‘பியார் பிரேமா காதல்’ பட வெற்றிக்குப்பின் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்(Ispade Rajavum Idhaya Raniyum) ஹரீஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத், பொன்வண்ணன், மாபாகா ஆனந்த், பால சரவணன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் (Ispade Rajavum Idhaya Raniyum) படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி இருக்கிறார்.இஸ்பேட் ராஜாவாக ஹரீஷ் கல்யாண் ரசிகர்களின் இதயங்களை வென்றாரா? என்பதை இங்கே பார்க்கலாம்.
கதைக்கரு
சிறு வயதிலேயே தனது அம்மா விட்டு சென்றுவிட அப்பா பொன்வண்ணனின் அரவணைப்பில் ஹரீஷ் கல்யாண்(Harish Kalyan) முரட்டு இளைஞராக வளர்கிறார். நண்பர்கள் பால சரவணன், மாபாகா ஆனந்த்துடன் இணைந்து ஒரு பார்ட்டிக்கு செல்லும் ஹரீஷ் அங்கு ஹீரோயின் ஷில்பா மஞ்சுநாத்தை சந்திக்கிறார். அப்போது இருவருக்கும் ஏற்படும் முட்டல், மோதல்கள் பின்பு காதலாக உருவெடுக்கிறது. இருவரும் காதலிக்கத் தொடங்கிய பின்னர் ஹரீஷ் கல்யாண்(Harish Kalyan) தனது காதலி எப்போதும் உடனிருக்க வேண்டும் என்பதற்காக அவரிடம் சொல்லாமலேயே பதிவுத்திருமணத்துக்கு ஏற்பாடு செய்துவிடுகிறார்.
இதனையறியும் ஷில்பா இதற்கு உடன்பட மறுக்கிறார். பிரச்சினை முற்றி ஹரீஷ் கல்யாண்(Harish Kalyan) ஷில்பா வீட்டில் பிரச்சினை செய்து போலீஸ் ஸ்டேஷன் செல்ல, அவரைக் காப்பாற்ற பெற்றோர் சொல்லும் மாப்பிள்ளையை மணந்து கொள்வதாக ஷில்பா வாக்களிக்கிறார். இதனையறியும் ஹரீஷ் போதைப்பொருள்களுக்கு ஆளாகிறார். ஹரீஷ்-ஷில்பா இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? ஹரீஷ் தனது அம்மா விட்டுச்சென்ற காரணத்தைப் புரிந்து கொண்டாரா? என்பதே இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்((Ispade Rajavum Idhaya Raniyum) படத்தின் கதைக்கரு.
ஹரீஷ் கல்யாண்(Harish Kalyan)
பியார் பிரேமா காதல் படத்தில் அப்பாவி இளைஞராகக் கவர்ந்த ஹரீஷ் இதில் முரட்டு இளைஞராக வருகிறார். அம்மாவை நினைத்து வருந்துவது,
அன்பிற்காக ஏங்குவது, காதலியைப் பிரிந்து விடுவோமோ? என்று கலங்குவது என தன்னுடைய பாத்திரத்துக்கு முடிந்தவரை நியாயம் சேர்க்கிறார். எனினும் அவரது பாத்திரம் குறித்த தெளிவின்மை இல்லாததால் படத்துடன் நம்மால் ஒன்ற முடியவில்லை. தனது நடிப்புக்குத் தீனி போடக்கூடிய இயக்குநர்களுடன் ஹரீஷ் கல்யாண் கைகோர்க்கும் பட்சத்தில் அவருக்கு கோலிவுட்டில் பிரகாசமான எதிர்காலம் கிடைக்க வாய்ப்புள்ளது.
ஷில்பா மஞ்சுநாத்
ஹீரோயின் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எந்த வரையறையும் இல்லாமல், தெளிவான கதாபாத்திரத்தின் துணையுடன் ஷில்பா நடிப்பில் ஆங்காங்கே ஸ்கோர் செய்திருக்கிறார். ஆனால் ஹரீஷ் கல்யாண்-ஷில்பா மஞ்சுநாத் இருவருக்கும் இடையில் எதிர்பார்த்த கெமிஸ்ட்ரி வொர்க்அவுட் ஆகவில்லை. இதனால் இருவருக்கும் இடையிலான காதல் காட்சிகள் மனதில் பதிய மாட்டேன் என்கிறது.
ரஞ்சித் ஜெயக்கொடி
முதல் பாதியில் ஒன்லைனர்கள், காட்சிகள் என கதையை வேகமாக கொண்டு சென்றிருக்கும் ரஞ்சித் ஜெயக்கொடி இரண்டாம் பாதியில் கதையை சவ்வு மிட்டாய் போல இழுக்கிறார். நம்பகத்தன்மை இல்லாத காட்சிகள், தெளிவில்லாத திரைக்கதை ஆகியவற்றால் எப்போதடா படம் முடியும் என ரசிகர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு இரண்டாம் பாதியில் சொதப்பி இருக்கிறார். இதுதவிர காதலில் தோல்வியுற்றால் இளைஞர்கள் தண்ணி, தம்மு, கஞ்சா போன்ற கெட்ட பழக்கங்களுக்கு ஆளாக வேண்டுமென எதுவும் கட்டளை இருக்கிறதா? என்பது தெரியவில்லை. சிறப்புத்தோற்றத்தில் வந்து ஹரீஷிடம் காதலில் தோல்வியுற்றால் பெண்களைக் கொல்ல வேண்டும் என அறிவுரை வேறு சொல்லுகிறார்.தமிழகம் இப்போது இருக்கும் நிலையில் இதுபோன்ற காட்சிகள் அவசியம் தானா இயக்குநரே?
சாம் சி எஸ்
படத்தில் பொன்வண்ணன், சுரேஷ் என அனுபவமிக்க சீனியர் நடிகர்கள் இருந்தும் அவர்களுக்குப் போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. கவின்ராஜ் ஒளிப்பதிவும், சாம் சி.எஸ். இசையும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்((Ispade Rajavum Idhaya Raniyum) படத்துக்குப் பலம் சேர்க்கின்றன. பாடல்களைப் பொறுத்தவரை கண்ணம்மா பாடல் மட்டும் கவனிக்க வைக்கிறது. பவன்ஸ்ரீகுமார் கத்தரி போடுவதில் இன்னும் கண்டிப்பு காட்டியிருக்கலாம்.
மொத்தத்தில் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்'((Ispade Rajavum Idhaya Raniyum) நேரமும், பணமும் இருந்தால் தாராளமாக பார்க்கலாம்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி !
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப்
ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான
மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.