ஒரு நீண்ட வெயில் காலம் முடிந்து ஒரு மாதம் ஆகி இருக்கிறது. ,மழைக்காலம் தொடங்குவதாக பாவ்லா காட்டிக் கொண்டிருக்கிறதே தவிர தொடர் மழைக்காலம் இன்னும் வரவே இல்லை.
இன்னும் தமிழகத்தின் பல இடங்களில் வெயில் அதிகமாகவே இருக்கிறது. தொழில் காரணமாக, வேலை காரணமாக நாம் வெயிலுக்கு நமது முகத்தைக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நேரடி வெயில் நம் முகத்தில் படுவதால் முகத்தின் நிறம் மங்கி கருமையாக மாறி விடுகிறது.
முகத்தில் ஏற்படும் நிறமாற்றம் (de tan) என்பது வெயிலால் மட்டுமே ஏற்படுவதில்லை. பெண்கள் அடுப்படியில் இருக்கும் சமயங்களில் வெளியாகும் வெப்பமும் முகத்தின் கருமைக்கு காரணம் ஆகிறது. இந்த கருமையை வீட்டில் இருந்தே எப்படி எளிய முயற்சிகள் மூலம் போக்கலாம் என்பதை இனிமேல் பார்க்கலாம்.
pixabay, pexels ,youtube
முகத்தில் உள்ள கருமையை நீக்கும் இயற்கை வழிமுறைகள் (How To Remove Tan Naturally)
இயற்கையான பொருள்கள் மூலம் முகத்தில் உள்ள கருமையை எளிதாக நீக்க முடியும். சருமத்தின் உள்ளுக்குள் சென்று முகத்தின் பழைய நிறத்தையும் பொலிவையும் மீட்டெடுக்க இந்த இயற்கை வழிமுறைகள் உதவுகிறது.
எலுமிச்சை என்பது நல்ல நிறமேற்றி (Lemon Is A Good Pigment)
பொதுவாகவே எலுமிச்சையின் குணம் என்பது கறைகளை களைந்து பளிச்சிட வைப்பதுதான். வெயில் மூலம் ஏற்படும் முகக் கருமையை நீக்க எலுமிச்சை உதவுகிறது.
தேவையானவை
- எலுமிச்சை சாறு
- நீர்
- சர்க்கரை
எலுமிச்சை சாறினை சில துளிகள் எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு சென்சிடிவ் சருமம் இல்லை என்றால் நேரடியாகவே எலுமிச்சை சாறை சற்று நீர் மட்டும் சேர்த்து முகத்தில் தடவலாம். இல்லை என்றால் எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை சேர்த்து சிரப் போல கலந்து கொள்ளுங்கள். இதனை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகம் கழுவி வந்தால் விரைவில் வெயிலால் ஏற்பட்ட கருமை நிறம் மாறும்.
வெள்ளரி தரும் வெண்மை நிறம் (White Colour Of Cucumber)
வெள்ளரிக்காய் குளிர்ச்சியானது. சூரிய வெப்பத்தால் வெந்து போன சருமத்திற்கு இதமான சிகிச்சை வேண்டும் என நீங்கள் நினைத்தால் வெள்ளரிக்காயை அதற்குப் பயன்படுத்துங்கள்.
தேவையானவை
- வெள்ளரிக்காய்
- பால்
- ஒரு கிண்ணம்
வெள்ளரிக்காயை எடுத்து நன்கு மையாக மிக்சியில் அரைத்துக் கொள்ளுங்கள். அதனை ஒரு கிண்ணத்தில் சேகரியுங்கள். அதனுடன் இரண்டு மூன்று ஸ்பூன் பால் சேர்க்கவும். இந்தக் கலவையை நன்கு கலக்கவும். இதனை முகம் கழுவிய பின்னர் முகத்தில் தடவி 20 நிமிடம் உலர விடுங்கள். அதன் பின்னர் முகம் கழுவி வாருங்கள். சில வாரங்களிலேயே இழந்த நிறத்தை மீண்டும் பெறுவீர்கள்
கடலை மாவும் தயிரும் (Grind The Sea Flour)
முகத்தை எப்போதும் பொலிவாக வைத்துக் கொள்ள கடலை மாவு உதவுகிறது. பாரம்பர்ய அழகிகளின் அழகு ரகசியம் கடலை மாவுதான். அதனுடன் தயிர் சேர்க்கையில் அதன் தன்மை மாறுகிறது. வெயிலால் கருமையடைந்த முகம் குணமாகிறது.
தேவையானவை
- கடலை மாவு
- தயிர்
- ஒரு கிண்ணம்
ஒரு கிண்ணத்தில் 3 ஸ்பூன் கடலை மாவு எடுத்துக் கொள்ளவும். அதன் பின்னர் அதில் தயிரை சேருங்கள். தயிர் முகத்தை ப்ளீச் செய்யும் வல்லமை பெற்றது. கடலை மாவு சருமத்தை லேசாக்கும் குணம் வாய்ந்தது.
இரண்டையும் சேர்த்து நன்கு கலக்கவும். அதன் பின்னர் அந்தக் கலவையை முகத்தில் தடவி 20 முதல் 30 நிமிடம் வரை உலர விடுங்கள். பின்னர் முகம் கழுவுங்கள். முடிந்தால் சிறிது மஞ்சள் சேருங்கள். முகப்பொலிவு உத்திரவாதம்.
pixabay, pexels ,youtube
மசூர் பருப்பும் கற்றாழையும் (Masoor Dal And Aloe)
மசூர் பருப்பு என்பது ஒருவகையான பருப்பு வகை. லேசான சிவப்பு நிறத்தில் இந்தப் பருப்பு இருக்கும். இந்தப் பருப்பு அதிக புரதச்சத்து கொண்டது. முகத்திற்கு தேவையான புரதம் வேண்டுமெனில் இந்தப் பருப்பைப் பயன்படுத்துங்கள்
தேவையானவை
- மசூர் பருப்பு 2 ஸ்பூன்
- கற்றாழை ஜெல் 2 ஸ்பூன்`
- ஒரு கிண்ணம்
ஒரு கிண்ணத்தில் மசூர் பருப்பை எடுத்து இரவெல்லாம் ஊற விடுங்கள். மறுநாள் காலை அந்தப் பருப்பை வடித்து நன்றாக அரைக்கவும். கற்றாழை ஜெல் கலந்து முகத்தில் பூசி 30 நிமிடங்கள் உலர விடவும். பின்னர் முகம் கழுவி விடுங்கள். உடனடி மேஜிக் போல உங்கள் முகம் தனது கருமை நிறத்தில் இருந்து வெளியில் வந்து பொலிவாக மின்னும்.
தேனும் பப்பாளியும் (Honey And Papaya)
முகத்தின் அழகிற்கும் பொலிவிற்கும் முக்கியமான பொருளாக இருப்பது தேன். இது உங்கள் முகத்தில் மாய்ச்சுரைஸைர் போல செயல்படுகிறது. பப்பாளி முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி முகத்தை பளிச்சிட வைக்கிறது.
தேவையானவை
- தேன் 2 ஸ்பூன்
- பப்பாளி சதை 3 ஸ்பூன்
- ஒரு கிண்ணம்
ஒரு கிண்ணத்தில் பப்பாளி சதையை எடுத்து நன்கு மசிக்கவும். அதனுடன் தேனை சேருங்கள். இரண்டையும் நன்றாகக் கலக்க வேண்டும். அதன் பின்னர் உங்கள் முகத்தில் இந்தக் கலவையைத் தடவி 30 நிமிடங்கள் உலர விடவும். பின்னர் முகம் கழுவுங்கள். இப்படி செய்வதன் மூலம் முகத்தின் கருமை நீங்கி வெயிலைத் தாண்டி உங்கள் முகம் பளிச்சிடும் பேரழகைப் பெறும்.
ஆரஞ்சு மற்றும் தயிர் (Orange And Yogurt)
ஆரஞ்சு சருமத்தின் உற்ற நண்பன். அடிக்கடி ஆரஞ்சு பழம் சாப்பிடுபவர்கள் முகம் மினுமினுப்பாக இருப்பதாய் நீங்கள் காணலாம். உங்கள் உணவில் அடிக்கடி ஆரஞ்சுப் பழத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்.
தேவையானவை
- ஆரஞ்சு சாறு 2 ஸ்பூன்
- தயிர் 2 ஸ்பூன்
- ஒரு கிண்ணம்
ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் ஆரஞ்சு சாறை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் இரண்டு ஸ்பூன் தயிரை சேர்த்து நன்கு கலக்குங்கள். இதனை உங்கள் முகத்தில் தடவி விடுங்கள். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விடுங்கள். உடனடி ஜொலிஜொலிப்பு உங்கள் முகத்தில் தென்படும். தொடர்ந்து செய்து வர முகத்தின் கருமை காணாமல் போகும்.
pixabay, pexels ,youtube
சந்தனத்தின் மாயம் (Magic Of Sandalwood)
சந்தனம் என்றாலே அதன் குளிர்ச்சிதான் அனைவருக்கும் நினைவு வரும். சந்தனம் முகத்தின் உள்ள கருமையை மாற்றுகிறது. வெப்பத்தால் வந்துள்ள சருமத்தை சந்தனம் குளிர வைத்து குணப்படுத்துகிறது.
தேவையானவை
- சந்தனப்பொடி
- தேங்காய் தண்ணீர் (இளநீர்)
- ஒரு கிண்ணம்
ஒரு கிண்ணத்தில் சந்தனத்தை பொடி செய்து அதனுடன் சில துளிகள் தேங்காய் நீரை சேர்க்கவும். இந்தக் கலவையை நன்றாக கலந்து கொள்ளவும். இதனை இரவில் முகத்தில் தடவி காலையில் முகம் கழுவலாம். அல்லது 30 நிமிடங்கள் உலர வைத்து கழுவி விடுங்கள். வறண்ட சருமம் கொண்டவர்கள் இந்தக் கலவையுடன் இரண்டு துளிகள் ஆலிவ் எண்ணெய் சேர்க்கலாம். முகம் நிலவு போல ஒளிரும்.
பைனாப்பிள் மற்றும் தேன் (Pineapple And Honey)
பைனாப்பிள் மற்றும் தேன் இரண்டுமே முகத்தின் நிறமாற்றத்தை சரி செய்து விடும் வல்லமை வாய்ந்தது. பைனாப்பிளில் உள்ள புளிப்புத் தன்மை ப்ளீச் போல செயல்படுகிறது. இதனுடன் தேன் சேர்க்கையில் மங்கிய நிறம் மீட்கப்படுகிறது.
தேவையானவை
- பைனாப்பிள் சதை 2 ஸ்பூன்
- தேன் 2 ஸ்பூன்
- ஒரு கிண்ணம்
ஒரு கிண்ணத்தில் பைனாப்பிள் சதையை எடுத்து நன்கு மசித்துக் கொள்ளவும். இதனுடன் தேன் கலந்து கொள்ள வேண்டும். இந்தக் கலவையை சுத்தமான முகத்தில் தடவி 30 நிமிடங்கள் உலர விட்டு முகம் கழுவி வரவும். இதனால் முகத்தில் உடனடி பொலிவும் மங்கியிருந்த நிறம் மேம்படையவும் செய்யும்.
உருளை மற்றும் எலுமிச்சை (Cylindrical And Lemon)
கருமையை நீக்க அதிகமாக உபயோகப்படும் பொருள் உருளைக்கிழங்குதான். முகத்தில் உள்ள கருமையை நீக்க உருளைக்கிழங்கு மற்றும் எலுமிச்சையை பயன்படுத்துங்கள்
தேவையானவை
- உருளைக்கிழங்கு சாறு 3 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு 2 ஸ்பூன்
- ஒரு கிண்ணம்
ஒரு கிண்ணத்தில் எலுமிச்சை சாறு மற்றும் உருளைக்கிழங்கு சாறினை எடுத்து ஒன்றாக கலந்து கொள்ளவும். ஒரு பஞ்சினை அதில் நனைத்து முகம் முழுதும் அந்த சாறினை தடவி 30 நிமிடங்கள் உலர விடுங்கள். பின்னர் முகம் கழுவி வாருங்கள். தொடர்ந்து இப்படி செய்து வர ஒரே மாதத்தில் உங்கள் முகக்கருமை நீங்கி பழைய நிறத்தில் உங்கள் முகம் பளிச்சிடும்.
pixabay, pexels ,youtube
கற்றாழை பன்னீர் மற்றும் தக்காளி (Cactus Paneer And Tomato)
கற்றாழை எப்போதுமே சருமத்தின் இதமான நண்பன். குணப்படுத்தும் குணம் கொண்ட மூலிகை, கற்றாழையுடன் தக்காளி சேரும்போது முகம் நிறம் மங்கி இருப்பதை சரி செய்கிறது.
தேவையானவை
- கற்றாழை
- பன்னீர் (Rose water)
- தக்காளி
- ஒரு கிண்ணம்
ஒரு கிண்ணத்தில் தக்காளி மற்றும் கற்றாழை ஜெல்லை எடுத்து நன்கு மசித்து ஒன்றாகக் கலக்கவேண்டும். அதன்பின்னர் அதில் சில துளிகள் பன்னீர் சேர்க்கவும். இந்தக் கலவையை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் உலர விட்டு முகம் கழுவி வர சூரியனால் முகத்தில் ஏற்பட்ட காயங்கள் மாறி கருமை நிறம் விலகி உங்கள் முகம் பளிச்சென்று இருக்கும்.
விக்ஸ் வேப்பரப் (Wicks Nappy)
விக்ஸ் வேப்பரப் என்பது உடல்நலம் இல்லாத களங்களில் பயன்படுத்துவது என்றாலும் அதில் உள்ள மூலிகைகளின் கலவை முக அழகிற்கும் உதவுகிறது.
தேவையானவை
- விக்ஸ் வேப்பரப்
ஒரு கிண்ணத்தில் விக்ஸ் வேப்பரப் எடுத்துக் கொள்ளவும். அதனை கண்கள் நீங்கலாக முகம் முழுதும் தடவி 15 நிமிடம் கழித்து முகம் கழுவவும். இப்படி செய்தால் முகம் பொலிவாகும். சூரியன் மூலம் ஏற்பட்ட கருமை நீங்கும்.
ஓட்ஸ் மற்றும் மோர் (Oats And Buttermeal)
முகத்தில் உள்ள நச்சுக்களை நீக்கவும் இறந்த செல்களை அகற்றவும் ஓட்ஸ் உதவி செய்கிறது. மோர் முகத்தின் மினுமினுப்பிற்கு உத்திரவாதம் தருகிறது.
தேவையானவை
- ஓட்ஸ் 2 ஸ்பூன்
- மோர் 2 ஸ்பூன்
- ஒரு கிண்ணம்
ஒரு கிண்ணத்தில் ஓட்ஸ் மற்றும் மோர் இரண்டையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் தடவி சில நிமிடம் கழித்து முகம் கழுவவும். முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி முன்பை விடவும் அதிக பொலிவுடன் முகம் இருப்பதை நீங்கள் உணர்வீர்கள்.
pixabay, pexels ,youtube
மாம்பழ மாயம் (Mango Magic)
மாம்பழங்கள் வெயில் காலத்திற்கேற்ற பழம் என்பதால் அதனை உங்கள் முகம் கருமையடைவதில் இருந்து தடுக்கவும் பயன்படுத்த முடியும். இதில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் உங்கள் முகத்தை என்றும் இளமையாகவும் பார்த்துக் கொள்ளும்.
தேவையானவை
- மாம்பழம்
- பால்
- ஒரு கிண்ணம்
ஒரு கிண்ணத்தில் மாம்பழத்தின் சதைப்பகுதியை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் இரண்டு ஸ்பூன் பால் சேர்க்கவும். இந்தக் கலவையை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து முகம் கழுவி வரவும். இதன் மூலம் மாம்பழத்தின் சத்துக்கள் முகத்தில் இறங்குவதால் முகம் மாம்பழத்தின் அதே மினுமினுப்பை பெறுகிறது.
ஸ்ட்ராபெரி மற்றும் க்ரீம் (Strawberry And Cream)
ஆன்டி ஆக்சிடன்ட் அதிகம் உள்ள ஸ்ட்ராபெரிக்கள் முகத்தின் அழகை பராமரிக்க உதவுகிறது. அதனுடன் க்ரீம் சேரும்போது இன்னும் அதிகமாகவே உங்கள் அழகு மேம்படும்.
தேவையானவை
- ஸ்ட்ராபெரி
- க்ரீம்
- ஒரு கிண்ணம்
ஒரு கிண்ணத்தில் சில ஸ்டராபெரிக்களை நன்கு மசிக்கவும். அதனுடன் க்ரீம் சேர்க்கவும். இந்தக் கலவையை நன்கு கலந்து இதனை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து முகம் கழுவி வர வேண்டும். முகம் ஸ்டராபெரி போன்றே ஜூஸியாக பொலிவாக தளதளப்பாக மின்னும் மாயம் அறிந்து மகிழ்வீர்கள்.
pixabay, pexels ,youtube
சருமத்தைப் பாதுகாக்க சில வழிகள் (Ways To Protect The Skin)
சருமத்தை நீங்கள் தினமும் பராமரிக்க வேண்டும். அதற்கான அத்தியாவசிய வழிமுறைகள் சிலவற்றை உங்களுக்கு தருகிறோம்.
தூரத்தில் நீ வந்தாலே.. என் மனசில் மழையடிக்கும்.. உங்கள் க்ரஷ்’சை ஈர்க்க சில வழிமுறைகள் !
நீர்த்தன்மை வேண்டும் (Dilution)
முகம் எப்போதும் தளதளப்பாக இளமையுடன் இருக்க வேண்டும் என்றால் அது நீர்த்தன்மை உடன் இருக்க வேண்டும். நீர்த்தன்மை உலராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி குளிர்ந்த நீரில் முகம் கழுவி வருவது முகத்தின் ஈரப்பதத்தை பாதுகாக்கும்.
மினுமினுக்கும் முகப்பொலிவிற்கு எது அவசியம்? டோனரா சீரமா ஆம்பியூலா!அறிந்து பயன்படுத்துங்கள்
க்ளென்ஸிங் (Klensin)
நீங்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை க்ளென்சிங் செய்வது முகத்தை பத்திரமாக அழகு மறையாமல் பாதுகாக்கும். உங்கள் மேக்கப்பை கலைத்த பிறகு ஒருமுறை க்ளென்ஸ் செய்வது அவசியம். இப்படி செய்வதன் மூலம் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி சருமத்துளைகள் பாதுகாக்கப்படும்.
இறந்த செல்களை நீக்குதல் (Removal Of Dead Cell)
இறந்த செல்களை அடிக்கடி நீக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் முகம் தனது இயல்பான பொலிவோடு காட்சி தரும். வாரம் ஒருமுறை உங்கள் முகத்தை இரவு நேரங்களில் இறந்த செல்களை நீக்கும் வழிமுறைகளை கடைபிடியுங்கள். இரவு நேரங்களில் இதனை செய்வதால் சருமம் இரவெல்லாம் தன்னை புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக இருக்கும்.
pixabay, pexels ,youtube
சன்ஸ்க்ரீன் (Sunscreen)
ஒவ்வொரு நாள் தொடங்கும்போதும் உங்கள் முக அழகை நீங்கள் பராமரிக்க வேண்டும் என்றால் நிச்சயம் சன்ஸ்க்ரீன் பயன்படுத்த வேண்டும். அதில் உங்கள் சருமத்தின் தன்மைக்கேற்ப SPF அளவுகள் உள்ள சன்ஸ்க்ரீனை நீங்கள் பயன்படுத்துவது உங்கள் முகத்தை பல்வேறு சிக்கல்களில் இருந்து காப்பாற்றும்
மாய்ச்சுரைஸர் (Mayccuraisar)
மாய்ச்சுரைஸர் என்பது முகத்தின் மிருதுத் தன்மையை பராமரிக்க உதவி செய்கிறது. தரமான மாய்ச்சுரைஸர் உங்கள் முகத்தின் இளமையை தக்க வைக்கிறது. குளித்த பின்னர் உடல் முழுதும் நீங்கள் மாய்ச்சுரைஸர் தடவுவது உங்களுக்கு உங்கள் அழகை மேம்படுத்தும்.
Youtube
அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள் (FAQ’s)
டி டேன் பற்றிய சந்தேகங்கள் பலருக்கு இருக்கலாம். அதில் அதிகமாக எழுந்த சந்தேகங்களும் அதற்கான பதில்களும் உங்கள் தெளிவிற்காகத் தரப்பட்டுள்ளது
டி டேன் பேக் என்ன செய்கிறது ?
டிடேன் என்பது சருமத்தின் இறந்த செல்களை நீக்கி அழுக்குகளை அகற்றி உங்கள் முகத்தின் கருமை நிறத்தை நீக்கி பழைய நிறத்தை மீட்டெடுக்கிறது
டி டேன் சருமத்திற்கு ஊறு விளைவிக்குமா?
அதிகமாக டி டேன் செய்தால் சருமத்தில் காயங்கள் உண்டாகலாம். ஸ்கின் கேன்சர் வரவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் சூரியனின் UV கதிர்கள் உங்கள் உடலுக்குள் புகுந்து உங்கள் DNA வரைக்கும் சிதைக்கும் ஆற்றல் பெற்றது. அதற்கு டீ டேன் என்பது எவ்வளவோ நன்மைகளை உங்கள் சருமத்திற்கு செய்கிறது.
எந்த டேன் சிறந்தது?
ரசாயனங்களின் உதவி அற்ற எந்த டேன் க்ரீமும் சிறந்ததுதான். லோட்டஸ், VLCC போன்றவை சருமத்திற்கு ஊரு விளைவிக்காமல் நன்மை தரும் என்று பரிந்துரை செய்யப்படுகிறது.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.