logo
ADVERTISEMENT
home / பொழுதுபோக்கு
தமிழக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாகை சூடிய  இளம்பெண் முதல் முதியோர் வரை லேடஸ்ட்அப்டேட்!

தமிழக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாகை சூடிய இளம்பெண் முதல் முதியோர் வரை லேடஸ்ட்அப்டேட்!

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை தொடங்கி தற்போது வரை வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 91,975 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்குக் கடந்த 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெற்றது.

ஒன்றிய கவுன்சிலர்களுக்கான உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதில் மொத்தமுள்ள 5,067 இடங்களில் அதிமுக கூட்டணி 341 இடங்களிலும் திமுக கூட்டணி 382 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

இதேபோல மாவட்ட கவுன்சிலர்களுக்கான முடிவுகளில் அதிமுக கூட்டணி 94 இடங்களிலும், திமுக கூட்டணி 90 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. இந்நிலையில் தேர்தலில் (election) சில ருசிகரமான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி பெண்கள் பலர் இந்த தேர்தலில் துணிகரமாக நின்று வெற்றி வாகை சூடியுள்ளனர்.

ADVERTISEMENT

twitter

சந்தியா ராணி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா் அருகேயுள்ள சூளகிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட காட்டிநாயக்கன்தொட்டி ஊராட்சி மன்றத் தலைவராக போட்டியிட்ட 21 வயது இளம் மாணவி சந்தியா ராணி 210 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மாலூர் தனியார் கல்லூரியில் பிபிஎ மூன்றாம் ஆண்டு படித்துவரும் இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களை (election) விட 210 வாக்கு வித்தியாத்தில் வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தின் இளவயது ஊராட்சி மன்ற தலைவராக சந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வெற்றிக்குப் பிறகு பேசிய சந்தியா ‘மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் மற்றும் சாலைப் போக்குவரத்து ஆகியவற்றில் கவனம் செலுத்துவேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க – முன்னணி சீரியல் நடிகை ஸ்ரித்திகாவிற்கு கேரளாவில் திருமணம் : வைரலாகும் புகைப்படங்கள்!

ADVERTISEMENT

twitter

பிரீத்தி

சேலம் அயோத்தியாப்பட்டினம் ஊராட்சி பூவனூர் சுக்கம்பட்டியில் 3வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் (election) பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட 22 வயதான பிரீத்தி வெற்றி பெற்றுள்ளார். தொலைதூரக் கல்வி மூலம் முதுகலை ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படிக்கும் பிரீத்தி 2204 வாக்குகள் பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட 1050 வாக்குகள் வித்தியாசத்தில் பிரீத்தி அமோக வெற்றி பெற்றுள்ளார். என் கவனமெல்லாம் எங்கள் கிராம மக்களுக்கு பொதுக்கழிப்பறை மட்டுமின்றி வீடுகள்தோறும் தனிநபர் கழிப்பறை கட்டிக் கொடுப்பதில்தான் இருக்கிறது என்று பிரீத்தி கூறியுள்ளார். 

twitter

ADVERTISEMENT

சரஸ்வதி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கான்சாபுரம் ஊராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றிய சரஸ்வதி தனது அரசு வேலையை ராஜினாமா செய்து விட்டு அதே ஊராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வென்றுள்ளார். கடந்த முறை தேர்தல் அறிவிக்கப்பட்ட போதே தனது அரசு பணியான துப்புரவு வேலையை ராஜினாமா செய்துவிட்டு போட்டியிட்டார். அந்த முறை தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது நடந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். ஒன்பது பேர் போட்டியிட்ட நிலையில் சரஸ்வதி 1,113 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க – புத்தாண்டு தினத்தன்று 67,385 குழந்தைகள் பிறப்பு : சீனாவை முந்தி முதலிடத்தில் இந்தியா!

twitter

ADVERTISEMENT

சுபிதா

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூசலாங்குடி ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு திமுக கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்ட இளம் பட்டதாரியான 22 வயதான சுபிதா வெற்றி பெற்றார். திருத்துறைப்பூண்டி அருகே பூசலாங்குடி ஊராட்சியை சேர்ந்தவர் ஆர்.சுபிதா, திருவாரூர் திரு.வி.க கல்லூரியில் பிபிஏ பட்டப்படிப்பை கடந்த 2017-ல் முடித்தார்.இதைத்தொடர்ந்து பூசலாங்குடி ஊராட்சித் தலைவி (election) பதவிக்கு போட்டியிட்டார். இந்நிலையில் இவர் வெற்றி பெற்று 22 வயதில் ஊராட்சி மன்றத் தலைவியாகியுள்ளார். ஊராட்சிக்கு தேவையான அனைத்து பணிகளையும் முடித்து பொதுமக்கள் பயன்பெற முழு முயற்சி மேற்கொள்வேன் என அவர் உறுதியளித்துள்ளார்.

twitter

வீரம்மாள்

தள்ளாத வயதிலும் ஊராட்சி மன்றத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் 79 வயது மூதாட்டி வீரம்மாள். மதுரை மாவட்டம், மேலுார் அரிட்டாபட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்டவரை காட்டிலும் 195 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு தேர்தல் அதிகாரி சான்றிதழை வழங்கியுள்ளார்.  ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு இந்த மூதாட்டி இரு முறை போட்டியிட்டு தோல்வி அடைந்த நிலையில் மீண்டும் விடாமுயற்சியுடன் போராடி 3ஆவது முறையாக போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

twitter

விசாலாட்சி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பளையம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்ட 82 வயதான மூதாட்டி விசாலாட்சி வெற்றி பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இவர் அதிமுக முன்னாள் அமைச்சர் துரைராமசாமியின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு திமுகவைச் சேர்ந்த சந்திரசேகர், தனது மனைவியை போட்டி வேட்பாளராக களம் இறக்கியிருந்தார். அங்கு போட்டி கடுமையாக இருந்த போதிலும் 300 வாக்குகள் வித்தியாசத்தில் விசாலாட்சி வெற்றி பெற்று ஊராட்சி மன்றத் தலைவராகியுள்ளார். ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட இவரது மகன் ஆர்.வி.சுதர்சனும் வெற்றி பெற்றுள்ளார். ஒரே உள்ளாட்சித் தேர்தலில் தாயும், மகனும் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

twitter

ரியா

ஊரக உள்ளாட்சித் தோதலில் திருச்செங்கோடு ஒன்றியக் குழுவின் 2-ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு திமுக சாா்பில் திருநங்கை ரியா போட்டியிட்டாா். இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவில் 2,701 வாக்குகளுடன் வெற்றி பெற்றாா். அவரை எதிா்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் கந்தம்மாள் என்பவரை விட 954 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இது திருநங்கை சமூகத்துக்குக் கிடைத்த வெற்றியாகவே கருதுவதாக ரியா கூறியுள்ளார். நீா்நிலைகளை பாதுகாக்கவும், குடிநீா், சாலை, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை எடுப்பேன் என அவர் கூறியுள்ளார். 

மேலும் படிக்க – இறுதி நேரத்தில் மலர்ந்த காதல்..நெகிழ்வில் முடிந்த நேசம்..திருமணத்தில் இணைந்த முதிய நட்பு !

#POPxoLucky2020 – ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

ADVERTISEMENT
03 Jan 2020

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT