logo
Logo
User
home / Health
பத்து ரூபாய்க்கு கிடைக்கும் மல்லிகைப் பூக்களில் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா !

பத்து ரூபாய்க்கு கிடைக்கும் மல்லிகைப் பூக்களில் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா !

மல்லிகைப் பூக்களை சூடிக் கொள்வது பெண்களுக்கு அழகு என்பார்கள். அதுமட்டும் இல்லாமல் மல்லிகைப்பூக்கள் இறைவன் இறைவிக்கு விருப்பமான மலர்களில் ஒன்று. மல்லிகைப் பூக்கள் ரொமான்ஸ் உணர்வை தூண்டுவதில் முக்கிய மலராக கருதப்படுகிறது. இந்த மூன்று காரணங்கள் பொதுவாக நாம் அறிந்தவைதான்.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் மல்லிகைப்பூக்களின் (jasmine) பலவித நன்மைகளை பட்டியல் போட்டு ஒரு மூலிகை வலைத்தளம் தந்திருப்பது பார்த்து ஆச்சர்யப்பட்டேன். அதனையே உங்களுடன் நான் பகிர்ந்து கொள்கிறேன்.

Youtube

பால்வினை நோய்கள் குணமாக மல்லிகை பூ மொட்டுக்களை மருந்தாக சாப்பிட வேண்டும். இதே மல்லிகை மொட்டுக்கள் சிறுநீரகம் மற்றும் கண் சம்பந்தமான கோளாறுகளை நீக்கவும் மருந்தாக பயன்படுகிறது.

மல்லிகைப்பூக்களை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரைப் பனங்கற்கண்டுடன் பருகி வந்தால் கண்களில் ஏற்படும் சதை வளர்ச்சி குறைந்து படிப்படியாக பார்வை தெரிய ஆரம்பிக்குமாம்.

குழந்தையில்லாத தம்பதிகள் மல்லிகை தோட்டத்தில் உலாவி வந்தால் அதன் நறுமணம் மூலம் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு குழந்தை பெறும் வாய்ப்புகளை பெறுவார்களாம்.

மல்லிகை தோட்டத்தில் தான் ரதியும் மன்மதனும் வாசம் செய்வதாக புராணங்கள் கூறுகின்றன. அதனாலேயே தம்பதி அன்யோன்யம் அதிகரித்து குழந்தை பெறும் பாக்கியம் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

Youtube

மல்லிகை தோட்டத்தில் தான் ரதியும் மன்மதனும் வாசம் செய்வதாக புராணங்கள் கூறுகின்றன. அதனாலேயே தம்பதி அன்யோன்யம் அதிகரித்து குழந்தை பெறும் பாக்கியம் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

தோட்டங்கள் இல்லாதவர்கள் மல்லிகை பூக்களை தைலமாக மாற்றி அந்த வாசனை திரவியத்தை படுக்கையில் தடவினாலும் நல்ல பலன் கிடைக்கும்.

மல்லிகைப்பூக்களை நன்றாக அரைத்து உடலில் வீக்கம் மற்றும் எரிச்சல் நமைச்சல் இருக்கும் இடங்களில் பூசி வந்தால் எளிதில் குணமடையுமாம்.

Youtube

மல்லிகை பூக்களை நிழலில் உலர்த்தி அதனை பொடி செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியை வெண்ணீரில் கலந்து டீ போல காய்ச்சிக் குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் நீங்கும். நீர் சுருக்கு நீர் எரிச்சல் போன்றவை சரியாகும்.இந்த மல்லிக்காய்பொடி டீயை தினமும் குடித்து வந்தால் எலும்புருக்கி நோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய்கள் பாதிப்பு குறையுமாம்.

நமது குடலில் புழுக்கள் தங்கியிருந்தால் அவை குடல் சுவர்களை அரித்து தின்று புண்களை உண்டாக்கும். இதனால் வயிற்றின் செரிமானத்தன்மை குறையும். இந்த குடற்புழுக்களை அழிப்பதற்கு மல்லிகை மலர்களை நீர் விட்டு கொதிக்கவைத்து அதனை வடிகட்டி அருந்தினால் குடல் புழுக்கள் நீங்கும். அதைப்போலவே அஜீரணக் கோளாறினால் ஏற்படும் வயிற்றுப்புண்களுக்கும். வாய்ப்புண்களுக்கும் மல்லிகை பூ சிறந்த மருந்து.

Pexels

நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பது , சத்தான உணவு உண்ணாமல் இருப்பது போன்றவற்றினால் சிலருக்கு நரம்புகள் தளர்ச்சியடைந்து உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். இவர்களுக்கு மல்லிகைப்பூக்களை நிழலில் காயவைத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் நரம்புத்தளர்ச்சி நீங்கும். புத்துணர்வு பெறுவார்கள்.

மல்லிகைப்பூவை நீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து ஆறியபின்பு குடித்து வந்தால் மாதவிலக்கின் போது ஏற்படும் பிரச்சினைகள் குணமடையும். மல்லிகைப் பூக்களைக் கொண்டு எடுக்கப்படும் எண்ணெயானது கர்ப்பப்பைக்கு வலுவூட்டி பிரசவத்தின் போது உண்டாகும் வலியை குறைத்து சுகப்பிரசவத்திற்கு உதவுகிறது.
அதுபோலவே கருப்பையில் உண்டாகும் புண்கள், கட்டிகள் நீங்க மல்லிகை எண்ணெயை பயன்படுத்தலாம். மல்லிகை எண்ணெய் மூலம் நாள்பட்ட தழும்புகள், அரிப்புகள் குணமடையும்.

 

Pexels

மல்லிகைப்பூக்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சளியினால் ஏற்படும் மூச்சடைப்பு, இருமல் போன்ற தொந்தரவுகள் நீங்க மல்லிகைப்பூக்கள் உதவி செய்கின்றன..
மல்லிகை மொட்டுக்களை எடுத்து புண்கள் காயம்பட்ட இடங்கள் கொப்புளங்கள், வீக்கங்கள் போன்றவற்றிற்கு அரைத்து பூசினால் உடனே குணமடையும்.

வெளி உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் இருக்கலாம். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். இப்படிப்பட்டவர்கள் 4நான்கு மல்லிகைப்பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இப்படி அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும் .இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம் பூச்சி புழுக்கள் அழியும்.

Pexels

இப்போதைய காலத்தில் மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்.. உங்களுக்கு விருப்பமான அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல்சூடும் மாறும். இதுபோன்ற பல மகத்துவங்களைக் கொண்டுள்ளதுதான் மல்லிகை பூ.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் தாய்மார்கள் மல்லிகை மூலம் வலிநிவாரணம் பெற முடியும். மார்பில் கட்டியுள்ள தாய்ப்பாலை வெளியேற்றவும், வலியை நீக்கவும் மல்லிகைப் பூ சிறந்த மருந்தாகும். மல்லிகைப் பூவை அரைத்து மார்பகத்தில் பற்றுபோட்டால் அந்த வலி குறைந்து, பால் சுரப்பதும் படிப்படியாக நிற்குமாம்.

 

Pexels

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

20 Dec 2019

Read More

read more articles like this

Read More

read more articles like this
good points logo

good points text