முகம் கழுவுவதை நாம் பல வருஷங்களாக செய்கிறோமே இதில் என்ன புதுசா என்று நினைக்கிறீர்களா? உங்கள் முகத்தை கழுவும் விதம், பயன் படுத்தும் பொருட்கள், கழுவும் நேரம் மற்றும் எத்தனை முறை கழுவுறீர்கள் என்ற அணைத்து காரணிகளிலும் உங்கள் சருமத்தின் ஆரோக்கியம் அடங்கி உள்ளது. உங்கள் சருமத்தை பராமரிக்க சிறு சிறு விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்தினால் போதும். அது உங்களுக்கு நிச்சயம் உதவும். நீங்கள் முகத்தை சரியாக சரியான நேரத்தில் கழுவுவதின் மூலம் சுருக்கங்கள், பருக்கள், ஆக்னே,எண்ணெய் மற்றும் பல குறைபாடுகளை சுலபமாக தவிர்க்கலாம்.
உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஃபெஸ் வாஷ் எது?
உங்கள் சருமம் வறண்டதாக இருந்தால், அதற்கு ஒரு கிரீம் அடிப்படை கொண்ட சிலேன்செர் அவசியம். எண்ணெய் பதம் கொண்ட சருமம் என்றால், அதற்கு ஒரு ஜெல் ஃபெஸ் வாஷ் அவசியம்.அதிகம் வறண்டு போகும் சோப்பு அல்லது ஃபெஸ் வாஷை தவிர்ப்பது நல்லது.
POPxo பரிந்துரைக்கிறது – பாடி ஷாப் டி ட்ரீ ஃபெஸ் வாஷ் (Rs.645), நியூட்ரோஜெனா ஆக்னே வாஷ் (Rs.494)
மேலும் படிக்க – நீங்கள் உணர்திறன் தோல் உடையவரா? இந்த பொருட்களிடம் இருந்து விலகியே இருங்கள்!
எவ்வளவு முறை முகம் கழுவலாம்?
இரண்டே முறை! காலையில் எழுந்த உடன் மற்றும் இரவில் படுக்கும் முன். காலையில் முகம் கழுவுவது அவசியம் ஏனெனில் இரவில் உங்கள் சருமத்தில் சேர்ந்திருக்கும் டெட் செல்ஸ் மற்றும் எண்ணெய் தன்மையை ஒழிக்க ஒரு முறை முகம் கழுவுங்கள் (face wash). மீதும், நாள் முழுவதும் வெய்யிலில் , வேர்வை என்று வெளியில் இருந்து வீடு திரும்பிய பிறகு, எல்லா தூசியையும் முகத்தில் இருந்து அகற்ற இரண்டாவது முறையாக இரவில் கழுவுங்கள். அவளவு தான்! இதற்கு மேல் இன்னும் ஒரே ஒரு முறை நீங்கள் கழுவலாம்.. அது அதிகம் தூசி, குப்பை, மாசு, புகை மண்டலம் கொண்ட காரணங்களால் இருக்கலாம். மேலும், உடல் பயிற்சியினால் வரும் வேர்வையையும் உடனடியாக கழுவுவது அவசியம் .
இதற்கு மேல் அடிக்கடி கழுவிக்கொண்டு இருந்தால், உங்கள் முகத்தில் இருக்கும் சீபம் (sebum) எனும் இயல்பாகவே உருவாகும் சரும பராமரிப்பு ஊட்டச்சத்து சருமத்தை விட்டு வெளியேறிவிடும். அதற்கு பின், உங்கள் சருமத்திற்கு தேவையான ஈரப்பதம் இல்லாமல் வறண்டு போய்விடும். இதில் எரிச்சலும் உண்டாக வாய்ப்புள்ளது.
அப்போ மேக்கப்பை துடைக்க முகம் கழுவ வேண்டாமா?
வேண்டாம்! இதற்கு நீங்கள் ஏதேனும் ஒரு பிராண்டட் மேக்கப் ரிமூவர் பயன்படுத்தலாம். ஒரு பஞ்சில் இந்த சீற்றத்தை ஊற்றி உங்கள் முகத்தில் இருக்கும் மேக்கப்பை தொடைத்து எடுங்கள். இதற்கு பின், ஒரு மொய்ஸ்சுரைசரை பயன்படுத்தலாம்.
POPxo பரிந்துரைக்கிறது – மேபிளீன் நியூ யார்க் டோடல் க்ளீன் மேக்கப் ரிமூவர் (Rs.240)
மூன்று முறைக்கு மேல் முகத்தை கழுவ தோன்றினால் –
ப்ளோட்டிங் பேப்பர் (Blotting paper) –
மார்க்கெட்டில் பிராண்டட் ப்ளோட்டிங் பேப்பரை வாங்குங்கள், இதை உங்கள் கை பையில் எப்போதும் வெய்துகொள்ளுங்கள். இதை உங்கள் முகத்தில் மிதமாக தடவி உங்கள் சருமத்தில் இருக்கும் தூசி, எண்ணெய் மற்றும் எல்லா அசுத்தங்களையும் அகற்றி விடுங்கள். மேலும், இது உங்களுக்கு ஒரு மேட் பினிஷ் (ஒப்பனை இட்டது போல) தரும்! இது எண்ணெய் அல்லது காம்பினேஷன் சருமம் கொண்டவர்களுக்கு மிக உதவியாக இருக்கும்.
POPxo பரிந்துரைக்கிறது – கிரோமேன் அண்ட் கோ கிறீன் டி ப்ளோட்டிங் பேப்பர் (Rs.999)
வெட் வைப்ஸ் (wet wipes) –
பாக்டீரியாக்களை மற்றும் அசுத்தங்களை நீக்கும் வெட் வைப்ஸ்சை பயன்படுத்தி உங்கள் முகத்தில் இருக்கும் அழுக்கை தொடைத்து எடுங்கள். இது நீங்கள் அதிகம் பயணம் செய்யும் நேரங்களில், தண்ணீர் இல்லாத சமயங்களில் உங்களுக்கு பயனளிக்கும்.
POPxo பரிந்துரைக்கிறது – ஜின்னி க்ளே கிளென்சிங் அண்ட் மேக்கப் ரிமூவல் வெட் வைப்ஸ் (Rs.29)
அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்தி சிறு, தவறுகளை அகற்றி, உங்கள் சருமத்தை பாதுகாத்து பயன் அடையுங்கள்.
பட ஆதாரம் – instagram , GIF
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி !
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.