logo
ADVERTISEMENT
home / Bath & Body
செலவேயில்லாம சில்கி ஹேர் வேணுமா ! வீட்டிலேயே தயாரிக்கலாம் ஆர்கானிக் ஷாம்பூ!

செலவேயில்லாம சில்கி ஹேர் வேணுமா ! வீட்டிலேயே தயாரிக்கலாம் ஆர்கானிக் ஷாம்பூ!

இப்போதெல்லாம் கெமிக்கல்கள் அற்ற பொருட்களை பயன்படுத்த மக்கள் ஆரம்பித்து விட்டனர். என்றாலும் ஒரு சில அன்றாட முக்கிய பொருட்கள் கெமிக்கல்கள் உடன்தான் கிடைக்கிறது.

அதில் ஒன்றுதான் ஷாம்பூ. இதிலும் கெமிக்கல் குறைவானவைகளைத் தேர்ந்தெடுத்தாலும் முழுமையான ஆர்கானிக் ஷாம்பூக்களாக (organic shampoo) அவை இருப்பதில்லை.

இதனைப் போக்க மிக எளியமுறையில் ஆர்கானிக் ஷாம்பூவை எப்படித் தயாரிக்கலாம் என்பதை நான் விளக்குகிறேன். ரொம்ப ஈசிதான் ! ஆனால் ஆரோக்கியமானது.

ஹெல்த்தியான கூந்தலுக்காக நாம இதக்கூட செய்யலைன்னா எப்படி!

ADVERTISEMENT

Also Read சிறந்த முடி உதிர்தல் ஷாம்புகள்

தேவையான பொருட்கள் மற்றும் அதன் பயன்கள்

பூந்திக் கொட்டை

இது தலையில் உள்ள அழுக்கையும் எண்ணெய் பிசுக்கையும் மென்மையாக நீக்குகிறது.

ADVERTISEMENT

சிகைக்காய்

இது தலையில் உள்ள அழுக்குகளை நீக்குவதுடன் சிறந்த மருந்து பொருளும் கூட. பூஞ்சைகளை நீக்குகிறது மற்றும் சருமத்தில் உள்ள கிருமிகளை அழிக்கிறது. இது சிகைக்கு ஏற்ற காய் என்பதால்தானோ என்னவோ இதன் பெயரே சிகைக்காய் ஆயிற்று.

கூந்தல் வளர்ச்சிக்கு சில சிறந்து ஷாம்புகள்

ADVERTISEMENT

வெந்தயம்

இதில் உள்ள எண்ணெய் பசை மற்றும் முடியைக் கருமையாக்கும் தன்மை கூந்தலுக்கு தேவையான பொலிவையும் (Shining)ஆரோக்கியத்தையும் தருகிறது.

ADVERTISEMENT

நெல்லி முள்ளி

இது தலைமுடி உதிராமல் நன்கு ஆரோக்கியமாக வளர உதவி செய்கிறது. மேலும் முடியின் கருமை நீங்காமல் காக்கிறது.

செம்பருத்தி பூக்கள்

ADVERTISEMENT

இவை தலையில் உள்ள பொடுகு மற்றும் பேன்களை நீக்கும். தலைமுடிக்கு வழவழப்பு தன்மை (Silky) தருவதில் சிறந்தது. மேலும் குளிர்ச்சியானது.

ஷாம்பூ செய்யத் தேவையானவை

புங்க கொட்டை அல்லது பூந்திக் கொட்டை – 10

ADVERTISEMENT

சிகைக்காய் – 1 கப்

நெல்லிமுள்ளி – 1 கப்

வெந்தயம் – 1 கப்

செம்பருத்தி பூக்கள் – 3

ADVERTISEMENT

மேற்கூறிய அனைத்து பொருள்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. செம்பருத்தி பூக்கள் மட்டும் உங்களுக்கு பிரெஷாக கிடைத்தால் அதனைப் பயன்படுத்துங்கள்.இல்லையெனில் பரவாயில்லை.

செய்முறை

முதலில் புங்க கொட்டைகளை சிறிய உரலில் அல்லது கல்லில் தட்டி அதன் கொட்டைகளை நீக்கி விடுங்கள். அதன்பின்னர் ஒரு பவுலில் இந்த கொட்டை நீக்கிய பூந்திக் காய்களை போடுங்கள் .

அதனோடு 1 ஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தை சேருங்கள்.

ADVERTISEMENT

கூடவே நெல்லி முள்ளியை ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்து சேருங்கள்.

அதனுடன் சிகைக்காய்கள் 6 எடுத்து சேர்த்திடுங்கள்.

இவைகளை ஒரு கப் அளவிற்கு நீர் ஊற்றி ஒரு இரவு முழுக்க ஊற விடுங்கள்.

ADVERTISEMENT

அதன்பின்னர் மறுநாள் காலையில் தண்ணீர் பிரவுன் நிறமாக மாறியிருக்கும்.

ஒரு பாத்திரத்தில் இவைகளை மாற்றுங்கள். அதனை அடுப்பில் வையுங்கள். இவைகளோடு மூன்று செம்பருத்தி பூக்களை இதழ்களாக அதனுடன் சேருங்கள்.

அடுப்பை பற்ற வைத்து இந்தக் கலவையில் உள்ள நீர் கால் பாகமாக சுண்டும் வரை காய்ச்சுங்கள்.

ADVERTISEMENT

ஆறியபின் காய்ச்சிய நீரை வடிகட்டி ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்துங்கள்.

மேலும் இதனை நீங்கள் பிரிட்ஜில் வைத்து 1 மாதம் வரை பயன்படுத்தலாம்.

உங்கள் ஷாம்பூ தயார் ! அதன் பின்னர் குளிக்கும்போது இந்த ஷாம்பூவை பயன்படுத்திப் பாருங்கள் !

ADVERTISEMENT

உங்கள் கூந்தலின் பளபளப்பில் உங்கள் ப்ரியத்துக்குரியவரின் முகம் பிரதிபலிக்கும்!

படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ்

— 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

ADVERTISEMENT

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

 

 

 

ADVERTISEMENT

 

 

20 Mar 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT