கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடித்த படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இதில் சசிக்குமார், வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
கடந்த 2017ம் ஆண்டு இந்த படம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் படம் நிதி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனையில் சிக்கியதால் தள்ளிப்போய் கொண்டிருந்தது.
தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் தீபாவளிக்கும் வெளியாகவில்லை. இயக்குனர் கெளதம் மேனனுக்கு ஏற்பட்ட பண பிரச்னையே இதற்கு முக்கியக் காரணம் என கூறப்பட்டது.
இதனிடையே படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக சித் ஸ்ரீராம் குரலில் வெளியான “மறுவார்த்தை பேசாதே” பாடல் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் யூ/ஏ சான்றிதழ் பெற்றிருக்கும் இத்திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகியிருக்கிறது. படத்தின் முதல் பகுதியில் காதல் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. கல்லூரி ஒன்றில் சந்திக்கும் தனுஷ், மேகா ஆகாஷ் இடையே காதல் மலர்கிறது.
கல்லூரி காட்சிகள் நிறைய படங்களில் நாம் பாத்திருந்தாலும் இந்த படத்தில் சற்று வித்தியாசமான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இரண்டாவது பகுதியில் எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
தனுஷ் வைக்கும் பார்ட்டி ஒன்றிற்கு செல்லும் போது மேகா ஆகாஷ் கடத்தப்படுகிறார், அவரை தனுஷ் காப்பாற்றுகிறாரா? எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் மீதி கதை. இரண்டாம் பாதியில் ஆக்சன் காட்சிகள் நிறைந்துள்ளது.
தனுஷ் வழக்கம் போல கதாபாத்திரமாகவே வாழ்ந்து விட்டார். மேகா ஆகாஷ் கூடுதல் அழகில் ரசிகர்களை கவர்கிறார். படத்தின் இசை மிகப்பெரிய பிளஸ். எனை நோக்கி பாயும் தோட்டா படம் லைட்டா ரிலீஸ் ஆனாலும் காதல், அதிரடி ஆக்சன் என ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது என்றே கூறலாம்.
அசுரன் படத்தின் வெற்றிக்கு பின்னர் என்னை நோக்கி பாயும் தோட்ட படத்தை பார்க்கும் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். பலரும் இப்படத்தை காண ஆவலுடன் இருந்தது படத்தின் புக்கிங் வைத்தே நன்றாக தெரிகின்றது.
தனுஷ் ரசிகர்கள் ட்விட்டரில் #ENPTFromToday ஹேஷ்டேகை டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். முதல் காட்சி பார்த்த பலர் சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
ரசிகர்கள் கூறியிருப்பதாவது,
இந்த சிரிப்பை காண 2016 மார்ச் முதல் நவம்பர் 2019 வரை காத்திருக்கிறோம் என தனுஷ் ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.
Just wanted from March 2016 to November 2019 for this Smile 😍😍😍
Happy thalaivaaa 😭😭😭😭♥#ENPT #ENPTFestivalfromTmrw #ENPTFromToday pic.twitter.com/xrKZOGZdTh
— Shiva kannan (@Shivakannan_) November 28, 2019
லண்டனில் எனை நோக்கி பாயும் தோட்டா சிறப்பு காட்சியை பார்த்தேன். படம் அருமை. எதிர்பார்த்தது போன்றே கவுதம் மேனன் மற்றும் தனுஷ் சிறப்பாக செய்திருக்கிறார்கள். மேகா ஆகாஷ் அழகு. இந்த ஆண்டின் சிறந்த தமிழ் படம் இது தான்.
Watched #ENPT special show in london after waiting for a very very very veryyyyyy long time and it was stunning…as expected @menongautham and @dhanushkraja have done great ,and of couse i fell for the angel @akash_megha 💜..best tamil love movie of the year #ENPTFDFS
— Thomas Shelby (@ThomasShelby_0) November 29, 2019
படம் மூன்று ஆண்டுகள் தாமதமாகி வெளியாகியுள்ள போதிலும் அதை காண ரசிகர்கள் கூட்டம் தியேட்டர்களில் அலைமோதுகிறது. அது தான் தனுஷ், கவுதம் மேனனுக்கு கிடைத்த வெற்றி ஆகும்.
Crowd for a 3 year delayed movie for an Early Morning show #ENPTFDFS pic.twitter.com/KwyLx36MAb
— vinod (@vinodnavis) November 29, 2019
சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட முதல் காட்சியை ரசிகர்களுடன் பார்க்க எனை நோக்கிப் பாயும் தோட்டா இயக்குநர் வந்திருந்தார். அவரை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தும், அவருடன் செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர். பல போராட்டங்களுக்குப் பிறகு படம் ரிலீசாகியுள்ள நிலையில் இயக்குனர் கெளதம் மேனன் கண்களில் ஆனந்தத்துடன் படத்தை பார்த்துள்ளார்.
The man himself is here to witness #ENPT #Fanspremiere at #FansFortRohini . After a long struggle now it all ends here @menongautham #ENPTFromToday @dhanushkraja @akash_megha @SasikumarDir @TheSunainaa pic.twitter.com/pPPUDcXsAY
— Rohini SilverScreens (@RohiniSilverScr) November 29, 2019
படம் வெற்றி பெற பலரும் வாழ்த்தி வருகின்றனர்!.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!