logo
ADVERTISEMENT
home / வாழ்க்கை
நண்பர்கள் உறவினர்களுக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! (Happy Diwali Wishes In Tamil)

நண்பர்கள் உறவினர்களுக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! (Happy Diwali Wishes In Tamil)

தீபாவளி என்றாலே, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதூகலம் தான். எப்போது தீபாவளி வரும் என்று சில மாதங்களுக்கு முன் இருந்தே அனைவரும் ஆவலுடன் காத்திருக்கத் தொடங்கி விடுவார்கள். எத்தனை புராண காரணங்கள் இந்த பண்டிகையை கொண்டாட இருந்தாலும், இந்த திருநாளில் அனைவரும் ஒன்று கூடி தங்கள் மகிழ்ச்சியையும், அன்பையும் பகிர்ந்து கொள்ள, இதை விட ஒரு சிறந்த நாள் கிடைக்குமா?

இந்த 2019ஆம் ஆண்டு, தீபாவளி பண்டிகை, அக்டோபர் மாதம் 3௦ஆம் நாள் வருகின்றது. இதற்கு மக்கள் இப்போது இருந்தே தங்களை தயார்படுத்திக் கொள்ள தொடங்கி விட்டனர். புது ஆடைகளும், வித விதமான பட்டாசு மத்தாபுக்களும், தித்திக்கும் இனிப்பு பலகாரங்களும், என்று மேலும் அடுக்கிக் கொண்டே போகலாம்.

இது மட்டும் அல்லாது, நீங்கள் உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், தீபாவளி வாழ்த்து கூற விரும்புவீர்கள் அல்லவா!

அப்படி என்றால், உங்களுக்காக இங்கே சில சுவாரசியமான தீபாவளி வாழ்த்துக்களும் (diwali wishes/ greetings), கவிதைகளும். இதை நீங்கள் உங்கள் மனதிற்கு அன்பானவர்களுடன் பகிர்ந்து கொள்ள பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றோம்.

ADVERTISEMENT

Diwali Wishes And Messages In English 

தீபாவளி வாழ்த்துக்கள் – அன்பான வாழ்த்துக்கள் (Happy Diwali Greeting In Tamil)

1. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து
இயற்கை அன்னைக்கும்
உயிரினங்கள் எவற்றிற்கும்
இடையூறு செய்யாமல்
கொண்டாடுங்கள் தீபாவளி
அதிரடி வெடியின்றி கந்தகப்
புகை எழுப்பாமல்
தெருவைக் குப்பை மேடாக்கமல்
இயற்கையைப் பேணும் வண்ணம்.

2. கரியாகும் தீமையால் அகிலமே மிளிரட்டும்
அரியென இளையோர்ச் சீறியே பாயட்டும்
பரிவோடு பண்பும் பாரினில் பரவட்டும்
பிரியாமல் உள்ளங்கள் பிணைந்தே இருக்கட்டும்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

3. மழையோடு பனியும் இதமாகப் பொழியட்டும்
அழைக்காமல் மேகமும் கருணையே காட்டட்டும
உழைக்கின்ற உழைப்பாளி உளமும் களிக்கட்டும்
தழைக்கட்டும் பசுமையும் இயற்கையும் நிலைக்கட்டும்
பொன்னான நன்னாளைப் பொலிவோடு வரவேற்போம்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

ADVERTISEMENT

4. ஏற்றமிகு வாழ்வு அமையப்பெற்று அனைவரும்
வாழ்வின் அனைத்து வறுமைகளும் நீங்கி
நிறைவான செல்வத்துடன் , நோய் நோடி இல்லாமல்
நலமுடன் வாழ இத்தீபதிருநாளில்வாழ்த்துகிறோம்.

5. ஒளிரும் தீபாவளி நோய் இல்லா வாழ்க்கையும் ,
நிறைந்த செல்வமும் நம் வாழ்வில் எல்லா வளமும் பெற்று
அன்புடனும் பாசத்துடனும் வாழ இனிய இந்த
தீபாவளி திருநாளில் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

6. மகிழ்ச்சியும் அன்பும் சந்தோஷமும் எல்லோருடைய
வாழ்க்கையிலும் ஏற்பட்டு எல்லா பிணிகளும் நீங்கி
வளமுடன் வாழ இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

7. இனிய தீபாவளி வாழ்த்துக்கள் மங்களம் நிறைய,
மகிழ்வொடு வாழ்த்துவம்!
எங்கெணும் பசியினில் துடியா வாழ்வும்
பேதங்கள் கூறிடாப் பிணைவும்
கருத்தினில் மோதலை கைலாகுடன் மதித்தலும்
ஒரு கரமாய்ப் பிணையும் நேசமும்
என்றென்றும் இனிது வாழ வழி காட்டும்.
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

ADVERTISEMENT

தீபாவளி பொன்மொழிகள் – (Happy Diwali Quotes)

Shutterstock

8. இன்றோடு துன்பங்கள் நீங்கி
என்றும் இன்பங்கள் மலரும்
தீபஒளியாக இந்த தீபாவளி அமையட்டும் ….
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்…

9. வாழ்த்துக்களை வார்த்தைகளால் பரிமாறி
வாழ்க்கையில் மகிழ்ச்சி மலர
வருகின்ற தீபஒளி திருநாளில்
தீயன கழித்து நல்லன கூட்டுவதே உண்மையில் தீபாவளி …..!!!
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

ADVERTISEMENT

10. புத்தாடையுடனே புன்னகையும்
இனிப்புடன் மகிழ்ச்சி பரிமாற்றங்களும்
விடியலின் முன்னே ஆரம்பம்
வெடிச்சத்த முடன் திருநாள் ஆனந்தம்!!!
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

11. ஒவ்வொரு இல்ல வாசலிலும்
ஒளிரும் தீபம் வரிசையிலே
குதூகலம் படைக்கும் தீபாவளி
அனைவர் வாழ்வில் ஏற்றும் தீப ஒளி!!!
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

12. பல வண்ணங்கள் கூடிய விளக்குகள் எங்கும் எரிகின்றது,
இனிப்புகள் எங்கும் நிறைந்திருக்கிறது,
வான வேடிக்கைகள் விண்ணை பிளக்கிறது,
எங்கும் மகிழ்ச்சி நிறைந்து வழிகிறது,
நாம் அனைவரும் கூடி இந்த இனிய தீபாவளியை கொண்டாடுவோம்,
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

13. ஏற்றமிகு வாழ்வு அமையப்பெற்று அனைவரும்
வாழ்வின் அனைத்து வறுமைகளும் நீங்கி
நிறைவான செல்வத்துடன்
நோய்நொடி இல்லாமல்
நலமுடன் வாழ இத்தீப திருநாளில் வாழ்த்துகிறோம்!

ADVERTISEMENT

தீபாவளி கவிதைகள் ( Diwali Poems)

14. சுடரின் நடனம் தொடரும் தீபங்களில்,
காணும் போதே களிப்புறும் உள்ளம்.
வானின் இருளில் வண்ணங்கள் தூவி,
மிளிரும் ஒளியில் சிதறும் பூக்கள்.
பட்டுத் துணியும் பரிசுப் பொருளும்,
கிடைத்திட‌ இன்புறும் சின்னஞ் சிறார்கள்.
என்றும் இனிமையாய் இவ‌ர்க‌ளைப் போலே,
இருந்திட வாழ்த்துக்கள் இத்தீபாவளி நன்நாளில் !

15. உன் ஆசைகளும் கனவுகளும் நிறைவேறட்டும்,
இந்த நாள் உனது நாளாக அமையட்டும்,
இருள் நீங்கி உன் வாழ்வில் ஒளி வீசட்டும்,
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

16. தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
ஆய கலைகள் அணிந்தொளிர! – மாயவனே!
இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
அன்பாம் அமுதை அளி!
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

17. புது பட்டாடை அணிந்த
பெண்களின் கூந்தலில் இணைந்த
மதுரை மல்லிகை கம கமவென
வாசனையை அள்ளித் தெளிக்க
மாவிலைத் தோரணங்கள் மாக் கோலங்கள்
இல்லங்களை அலங்கரிக்க
பட்டாசு சத்தத்தில் குதூகலமாய்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

ADVERTISEMENT

18. வல்லமையின் வல்லமையே நல்லதையே தருபவரே
உள்ளமெலாம் தமிழுணர்வு ஊற்றெடுத்து நிற்பவரே
எல்லையிலா ஆனந்தம் என்றுமுமை சேர்ந்தணைய
இனியதீபாவளி வாழ்த்தை இதயத்தால் ஈய்ந்தேனம்மா !

19. அகல் விளக்கை புள்ளியாக இட்டு
தீபங்களின் ஒளியை கோலமாக வரைந்து
வாயில் தோறும் தீபங்கள் ஏற்றிடுவோமாக!
இறை அருள் பெற்றிடுவோமாக!
ஒளி காடும் வழி தீபாவளி என்று!
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

20. புத்தாடையின் பூரிப்பில்
இனிப்புகளின் சுவையூற
ஒளி தீபம் வீதி எங்கும்
உற்சாகம் உள்ளமெங்கும்
தீவ ஒளி திருநாளின்
அன்பார்ந்த வாழ்த்துக்கள்!

21. தீபாவளியே வருக வருக
தீமைகளெல்லாம் விலக
தீபங்கள் எல்லாம் எரிக- அதில்
தீவினையெல்லாம் ஒழிக!
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

ADVERTISEMENT

22. நிம்மதி எங்கணும் பெருகிட
சுபமங்கலம் எங்கும் பொங்கிட
தீப ஒளியாய் ஒளி வெள்ளம் எங்கும் பெருக
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

 

தீபாவளி வாழ்த்துக்கள் – (Deepavali Wishes)

Pixabay

ADVERTISEMENT

23. மனசெல்லாம் மத்தாப்பாய்
மகிழ்வினில் மனம் பட்டாசாய்
இனிப்போடும் களிப்போடும்
இனம்சேர்ந்து கொண்டாடுவோம்!
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

24. தீபங்கள் ஜொலிக்க, பட்டாசு வெடிக்க,
புது துணி உடுத்தி, மகிழ்ச்சியுடன் இந்நாளை
நீங்கள் கொண்டாட, என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
“நல்ல எண்ணங்கள்” என்ற தீப விளக்கை ஏற்றி வைத்து,
“இருள்” என்ற தீமையை அழிப்பதே தீபாவளி!
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

25. மத்தாப்புச் சிரிப்பால் மனங்கள் நிறையட்டும்
முத்தான நகைப்பில் முழுநிலவு ஒளிரட்டும்
நித்தமும் இல்லத்தில் மகிழ்ச்சியே நிலவட்டும்
சித்தமும் சிறந்தே சிந்தனையும் செழிக்கட்டும்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

26. தீபாவளி தீபாவளி தீபஒளி திருநாள் இது
தீபாவளி தீபாவளி தங்க திருநாள் அது
தெருவெல்லாம் மத்தாப்பு மனசெல்லலாம் சிரிப்பு
வாயெல்லாம் இனிப்பு வயிறெல்லாம் களிப்பு
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

ADVERTISEMENT

27.ஒரு கிண்ண எண்ணையில்
உறக்கம் விழித்த குளியலில்
அப்பா தந்த காலர்ச் சட்டையில்
அம்மா சுட்ட உளுந்து வடையில்
அடுத்த வீட்டு மைசூர்ப் பாகில்
அண்ணன் தங்கையின் அன்புப் பரிமாறலில்
சீனா சிவகாசிப் போட்டிகள் புதைய
சிரிக்குது தீபாவளி சத்தமில்லாமலே
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

28. புதுமைப் புதுவரவாய் ;
இன்பம் இனிதினிதாய்;
ஒளிரும் தீபஒளியில்
மிளிரட்டும் இந்நாள்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

29. தீபங்களின் ஒளியும் .,
உங்கள் அனைவரின் புன்னகையின் ஒலியும்
ஒன்றாய் இணைந்து ஒரு புது சந்தோசா ஒளி
உங்கள் இல்லங்களில் ஒலிக்கட்டும் .!
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

30. அசுரன் அழிந்து
ஆனந்தம் கிடைத்ததை போல
நம் வாழ்வில் உள்ள
எல்லா தடை கற்களும்
படிகற்களாக மாறி
துன்பங்கள் நீங்கி
இன்பங்கள் மலர
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

ADVERTISEMENT

31. பற்ற வைத்தால் வெடித்துக் கரியாகும்
பட்டாசுக்கு செலவிடும் பணத்தை
பசியுற்ற மக்களுக்கு பிரித்தளித்து
ஏழையின் சிரிப்பில் காண்பதே ஏற்றமிகு தீபாவளி !
ஆலயம் சென்று வழிபாடு – நன்னாளினில்
சுற்றம் கூடல் பிற்பாடு
விதவிதமான பட்சணங்கள்
வீடுகள் தோறும் பங்கீடு!!!
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

32. இறைவன் உனக்கு எல்லா வளங்களும், ஆரோக்கியமும் கொடுக்கட்டும்,
மகிழ்ச்சியும், சந்தோசமும் உனதாகட்டும்,
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் – (General Diwali Wishes In Tamil)

33. இல்லத்தில் அகலொளிர
இன்பத்தில் மனம் ஒளிரட்டும்
உள்ளத்தில் இருள் ஒழிந்து
எண்ணத்தில் அருள் விழிக்க
வண்ணமாய் வாழ்வு செழிக்கட்டும்….
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

34. புத்தாடை உடுத்தி, இனிப்புகளை சுவைத்து,
உள்ள அன்போடு உறவுகளை இணைத்து,
மன வருத்தங்களை களைந்து,
இனிதே வரவேற்போம் இன்பத் தீபாவளியை.
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்!

ADVERTISEMENT

35. சுடரின் நடனம் தொடரும் தீபங்களில்,
காணும் போதே களிப்புறும் உள்ளம்.
வானின் இருளில் வண்ணங்கள் தூவி,
மிளிரும் ஒளியில் சிதறும் பூக்கள்.
பட்டுத் துணியும் பரிசுப் பொருளும்,
கிடைத்திட‌ இன்புறும் சின்னஞ் சிறார்கள்.
என்றும் இனிமையாய் இவ‌ர்க‌ளைப் போலே,
இருந்திட வாழ்த்துக்கள் இத்தீபாவளி நன்நாளில் !
அனைவருக்கும் இன்பத் தீபாவளி வாழ்த்துக்கள் !!

36. தீப ஒளியில், மனதின் இருள் நீங்கி
வாழ்வின் துயர் தீர்ந்து, எண்ணியதெல்லாம் நிறைவேறி
எளியவருக்கு உதவி செய்து, மகிழ்ந்திருந்து
எல்லோர் இல்லங்களிலும் மகிழ்ச்சி தீபம் மலரட்டும்…
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

37. தீபங்கள் எரியும் கார்த்திகையிலே
தீமைகள் அணையை திக்குகள் எங்கும் தீந்தமிழ் பரவ
நல்லதே செய்ய… தினம் தின்னம் கொண்டோர் திடமாய் வாழ…
தீப ஒளியினால் இங்கே திசைகள் எங்கும் பரவட்டும் அன்பு ஒளி இத்திரு நாளில்…
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

38. குத்து விளக்கின் மங்கலம்
குவலயம் மகிழப் பொங்கிடும்
வெற்றியை தந்திடும்
மகிழ்ச்சி பொங்க, செல்வம் செழிக்க
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

39. ஏற்றமிகு வாழ்வு அமையப்பெற்று அனைவரும்
வாழ்வின் அனைத்து வறுமைகளும் நீங்கி
நிறைவான செல்வத்துடன் , நோய் நோடி இல்லாமல்
நலமுடன் வாழ இத்தீபதிருநாளில்வாழ்த்துகிறோம்.

ADVERTISEMENT

40. மனசெல்லாம் மத்தாப்பாய், மகிழ்வினில் மனம் பட்டாசாய்
இனிப்போடும் களிப்போடும், இனம்சேர்ந்து கொண்டாடுவோம்
இல்லத்தில் அகலொளிர, இன்பத்தில் மனம் ஒளிரட்டும்
உள்ளத்தில் இருள் ஒழிந்து, எண்ணத்தில் அருள் விழிக்க
வண்ணமாய் வாழ்வு செழிக்கட்டும்….
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

41. மத்தாப்பு சிரிப்பு மத்தளம் கொட்டுதடி
மகிழ்வில் மனம் மான்குட்டியாய் துள்ளுதடி
சங்கு சக்கரம் எங்கும்! தரையில் சுத்துதடி
வாங்கிய பட்டாசு எல்லாம்! ஓங்கி வெடிக்குதடி!
பட்டாடை பலகாரம், பகிர்ந்துண்ணும் கலாச்சாரமடி
தீமை இருளகற்றி திருவெளிச்சம் பரவுதடி
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

42. உறவினரோடு கொண்டாடும் தீபாவளி
பண்டம் , பலகாரம் சுவைக்க ,
பட்டாசு வெடித்து கொண்டாடும் தீபாவளி
கவலைகள் காற்றோடு பறக்க,
நண்பர்களோடு கொண்டாடும் தீபாவளி !
நண்பர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி பொங்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் !!

குடும்பத்தினர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் – (Diwali Wishes For Family)

Shutterstock

43. சிதறும் பட்டாசுஒலி வாழ்வின்
சிரிப்பொலியாக மாறட்டும்
மிளிரும் மத்தாப்பு ஒளியும்
ஒளிரும் வாழ்வாய் இனிக்கட்டும்
தேனாய் இனிக்கும் இனிய
நட்புகள் நீங்கள் என்றென்றும்
வானாய் உயர்ந்து புகழுடன்
வாழ்வாய் என வாழ்த்துகிறேன்….
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

ADVERTISEMENT

44. அதிகாலை எழுந்ததும், ஆசை முகத்துடன்
ஓசை நயம் கண்டு, ஒய்யாரமாய் நடைநடந்து
வாசல் வெளியில் சென்று, வண்ண வண்ண
வான வெடிகளை பார்த்தபடியே, கொஞ்சும் மழலைமுகத்துடன்
முகம் நோக்கின் தாயின் வாய்மொழியில்
தலைமுதல் பாதம்வரை, தழுவிடும் மூவண்ண எண்ணையில்
முத்து குளியல் கண்டு, முழுமுதற் கடவுளின் வரம் பல கொண்டு
புத்தாடை மேனியிலே, புதுபுது ரகத்துடன் அணிகலன்கள் பூட்டி
அன்னையின் ஆசிர்வாதத்துடன் இனிப்புகள் உண்டு
மகிழ்ச்சியா ஒரு வாழ்த்து,
இனிய தீபாவளி திருநாள்!

45. உறவுகளுக்குள் மனக்கசப்பு உண்டெனில்
நல்ல நாளில் நாடிப்போய்
விரிசலால் பிரிவு வருமுன்பே
உறவை புதுப்பிப்பதே உன்னத தீபாவளி !
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

46. தொலைக்காட்சியின் உத்தியால் ஈர்க்கப்பட்டு
விழியில் விளக்கெண்ணெய் விட்டவாறு
விலைமதிப்பில்லா நேரத்தை தொலைக்காமல்
வீட்டாருடன் உறவாடுவதே உல்லாச தீபாவளி !
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!


47. இந்த தீபாவளி நன்னாள் எங்கும் தன் ஒளியை நிரப்பட்டும்,
ஒவ்வொரு குடும்பங்களிலும் மகிழ்ச்சியை பரப்பட்டும்,
ஒவ்வொருவர் முகத்திலும் புன்னகையை கொடுக்கட்டும்,
மகிழ்ச்சியும், புன்னகையும் என்றென்றும் அவர்கள் மனதில் தங்கட்டும்,
உங்கள் குடும்பத்திற்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

ADVERTISEMENT

48. தித்திக்கும் தீபாவளியை நேசத்தோடு கொண்டாடுவோம்.
உறவுகள் செழித்திட, இரவுகள் ஒளிவீசிட அர்த்தமுள்ள தீபாவளியில் அகமகிழ்வோம்.
பெரியோர்கள் ஆசிப்பெற்று, இனிப்பு பலகாரங்களை ஒன்றாய் சுவைத்து அன்பை பரிமாறிக்கொள்வோம்.
நேசத்திற்குரிய அனைத்து உள்ளங்களுக்கும்
இனிய தீபாவளி வாழ்த்துகள்!

49. இது தீபங்களின் விழா நாள், தீமைகளின் எரி நாள்
நன்மைகளின் திரு நாள், உறவுகளின் ஒரு நாள்
சந்தோசத்தின் மழை நாள், இன்பத்தின் சாரல்கள்
பொழியும் பொது நாள், இனிமைகளின் மொட்டுக்கள்
மலரும் நறுமண நாள், இன்று போல் என்றும்
நன்மைகள் சிறக்கட்டும், வன்மைகள் பெருகட்டும்
துயரங்கள் விலகட்டும், நலங்கள் வளரட்டும்
இன்பங்கள் பொங்கட்டும்
அன்பு நெஞ்சங்கள் யாவருக்கும்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

50. ஒளிரும் தீபங்களின் கோலம்
ஓயாத மகிழ்வைத் தரும்
மின்னும் ஒளியோ மீளா வெற்றியைத் தரும்
இன்பங்கள் நிலைக்கட்டும். துன்பங்கள் ஒதுங்கட்டும்.
இல்லத்தில் ஒலியும் ஒளியும் பரப்பட்டும்.
குடும்பத்தோடு குதுகளம் சிறக்கட்டும்.
அன்பு உறவுகள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!

51. இதோ வந்துவிட்டாள் தீபக் கன்னி
ஆயிரம் தீபங்கள் சூழ்ந்து சுடர்விட
வேதியர் வேதம் ஓதிட
மங்கள வாத்தியங்கள் முழங்கிட
அழகு மங்கையர் ஆராத்தி எடுக்க
குழந்தைகள் குதூகலிக்க வந்துவிட்டாள் ……..
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

ADVERTISEMENT

52. புதியன கைகூடி பழையவை கழியும் வேளை இது
புது உறவுகள் புது நட்புகள் தேடிவரும் தோழமைக்கு முதல் வணக்கம்!
அன்பாலே கட்டிடுவோம் இங்கு ஓர் இல்லம்
அதில் அழைத்திடுவோம் நம் உறவுகளை
இனியன பேசுவோம் இனியன பகிர்வோம்
இனிதே கொண்டாடுவோம் இத் தீபாவளியை
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

நண்பர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் – (Diwali Wishes For Friends)

53. மத்தாப்பு புன்னகை நிறைந்திருக்க
சரவெடி சிந்தனை பெறுகிருக்க
அணுகுண்டு சாதனை படைத்து
ஒளிரும் தீபங்களின் ஒளியால்
வாழ்வில் இருள் விலகி,
நல்லவை கூடி, இன்பங்கள் பெருகி
நேசம் வளர்த்து, உள்ளதை பகிர்ந்து,
நண்பர்கள் சேர்ந்து மகிழ்ச்சியில் திளைத்து,
இனிப்புகள் உண்டு, ஆரோக்கியம் கண்டு,
உள்ளங்கள் நிறைக்கும்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

54. பலவித பலகாரங்கள் பக்குவமாய் செய்து
சுற்றம்நட்புடன் பகிர்வதற்கு பதிலாக
சிலவறியோர் குடிசை கதவுதட்டி
இன்முகத்துடன் தருவதே தித்திக்கும் தீபாவளி !

55. திரியும் எண்ணையும் வேறு வேறாய் இருந்தும்
ஒரே மாதிரி ஒளி பொழிவது போல
நானும் நீயும் வேறுபட்டும்
தீபாவளி வாழ்த்தில் இணை ஓமே !!
நண்பர்களுக்கு என் இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்!

ADVERTISEMENT

56. ஒளி மயமான, தீப ஒளி திருநாளை,
புத்தாடை உடுத்தி, இனிய பலகாரங்களோடு ,
அன்பான உறவுகளோடு , இயற்கையை மாசுபடுத்தாமல்,
இன்பமாக கொண்டாட, நண்பர்களுக்கு என்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

57. எங்கும் நிறைந்திருக்கும் ஒளியை போல் உன் வாழ்வில் ஒளி பரவட்டும்,
உனது நாட்கள் எல்லாம் இனிதாக அமையட்டும்,
வெற்றி உனதாகட்டும், நண்பர்களுக்கு
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

58. எத்திக்கும் வேட்டுகள் முழங்க
தித்திக்கும் இனிப்புகளின் சுவையாய்
எதிரொலிக்கும் தமிழ் உளியாய் திகட்டாத
தீபவொளி திருநாள் வாழ்த்துக்கள் தோழி…….

59. சிதறும் பட்டாசுஒலி வாழ்வின் சிரிப்பொலியாக மாறட்டும்
மிளிரும் மத்தாப்பு ஒளியும் ஒளிரும் வாழ்வாய் இனிக்கட்டும்
தேனாய் இனிக்கும் இனிய நட்புகள் நீங்கள் என்றென்றும் வானாய் உயர்ந்து புகழுடன் வாழ்வாய் என வாழ்த்துகிறேன்….
இன்றோடு துன்பங்கள் நீங்கி என்றும் இன்பங்கள் மலரும்
தீபஒளியாக அமையட்டும் …. இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்…

ADVERTISEMENT

60. பொன்னை ஒக்கும் மத்தாப்பு
புதிதாய் அணிந்த சிற்றாடை
அன்னை செய்த பலகாரம்
அன்பைக் காட்டும் பரிமாற்றம்
முன்னை கால நினைவலைகள்
முந்தி வந்து இனித்தாலும்
இன்றும் அதுபோல் மகிழ்வுடனே
இனிதாய் வாழ வாழ்த்துகிறேன்!!

61. தீபத் திரு நாளில்
தீயைப் போல் நிமிர்ந்து நிற்போம்…….
தீய எண்ணங்களுக்குத் தீயை மூட்டுவோம்.
தீய செயல்களுக்குத் தீயை மூட்டுவோம்.
தீய குணங்களுக்குத் தீயை மூட்டுவோம்.
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

 

மேலும் படிக்க – விழாக்கால நேரங்களில் உங்களை விதம் விதமாக அலங்கரிக்க சில குறிப்புகள்

பட ஆதாரம் – Pexels,Pixabay

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம்இந்திதமிழ்தெலுங்குமராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

18 Sep 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT