logo
ADVERTISEMENT
home / அழகு
கருப்பு நிறமாக இருக்கிறீர்களா… கவலை வேண்டாம் உங்களுக்கான சிறப்பு பதிவு!

கருப்பு நிறமாக இருக்கிறீர்களா… கவலை வேண்டாம் உங்களுக்கான சிறப்பு பதிவு!

அழகின் நிறம் சிவப்பு தான் என்று எந்த விஞ்ஞானமும் சொன்னதில்லை. ஆனால், ஆரோக்கியமான நிறம் கருப்பு(black) தான் என்று பல விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு நிறம் என்பது இயற்கை. அதை, அப்படியே ஏற்பது தான் நியாயம். அதை விட்டு விட்டு கருப்பு நிறமாக இருந்தால் தவறு, அசிங்கம், அவலட்சணம் என்று பேசுவது, நடத்துவது முட்டாள்தனம். கருப்பு(black) என்பது, ஒரு நிறமே. அதை வெளுப்பாக்குகிறேன் என்று கூறிக் கொண்டு, இயல்பாக இருக்கும் இயற்கை அழகைக் கெடுக்கும் விதத்தில் தங்கள்தோற்றத்திற்கும், உருவத்திற்கும் பொருந்தாத விதத்தில் ஒப்பனை செய்து கொள்வதும் சரியில்லை.


ஒரு சாதாரண பிளேடு விளம்பரத்திலிருந்து நகை, உடை என எந்த விளம்பரமானாலும், வெள்ளையான பெண்கள் தான் ஜெய்க்கிறார்கள். மற்றவர்களால் கருப்பு நிறப் பெண்கள் புறக்கணிக்க படுகிறார்கள். ஆனால் இதெல்லாம், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறத் துவங்கிவிட்டன. கருப்பு நிறப் பெண்கள் இந்த சமுதாயத்தில் கலக்க துவங்கிவிட்டனர். சிவப்பு பெண்கள்  தான் அழகு, கருப்பு(black) அழகல்ல என்ற கருத்தை பரப்பும் எந்த செய்தியையும், விளம்பரப் படத்தையும் பார்க்க நேரிட்டால் சிரித்து விட்டு கடந்து போய்விடுங்கள்.  

இரசாயன கலந்த கீரீம்களை பயன்படுத்த ஆரம்பித்தால் ஒரு பலனும் கிட்டாது. மெல்ல மெல்ல நமது தோலின் `மெலன்` உற்பத்தியைக் குறைக்கும் அல்லது நிறுத்தி விடும். இயற்கையான அழகை கெடுத்துவிடும். எனவே உங்களை சிவப்பாக, வெள்ளையாக மாற்றிவிட முடியும் என்ற விளம்பரங்களை நம்புவதற்கு பதில் நம் நிறம் இதுதான், இதை எப்படி மேம்படுத்திக் கொள்வது, மேலும் அதிகமாகாமல் காப்பது எப்படி என புத்திசாலித்தனமாக யோசித்து முடிவெடுங்கள். கருப்பு நிற பெண்கள் எந்தவித குழப்பத்துக்கும் ஆளாகாமல் தாழ்வு மனப்பான்மையை விட்டொழித்து, உண்மையாக முன்னேற்றப் பாதையில் கவனம் செலுத்த வேண்டும். அழகா, ஆரோக்கியமா என்ற முடிவு உங்கள் கையில்…

நீங்கள் குண்டாக இருக்கிறீர்களா? ஒல்லியாக மாற்ற முடியும். நீங்கள் ஒல்லியாக இருக்கிறீர்களா? குண்டாக மாற்ற முடியும். நீங்கள் கருப்பாக இருக்கிறீர்களா? வெள்ளையாக மாற்ற முடியாது. விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்… வெற்றி நடை போடுங்கள்.

ADVERTISEMENT

கருப்பு(black) தான் ஆண்களுக்கு ரொம்பப் பிடிக்குமாம்…!
பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று ஆண்களும், ஆண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று பெண்களும் தனிப்பட்ட கருத்துக்களைக் கொண்டிருப்பார்கள். ஆனால் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி சில விஷயங்களில் பெரும்பாலானவர்களிடம் பொதுவான கருத்துக்கள் இருப்பது வழக்கம். அந்த வகையில் ஆண்களும் சரி, பெண்களும் சரி கருப்பு நிறத்தில் ஒருவிதமான ஈடுபாடு காட்டுகிறார்கள்.

ஆண்களைப் பொறுத்தவரை பெண்கள் எப்படிப்பட்ட உடைகளை அணிந்தால் அவர்கள் அழகாக இருப்பார்கள் என்பதை கிட்டத்தட்ட சரியாக கணித்துக் கூறுவார்கள். உனக்கு இந்த நிறம்தான் எடுப்பாக இருக்கும். நீ இந்த சேலையில் வந்தால் தேவதை போல இருப்பாய். உனக்கு இந்த கலர் சூட்டாகும். இப்படி ஹேர்ஸ்டைலை மாற்றிக்கோ. இப்படி சிரித்தால் உன் முகத்திற்கு வசீகரமாக இருக்கும்.. இப்படி பல விஷயங்களை ஆண்கள் பெண்களுக்குப் பரிந்துரைப்பார்கள். கிட்டத்தட்ட இவை சரியாகவும் இருக்கும்.

அந்த வகையில் பெண்களுக்கு ஏற்ற நிறமாக பெரும்பாலான ஆண்கள் கருதுவது கருப்பு நிறமாம். சிலர் சிவப்பு நிறம் கூட பொருத்தமாக இருக்கும் என்பார்கள். இன்னும் சிலருக்கு நீல நிறம் பிடிக்கும். இருப்பினும் கருப்புக்குத்தான் நிறைய ஆண்கள் ஓட்டுப் போடுகிறார்களாம்.


ஏன் அப்படி… ஆண்களைப் பொறுத்தவரை கருப்பு(black) நிறத்தில்தான் பெண்கள் ரொம்ப செக்ஸியாக தெரிகிறார்கள் என்று கருதுகிறார்களாம். அதிலும் சற்று உயரமான, உடல் வாகு கொண்ட பெண்களுக்கு கருப்பு நிறம்தான் ரொம்ப பொருத்தமாக இருக்கும் என்பது ஆண்களின் கருத்து. கூடவே சற்று நிறத்துடன் கூடிய பெண்களாக இருந்தால் கருப்பு உடைதான் அவர்களுக்குக் கவர்ச்சியோ கவர்ச்சி என்பது ஆண்களின் கருத்தாக உள்ளது.

ADVERTISEMENT

வெளியில் மட்டுமல்லாமல் உள்ளாடைகளிலும் கூட பெண்கள் கருப்பை அணிந்தால் செம கவர்ச்சி என்பது ஆண்களின் கருத்தாக உள்ளது. குறிப்பாக கருப்பு நிற பிராவில் பெண்களின் கவர்ச்சி பல மடங்கு அதிகரிப்பதாக கூறுகிறார்கள் ஆண்கள்.

அழகான டிசைன் வைத்த கருப்பு நிற புடவை அணிந்து அதற்கு மேட்ச்சாக பிளவுஸ் போட்டுக் கொண்டு நெற்றியில் சின்னதாக கருப்பு நிற ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொண்டு அப்படி டக் டக் என நடந்து வந்தால் அடடா, அடடா என்று ரசிக்கத் தோன்றும் என்று கூறுகிறார்கள் ஆண்கள். கருப்பு நிற உடை ஒரு விதமான அமானுஷ்ய உணர்வைத் தரும் என்றாலும் கூட கருப்பு நிற உடையில் பெண்களைப் பார்க்கும்போது ஒருவிதமான பரவசம் ஏற்படும் என்பதும் ஆண்களின் கருத்தாகும்.

கருப்பாக இருக்கும் பெண்களை விட சற்று கலரான, மாநிறமான பெண்களுக்குத்தான் கருப்பு நிற உடை மகா பொருத்தமாக இருக்குமாம். கருப்பு நிற உடையோடு கூடவே தலையி்ல மல்லிகைப் பூவையும் சேர்த்துக் கொள்ளும்போது அதற்குக் கிடைக்கும் கவர்ச்சியே தனி என்று சிலாகித்துக் கூறுகிறார்கள்.

ஆண்களின் இந்த கருப்பு மோகத்திற்கு பிரத்யேக காரணம் என்று எதுவும் இல்லை. கருப்பு நிறமே ஒருவிதமான ஈர்ப்புடன் கூடியது என்பதால், பெண்களின் உடலை அந்த கருப்பு நிற உடை அலங்கரிக்கும்போது கூடுதலாக ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு விடுகிறது. அதனால்தான் பெண்களை கருப்பு நிற உடையில் பார்க்க ஆண்கள் விரும்புகிறார்கள் என்று மனநல நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ADVERTISEMENT

நம்ம ஊர் ஆண்களைப் பொறுத்தவை சுடிதார், மிடி, மினி என்று பெரும்பாலும் விரும்புவதில்லை. மாறாக, கருப்பு நிற புடவையில்தான் பெண்களை அதிகம் பார்கக விரும்புகிறார்களாம்.

பிறகென்ன வீட்டில் கருப்பு நிற புடவை இருந்தால் ரெடி பண்ணிக்குங்க, மனசுக்குப் பிடிச்சவரைப் பார்க்கும்போது அந்தப் புடவையில் போய் அசத்துங்க…

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

ADVERTISEMENT

 

29 Jan 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT