logo
ADVERTISEMENT
home / Dating
வீட்டுக்குத் தெரியாமல்  லிவிங் டு கெதர்.. நம்பிச் சென்ற கல்லூரி மாணவியின் மர்ம மரணம்..

வீட்டுக்குத் தெரியாமல் லிவிங் டு கெதர்.. நம்பிச் சென்ற கல்லூரி மாணவியின் மர்ம மரணம்..

ஞ்சாவூரில் பெற்றோருக்குத் தெரியாமல் காதலருடன் லிவிங் டு கெதர் (living together)  முறையில் வாழ்ந்த கல்லூரிப் பெண் தற்கொலை செய்த சம்பவம் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.

ஈரோட்டை சேர்ந்த இந்துமதி (20) கால்நடை மருத்துவத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். பெற்றோர் மகள் மருத்துவராவார் என்கிற கனவில் தஞ்சைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.

சோஷியல் மீடியாவில் அதி தீவிரமாக இயங்கி வந்த இந்துமதியை இளையான்குடியை சேர்ந்த சதிஷ் என்பவர் முகநூல் மூலம் மடக்க நினைத்திருக்கிறார். புதிய ஹேர்ஸ்டைல்கள், புதிய ஆடைகள் என பல புகைப்படங்களை சதிஷ் பதிவேற்றியதன் மூலம் இந்துமதியைத் தனது வலையில் விழ வைத்திருக்கிறார்.

தன்னை ஒரு என்ஜினீயர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட சதீஷை நம்பிக் காதலித்திருக்கிறார் இந்துமதி. ஒரு கட்டத்தில் சதீஷை அளவுக்கதிகமாக நம்பிய இந்துமதி அவரோடு ஒன்றாக ஒரே வீட்டில் வாழ ஆரம்பித்திருக்கிறார்.

ADVERTISEMENT

பெற்றோரை பொறுத்தவரையில் பெண் ஹாஸ்டலில் இருக்கிறாள் என்று நம்பிக் கொண்டிருந்தனர். வீட்டுக்குத் தெரியாமல் ஒன்றாக வாழ்ந்த போதுதான் சதீஷின் சுயரூபம் அறிந்து இந்துமதி கலங்கிப் போயிருக்கிறார்.

Youtube

சதீஷ் ஒரு என்ஜினீயர் அல்ல எலெக்ட்ரிசியன் என்பதும் மதுவிற்கு அடிமையானவன் என்பதும் போகப்போகத்தான் இந்துமதிக்கு புரிந்திருக்கிறது. நம்பி திருமணம் வரை சென்ற காதல் உறவு தன்னை ஏமாற்றியது தாங்காமல் துடித்தவர் எப்படி இதனை வெளி உலகத்திற்குத் தெரியப்படுத்துவது என்று தெரியாமல் யோசித்திருக்கிறார்.

ADVERTISEMENT

குடித்து விட்டு வரும் சதிஷிற்கும் இந்துமதிக்கு இடையே அடிக்கடி தகராறு நிகழ்ந்திருக்கிறது. கடந்த ஞாயிறன்றும் தகராறு நடந்திருக்கிறது. வழக்கம் போல குடிபோதையில் கிடந்த சதீஷை பார்த்து மனம் வெதும்பிய இந்துமதி தூக்கிட்டுத் தற்கொலை செய்திருக்கிறார்.

நீண்ட நேரம் கதவு திறக்காததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகத்தின் பேரில் காவல்துறைக்குத் தகவல் கொடுக்க இந்துமதி தூக்கில் தொங்கியபடி இருக்க அருகே போதையில் சதீஷ் கிடந்திருக்கிறார்.

இந்துமதியின் பெற்றோர் கதறித்துடித்து மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், சதீஷ் தனது பெண்ணைக் கொன்று தூக்கில் தொங்க விட்டிருக்கலாம் என்றும் கூறியிருக்கின்றனர். விசாரணை நடந்து வருகிறது.

எல்லாமே அவசரமாக நடக்க வேண்டும் என்று இன்றைய தலைமுறை விரும்புவதால் பல தவறுகள் நிகழ்கின்றன. தன்னோடு வாழ ஒருவருக்குத் தகுதி இருக்கிறதா என்பதை அறிந்த பின்னரே பெண்கள் லிவிங் டு கெதர் வாழ்க்கையில் ஈடுபட வேண்டும்.

ADVERTISEMENT

வெளிப்படைத்தன்மை இல்லாத நபர்கள் பெண்களோடு சுகபோகங்களை அனுபவிக்க பல பொய்களைக் கூறி ஏமாற்றுவார்கள்தான். எப்போது உங்கள் உறவை அவர் ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாரோ அப்போதே நீங்கள் உஷார் ஆவது நல்லது பெண்களே.

பெற்றவர்களின் நம்பிக்கையை சிதைத்து மற்றவருடன் ரகசிய உறவு என்பது எவ்வளவு பாதுகாப்பற்றது என்பதற்கு ஒரு உதாரணமாக மாறியிருக்கிறது இந்துமதியின் கதை.

Youtube

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                                    

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.                                                                        

23 Jul 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT