logo
ADVERTISEMENT
home / Food & Nightlife
முத்து போன்ற ஜவ்வரிசியை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள் மற்றும் ரெசிபிகள்!

முத்து போன்ற ஜவ்வரிசியை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள் மற்றும் ரெசிபிகள்!

பார்ப்பதற்கு முத்துக்கள் போல் பளபளவென இருக்கும் ஜவ்வரிசியில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உண்டு. மரவள்ளிக் கிழங்கில் எடுக்கப்படும் ஸ்டார்ச்சிலிருந்து செய்யப்படுவதே ஜவ்வரிசி. பல இந்தியர்கள் பாலுக்கு அடுத்ததாக குழந்தைக்கு கொடுக்கப்படும் முதல் உணவாக ஜவ்வசிரிசியை பயன்படுத்துகின்றனர். 

மேலும் திருவிழா, பண்டிகை நேரங்களிலும் ஜவ்வரிசியில் (sabudana) செய்த உணவுகள் செய்து படையலிடுகின்றனர். ஸ்டார்ச்சால் நிறைந்துள்ள ஜவ்வரிசியில் செயற்கை இனிப்பு மற்றும் ரசாயனங்கள் என எதுவும் இல்லாததால் இதனை பரவலாக அனைவரும் விரும்புகின்றனர். 

twitter

ADVERTISEMENT

ஜவ்வரிசியில் இருக்கும் சத்துக்கள் – ஜவ்வரிசி பார்க்க சிறிதாக இருந்தாலும் அதில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது.  100 கிராம் ஜவ்வரிசியில் 351 கிலோ கலோரிகள், 87 கிராம் கார்போஹைட்ரேட், 0.2 கிராம் கொழுப்பு மற்றும் 0.2 கிராம் புரதம் உள்ளது. கனிமங்கள், வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்துக்களும் உள்ளது. 

ஜவ்வரிசி – ஆரோக்கிய பலன்கள்

  • ஜவ்வரிசியில் அதிக அளவிலான புரதம் இருப்பதால்  தசைகளை வலுவாக்கி ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.  
  • சீதபேதி ஏற்பட்டவர்கள் உடலில் நீர் சத்திழப்பு அதிகளவில் ஏற்பட்டு மிகவும் சோர்வடைந்து விடுவார்கள்.  இவர்கள் 20 கிராம் ஜவ்வரிசியை நீரில் போட்டு கொதிக்க வைத்து இளம் சூடான பதத்தில் அருந்தி வைத்தால் சீதபேதி விரைவில் நிற்கும்.

பேரழகு வேண்டுமா? தினம் ஒரு பேரிக்காய் சாப்பிடலாமே!

  • ஜவ்வரிசி நமது உடலில் ஹீமோகுளோபின் மற்றும் சிவப்பு இரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் வாய்ந்த உணவாக இருக்கிறது.

twitter

ADVERTISEMENT
  • ஜவ்வரிசியை  (sabudana) பால் அல்லது நீரில் சேர்த்து கொதிக்க வைத்து, அதில் சர்க்கரை சேர்த்து  குழந்தைக்கு கொடுத்தால் செரிமானப் பிரச்சனைகள் நீங்கும்.  
  • உடல்நலம் சரியில்லாதவர்களுக்கு ஆரோக்கியத்தை ஏற்றவும் இதனை உணவாக அளிக்கலாம். ஏனென்றால் இது உடனடி ஆற்றலை வழங்க வல்லது. 
  • ஜவ்வரிசியில்வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் அதிக அளவில் இருக்கின்றன. இந்த இரண்டு வைட்டமின் சத்துக்களும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்ய உதவுகிறது.

முளைகட்டிய பயறுகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் பலன்கள்!

  • மேலும் அதிக அளவில் கார்போஹைட்ரேட் மற்றும் குறைந்த அளவில் கொழுப்பு உள்ளது. ஆகவே எடை மீது அதிக அக்கறை உள்ளவர்கள் இதனை பயன்படுத்தலாம். 
  • ஒரே வாரத்தில் ஒல்லியாக இருக்கும் தேகம், இயற்கையான முறையில் எடையை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்று நினைத்தால் அதற்கு மிகச்சிறந்த தேர்வாக ஜவ்வரிசி தான்.

twitter

  • உடலை குளிர்ச்சி அடைய வைப்பதிலும், அளவுக்கு அதிகமாக பித்தத்தை குறைக்கவும் விரும்புபவர்கள் தினமும் ஜவ்வரிசி கஞ்சி சாப்பிடலாம். 
  • காலை சிற்றுண்டிக்கு ஜவ்வரிசியில் செய்த உணவுகளை எடுத்து கொண்டால், அன்றைய நாள் முழுக்கவும் தேவையான ஆற்றல் கிடைக்கும். 
  • எலும்புகளை ஆரோக்கியமக்கி மூட்டுவலியை குறைக்கும்.  உடற்பயிற்சிக்கு முன், பின் என ஜவ்வரிசியை உட்கொள்ளலாம்.

புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு : பெருமாளுக்கு படைக்க வேண்டிய படையல் பிரசாதங்கள்!

ADVERTISEMENT
  • ஜவ்வரிசியில் நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரிசமமாக வைத்துக் கொள்ளும் கார்போஹைட்ரேட் சத்துகள் அதிகம் இருப்பதால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவு. 
  • ஜவ்வரிசியில் (sabudana) கால்சியம் சத்து அதிக அளவில் உள்ளது. ஜவ்வரிசி உணவுகளை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு பற்களின் எனாமல் சீக்கிரத்தில் தேய்ந்து போகாமல் தடுக்கிறது.

ஜவ்வரிசி லட்டு 

தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி – 1 கப்,
வேர்க்கடலை – 2 ஸ்பூன்,
பொட்டுக்கடலை –  அரை கப்,
முந்திரி, திராட்சை – தேவையான அளவு, 
ஏலக்காய் – 2,
நெய் – 2 டேபிள் ஸ்பூன்.

ADVERTISEMENT

youtube

செய்முறை: 

முதலில் முந்திரிப்பருப்பை பொடியாக நறுக்கவும். ஏலக்காயை மற்றும் வெல்லத்தை பொடி செய்து கொள்ளவும். பிறகு வாணலியில் முதலில் ஜவ்வரிசியை போட்டு நன்கு பொரியும் வரை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன் பின் வேர்க்கடலை, பொட்டுக்கடலை அடுத்தடுத்து போட்டு வறுத்து எடுத்து எல்லாவற்றையும் ஆற வைக்கவும். பின்னர் ஆறியதும் மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும். 

கடாயில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்பு வறுத்து பொடித்த பொடியில் ஏலக்காய் தூள், வெல்லம், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து கொள்ளவும். நெய்யை காய வைத்து உருக்கி, ஜவ்வரிசி கலவையில் ஊற்றி கிளறவும். இந்த ஜவ்வரிசி கலவையை நன்கு பிசைந்து இளஞ்சூடான பதத்தில் இருக்கும்பொழுதே உருண்டைகளாக பிடித்து வைக்கவும். சுவை மிகுந்த ஜவ்வரிசி லட்டு தயார்.

ADVERTISEMENT

ஜவ்வரிசி பாயாசம்

தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி – 1 கப்,
சர்க்கரை  – அரை கப், 
தண்ணீர், உப்பு – தேவையான அளவு,  
தேங்காய் பால்  – 1 கப், 
திராட்சை, ஏலக்காய், முந்திரி : தேவையான அளவு, 
நெய் – ஸ்பூன்.

ADVERTISEMENT

youtube

செய்முறை 

முதலில் ஜவ்வரிசியை கழுவி கொதிக்க வைத்த நீரில் போட்டு ஒரு மணி நேரம் ஊற விடவும். பின் குக்கரில் வைத்து 2 விசில் வைத்து எடுக்கவும். பின்னர் பாலை நன்றாக காய்ச்சி ஆற வைக்கவும். மற்றொரு வாணலில் நெய் விட்டு முந்திரி, திராட்சை வறுத்து எடுக்கவும்.

பாத்திரத்தில் நன்றாக வெந்து இருக்கும் ஜவ்விரிசியை ஊற்றி சர்க்கரையை சேர்த்து கலக்கவும். சர்க்கரை நன்றாக கலந்து வந்ததும்  கடைசியாக பால் சேர்க்கவும். இத்துடன் ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து பரிமாறவும். 

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

 

27 Sep 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT