கோடைக் காலம் முடிந்து காத்து காலம் வரும் போது அனைவருக்கும் முகம் வரண்டு போய் இருக்கும். எதை கொண்டு சரி செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் திகைத்து போய் இருப்பீர்கள். அப்படியான சவால்களை சந்திக்கிறீர்களா? உங்களுக்காகவே ஒரு புதிய டிப்ஸ் நாங்கள் தருகின்றோம். வரண்ட பொலிவிழந்த சருமத்தை புத்துயிர் பெற செய்வதற்கான டிப்ஸ் தான் நாங்கள் கீழே கொடுக்கப்போகின்றோம்.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் காபி(coffee) பவுடரை கொண்டு பொலிவற்ற உங்கள் முகத்தை பளிச்சென உடனே மாற்றலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள முறையை பின் பற்றி செய்து பாருங்கள். உடனடியான பலன் கட்டாயம் கிடைக்கும். ஸ்கிரப் அப்ளை செய்யதவுடனே அதற்கான பலனை நீங்கள் பார்க்கலாம். இனி கோடையால் ஏற்பட்ட முக வரட்சிக்கு பைபை சொல்லுங்கள்.
1. முகத்திற்கான ஸ்கிரப்
காபியை ஒரு இயற்கை ஸ்கிரப்பாக பயன்படுத்தலாம். இது முகத்திற்கு கெமிக்கல்கள் கலந்த ஸ்கிரப்பை போல கெடுதல் விளைவிக்காது. காபி பொடியில். சிறிதளவு கரும்பு சக்கரை மற்றும் ஆலிவ் ஆயில் கலந்து முகத்திற்கு வட்ட வடிவத்தில் மசாஜ் செய்வதன் மூலமாக முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க முடியும்.
2. சருமத்திற்கு
உடலில் உள்ள வறட்சியான தோலை போக்கி, சருமத்தை மிருதுவாக்கவும், இறந்த செல்களை நீக்கவும் காபியை பயன்படுத்தலாம். காபி (coffee) சருமத்தை இளமையாக பாதுகாக்கிறது. காபி பொடி உடன் ஆலிவ் ஆயில் மற்றும் சர்க்கரை சேர்த்து உடலில் மசாஜ் செய்ய வேண்டும். இதனை உங்களது சருமத்திற்கு ஏற்ற வகையில் தினமும் கூட செய்யலாம்.
3. ஒளிரும் முகத்திற்கு
முகத்திற்கு அழகே முகத்தில் தெரியும் அந்த பிரகாசமான ஒளி தான். அப்படிப்பட்ட பொழிவான முகத்திற்காக, அரை கப் காபியை (coffee) சிறிதளவு பால் சேர்த்து கெட்டியான பசையாக்கி கொள்ள வேண்டும். இதனை முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து கழுவினால், இறந்த செல்கள் நீங்கி பிரகாசமான முகம் பளிச்சிடும்.
பெண்களின் முதல் ஹீரோ தந்தை – தந்தையர் தினம் ஏன் கொண்டாடப்படுகின்றது!
Youtube
4. வேர்க்கால்களுக்கு உயிரூட்டுகிறது
காபி பொலிவிழந்து போன தலை முடியின் வேர்க்கால்களுக்கு உயிரை தருகிறது. சிறிதளவு காபி (coffee) தூளை, ஈரமான தலையில் தடவி 2 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் தினசரி பயன்படுத்தும், ஷாம்பு மற்றும் கண்டிஸ்னர் கொண்டு முடியை அலசி விட வேண்டும். இதனால் இறந்த செல்கள் நீக்கப்படுகின்றன.
5. கண் வீக்கம்
காபி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. மேலும் கண்களுக்கு கீழ் உள்ள வீக்கத்தை குறைக்கவும் இது உதவுகிறது. இதில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடண்டுகள் உள்ளன. நீங்கள் காபி (coffee) போடும் போது, வடிகட்டிய காபி தூளை எடுத்து கண்களில் போட்டு சிறிது நேரம் கழித்து கழுவி விடுங்கள். இதனால் கண்களில் உள்ள வீக்கம் குறைந்துவிடும்.
கிராம்பு உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் நன்மை தீமைகள்!
தினமும் இதை பயன்படுத்தலாம்
இரண்டு ஸ்பூன் காபி (coffee) பவுடர், ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் அப்லை செய்து 10 நிமிடம் காயவிட்டு பின் கழுவினால் சருமமானது பொலிவோடும், மென்மையாகவும் தோன்றும்.
பளிச்சென்று முகம் தோன்ற, கடலை மாவுடன் காபி(coffee) பவுடரை சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் ஆக்கி, முகத்தில் அப்லை செய்து காய்ந்தவுடன் கழுவி விடவும்.
காபி (coffee) பவுடரை எலுமிச்சை சாற்றோடு கலந்து முகத்தில் பேக் போன்று பயன்படுத்தினால் ஃபேசியல் செய்தது போல் முகம் மின்னும். சென்சிடிவ் ஸ்கின் இருப்பவர்கள் எலும்மிச்சைக்கு பதிலாக ரோஸ் வாட்டர் பயன்படுத்தலாம்.
கால், கையில் டேன், கருமையை போக்க கடல் உப்புடன் காபி (coffee) பவுடர் சேர்த்து ஏதேனும் எண்ணெயில் கலந்து சருமத்தில் 15 நிமிடம் தேய்த்து மசாஜ் செய்து பின் கழுவவும்.
ஆலிவ் ஆயிலின் மருத்துவ நன்மைகள் மற்றும் அழகு குறிப்புகள்
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo