிகளில் மற்றும் தேவைப்பட்டால் சிறிது கண்ணங்களிலும் பூசலாம். இவ்வாறு செய்கையில்  உங்கள் திருமண நாளில் புகைப்படங்களில் நீங்கள் ஜொலிக்கும் தோற்றத்தில் தோன்றலாம்!

POPxo பரிந்துரைக்கிறது – நைகா கெட் சீக்கி ப்ளாஷ் (ரூ 699), வெட் அண்ட் வைல்ட் ப்ரேஸியஸ் பெட்டல்ஸ் ஹயிலைட் பவுடர் (ரூ 499)

6. உதடுகளுக்கு லிப்ஸ்டிக் (Lipstick)

8

ADVERTISEMENT

ஒப்பனையில் மிக முக்கியமான பகுதி  – லிப்ஸ்டிக் !உங்கள் உதட்டை முதலில் தயார் செய்வது முக்கியம் .முகத்தை தயார் செய்வது போல் உதட்டிற்கு லிப் ஸ்க்ரப் அல்லது வெறும் சர்க்கரை, எலுமிச்சை ,தேனை கலந்து உதட்டின் மேல் நன்கு தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவி விடுங்கள். இதனால் உங்கள் உதட்டின் மேல் இருக்கும் டெட் செல்கள் நீங்கிவிடும். அதற்கு பிறகு உங்கள் உதட்டில் ஏதேனும் ஒரு லிப் பாமை பூசவும்.

இது உதட்டுச்சாயத்தை மென்மையாக பூச உதவும். உங்கள் திருமணம் பகலில் நடைபெறும் என்பதால்  ஏதேனும் ஒரு பளிச்சிடும் லிப்ஸ்டிக் நிறத்தை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இந்த நிறம் உங்கள் கண்களின் நிறங்களோடு ஒற்று போவதாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். அல்லது உங்கள் ஆடை நிறத்துடன் ஒற்று போனாலும் மிக அற்புதமான தோற்றத்தை அளிக்கும்.

முதலில் உங்கள் லிப்ஸ்டிக் பிரஷை வைத்து உதட்டுச் சாயத்தை பூசி விடுங்கள். அடுத்து ஒரு லிப் லைனரைக் கொண்டு அதற்கு வெளி ஓரங்களில் கோடுகளை வரைந்து உதட்டிற்கு வடிவத்தை கொடுக்கவும். லிப்ஸ்டிக்கில் லிக்விட் தேவையா அல்லது மேட் ஃபினிஷ் தேவையா என்று நீங்கள் நன்கு அறிந்து கொண்டு பூசவேண்டும். இதற்கு மேல் ஒரு க்ளோஸ் தேவை என்றால் ஏதேனும் ஒரு க்ளோஸி லிப்ஸ்டிக்கை கடைசியில் பூசி முடிக்கவும்.

POPxo பரிந்துரைக்கிறது – மேபிளீன் நியூ யார்க் க்ரீமி மெட் லிப்ஸ்டிக் (ரூ 299), வெட் அண்ட் வைல்ட் பியுஸியா மெகா லாஸ்ட் லிக்விட் லிப்ஸ்டிக் ( ரூ 499)

ADVERTISEMENT

7.  நீண்ட நேரம் ஒப்பனை நீடிக்க – ஃபேஸ் மிஸ்ட் (Face mist)

உங்கள் ஒப்பனை நீண்ட நேரம் நீடிக்க வேண்டும் என்றால் ஒரு செட்டிங் ஸ்பிரே அவசியம். இதை உங்கள் கண்கள், உதடு, முகம் என்று எல்லா இடங்களிலும் 2 இன்ச் தூரத்தில் வைத்து , ஒப்பனையை முடித்து விட்டு கடைசியாக அடிக்க வேண்டும்.

உங்கள் முகத்தில் ஒப்பனையை முடித்த பிறகும் தெரியும் சுருக்கங்கள், குறைபாடுகளை தெளிவின்மை ஆக்க இந்த செட்டிங் பவுடர் உதவுகிறது. இதை பவுடர் பிரஷால் , மேல்  கூறி இருக்கும் அனைத்தையும் முடித்து விட்டு பூசுங்கள். மேலும், வியர்வையில் இருந்து தப்பிக்க, உங்களிடம் ப்ளோட்டிங் பேப்பர் இருப்பது அவசியம்.

POPxo பரிந்துரைக்கிறது – மேக் ப்ரெப் அண்ட் ப்ரைம் பிக்ஸ்  (ரூ 1800), லா கேர்ள் ப்ரோ செட்டிங் பவுடர் ( ரூ 697) 

8. அணிகலன்கள் (Accessories/jewelry)

9

ADVERTISEMENT

திருமணத்திற்கான நகைகளே உங்கள் தோற்றத்திற்கு முழுமையான அழகை தரும்!

  • ஆகையால் நீங்கள் நகைகளை தேர்ந்தெடுக்கும் போது, உங்கள் ஆடைகளுக்கு பொருத்தமான நகைகளைத் தேர்ந்தெடுங்கள்.
  • அதிகமாகவும் இல்லாமல் குறைவாகவும் இல்லாமல் தேவையான ட்ரெண்டில் உள்ள நகைகளை அணிய நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
  • மேலும் பல வகைகள் மற்றும் நிறங்களில் நகைகள் இருந்தாலும், அவை அனைத்தையும் அணியாமல் , ஓரிரு நிறங்களிலேயே உங்கள் திருமண அலங்காரத்திற்கு தேவையான நகைகளை அணிந்து செல்வது உங்கள் தோற்றத்தை இன்னும் சிறப்பாக காட்ட உதவும்.
  • பழங்காலத்து ஆண்டிக் நகைகளையும் நீங்கள் அணியலாம்.
  • ஒட்டியாணம் மெல்லியதாக இருந்தால் இன்னும் அழகாக இருக்கும் .
  • கமல் ஜிமிக்கி மற்றும் கழத்திற்கு தேவையான நகை , இவை இரண்டும் பொருந்தும் அளவிற்கு இருக்க வேண்டும்.
  • கால்களில் மெட்டியை கொலுசுடன் மேட்ச் செய்யலாம்.  

சில சிறந்த மணப்பெண் ஒப்பனை யோசனைகள் (Bridal makeup ideas)

மேலும் படிக்க – மேக்கப் : யாரும் உங்களிடம் கூறாத சில ஒப்பனை குறிப்புகள்

 

ஒரு கச்சிதமான மென்மையான மணப்பெண் தோற்றத்தை பெறுவதற்கான குறிப்புகள் (Tips to get that perfect bridal glow)

  1. உங்கள் திருமணத்திற்கு ஆறு மாதத்திற்கு முன்னதாகவே நீங்கள் செய்யவேண்டிய சரும பராமரிப்பு வேலைகளை ஆரம்பித்து விட வேண்டும். அல்லது நேரம் குறைவாக இருக்கிறது என்றால் மாதத்திற்கு இரண்டு முறை சருமத்தைப் பராமரிக்கும் குறிப்புகளை (பெசியல் மற்றும் ஹேர் தெரபி) பின்பற்ற வேண்டும்.
  2. கிளென்சிங், டோனிங் மற்றும் மாய்ச்சுரைசிங் எனும் மூன்று விஷயங்களை நீங்கள் தினந்தோறும் செய்து கொள்ள வேண்டும்.
  3. தினம் இரவில் ஆலிவ் எண்ணெய் உங்கள் கைகளிலும் கால்களிலும் தேய்த்துக் கொண்டு தூங்குங்கள். இது உங்கள் சருமத்தை மென்மையாக்க, டெட் செல்சை அகற்ற உதவும்.
  4. மாதத்தில் ஓரிரு முறை உங்கள் கூந்தலுக்கு தேவையான மசாஜை செய்துகொள்ளுங்கள்.
  5. தேவைப்பட்டால் ஸ்பாவுக்கும் சென்று ரிலாக்ஸ் ஆகலாம்.
  6. உடற்பயிற்சி அவசியம் தான் ஆனால் வெகு வேகமாக உடல் எடையை குறைப்பது உங்கள் நோக்கமாக இருக்கக் கூடாது.குறைந்தது 6 மாதத்திற்கு முன்னதாகவே, உடலில் தேவையான இடங்களில் உங்கள் எடையை குறைப்பதற்கான பயிற்சியில் ஈடுபடுங்கள்.
  7. டயட் முக்கியம்! தேவையான சத்துள்ள பழங்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட ஆரம்பியுங்கள். அப்போதுதான் அந்த பிரகாசமான தோற்றத்தை அடையலாம்.

முக்கியமான குறிப்பு – இங்கு கூறியிருக்கும் அனைத்தையும் நீங்கள் ஓரிரு வாரத்திற்கு அல்லது மாதத்திற்கு முன்னதாகவே முயற்சித்து ஒத்திகை பார்த்து பின்பு உங்கள் திருமண நாளன்று செய்து கொள்ளுங்கள். இது கடைசி நிமிஷத்தில் ஏற்படும் பதட்டம் அல்லது அசவுகரியங்களை தவிர்க்க உதவும். 

ADVERTISEMENT

பட ஆதாரம்  – இன்ஸ்டாகிராம்1, இன்ஸ்டாகிராம்2, இன்ஸ்டாகிராம்3 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

06 Jun 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT