logo
ADVERTISEMENT
home / Food & Nightlife
நம் வாழ்வை ருசியாக்கும் சென்னை தெருவோரக் கடைகளின் அறிமுகம் Famous Street Food In Chennai

நம் வாழ்வை ருசியாக்கும் சென்னை தெருவோரக் கடைகளின் அறிமுகம் Famous Street Food In Chennai

உணவு நம் உடலை மட்டும் வளர்க்கவில்லை. உள்ளத்தின் உணர்வுகளையும் ஞாபகங்களையும் சேர்த்தே வளர்க்கிறது. அதனால்தான் எப்போதோ சிறுவயதில் நாம் சாப்பிட்ட உணர்வுகள் இன்றும் நம் ஞாபக நியூரான்களில் மிதந்து கொண்டிருக்கிறது. அதே சுவையுள்ள ஒரு உணவை இன்று சாப்பிட்டாலும் அந்த நியூரான்கள் சந்தோஷப்பூக்களை பூத்தபடி இருக்கின்றன.

உணவு என்பது உலகின் மற்ற முக்கிய விஷயங்களைப் போலவே தனக்கான வரலாறுகளைக் கொண்டுதான் இருக்கிறது. உணவின் சரித்திரம் என்பது உணவு உண்ணும் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய உண்மையாகும். street food எனப்படும் சென்னையின் தெருவோர கடைகளை இப்போது பார்க்கலாம்.

சென்னையின் தெருவோரக் கடைகளின் அறிமுகம் (Chennai Street Shops)

சென்னை என்றால் பீச் சுண்டல் மட்டும்தானா என்பவர்களுக்காகவே சென்னையின் சில புகழ்பெற்ற தெருவோர கடைகள் பற்றிய விபரங்களை தொகுத்து கொடுத்திருக்கிறோம்.

பாம்பே லஸ்ஸி (Bombay Lassi)

நகரத்தின் அகலமான சாலைகளின் இடையில் தென்படும் சந்துகளில் ஒரு சந்தில் இருக்கிறது இந்த பாம்பே லஸ்ஸி கடை. தேவி தியேட்டரின் பின்புறம் இருக்கிற இந்தக் கடையில் திக்கான லஸ்ஸி மட்டுமல்ல சூடான ஜிலேபி ரப்டி மற்றும் கச்சோரி கிடைக்கிறது. அமரக்கூட இடமில்லாத கடையாக இருந்தாலும் பல இடங்களில் இருந்தும் வரும் உணவுப் பிரியர்கள் இங்கே கூடி நின்றபடியே சுவைத்து திரும்புகின்றனர்.

ADVERTISEMENT

காளத்தி நியூஸ் பேப்பர் மார்ட் மைலாப்பூர் (Kalathi News Paper Mart)

மயிலாப்பூரில் மிக சிறிய இடத்தில் இருக்கும் இந்த கடை ஆஸ்திரேலியாவின் மாஸ்டர் செஃப் ஒருவரை வருகை தரும்படி ஈர்த்திருக்கிறது என்றால் இதன் சுவையைப் பற்றி யோசித்துக் கொள்ளுங்கள். செஃப் சாரா டாட் இங்கு வந்திருக்கிறார். இங்கு தயாரிக்கப்படும் ரோஸ் மில்க் உலக அளவில் ஃபேமஸ் ஆகியிருக்கிறது. வெறும் 15 ரூபாய்க்கு கிடைப்பது அதனை விட ஆச்சர்யமானது இல்லையா! அருந்தி மகிழுங்கள்.

இடம் 27, கிழக்கு மாட வீதி மைலாப்பூர் போன் 9840919797

அல்சா மால் (Alsa Mall Omlet)

எழும்பூர்காரர்களின் பிரியமான இடமே இந்த அல்சா மால் தான். இதற்குள்ளே சென்று ஷாப்பிங் செல்பவர்களை விட இதன் வாசலில் தள்ளு வண்டி கடையில் விற்கப்படும் பிரட் ஆம்லெட் இங்கே பிரபலமானது. ஒரு ஸ்பெஷல் பச்சை நிற சட்னி தடவப்பட்ட பிரட் ஆம்லெட்டின் சுவை உங்கள் துக்கங்களை சந்தோஷமாக மாற்றி விடும் வல்லமை வாய்ந்தது.

லிங்க்ஸ் புரசைவாக்கம் (Links Purasaiwalkam)

இந்த குறிப்பிட்ட உணவுக் கடைக்கு சென்னையில் பல்வேறு கிளைகள் இருக்கின்றன. பல்வேறு இடங்களில் கிளைகள் இருந்தாலும் இதன் ஆரம்ப வேரான புரசைவாக்கம் கடை எப்போதுமே ஸ்பெஷல்தான். தமிழ்நாட்டு முறுக்கில் மேற்கத்திய சீஸை துருவிப் போட்டு இவர்கள் தரும் புதுமையான சுவைக்கு பலர் அடிமை.

ADVERTISEMENT

ஜன்னல் கடை (Jannal Kadai)

ஒரு வீட்டின் ஜன்னலின் வழியே நீட்டப்படும் போண்டாக்களும் பஜ்ஜிக்களும் உலகின் ஒட்டு மொத்த சுவைகளையும் நம் நாக்கின் வழியே உள்ளே தள்ளுகிற ஒரு வழியாக இருந்தால் எப்படி இருக்கும்..! அப்படிதான் இருக்கிறது இந்த ஜன்னல் கடை.

12, 1, Ponnambala Vadhyar St, Vinayaka Nagar Colony, Mylapore, Chennai

2ண்ட் லேன் பீச் ரோடு (Second Lane Beach Road)

பர்மாவில் இருந்து நகர்ந்து வந்த மக்கள் சென்னையில் அதிகம் வசிக்கும் பகுதிதான் பர்மா பஜார். அங்கிருந்து சிறிது தூர தொலைவில் இருக்கும் இடம்தான் 2ண்ட் லேன் பீச் ரோடு. இங்கே பர்மியர்களின் பல்வேறு விதமான சுவைகளை நாம் அறிய முடியும். அத்தோ எனும் உணவு இங்கே பிரபலம்.

காக்கடா ராம் (Kakada Ram Prasad)

உங்களுக்கு சாட் உணவுகள் மீது விருப்பம் அதிகம் என்றால் நீங்கள் செல்ல வேண்டியது இங்குதான். கச்சோடி மற்றும் சமோசாக்கள் இங்கே பிரபலமான உணவு வகை. வடஇந்திய உணவு வகைகள் மிக அதிகமாக கிடைக்கும் கடை. தஹி கச்சோடி, பாதாம் பால் ஆகியவை இங்கே ஃபேமஸ் உணவுகள்.

ADVERTISEMENT

348/343, Mint Street, Sowcarpet, Nr Jain Temple, Elephant Gate, George Town, Chennai, +044 2538 2851

facebook

அன்மோல் மோஹித் லஸ்ஸி (Anmol Mohit Lassi)

நெரிசல்கள் நிறைந்த ஜார்ஜ் டவுன் மண்ணடி வீதியில் ஒரு மிக சிறிய கடைதான் இந்த லஸ்ஸிக் கடை என்றாலும் இங்கே தரப்படும் சுவைக்கவே பல உணவுப்பிரியர்கள் வரிசையில் நின்று வாங்கி செல்கின்றனர். சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமான இடமாக இந்த லஸ்ஸி கடை இருக்கிறது. இதன் தனித்துவமான சுவை உங்கள் நாவை மலர செய்யும்.

ADVERTISEMENT

#343, South Mint Street, Elephant Gate, George Town, Elephant Gate, George Town, Chennai, +098405 12252

அஜ்நபி ஸ்வீட் ஸ்டால் (Ajnabi Sweet Stall)

சென்னை ஜார்ஜ் டவுனில் உள்ள அஜ்நபி மிட்டாய் கடை மும்பை ஸ்ட்ரீட் ஃபுட்களை நினைவூட்டும் சுவையைக் கொண்டது. இங்கே கிடைக்கும் வடா பாவ் உங்களை மும்பைக்கே கூட்டிப் போகும் சுவை நிறைந்தது. பானி பூரி என்பதும் அதே போன்ற அற்புதமான சுவை தரும். அதன் இனிப்பும் புளிப்பும் சேர்ந்த சுவை உங்களுக்கு சில நிமிடங்கள் சொர்க்கத்தை காட்டி விடும். இதனைத் தவிர குஜராத் இனிப்பு வகைகள் இங்கே கிடைக்கிறது. மும்பை உணவை சுவைக்க விரும்புபவர்கள் இங்கே செல்லலாம்.

magic pin

ADVERTISEMENT

வைஷ்ணவி இட்லி கடை(Vaishnavi Idli Shop)

கிழக்கு அண்ணா நகரில் இருக்கும் இந்தக் கடை தென்னிந்தியா உணவான இட்லிக்குப் பெயர் போன கடை. பியூஷன் முறையில் புதுமைகளை புகுத்தி இவர்கள் தரும் உணவுகளின் சுவையும் தரமும் அபாரமானவை. இங்கே மிக ஃபேமஸான உணவு என்பது தட்டு இட்லி மற்றும் முறுக்கு சான்ட்விச் ஆகும்.

Bay 1 ground floor plot 91 Q block 4th main road Anna nagar east chennai – 9003008888

zomato

ADVERTISEMENT

ரிச்சி ஸ்ட்ரீட் சமோசா (Richie Street Samosa)

ஜனநெருக்கடி நிறைந்த ரிச்சி ஸ்ட்ரீட்டில் அங்குள்ளவர்களுக்காகவே தனியாக தயாரிக்கப்பட்ட உணவுதான் குட்டி சமோசா. அங்கிருக்கும் ஒரு சில டீ கடைகளில் இது ஃபேமஸ்! ஒரு தட்டு நிறைய சூடான குட்டி சமோசாக்களை அவர்கள் வைத்துக் கொடுக்கும் அழகிலேயே நமக்கு மனம் நிறைந்து விடும். அதனுடன் கூடவே ஒரு மசாலா டீ சாப்பிட்டால் அன்றைய நாள் நம் ஆத்மா நிம்மதியாக உறங்கும்.

bp

பட்னி பிளாசா கடை (Atni Plaza Kachori)

கச்சோரி எனப்படும் காரசாரமான உணவு சென்னை முழுதும் கிடைக்கத்தான் செய்கிறது. ஆனாலும் சூடான மொறுமொறுப்பான கச்சோரி வேண்டும் என்று விரும்புகிறவர்கள் NSC ரோடில் இருக்கும் பட்னி பிளாசா கடையை முற்றுகையிடுங்கள் ! உங்கள் கலோரிகள் அதிகரிப்பது பற்றிய கவலையே இல்லாமல் சாப்பிட்டுக் கொண்டே இருக்க செய்யும் சுவை கொண்டது பட்னி பிளாசா கச்சோரிகள் !

ADVERTISEMENT

இடம் NSC போஸ் ரோடு, பத்ரி கார்டன், ஜார்ஜ் டவுன் சென்னை.

Youtube

மன்சூக் ஸ்வீட் மற்றும் காரம் (Mansuk Sweet And Karam)

இனிப்பு என்றாலே அது வட இந்தியர்களின் இனிப்புதான் என்று சொல்லும்வகையில் இங்கே அத்தனை வகையான இனிப்புகள் கிடைக்கின்றன. 65 வருட பாரம்பர்யம் கொண்ட இந்த கடை இப்போது மூன்று கிளைகளைக் கொண்டுள்ளது. பாரம்பர்ய ராஜஸ்தானி உணவிற்கு பெயர் போனவை.இங்கே டோக்ளா, ஃபலூடா, ரசகுல்லா , சாட் ஆகியவை பிரபலமான உணவுகள்.

ADVERTISEMENT

pinterest

பெசன்ட் நகர் சுண்டல் (Besant Nagar Beach Sundal)

அது என்ன பெசன்ட் நகர் சுண்டல் மெரினா சுண்டல் நன்றாக இருக்காதா என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம். செய்முறை வித்யாசங்களால் பெசன்ட் நகர் சுண்டல் வேறுபடுகிறது. சுண்டலை ருசித்தபடியே பீச்சில் நடந்து கடலை ரசிப்பதும் அலாதியான சுவைதான் இல்லையா. தேங்காய் பூ மாங்காய் மற்றும் சுண்டல் சேர்ந்த கலவை உங்கள் மாலையை ஆரோக்கியமாக்கும்.

ADVERTISEMENT

pinterest

காளான் கடை (Mushroom Shop)

கோவையில் பிரபலமான காளான் கடை இப்போது சென்னையில் கிடைக்கிறது. எண்ணையில் வறுத்த அதன் மொறுமொறுப்பும் சுண்டி இழுக்கும் அதன் நிறமும் பசிக்காத போதும் பசியைத் தூண்டும். காளான்களை பொரித்து அதனுடன் செமிக்ரேவி கலவையை சேர்த்து அதன் மேல் நறுக்கிய வெங்காயம் தூவி எலுமிச்சை துளிகளை விட்டு சாப்பிட்டால் ஆஹா.. நம் மொத்த துக்கங்களும் ஓடியே போய்விடும்.

இடம் பாரி சாலை முகப்பேர் .

ADVERTISEMENT

pinterest

பழமுதிர்சோலை (Pazhamuthirsolai Poli)

நொளம்பூரில் இருந்து மேற்கு முகப்பேர் பேருந்து நிலையம் செல்லும் இடத்தில் கங்கா ஸ்வீட்ஸ் அருகே இருக்கிறது இந்த இடம். மாலை 6 மணிக்கு இங்கே சென்றால் விதம் விதமான போளிகளை சூடாக சுவையாக நம் கண்முன்னே போட்டு தருவார்கள். தேங்காய் போளி , பருப்பு போளி மற்றும் கார போளி ஆகியவை இங்கே ஃபேமஸ்.

இடம் மேற்கு முகப்பேர் பெட்ரோல் பங்க் அருகில்

ADVERTISEMENT

pinterest

குல்ஃபி (Kulfi Marina)

குல்ஃபி எனும் ஐஸ்க்ரீம் வகையை ருசிக்க என உலகெங்கிலும் கோடிக்கணக்கான நாக்குகள் தவம் கிடக்கின்றன. அதில் மிக சிறப்பான குல்ஃபி என்றால் சென்னை மெரினா பீச்சில் உள்ள தாத்தா குல்ஃபி கடை தான். இங்கே நள்ளிரவு நேரங்களில் இந்தக் குல்ஃபியை சுவைக்க வேண்டும் என்பதற்காகவே பல்வேறு இளைஞர் பட்டாளங்கள் குவிவார்களாம்!

கரிஷ்மா பானி பூரி (Karishma Pani Puri)

தெருவோரக் கடை என்றால் பானி பூரி இல்லாமலா. நுங்கம்பாக்கத்தில் இருக்கும் கரிஷ்மா பானி பூரிக் கடைதான் இதற்கு பேமஸ். கரிஷ்மாவிற்கு அருகில் இருப்பதாலேயே இந்தக் கடைக்கு இப்படி ஒரு பெயர் வந்திருக்கிறது. இங்கு கிடைக்கும் பானி பூரி யின் சுவையே அலாதியானது.

58, near karishma nungambaakam high road nungambaakkam.

ADVERTISEMENT

Youtube

மேக் அண்ட் பஜ்ஜி கடை (Mak And Bajji Shop)

தமிழ்நாட்டு பிரபலம் என்றாலே பஜ்ஜி மற்றும் போண்டா தான். நல்ல மழை நேரத்தில் சாப்பிட சூடான பஜ்ஜி அல்லது போண்டா கிடைத்தால் இதை விட பெரும் சுகம் வேறென்ன இருக்க முடியும். அப்படியான ஒரு சுவையான உணவை நமக்கு தருகிறார்கள் மேக் அண்ட் பஜ்ஜி கடைக்காரர்கள். திருவல்லிக்கேணியில் நெருக்கமான வீதிகளில் ஒன்றாக இருக்கிறது இந்தக் கடை.

58-30, Nalla Thambi St, near Pa, Narayana Krishnaraja Puram, Triplicane, Chennai, Tamil Nadu 600014

ADVERTISEMENT

just dial

நாவல்டி டீக்கடை மண்ணடி (Novelty Tea Shop)

மண்ணடியில் மற்றுமொரு பிரபலமான தெருவோர உணவகம் நாவல்டி டீ கடை. திரு ஷா அவர்களால் ஆரம்பத்தில் வெறும் டீ கடையாக இருந்து இப்போது பிரபலமான உணவு கடையாக மாறி இருக்கிறது. இங்கே தயராகும் டீ தனிப்பட்ட சுவையில் இருக்கிறது. ஒரு தேநீரின் விலை 35 ரூபாய்.

ADVERTISEMENT

Food junky

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

24 Oct 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT