logo
ADVERTISEMENT
home / Celebrity gossip
அப்படியே தாத்தா ரஜினி போலிருக்கும் யாத்ரா.. லைலா பசங்க இவ்ளோ க்யூட்டா.. பங்கமான லாஸ்லியா !

அப்படியே தாத்தா ரஜினி போலிருக்கும் யாத்ரா.. லைலா பசங்க இவ்ளோ க்யூட்டா.. பங்கமான லாஸ்லியா !

நடிகர் தனுஷ் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்ததும் அவருக்கு இரண்டு மகன்கள் இருப்பதும் உலகம் அறிந்த ஒரு விஷயம்தான். இதில் ரஜினியின் பேரன் யாத்ரா மற்றும் லிங்கா ஆகியவர்களின் புகைப்படங்களை அவ்வவ்போது பார்த்து வந்திருக்கின்றனர். 

நடிகர் ரஜினிதான் மகள்களின் மகன்களுக்கெல்லாம் பெயர் வைத்தவர். அவர் வைத்த பெயர்கள் எல்லாமே ஆன்மிக அதிர்வுகளை உண்டாக்கக் கூடிய பெயர்கள்தான். ஐஸ்வர்யா தனுஷ் மகன்களில் மூத்தவருக்கு யாத்ரா என்றும் இளையவருக்கு லிங்கா என்றும் பெயர் வைத்த ரஜினிகாந்த் (rajinikanth) சௌந்தர்யாவின் மகனுக்கு வேத் எனும் பெயரை வைத்திருந்தார். 

இதில் தற்போது ஐஸ்வர்யா தனுஷ் (aishwarya dhanush) தன்னுடைய மகன்களுடன் இருக்கும் சமீபத்திய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் பகிர்ந்திருக்கிறார். 

தனுஷின் ரசிகர்கள் மூத்த மகன் யாத்ரா (yaathra) அப்படியே தாத்தா ரஜினிகாந்தை உரித்து வைத்தது போல இருப்பதாகவும் இளைய மகன் லிங்கா (linga)  அப்படியே தனுஷை போல இருப்பதாகவும் சொல்லி மகிழ்ந்து பகிர்ந்து வருகின்றனர். 

ADVERTISEMENT

உனக்கு someone else பிடிக்குமா I dont kno.. கொள்ளை கொள்ளும் குரலோடு மீண்டு(ம்) வந்த சுச்சி 

 

புன்னகை அரசி நடிகை கே ஆர் விஜயாவிற்கு பின்னர் அவரது பெயரை அப்படியே எடுத்துக் கொண்டவர் லைலா (laila) . இவரது புன்னகைக்காகவே பல ரசிகர்கள் இருக்கின்றனர். ஒரு சில திரைப்படங்களில்தான் லைலா நடித்திருக்கிறார் என்றாலும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார் லைலா. 

நன்றாக நடித்துக் கொண்டிருக்கும்போதே எட்டு வருடங்கள் காதலித்து வந்த தொழிலதிபர் ஒருவரைத் திருமணம் செய்த லைலா அதன் பின்னர் நடிப்புக்கு டாடா சொல்லி விட்டார். அவ்வப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தலைகாட்டியதுடன் அவர் வேறு எதுவும் செய்யவில்லை. 

ADVERTISEMENT

திருமணம் செய்து கொண்ட பின்னர் நடிகை லைலாவிற்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். சமீபத்தில் அவர்களுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தினை லைலா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். 

நம்முடைய சுட்டித்தனமான லைலாவிற்கு இவ்வளவு பெரிய மகன்களா என்று ரசிகர்கள் அந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர். பையன்கள் இருவரும் அப்படியே லைலாவின் நிறத்தையும் அழகான புன்னகையையும் கொண்டிருக்கின்றனர்.  

கவனிக்க கூட யாருமற்ற நிலையில் நடிகை ஷர்மிளா.. அரசு மருத்துவமனையில் அனுமதிப்பு 

பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலாவுடன் காதல்… உறுதி செய்தார் நடிகர் விஷ்ணு விஷால்!

ADVERTISEMENT

பிக் பாஸ் (bigg boss) புகழ் லாஸ்லியா (losliya)  என்றால் கலவையான விமர்சனங்கள் எழும். என்ன ஆனார் லாஸ்லியா கவினை காதலித்தாரா இல்லையா எனப் பல கேள்விகளை தன்னை சுற்றி எழுப்பி கொண்டு அதன் மூலம் இன்னமும் மீடியா வெளிச்சத்தை விட்டு விலகாமல் இருக்கிறார் லாஸ்லியா 

இந்நிலையில் புத்தாண்டை (new year) முன்னிட்டு போட்டோ ஷூட் (photo shoot) நடத்தி இருக்கும் லாஸ்லியா அதனை வெகு சந்தோஷமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். கூடவே புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறார். 

ஏற்கனவே சொன்னபடி விருப்பு வெறுப்பு என கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கும் லாஸ்லியாவின் இந்தப் புகைப்படங்களை வழக்கம்போல மீம் க்ரியேட்டர்கள் கழுவி ஊற்றிக் கொண்டிருக்கின்றனர். லாஸ்லியா கவின் ரசிகர்களோ அதனை கண்டு கொள்ளாமல் மேலும் புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர். 

பிரபுதேவா உடன் காதல்..? வாரம் ஒருமுறை பிரபுதேவாவை சந்திக்கும் சாய் பல்லவி! 

ADVERTISEMENT

Youtube

Youtube

ADVERTISEMENT

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி! 

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்! 

ADVERTISEMENT
03 Jan 2020

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT