logo
ADVERTISEMENT
home / Celebrity Life
கோப்பையை வென்ற கையோடு நடிகை அஷ்ரிதா ஷெட்டி மணமுடித்தார் கிரிக்கெட் வீரர் மணீஷ் பாண்டே!

கோப்பையை வென்ற கையோடு நடிகை அஷ்ரிதா ஷெட்டி மணமுடித்தார் கிரிக்கெட் வீரர் மணீஷ் பாண்டே!

2012ம் ஆண்டு தமிழ் திரை உலகிற்கு அறிமுகமான அஸ்ரிதா செட்டி உதயம் NH4, ஒரு கன்னியும் மூணு களவானிகளும், இந்திரஜித், நான் தான் சிவா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

முதல் படத்திலேயே தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் மணீஷ் பாண்டேவை அஸ்ரிதா செட்டியை திருமணம் செய்து கொண்டார்.  

32 வயதாகும் மணீஷ் பாண்டே மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். முன்னதாக சூரத்தில் நடைபெற்ற சையது முஸ்டாக் அலி கோப்பைக்கான தேசிய டி20 சாம்பியன்ஷிப் போட்டியில் மணீஷ் பாண்டே (manish pandey) பங்கேற்றார். 

ADVERTISEMENT

twitter

இந்த போட்டியில் கர்நாடக அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது. முதலில் விளையாடிய கர்நாடகம் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்களைக் குவித்தது. அதிகபட்சமாக மணீஷ் பாண்டே 60 ரன்கள் குவித்தார்.

மேலும் படிக்க – சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் மற்றொரு நடிகையுடன் தொடர்பு..மனைவி ஜெயஸ்ரீ பரபரப்பு புகார்!

பின்னர் விளையாடிய தமிழக அணி 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களைக் குவித்து போராடித் தோற்றது. இந்த  போட்டியில் கர்னாடகா அணி கோப்பை வெல்ல மணீஷ் பாண்டே முக்கிய காரணமாக அமைந்தார். 

ADVERTISEMENT

இதற்காக அவருக்கு விருது வழங்கப்பட்டது. விருது வாங்கிய கையோடு மறுநாள்  மும்பையில் தமிழ் நடிகை அஸ்ரிதா செட்டியை திருமணம் செய்துகொண்டார்.

இந்த திருமண நிகழ்ச்சியில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

twitter

ADVERTISEMENT

இவர்களின் திருமணத்துக்காக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அஸ்ரிதா – மணீஷ் (manish pandey) தம்பதிக்கு அதிர்ஷ்டம், மகிழ்ச்சியுடன் கூடிய வாழ்த்துக்கள்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

மணீஷ் பாண்டே இந்திய அணிக்காக இதுவரை 23 ஒருநாள் போட்டிகள், 32 டி-20 போட்டிகளில் பங்கேற்றுள்ள போதும் தனது இடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியாமல் தவித்து வருகிறார். உள்ளூர் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும், இந்திய கிரிக்கெட் அணியில் இவருக்கு நிரந்தர வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை.

மேலும் படிக்க – சாக்ஷிக்கு ஏற்ற கணவராக நடக்கிறேன்.. ஆம்.. சரி.. இதுவே சாக்ஷிக்கு பிடித்த வார்த்தைகள்-தோனி

கம்பீர் தலைமையிலான ஐபிஎல் கோப்பை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்ற பாண்டேவை, கடந்த 2018ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மிகப்பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

கிரிக்கெட் வீரர்கள் பாலிவுட் நடிகைகளை காதலித்து திருமணம் செய்வது வழக்கமான ஒன்று. இந்நிலையில் கிரிக்கெட் வீரர் ஒருவர் தமிழ் படங்களில் நடித்து வரும் நடிகையை திருமணம் செய்துள்ளார். 

கேப்டன் கோஹ்லி நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்தார். அவர் வழியில் மணிஷ் பாண்டேவும் (manish pandey) , நடிகை ஒருவரை மணந்துள்ளார். மணமக்களுக்கு ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க – அமெரிக்காவில் நண்பர்களுடன் அசைவ விருந்தில் நயன்தாரா… கேள்வி எழுப்பும் ரசிகர்கள்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

ADVERTISEMENT

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

02 Dec 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT