logo
ADVERTISEMENT
home / அழகு
சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியத்திற்கு கொய்யா இலைகள்!

சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியத்திற்கு கொய்யா இலைகள்!

கொய்யாப்பழங்களை பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். கொய்யாபாழங்கள் பல வகைகளிலும், ருசிகளிலும் கிடைகின்றன. மேலும் இந்த பழத்தில் பல ஆரோக்கிய பலன்களும் உள்ளது. ஆனால், அனைவருக்கும் இந்த பழத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இந்த மரத்தின் இலைகளுக்கு கொடுப்பதில்லை. எத்தனை பேர்களுக்குத் தெரியும், கொய்யா (guava) இலைகளில் பல அற்புத பலன்கள் உள்ளது என்று?

கொய்யா இலைகள் சரும மற்றும் தலைமுடி ஆரோக்கியத்திற்கு (skin hair growth) பெரிதும் பயன்படுகின்றது. இந்த இலைகளை சரியான முறையில் பயன்படுத்தும் போது, நீங்கள் எதிர் பார்த்த பலன்களை நிச்சயம் பெறலாம். எப்படி இந்த இலைகள் உங்களுக்கு பலன் தருகின்றது என்று இங்கே பார்க்கலாம்!

தலைமுடி ஆரோக்கியத்திற்கு கொய்யா இலைகள்

கொய்யா இலைகளை தலைமுடிக்காக பயன்படுத்தும் போது உங்களுக்கு கிடைக்கும் குறிப்பிடத்தக்க பலன்கள் என்னவென்றால்:

  • இதில் வைட்டமின் C நிறைந்துள்ளதால் முடி உதிர்வு தடுக்கப்படும்
  • இதில் வைட்டமின் B மற்றும் C நிறைந்துள்ளதால் முடி வளர்ச்சியை அதிகப்படுத்துவதோடு, அடர்த்தியையும் உண்டாக்கும்
  • இதில் வலி நிவாரணி, அழற்சி எதிர்ப்பு, ஆக்சிஜனேற்றம் மற்றும் ஆண்டிமைக்ரோபியல் போன்ற பண்புகள் உள்ளதால் தலைமுடி வேர்களுக்கு அதிக சக்தியை கொடுக்கின்றது. அதனால் முடி உதிர்வு குறைகின்றது (கூந்தல் வளர்ச்சி)
  • இந்த இலைகளின் சாறு நன்கு சருமத்தில் ஊடுருவுவதால், அரிப்பு, பொடுகு மற்றும் வறட்சி போன்ற பிரச்சனைகள் தலையில் ஏற்படுவதில்லை
  • இதில் நிறைந்திருக்கும் விடமஈங்கள் கொலஜென் செயல்களை அதிகப்படுத்துவதால் ஆரோக்கியமான தலைமுடியை பெற உதவுகிறது
  • தலைமுடி சேதம் அடைவதில் இருந்து பாதுகாப்பது, ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவது, மற்றும் சூரிய கதிர்களிடம் இருந்து பாதுகாப்பது போன்ற பலன்களை இந்த கொய்ய இலைகள் தருகின்றது

ADVERTISEMENT

Pexels

எப்படி கொய்யா இலைகளை தலைமுடி வளர்ச்சிக்கு பயன்படுத்துவது?

தேவையான பொருட்கள்

1௦ கொய்யா இலைகள்
ஒரு லிட்டர் தண்ணீர்
துண்டு

செய்முறை

ADVERTISEMENT

இலைகளை நன்கு அரைத்து சாறு எடுத்துக்கொள்ளவும்

1. பாதுகாப்பான ஷாம்பூ பயன்படுத்தி தலைமுடியை அலசிக் கொள்ளவும்
2. துண்டை பயன் படுத்தி ஈரத்தை நன்கு உலர்த்தவும்
3. இப்போது இந்த இலைகளின் சாரை வேர்களில் நன்கு தேய்க்கவும்
4. மிதமாக மசாஜ் செய்யவும்
5. பின் அப்படியே 2 மணி நரதிர்க்கு விட்டு விடவும்
6. இதனை இரவு முழுவதும் கூட விட்டுவிடலாம்
7. பின் மிதமான சூடு உள்ள தண்ணீரில் தலைமுடியை அலசி விடவும்

உங்களுக்கு தலைமுடி உதிர்வு பிரச்சனை அதிகமாக இருந்தால், வாரத்திற்கு இரண்டு முறை இதனை செய்யலாம்.

சரும ஆரோக்கியத்திற்கு கொய்யா இலைகள்

கொய்யா இலைகள் எப்படி சரும ஆரோக்கியத்திற்கு பலன் தருகின்றது?

முகத்தில் உள்ள கரும் புள்ளிகள் மற்றும் வளையங்களை போக்க உதவுகின்றது

ADVERTISEMENT
  • இதில் அண்டிசெப்டிக் பலன்கள் உள்ளதால் முகப்பரு மற்றும் பக்டீரியாவால் ஏற்படும் பிரச்சனைகளை போக்க உதவுகின்றது
  • மூக்கின் நுனியில் இருக்கும் கருமுள் போக்க உதவுகின்றது
  • இளமையான சருமம் மற்றும் அழகைப் பெற உதவுகின்றது. இதனால் முதுமையாகும் போது ஏற்படும் சரும சுருக்கம் மற்றும் மெல்லிய கோடுகள் மறைகின்றது
  • சருமத்தில் அரிப்பு இருந்தால், அதனை போக்க இந்த இலைகள் உதவுகின்றது

1. இளமை தோற்றத்தை பெற எப்படி கொய்யா இலைகளை பயன்படுத்துவது?

Pexels

தேவையான பொருட்கள்:

கொய்யா இலைகள்
தயிர்

ADVERTISEMENT

செய்முறை

1. தேவையான அளவு கொய்யா இலைகளை எடுத்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்
2. இதனுடன் சிறிது தயிர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்
3. இந்த கலவையை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் அப்படியே விட்டுவிடுங்கள்
4. அதன் பின் மிதமான சூடு இருக்கும் தண்ணீரில் முகத்தை கழுவி விடுங்கள்
5. இதனை வாரம் இரண்டு முறையாவது செய்து வந்தால் நல்ல பலனை எதிர் பார்க்கலாம்

2. மூக்கில் இருக்கும் கருமுள்ளை போக்குவது எப்படி?

தேவையான பொருட்கள்

நன்கு மசித்த கொய்யா இலைகள்
பன்னீர்

ADVERTISEMENT

செய்முறை

1. கொய்யா இலைகளை சிறிதளவு எடுத்து நன்கு மசித்துக் கொள்ளவும்
2. இதனுடன் சிறிது பன்னீர் அல்லது ரோஸ் வாட்டர் கலந்து கொள்ளவும்
3. இதனை மூக்கின் நுணி மற்றும் முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்யவும்
4. இப்படி செய்யும் போது இறந்த அணுக்கள் வெளியேறி விடும்
5. இப்படி வாரம் இரண்டு அல்லது மூன்று முறையாவது செய்தால் கருமுள் அகன்று முகத்திற்கு நல்ல பொலிவு கிடைக்கும்

3. பருக்களை போக்க

Pexels

ADVERTISEMENT

தேவையான பொருட்கள்

கொய்யா இலைகள் தேவையான அளவு

செய்முறை

1. கொய்யா இலைகளை அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்
2. இதனை நேரடியாக முகத்தில் தேய்த்து நன்கு மசாஜ் செய்யுங்கள்
3. சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடுங்கள்
4. இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன்களை விரைவில்  பெறலாம்

ADVERTISEMENT

4. சருமம் நல்ல நிறம் பெற

அனைவருக்கும் நல்ல பொலிவான மற்றும் சிவந்த சருமம் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும், அப்படி நீங்கள் எதிர் பார்த்தால், இந்த குறிப்பு உங்களுக்காக:

தேவையான பொருட்கள்

கொய்யா இலைகள்
முல்தானி மட்டி
பன்னீர் / ரோஸ் வட்டார்

செய்முறை

ADVERTISEMENT

1. தேவையான கொய்யா இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள்
2. இந்த இலைகளை நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்
3. இதனுடன் சிறிது முல்தானி மட்டி சேர்த்துக் கொள்ளுங்கள்
4. இதனுடன் சிறிது ரோஸ் வட்டார் சேர்த்து நன்கு கலக்கவும்
5. இந்த கலவையை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்யவும்
6. அப்படியே 3௦ நிமிடங்கள் விட்டு விடவும்
7. பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடவும்
8. இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலன்களைப் பெறலாம்

மேலும் படிக்க – அனைத்து வித சரும பிரச்சனைகளையும் தீர்த்து பொலிவான சருமத்தை பெற ஆக்ஸிஜன் பேஷியல்!

5. சருமத்தில் எண்ணை பிசுக்கை போக்க

Pexels

ADVERTISEMENT

தேவையான பொருட்கள்

5 கொய்யா இலைகள்
இரண்டு தேக்கரண்டி எழுமிச்சைபழச் சாறு

செய்முறை

1. கொய்யா இலைகளை எடுத்து நன்கு அரைத்துக் கொள்ளவும்
2. இதனுடன் இரண்டு தேக்கரண்டி எழுமிச்சைபழச் சாறு சேர்க்கவும்
3. இந்த கலவையை முகத்தில் தேய்த்து நன்கு மசாஜ் செய்யவும்
4. பின் சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவி விடவும்
5. இப்படி வாரம் இரண்டு அல்லது மூன்று முறை செய்தால் நல்ல பலனைப் பெறலாம்

ADVERTISEMENT

இது மட்டுமல்லாது, கொய்யா இலைகளில் நீங்கள் தேநீரும் செய்து அருந்தலாம். இது உங்கள் உடலுக்கு பல நன்மைகளைத் தரும். குறிப்பாக ஜீரணம், ரத்த ஓட்டம் சீராக இருப்பது, புத்துணர்ச்சி பெறுவது என்று பல பலன்களை நீங்கள் பெறலாம். 

மேலும் படிக்க – அனைத்து வித சரும பிரச்சனைகளையும் தீர்த்து பொலிவான சருமத்தை பெற ஆக்ஸிஜன் பேஷியல்!

பட ஆதாரம்  – Shutterstock

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

ADVERTISEMENT

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

05 Dec 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT